நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
முன்னுரை – பகுதி 2
வைணவ ஆச்சார்யர்கள் பரம்பரை என்பது நாதமுனிகள் முதல் தொடங்குகிறது. நாதமுனிகள் கிபி 823-903 வரை காட்டுமன்னார் கோயிலில் வாழ்ந்தவர். அவருடைய காலத்தில்தான் அவர் முயற்சியெடுத்து திருநெல்வேலிப் பகுதியில் இருக்கும் நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூர் என்ற ஊருக்குச் சென்று நம்மாழ்வார் எழுந்தருளியிருந்த புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பிரார்த்தித்தார். நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்குக் காட்சி தந்து திருவாய்மொழி மற்றும் அல்லாமல் மற்ற பிரபந்தங்களையும் , அவற்றின் உட்பொருள்களையும் நாதமுனிகளுக்கு வழங்கினார்.
நாலாயிரம் என்று சொல்வதால் நான்கு ஆயிரங்கள் இருக்கின்றன என்று பொருளில்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் பாசுரங்கள்.
எதனால் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை திராவிட வேதம் என்று சொல்கின்றனர்? சனாதன தர்மத்திற்கு அடிப்படை சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கும் வேதம். அதில் கூறப்பட்ட கருத்துக்களையே மிக எளிதாகவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டும் தமிழில் சொல்லப்பட்டுள்ளதால் அதனை திராவிட வேதம் என்கின்றனர்.
தான் பெற்ற பிரபந்தங்களைத் தொகுத்து நான்கு ஆயிரங்களாகப் பிரித்தார் நாதமுனிகள். முதலாயிரம், இரண்டாமாயிரம்-முழுவதும் திருமங்கையாழ்வார் இயற்றிய பிரபந்தங்கள், மூன்றாமாயிரம்-இயற்பா, நான்காம் ஆயிரம்-திருவாய்மொழி-நம்மாழ்வார் இயற்றியது.
முதலாயிரத்தில், பெரியாழ்வார் இயற்றிய 473 பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி என்ற தலைப்பிலும், ஆண்டாள் இயற்றிய 173 பாசுரங்கள், (திருப்பாவை 30ம், நாச்சியார் திருமொழி 143ம்), குலசேகரப் பெருமாள் அருளிய 105 பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்ற தலைப்பிலும், திருமழிசையாழ்வாரின் 120 பாசுரங்களைக் கொண்ட திருச்சந்த விருத்தமும், தொண்டரைப்பொடி ஆழ்வார் அருளிய 45 பாசுரங்களைக் கொண்ட திருமாலையும், பத்து பாசுரங்கள் கொண்ட திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாணாழ்வார் அருளிச் செய்த பத்து பாசுரங்களைக் கொண்ட அமலனாதிபிரானும், மதுரகவி ஆழ்வார் அருளிய 11 பாசுரங்களைக் கொண்ட கண்ணிநுண் சிறுத்தாம்பும் அடங்கும். (மொத்தம் 947 பாசுரங்கள்)
இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கையாழ்வார் அருளிய, 1084 பாசுரங்கள் கொண்ட பெரிய திருமொழியும், 20 பாசுரங்கள் கொண்ட திருக்குறுந்தாண்டகமும்,30 பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகமும் அடங்கும் (மொத்தம் 1134 பாசுரங்கள்)
மூன்றாம் ஆயிரத்தில், பொய்கையாழ்வார் அருளிய 100 பாசுரங்களைக் கொண்ட முதல் திருவந்தாதியும், பூத த்தாழ்வார் அருளிய 100 பாசுரங்களைக் கொண்ட இரண்டாம் திருவந்தாதியும், பேயாழ்வார் அருளிய 100 பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியும், திருமழிசையாழ்வார் அருளிய 96 பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதியும், நம்மாழ்வார் அருளிய 100 பாசுரங்கள் கொண்ட திருவிருத்தமும், நம்மாழ்வார் அருளிய 7 பாசுரங்கள் கொண்ட திருவாசிரியமும், நம்மாழ்வார் அருளிய 87 பாசுரங்களைக் கொண்ட பெரிய திருவந்தாதியும், திருமங்கையாழ்வார் அருளிய 1 பாசுரம் கொண்ட திருவெழுக்கூற்றிருக்கையும், திருமங்கையாழ்வார் அருளிய, கொண்டது என்று வகைப்படுத்தப்பட்ட (இதில்
வேறு கருத்துக்கள் உள்ளன) சிறிய திருமடலும், பெரிய திருமடலும், ஆக மொத்தம் 593 பாசுரங்கள்.
நான்காம் ஆயிரத்தில், நம்மாழ்வார் அருளிச் செய்த 1102 பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியும், கடைசியாக திருவரங்கத்தமுதனார் இராமானுசர் மீது இயற்றிய 108 பாசுரங்கள் கொண்ட இராமானுச நூற்றந்தாதியும் உண்டு. இராமானுஜ நூற்றந்தாதி இராமானுசரின் கடைசி காலத்தில், திருவரங்கத்து அமுதனாரினால் இயற்றப்பட்டது என்றாலும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அதுவும் உண்டு. நாதமுனிகள் காலத்திய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இராமானுச நூற்றந்தாதி கிடையாது.
எதனால் முதலாயிரத்தில் இந்தப் பிரபந்தங்கள் இருக்கின்றன, ஏன் நம்மாழ்வார் பிரபந்தங்கள் எல்லாம் ஒரே ஆயிரத்தில் சேர்க்கவில்லை என்பதெற்கெல்லாம் விளக்கம் கிடையாது.
எனக்குப் பிடித்த கதை
By
திருவாழிமார்பன்
Henryk Sienkiewicz என்ற நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் 120 ஆண்டுகளுக்கு முன்னால் (1904) நம் சனாதன மும்மூர்த்திகளையும், வாழ்வையும், மரணத்தையும் வைத்து ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார்!
தம் இன/நாட்டு மக்களுக்கு சற்றும் பரிச்சயம் இல்லாத தூரதேசத்து சமயத்தை
அறிமுகப்படுத்துவதில் மிகுந்த கண்ணியத்துடன் கையாண்டிருக்கிறார்.
ஒரு மாறுதலாக, பிரம்மாவுக்கு இக்கதையில் ஒரு லீட் ரோல் (தலைமைப்பொறுப்பு)
கிடைத்திருக்கிறது. விஷ்ணு, அவ்வப்போது வரும் பிரச்னைகளை கை தேர்ந்த மேலாளர் போல பொருள்/நேர விரயமின்றி
சாம தான பேத தண்டம் என்ற வரிசையில் எளிதாகவும், நளினமாகவும் தீர்த்து வைக்கிறார்.
தத்துவம், சமய ரீதியான கலைச்சொற்கள் என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் நமக்குப்பரிச்சயமான R K Narayan போல, எளிய சொற்களும் நடையும் கொண்டு, சிறுவர்கள் முதல் மேதாவிகள் வரை ரசிக்கும் வண்ணம் ஆக்கியிருப்பதில் எழுத்தாளரின் மேதைமை புலனாகின்றது. எடுத்துக்கொண்ட விஷயம் என்னவோ சிறுவர்கள் கிரிக்கெட் மேட்ச் போலன்றி, மனிதர்களின் ஆதாரப்பிரச்னைகளையும், கடவுளரின் (இது நாள் வரையிலான) தீர்வுகளையும் பற்றியது!
கடவுள் வல்லவர்; சரி. நல்லவர்? நல்லவரானால் எதற்காக பயம், வலி இத்யாதி எதிர்மறை சமாச்சாரங்களை படைக்க வேண்டும்? படித்துதான் பாருங்களேன்?!!
Life and Death (And Other Legends and
Stories) என்ற பெயரில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பு
சுட்டி இங்கே:
எஸ். சங்கரநாராயணன் என்னும் அத்புத எழுத்தாளர் தமிழில் மொழிபெயர்த்து தன் வலைப்பதிவில் (ஞானக்கோமாளி) பதிந்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பு சுட்டி இங்கே: கீழே
ஞானக்கோமாளி வலைத்தளம் ஸ்க்ரோலபிள் பி எட் எஃப்
தளத்தின் ஸ்க்ரோலபிள் பிடிஎஃப் ஐ ட்ரைவில்வாசிக்க இதோ சுட்டி
பின்குறிப்பு :
PDF ரீடர் இணைப்புக்கு அமைப்புக்கும் நன்றி கீதா ரெங்கன்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய:
பதிலளிநீக்குகாலை வணக்கம், மஹாஜனங்களே!
வணக்கம் TVM,, வாங்க... நேற்றென்ன ஆளைக் காணோம்?
நீக்குவாங்க திருவாழ்மார்பன்.
நீக்குமுதல் ரவுண்டு தூக்கம் முடித்து விட்டேன். ஹிஹி
நீக்குபதிப்பித்த ஸ்ரீராம்ஜிக்கும், ரீடர் இணைப்பு அமைத்த நாச்சியாருக்கும் நன்றிகள்!
பதிலளிநீக்குஓ! ஸ்ரீராம் இதை எல்லாம் எதுக்கு இங்கு....
நீக்குநன்றி திவாமா!!!
உங்களை, ஸ்ரீராம், நெல்லை லிஸ்ட்ல சேர்த்தாச்சு ஓகேவா!!
என்னை ஒரேயடியா நாச்சியாராவே ஆக்கிட்டீங்க!!!! ஹாஹாஹாஹா ஓகே ஒகே...
கீதா
கதையைத் தனியாக எடுத்து பிடிஎஃப் இல்லாமல், ப்ளாகையே அப்படியே பிடிஎஃப் ரீடர் வடிவத்தில் கொடுக்கமுடியுமான்னு பார்க்கலாம் என்றதும், ஸோ அந்த ஐடியா ஸ்ரீராம்தான்! எனவே credit goes to Sriram!
நீக்குகீதா
பயந்தது போல் இல்லையே என்று TVM தான் சொல்ல வேண்டும்!
நீக்குதிவாமா வரும் நேரம் நான் பிஸியாகிவிடுவேன். அதாங்க தூக்கத்தில்...
நீக்குகீதா
//பயந்தது போல் இல்லையே// என்ன பயம்? நன்மை 'பயந்தது' என்றுதான் சொல்ல வேண்டும்! :-)
நீக்குஇன்றைய இரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று சற்று தொடர்புடையதாகவும் அமைகிறது.
பதிலளிநீக்குகீதா
உங்க பாஷையிலே சொல்லனும்னா "எஸ்.. கீதாவின் கருத்தை டிட்டோ செய்கிறேன்"
நீக்குஹாஹாஹா....
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
நம்மாழ்வார் என்றதும், எங்க ஊர் நினைவுக்கு வந்துவிடும். உடையநங்கை....பஜனைமடம், நம்மாழ்வார் என்று.
பதிலளிநீக்குஅவருடைய அம்மாவின் ஊராச்சே! ஆனால் அப்பெருமைகளை பிரகடனப்படுத்தி முன்னிலைப்படுத்தவில்லை என்றே தோன்றும். ஊரைச் சேர்ந்தவள் அங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் ரொம்பத் தாமகமாகத்தான் தெரிந்தது! சும்மா வீட்டில் சொல்லிக் காதில் விழுந்திருந்தாலும்... நானாக அறிந்துகொண்டதுதான் வளர்ந்த பிறகு. ஊரில் இருந்தவர்களுக்கு அதிகம் தெரியாத நிலை. இப்போது எப்படி என்று தெரியவில்லை.
முன்பு என் காலத்தில் ஏதோ ஒரு தினத்தில் திறக்கப்பட்ட பஜனை மடம் இப்போது தினமும் திறக்கப்பட்டு வருவோருக்கு ஆரத்தி காட்டுவது மட்டும் நேரில் அறிந்தேன். எங்கள் தளத்தில் வரும் பின்னர்.
கீதா
பிறந்த ஊரின் பெருமையால்தான் உங்கள் தமிழும் மணக்கிறது.
நீக்குதிருவண்பரிசாரம் சென்றால் பஜனை மடத்திற்குச் சென்று அங்கும் தரிசனம் செய்து வருவேன். நல்ல அழகிய ஊர். கேரளாவிற்கே உரிய, நேரத்திற்கு அது அது கோயிலில் ஆகும், யாருக்காகவும் காத்திருக்க மாட்டார்கள்.
நீக்குஆமாம், நெல்லை. எங்க ஊர் அழகை விரைவில் காட்டுகிறேன் எங்கள் தளத்தில். இப்ப போகும் தொடர் முடிந்ததும்....என்று சொல்லிக் கொள்கிறேன் அதாவது முயற்சி செய்கிறேன்னு
நீக்குஆ!!!! உங்க எல்லாருக்கும் காட்டவும் சொல்லவும் நிறைய இருக்கே...ஓ மை! நான் எல்லாம் தொகுத்துச் செய்ய வேண்டும்.
கீதா
பிறந்த ஊரின் பெருமையால்தான் உங்கள் தமிழும் மணக்கிறது.//
நீக்குஹாஹாஹா கேரள சென்ட் வாசனை வீசுதோ?!!!!
என் தமிழ் எங்க ஸ்ரீராம் மணக்குது இங்க இத்தனை அறிவாளிகள், தமிழ்விற்பன்னர்கள் உங்களையும் சேர்த்துதான்...இருக்கறப்ப மீ எல்லாம் ஃப்ரேமிற்குள் வரவே மாட்டேனாக்கும்.
கீதா
நம்மாழ்வார், திருகுருகூர் என்பதைப் பார்த்ததும் நேற்று வாட்சப்பில் வந்த அந்தப் பாடல், பாகவதப் பிரசாதம் என்று வைணவர் ஒருவர் மற்றொரு வைணவர் வீட்டிற்கு அவரது அழைப்பின் பெயரில் சென்று விருந்து உண்டுவிட்டுப் பாடலில் சாப்பாட்டைப் பற்றிச் சொல்லும் பாடல்! திருக்குருகூரை - புளியென்று உருவகப்படுத்தி...
பதிலளிநீக்குபாருங்க என்னதான் சனிக்கிழமை பக்தி வெளியீடுகள் வந்தாலும் திரும்பவும் அந்தச் சாப்பாட்டுக்குத்தான் போகிறது...ஹாஹாஹா...
கீதா
ஆ.. புளியோதரையா?
நீக்குஆஹா.... கீதா ரங்கனுக்கு உணவு நினைவா? சனிக்கிழமையிலுமா? உங்களுக்கு திருவிண்ணகர் புளியோதரை பார்சல்.
நீக்குசீக்கிரம் அனுப்புக நெல்லை....
நீக்குஸ்ரீராம் நேற்று எபி குழு ஒரு மெசேஜ் பார்க்கலையா பானுக்கா அனுப்பிருந்தாங்க...சூப்பர் அது...
கீதா
உப்பு சேர்க்காத புளியோதரை, அந்தக் கோயிலில் ப்ரசாதமாகச் சாப்பிட்டால்தான் சரியாக வரும். நான் செய்து அனுப்பணும்னா, விடிஞ்சமாதிரிதான்.
நீக்குசனிக்கிழமையிலுமா?//
நீக்குசனிக்கிழமை மட்டுமா எல்லா நாளுமே!!! ஹிஹிஹி...நெல்லை சனிக்கிழமைனா பாலாஜி. ஸோ புளியோதரைதானே!! இந்த ஊர்க்கோவிலில், உதிர்சாத ரசவோதரை அல்லது உதிர்சாத சாம்பாரோதரைதான்....
வீட்டில் மணக்க மணக்க புளியோதரை அது நினைவுக்கு வந்துவிட்டது ......நெல்லை உங்க ஹஸ்பன்ட் என் புளியோதரையை டேஸ்ட் பார்த்துட்டு அவங்க அம்மா செய்வது போலவே இருக்குன்னு சொன்னாங்க!!! ஒரு வேலிடேஷன் கிடைச்சிருச்சு பாருங்க.
புளியோதரை வாசனைல எங்க ஊர் சாமி வந்து இதென்ன திங்கவா, சனிக்கிழமையான்னு குழம்பித் தவிக்கப் போறாரு. நாமஎன்ன தத்துவம் சொன்னாலும் தத்துவத்தைக் கதையாகக் கொடுத்தாலும் இந்த நாச்சியார் சாப்பாட்டுலதான்....முடிக்குதுன்னு!
கீதா
நெல்லை நல்லாருக்கு உங்கள் பகுதி.
பதிலளிநீக்குஸ்ரீநிவாசசேஷன் மாமா நினைவுக்கு வருகிறார்.
கீதா
ஸ்ரீநிவாசசேஷன் மாமா? ஆராக்கும் அது?
நீக்குவாங்க.... அவரெங்கே... நானெங்கே..
நீக்குஸ்ரீராம்... அவர் என் பெரியப்பா (காலேஜ் மேத்ஸ் ப்ரொஃபசர்). கடைசி காலத்தில் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தார்.
நீக்குஸ்ரீராம் அவர் நெல்லையின் பெரியப்பா. அப்போது அவர் திருவனந்தபுரத்தில்தான் இருந்தார். நாங்களும் அப்ப அங்குதான். அவரிடம் முதலாயிரம் கற்றுக் கொண்டோம்.
நீக்குநெல்லை தளத்திற்கு வந்த புதிதில் அவர் கருத்திலிருந்து அவரிடம் கேட்க...அப்படித்தான் நெல்லை பழக்கமானார்.!!!!
கீதா
முதல்ல நெல்லை சொல்லலையாக்கும், ஸ்ரீராம். சரி நம்மளை தெரியாதே....அதனால தயக்கமாக இருக்கும்னு நினைச்சேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக...
நீக்குகீதா
கீதா ரங்கன்.... நாங்க அடையாறுல இருந்தபோது, நீங்க அடையாறு சைடுல வாக்கிங் வருவேன் என்று சொல்லியும் உங்களுக்கு வீட்டு அட்ரஸ் கொடுக்கலை. நினைவிருக்கா? யார்னு தெரியாம எப்படி வரச் சொல்றது?
நீக்குஎன்னைப் பொறுத்தவரை வலை உலக நண்பர்களை வீட்டுக்கு அழைப்பதில் தயக்கம் காட்டியதில்லை.
நீக்குதிவாமா, நீங்கள் கொடுத்திருந்த சுட்டியில் சென்று வாசித்தேன். முதலில் புரியவில்லை...மீண்டும் வாசித்த போது புரிந்தது.
பதிலளிநீக்கு//எதற்காக பயம், வலி இத்யாதி எதிர்மறை சமாச்சாரங்களை படைக்க வேண்டும்? //
இல்லைனா மனுஷன் தனக்கு மீறிய சக்தி ஒன்று இருக்குன்னு நினைச்சுக்கூடப் பார்க்கமாட்டானே! இவை இருந்தால்தானே உலகம் சுவாரசியமாகப் போகும். சரியா என்று தெரியலை எனக்குத் தோன்றியது
நமக்கும் கதை எழுத சமாச்சாரங்கள் கிடைக்கும் ஹிஹிஹி
இன்னும் வருகிறேன்.
கீதா
முதலில் படிக்கும்போது சில கேள்விகள் வந்தன. என்னென்ன என்று நினைவில்லை!
நீக்குஎனக்கும் வந்தன ஸ்ரீராம்...ஆனால் மீண்டும் வாசித்த போது....தத்துவமார்கம் பிடிக்கும் என்பதால் அதை அப்படியான நோக்கில் வாசித்த போது புரிந்து கொண்டதுதான்...என் புரிதல் சரியான்னு எல்லாம் தெரியாது. ஆனால் அதை equate பண்ணிப் பார்த்தப்ப டாலி ஆச்சு!!!!ஹிஹிஹிஹி. ஹப்பா புரிஞ்சுருச்சோன்னு மனசுல தோன்றியது...அம்புட்டுதான்.
நீக்குதிவாமா, நெல்லை, கீதாக்கா, பானுக்கா, கமலாக்கா, கோமதிக்கா அளவு எல்லாம் எனக்கு விஷயங்கள் ஒன்னும் தெரியாது போங்கோ! பக்தியும் கிடையாது!
கீதா
கடவுளே! எனக்கு எதுவுமே தெரியாது; புரியாது. கதையை வாசிச்சேன். ரொம்ப யோசித்து ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட பைபிள் கதை போலத் தான் இதுவும் முடிவில்.
நீக்குகதை ஆசிரியர் சொல்லியிருப்பது: சிவ லோகம் எவ்வளவு இனிமையானது என்று தெரிந்துவிட்டால் எல்லோரும் இந்த உலகை உடனே காலி செய்துவிடுவார்கள். இன்பம் விழைவது, துன்பம் தவிர்ப்பது இதைத்தவிர வேறெதர்க்கும் செவி சாய்க்க மாட்டார்கள். எனவே மக்களை உலகில் தங்க வைக்க மட்டுமே மரண பயம் தோற்றுவிக்கப்பட்டது.
நீக்குபொதுவாக ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். இது கதை. கதையில் என்ன வேண்டுமானுலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் முதன்மைப்படுத்தப்படலாம். அவர் எப்படி எழுதுகிறார், எதை எதற்கு காரணம் காட்டுகிறார், எதை முதன்மைப்படுத்துகிறார் என்பதெல்லாம் அவர் உரிமை அல்லவா? ஆயிரம் முறை அரைத்த மாவையே அரைக்காமல், உலக எழுத்தாளர் ஒருவரின் *****வித்யாசமான**** பார்வை, கற்பனை வீச்சு என்பதற்காக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இந்தப்பார்வை யார் யாரால் எந்த அளவு ஏற்க/மறுக்கப்படுகிறது என்பது நம் வாசக/கமென்ட்ஸ் இன்பம் :-)
On the funnier side: நம் ஊரிலேயே: வஞ்சகன் கண்ணன், உலக மஹா உத்தமன் கர்ணன் என்றெல்லாம் கூட 'நம்மவர்கள்' எழுதுகிறார்கள்தானே? படைப்புக்கடவுள் ஜுஜுபி; அழிக்கும் கடவுள்தான் ப்ரதானமாக்கும் (வேறு சிலருக்கு ஆக்கும் கடவுள்தான் ப்ரதானம், அதற்கேற்ற கதைகள்) என்றெல்லாம் நம்மவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். அதற்கும் முன்னால், வேத காலத்தில் இந்திரனே ப்ரதானம். சிவன் என்ற பெயரே கிடையாது! ருத்ரந்தான் (தமிழ்) சிவனாக்கும் என்பதெல்லாம் பின்னால் வந்தது. நாம் நம் வரலாற்றிலேயே ஏகத்திற்கு 'கதை' விடுகிறோம். இந்த ராஜா பத்தாயிரம் ஆண்டு ஆண்டார், இன்னாருக்கு பத்தாயிரம் மனைவிகள் ... Mostly what we have in India is hagiography and not true history, when it comes to our past and EVEN present heroes!... :-)
எத்தனை கோடி (வாசக) இன்பம் வைத்தாய், இறைவா! :-)
//வேறு சிலருக்கு ஆக்கும் கடவுள்தான்// typo error. காக்கும் கடவுள்தான் என்று படிக்கவும்.
நீக்குஆங்கில மொழிபெயர்ப்பை இன்னும் வாசிக்கவில்லை.
பதிலளிநீக்குகதையை மனிதனின் evolve ஆகும் தன்மையோடும் பொருத்திப் பார்க்கலாம்.
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா....இதை அப்படியே literal ஆக எடுத்துக் கொள்ளாமல், கண்ணுக்குப் புலப்படாத உள் சக்தியை அறிதலாகத் தன்னை, நம் மனம் எத்தனை திரைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறது தடையாக...அதை விலக்கி உணர்தல் என்பது அத்தனை எளிதல்ல. என்பதையும் சொல்வதாக, எதுவுமே எளிதல்ல இந்த உலகில் என்பதையும் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாமோ?
அன்பேசிவம் எனும் தத்துவமும் சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.
கீதா
மரணவெளி என்பதை - ஆழ்ந்த அமைதி, நித்யானந்தம் பேரானந்தம் என்ற ரீதியிலும் எடுத்துக் கொள்ளலாமோ?
நீக்குகீதா
பயங்கரமா யோசிக்கறீங்க கீதா...
நீக்குஹிஹிஹி ஸ்ரீராம்...
நீக்குகீதா
//அதை விலக்கி உணர்தல் என்பது அத்தனை எளிதல்ல. // உண்மை கீதா ரங்கன் க்கா..... எங்கெங்கோ மனிதன் இறைவனைத் தேடுகிறான். அவன், அவனுடைய சரீரத்தின் உள்ளேயே ஒடுங்கியிருக்கிறான். அதனைக் கண்ணுற முயலாமல், வெளியில் தேடுவதிலேயே வாழ்க்கை போய்விடுகிறது.
நீக்குஅதனைக் கண்ணுற முயலாமல், வெளியில் தேடுவதிலேயே வாழ்க்கை போய்விடுகிறது.//
நீக்குஉண்மை. ஆனால் பாருங்க உள்ள தேடறதுகஷ்டம்னுதான் வெளியில் பக்திமார்கத்தில், அதுவும் ஒரு வழிதான் என்று பரிகாரங்களில், வேண்டுதல்களில்... மக்கள் ...
கீதா
//பரிகாரங்களில், வேண்டுதல்களில்...// எல்லாருக்கும் இதுதான் சுலபமாக இருக்கிறது. இந்த மனநிலையில்தான், கோயில்ல, 300 ரூ ஸ்பெஷல் டிக்கெட் இருக்கா, 500 ரூ இருக்கா, அதுல போயிடலாமே, சட்டுபுட்டுனு சாமியைப் பாத்துட்டு, லஞ்சுக்கு அந்த ஹோட்டலுக்குப் போயிடணும் என்ற நினைப்பில் பலரும் இருக்காங்க.
நீக்கு//மரணவெளி என்பதை - ஆழ்ந்த அமைதி, நித்யானந்தம் பேரானந்தம் என்ற ரீதியிலும் எடுத்துக் கொள்ளலாமோ?// நாச்சியாரே, இன்றைய உங்கள் ஒட்டுமொத்த பதிவின்படி, உங்கள் புரிதல் அபாரம்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கமும் பிரார்த்தனையும்.
நீக்குநெல்லை வந்தததும் திருவாழி மறுபடியும் வெளிவருவார் என்று நினைக்கிறேன்!
பதிலளிநீக்குஆமாம், நெல்லை எங்கே? இன்னமும் காணோம்?
"நெல்லை... நெல்லை..."
வாங்க ஸ்ரீராம். சனிக்கிழமை காலை 5 எழுந்தேன். பிறகு ட.ரெட்மில் ஜிம். 6:45க்கு யோகா. 8 மணிக்கு அரை மணி நீச்சல் பயிற்சி பிறகு க்ளப் ஹவுசில் குளித்தேன். பிறகு இப்போ வீட்டில் 1 1/4 மணி நேரம் சுதர்ஷன் க்ரியா ஆரம்பித்திருக்கிறேன். பிறகு எண்ணெய் குளியல். 12 மணிக்கு உணவு. பிறகுதான் வருவேன். திருவாழி பகுதியை இனித்தான் படிக்கணும்
நீக்குஅம்மாடி... செம ஃபிட்நெஸ் விழிப்புணர்வா இருக்கே... சூப்பர். சபாஷ்.
நீக்குஃபிட்னெஸ் விழிப்புணர்வுலாம் இல்லை. ஏதேனும் கொஞ்சம் இந்த மாதிரி விஷயங்களை வைத்துக்கொண்டால், கொஞ்சம் ஆக்டிவ் ஆக இருப்பது போலத் தோன்றும். இல்லைனா, சோம்பேறித்தனம் வந்துவிடுமோ என்ற அச்சம்தான்.
நீக்குநான் நீச்சலுக்குக் கேட்டேன் அருகில் உள்ள ஒன்றில். எங்களுக்கு வெளியில்தானே போகணும் அருகில் இருக்கிறது. ஆனால் நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்துவரலை அதனால் போகலை.
நீக்குநீச்சல் குளம் உள்ளடக்கிய குடியிருப்பில் வீடு ஒன்று வாடகைக்கு வந்தது ஆஹா என்றால் அதுவும் நம் பட்ஜெட்டுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கூடுதல். அதனால் நீச்சல் செய்ய முடியலை. அது நல்ல பயிற்சி. வீட்டிலேயே எக்ஸர்ஸைஸ்.
கீதா
ஏதோ நீச்சல் என்றதும் ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே.. கங்கைக் கரை வண்ணான் கதைதான். இங்கு பெரிய நீச்சல் குளம் உண்டு-வளாகத்தில். ஆனால் எத்தனை பேர் உபயோகிக்கிறார்கள்? நானுமே பத்து பதினைந்து முறை நீச்சல் குளம் உபயோகித்திருந்தால் அதிகம்.வளாகத்தில் பெரிய ஜிம் உண்டு. விளையாடுவதற்கும் பல ஆப்ஷன்கள் உண்டு.
நீக்குவீட்டுக்குப் பின்னாடியே ஆங்காங்கே BAY "பே" தண்ணீரைத் தேக்கி வைத்து நீச்சல் குளம் போலக் கட்டி இருக்காங்க. விடுமுறை நாட்களில் குழந்தைகளும் பெரியவங்களுமாய் முற்றுகை இடுவார்கள்.
நீக்கு/முதலாயிரம், இரண்டாமாயிரம்-முழுவதும் திருமங்கையாழ்வார் இயற்றிய பிரபந்தங்கள்,/
பதிலளிநீக்குநெல்லை, இந்த வரியில் சிறு திருத்தம் செய்ய வேண்டுமோ? இரண்டாமாயிரம்தானே திருமங்கையாழ்வார் செய்தது?
வாங்க சூர்யா. முதலாயிரம் பல ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களின் தொகுதி (இயற்பா போன்று). ஆனால் இரண்டாமாயிரம் முழுவதும் திருமங்கையாழ்வார் இயற்றிய பிரபந்தங்கள். முதலாயிரத்திற்குப் பிறகு கமா போட்டிருக்கிறேன். அதில் உள்ள ஆழ்வார்கள் பிரபந்தங்களை லிஸ்ட் செய்யவேண்டாம் என்று நினைத்தேன்.
நீக்குஅறிமுகம் அருமை. சுருக்கமாகவும் அதே சமயம் முக்கிய தகவல்களை உள்ளடக்கியும் சொல்லி இருக்கீங்க. உங்கள் மூலமாகப் பாசுரங்கள் கத்துக்கப் பார்க்கிறேன். ஏதோ, தேவாரம், திருவாசகமெல்லாம் படிச்சுட்டாப்பல தான்! :(
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்... ரொம்ப எதிர்பார்க்காதீங்க. சட்டியில் குறைவு.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய சனிவார தொகுப்பில், சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் ஆழ்வார்களைப்பற்றிய, அவர்களின் பக்தி பாமாலைகளைப்பற்றிய, முன்னுரையாக வந்த பகுதியை படித்து ஆழ்வார்களின் அளவிட முடியாத பெருமைகளை அறிந்து கொண்டேன். பக்திரசம் மிகுந்த பதிவுகளோடு எங்களை அழைத்துச்செல்லும் சகோதரரின் திறமைக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். நன்றியும் கூட. 🙏. தொடர்கிறேன்.
சகோதரர் திருவாழிமார்பன் தந்த இந்த வார "நான் படிச்ச கதையும்," தெள்ளிய நீரோடை போன்று, முதல் பகுதிக்கு தொடர்புடையதாக அமைந்துள்ளது. கதையில் வார்த்தைகளின் நளினம் கண்டு அவற்றினூடே பயணித்து முடிவை கண்டு விட்ட மகிழ்ச்சி வந்தது. மரண பயமென்ற திரையை விலக்கினால், மரணத்தின் அருமையை, அதன் சுகானுபவத்தை உணரலாம் என்ற பிரம்மன் வகுத்த நியதியை, குளத்தின் அழகான ஒரு கரையில் விஷ்ணுவின் அன்புமயம் ( இதுவே மனித பேராசை என்ற பெயரில் விஸ்வரூபம் எடுக்கும் என "மூவரும்" அறியாததா..!) என்ற நிழலில் சுகித்திருக்கும் மக்கள் புரிந்து கொள்ளவும், அவரவர் பாப புண்ணிய கணக்கின்படி, அந்த திரை விலக்கும் சக்தியையும் மனிதர்களுக்கு "அவர்கள்" அல்லவா தர வேண்டும்.
சர்வம் படைத்தவனின் மாயை. அந்த மாயையை உணரும் மந்திரம் "அமைதி" . அந்த மந்திரத்தை எப்போதும் உச்சாடனம் செய்பவர்கள் திரையை விலக்கும் சக்தியை பெறுவார்கள் என்பதையும், "மூவரும்" உணர்த்தும் காலத்தில்தான் உணர்த்துவார்கள். அப்படி உணர்த்துவார்கள் என்ற நம்பிக்கையோடு இக்கரையில் நிழலோடு ஐக்கியமானவர்கள் காத்துக் கொண்டிருக்கும்படியாக கதையை கதாரிசியர் நிறைவு செய்தது அருமை. ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.... ஏன் பக்தி ரசம் என்று சொல்றாங்க? நீர்த்துப்போவதாலயா?
நீக்குநீர்த்துப் போவது ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால், அந்த நீர்க்க இருக்கும் ரசத்தின் சுவைதானே மனதை ஒருவித திருப்தியோடு ஆட்கொள்கிறது./ அடிமைபடுத்துகிறது. நான் சமையலில் வரும் ரசத்தையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். "நெய்யில்லா உண்டி பாழ்" என்பதை போல ரசமில்லா உணவு, ரசமில்லாதது என எத்தனைப் பேர் நினைக்கிறார்கள் வாழ்வின் வழக்கமான இன்ப துன்பங்களுக்கு நடுவே மனதின் அவசிய ரசனைகளுக்காக இந்த "பக்தி ரசமும்" இன்றியமையாதது அல்லவா?
நீக்குசாப்பிடும் பதார்த்தங்களை ஜீரணிக்க வைப்பது ரசம் என்பதாலோ...
நீக்கு(நானும் எப்படியாவது இந்த தத்துவ விசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. ஊ..ஹூம்!)
க.ஹ.மேடம்... திருமணமான புதிதில் என் மனைவி, குழம்பு, ரசம் என்றெல்லாம் செய்வாள். நான் ஏதோ ஒன்றுதான் சாப்பிட முடியும் என்று சொல்லிட்டேன். அதனால பசங்க பிறந்ததிலிருந்து, போகி அன்று மாத்திரம் இலை உணவு, ட்ரெடிஷனல் சமையல். ம்ற்ற நாட்க்ளில் குழம்பு அல்லது ரசம்.
நீக்குநான் பாயசம் சாப்பிட்டுவிட்டால், அத்துடன் எழுந்துவிடுவேன். மோர் சாதம் சாப்பிடுவதில்லை.
மோர் சாதம் சாப்பிட்டபின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜென்மத்தில் ராஜா (போல வசதியான குடும்பத்தில்) பிறப்பார்களாம்! என் அம்மா சொல்வார்!
நீக்கு(நானும் எப்படியாவது இந்த தத்துவ விசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. ஊ..ஹூம்!)//
நீக்குஹாஹாஹா நானும் அப்பீட்டு! என்னால் முடியாது ஸ்ரீராம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!!! பாருங்க இப்பவும் சாப்பாடு ரிலேட்டட்தான்!!!
கீதா
சாப்பிடும் பதார்த்தங்களை ஜீரணிக்க வைப்பது ரசம் என்பதாலோ...
நீக்கு(நானும் எப்படியாவது இந்த தத்துவ விசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. ஊ..ஹூம்!)//
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்....ப்ராக்கெட்டில் சொல்லியிருப்பது சரியாகிடுச்சே!!! நம் மனசுல உள்ள அழுக்கை எல்லாம் ஜீரணிக்க வெளியேற்ற வைப்பது பக்திரசம்!!
கீதா
//மோர் சாதம் சாப்பிட்டபின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜென்மத்தில்// இதெல்லாம் உங்களை மோர் சாதம் சாப்பிட வைக்க உங்க அம்மா செய்த தெக்கினிக்கு. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அம்மா போல வருமா?
நீக்குநான் எப்போவுமே முன் ஜாக்கிரதையாக ரசத்துக்குப் பின்னால் பாயசம் வேண்டாம்னு சொல்லி மோர் சாதம் முடிந்த பின்னால் பாயசம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன். எனக்கு நினைவு தெரிந்து நான் பாயசத்துக்குப் பின்னர் மோர் சாதம் சாப்பிட்டதே இல்லை. அப்படி யாரேனும் பாயசத்தை முன்னால் ஊற்றிவிட்டால் பின்னர் மோர் சாதம் சாப்பிட மாட்டேன். எங்க வீட்டில் நாங்க ரெண்டு பேராக இருந்தப்போக் கூட குழம்பு, ரசம், ஒரு கறி அல்லது கூட்டு உண்டு. குழம்பு வைச்சாலும் ரசம் இல்லாமல் சாப்பிட மாட்டோம்.
நீக்குஞானக்கோமாளி கதை ஒரு உருவகம். ஆசிரியருக்கு தெரிந்த இந்துமத கோட்பாடுகளை கதையின் மூலம் தெரியப்படுத்துகிறார். ப்ரம்மத்தையும் ப்ரஹ்மாவையும் ஒன்றே என்று நம்பி பிரம்மாவை தலைமைக்கடவுள் ஆக்கி விஷ்ணுவை கடவுள் வரிசையில் இரண்டாவதாக்குகிறார்.
பதிலளிநீக்குகதைக்கு சம்பவங்கள் தேவை என்றெண்ணி பைபிள் கதைகளை இந்து மதத்திற்கேற்ப உருவகப்படுத்தி, கதையில் புகுத்துகிறார். exodus, genesis, noah ஆகிய கதைகள் உரு மாறி இடம் பெற்றிருக்கின்றன.
கதையின் நீதி அல்லது கரு என்ன என்பது புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று முறை வாசித்து விட்டு தோன்றிய விமரிசனங்களை எழுதுவேன். தற்போதைய கருத்து மேல்நோட்டமாக வாசித்ததால் எழுந்தது.
Jayakumar
எனக்கும் இதேதான் தோன்றியது. ப்ரம்மத்தையும், ப்ரம்மாவையும் ஒன்று என்று நினைத்து விட்டார்.
நீக்குப்ரஹ்ம்மம் வேறு பிரம்மா வேறு. அது அவர் எழுதியது மொழிபெயர்ப்பு. ஒரிஜினலும் பற்றிச் சொல்லியிருக்கிறார் திவாமா. அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இது.
நீக்குகதை என்றில்லாமல் தத்துவங்களைத்தான் உருவகப்படுத்தி...என்பது என் புரிதல்
கீதா
// பைபிள் கதைகளை இந்து மதத்திற்கேற்ப உருவகப்படுத்தி, //
நீக்குநானும் நினைத்தேன்.
பானுக்கா, ஜெ கே அண்ணா இப்படிப் பார்க்கலாமா...பிரம்மத்தின் அந்த உருவமற்ற பரம்பொருளின் மூன்று செயல்பாடுகளாக ப் பார்க்கலாமே
நீக்குகீதா
பொதுவாகப் படைப்புக்கடவுள் பிரம்மா என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் தப்பில்லைனே நினைக்கிறேன். விஷ்ணுவாவது வந்து போகிறார். சிவனுக்கு வேலையே இல்லை. ஏகாந்தப் பெருவெளியின் ஆனந்தத்தில் மூழ்கி விட்டார் போல! அதான் அந்த சிவலோக சாம்ராஜ்யம் செல்லத் தான் மக்களுக்குப் பேராவல். அதையும் ப்யத்தையும், வலியையும் கொடுத்து அதன் மூலம் கஷ்டங்களை உருவாக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட வைத்துப் பின்னர் தகுதியானவர்களுக்கு மட்டும் சிவலோக சாம்ராஜ்யத்தைக் காட்டுவாங்க போல! மத்தவங்க? நரகம்னு ஒண்ணு இருப்பதாக இங்கே சொல்லலை. மத்தவங்க அங்கேயே உழன்று மறுபிறவி எடுப்பாங்களோ?
நீக்குநெல்லையின் முன்னுரையே 30 பக்கங்கள் எடுக்கும் என்று தோன்றுகிறது. எ பி வாசகர்கள் கட்டுரைகளை மேலோட்டமாக வாசிப்பவர்கள், அல்லாது பாடப்புத்தகங்களை வாசிப்பது போன்ற ஒரு முயற்சி எடுக்க மாட்டார்கள் என்பது உண்மை. அதற்கேற்ப முன்னுரையை அமைக்கலாம்.
பதிலளிநீக்குபிரபந்தம் பற்றிய முன்னுரை நன்று. பிரபந்தத்தை தொகுத்த வரலாறு பற்றிய செய்திகளையும் எழுதலாம்.
ஆக சனி உருப்பட்டது. இனி யாரும் சனியை வெறுக்க மாட்டார்கள்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்... முன்னுரை இல்லாமல் சடக் என்று பாசுரம் அதன் அர்த்தம் என்று சொன்னால் தொடர்பிருக்காது என்று நான் நினைத்தேன். அதையும் எழுதுவேன், ஆனால் அது நெடியதாக ஆகிவிடுமோ என்று அச்சம்தான்.
நீக்கு//எ பி வாசகர்கள் கட்டுரைகளை மேலோட்டமாக வாசிப்பவர்கள், அல்லாது பாடப்புத்தகங்களை வாசிப்பது போன்ற ஒரு முயற்சி எடுக்க மாட்டார்கள் என்பது உண்மை.// உங்களின் இந்த கருத்தை ஒப்புக் கொள்ள முடியாது ஜே.கே.சி. சார். எ.பி. தீவிர வாசிப்பிர்கான தளம் இல்லை என்று நினைத்திருக்கலாம். ஆழமாக படிப்பவர்கள் இங்கு உண்டு.
பதிலளிநீக்குஎல்லோரும் ஒன்றே போல இருக்கமாட்டார்கள் இல்லையா பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். பலர் லைட் ரீடிங்கையே விரும்புவார்கள்.
நீக்குபாராட்டுகள் நெல்லை. இதே நடையைத் தொடருங்கள்.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நன்றி
நீக்குதிருவாழ்மார்பன் இன்னும் சற்று விரிவாக நூலைப் பற்றி எழுதியிருக்கலாமோ? கதை படித்தேன்.
பதிலளிநீக்குகேட்டுப் பார்த்தேனே...
நீக்குவாழ்வும் சாவும் கதை படித்தேன்.
பதிலளிநீக்குவித்தியாசமான கதை அறிமுகத்திற்குத்தான் இந்தப் பகுதி இருக்கிறது. நல்ல அறிமுகம். இல்லாவிட்டால் இந்தக் கதையைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை.
பிரம்மா விஷ்ணு சிவன் என்ற வரிசையை உபயோகித்து எழுதியிருக்கிறார். விஷ்ணு, பிரம்மா, சிவன் என்ற வரிசையில் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.
பதிலளிநீக்குகதை நல்லா வந்திருக்கிறது.
சட் என்று என் மனதில் கைலாயம், மானசரோவர், இராட்சச ஸ்தல் ஏரி போன்றவை நினைவுக்கு வந்தன. கதையை அந்தப் பகுதியை நினைத்துப் படித்தாலும் நன்றாகவே இருக்கிறது.
ஆமாம் மரணம் என்ற வலியைத் தாண்டிவிட்டால் நிம்மதியான பெருவாழ்வு அந்தப் பகுதியில் இருக்கிறதா அல்லது செய்த செயல்களுக்கேற்றபடி தீர்ப்பளித்து அந்த வெகுமதி/தண்டனையை அனுபவிக்கும்படி அந்த இடம் அமைந்திருக்கிறதா?
பிரம்மாவுக்கு அப்புறம் சிவன்? மூன்றாவது இடம்?!!
நீக்குபழைய பாடல் ஒன்றின் வரி நினைவுக்கு வருகிறது..
"ப்ரம்மா விஷ்ணு சதாசிவம்...
ஹரஹரஹரஹர மகாதேவா...
ஸ்ரீராம்... நான் கதையில் உள்ள சம்பவங்களின் வரிசைப்படி என்று சொன்னேன். எப்போதும் விஷ்ணு நடுநாயகம், சொல்லும்போது பிரமன் விஷ்ணு சிவன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநாலாயிர திவ்யப் பிரபந்தம் முன்னுரை இரண்டு நன்றாக விளக்கமாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//திருக்குருகூர் என்ற ஊருக்குச் சென்று நம்மாழ்வார் எழுந்தருளியிருந்த புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பிரார்த்தித்தார்.
நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்குக் காட்சி தந்து திருவாய்மொழி மற்றும் அல்லாமல் மற்ற பிரபந்தங்களையும் , அவற்றின் உட்பொருள்களையும் நாதமுனிகளுக்கு வழங்கினார். //
பல வருடங்களுக்கு முன் தரிசனம் செய்தது நினைவுகளில் வந்து போகிறது.
அருமையான எழுத்து வாழ்த்துகள்.
தொடர்கிறேன்.
வாங்க கோமதி அரசு மேடம். நீங்களும் இன்னும் விரிவாகவே இதைப்பற்றி உங்கள் தளத்தில் முன்பு எழுதியிருக்கிறீர்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், அது நாதமுனிகள் திருவரசு சம்பந்தப்பட்ட பதிவு என்று நினைக்கிறேன்.
நீக்குஅடுத்த முறை கும்பகோணம் சென்றால், நாதமுனிகள் திருவரசு, குருகைக்காவலப்பன் திருவரசு மற்றும் பெரிய நம்பி திருவரசுவைச் சேவிக்க நினைத்திருக்கிறேன்.
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், நல்ல நினைவாற்றல். நான் எழுதி இருக்கிறேன்.
நீக்குஒரு புது வருடம் நாதமுனிகள் திருவரசு தரிசனம்.
கங்கை கொண்ட சோழபுரம், மற்றும் குருகைக்காவலப்பனை வருடா வருடம் பார்த்ததை என் புதுவருட பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். நீங்கள் படிக்கவில்லை.
நீங்கள் வெளியூரில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.
திருவாழிமார்பன் அவர்கள் பகிர்ந்த கதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//கடவுள் வல்லவர்; சரி. நல்லவர்? நல்லவரானால் எதற்காக பயம், வலி இத்யாதி எதிர்மறை சமாச்சாரங்களை படைக்க வேண்டும்? //
எல்லோருக்கும் தோன்றும் சில சமயங்களில் . எல்லோரையும் நல்லவர்களாக படைத்து இருக்கலாமே! என்று.
இறைவனை நம்புவர்களுக்கு பயம் வரக்கூடாது என்பார்கள். இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை மன அமைதியை கொடுக்கும்.
எல்லோரும் விரும்பும் அமைதி