கடந்தவாரம் மனதை மகிழ்விக்கும் செய்திகள் 'எங்கள்' கண்ணில் பட்டவரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடந்தவாரம் மனதை மகிழ்விக்கும் செய்திகள் 'எங்கள்' கண்ணில் பட்டவரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.9.13

கடந்தவாரப் பாஸிட்டிவ் செய்திகள்.



1) ஒரே ஒரு ஊசியில் எல்லாவகை வலிகளையும் சரிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கையூட்டும் சென்னை மருத்துவர் பிரபு
                                                       


2) மதுவைத் துறந்த தருமபுரி இளைஞர்கள் பற்றிய செய்தி.

                                                         


3) எப்போதுமே குப்பையும் அழுக்கையும் தவிர்க்க முடியாமல் தவிக்கும் ராயப்பேட்டை, ஸ்டான்லி, உள்ளிட்ட சென்னை அரசு மருத்துவமனைகளை சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அரசு பொதுமருத்துவ மனையில் 2000 பேர் காலை முதல் மாலை வரை இந்த பணியை செய்தனர். குழாய் விளக்கு, மின் விசிறிகள், ஜன்னல் கம்பிகள், வார்டுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும், வளாகத்தையும் தூய் மைப்படுத்தினார்கள்.


                                              


4) ஆசிரியர் தினத்தில் கண்ணில் பட்ட செய்தி. கேரளாவில் அப்துல் மாலிக் என்கிற 40 வயது ஆசிரியர் தினமும் கழுத்தளவு ஆற்று நீரில் டிபன்பாக்ஸ், பை போன்றவற்றுடன் நீந்திச் சென்று, மலை ஏறி பாடம் நடத்தி வருகிறார். பஸ் மூலம் வந்தால் அரை நாள் அதிலேயே போய்விடும் என்கிறாராம்.

                                      


5) நடிகர் கஞ்சா கருப்பு பற்றிய ஒரு பாஸிட்டிவ் செய்தி. தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவச ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கிறாராம்.

                                                  

6) மதுவுக்கு எதிரான பிரச்சாரம்