கத்தரிக்காய்-முருங்கை சாம்பார். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்தரிக்காய்-முருங்கை சாம்பார். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.1.16

திங்கக்கிழமை 160111 :: கத்தரிக்காய்-முருங்கை சாம்பார்.


 நாங்கள் சாம்பார் வைக்கும் முறையிலிருந்து மாறுபட்டு எங்கள் அலுவலகத் தோழி சொன்னபடி சென்ற ஞாயிறு அன்று சாம்பார் செய்தோம்.  (உருளைக் கிழங்கு 'எக்ளேர்ஸ்' (!!) செய்த அன்று!) 

நாங்கள் வைக்கும் சாம்பாரில் என்ன காயோ அதை மட்டுமே போட்டு பருப்புச்  சேர்த்து சாம்பார் செய்வோம்.  ரொம்பச் சிக்கனம்! 

இந்தச் சாம்பார் ஹோட்டல் சாம்பார் போல வாசனையுடன் வித்தியாசமாக இருந்தது.


ஒரு கரண்டி துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொண்டோம்.



மூன்று கத்தரிக்காய், இரண்டு முருங்கைக்காய் எடுத்துக் கொண்டோம்.  எப்போது அடுப்பில் போட வேண்டுமோ அப்போதுதான் கழுவி வைத்துள்ள இந்தக் காய்களை நறுக்கி அதில் சேர்ப்போம்.

நெல்லிக்காய் அளவு புளி எடுத்துக் குறைந்த தண்ணீரில் கரைத்து எடுத்து வைத்துக் கொண்டோம்.

இரண்டு தம்ளர் தண்ணீரில் மூன்று தக்காளி, பத்து சின்ன வெங்காயம்
ஆகியவற்றை நறுக்கிப் போட்டு,  இரண்டு பச்சை மிளகாயை நீ வாக்கில் நறுக்கிச் சேர்த்து, சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்தோம்.


அது கொஞ்சம் கொதித்ததும் அதில் முருங்கை, கத்தரித் துண்டுகளை நறுக்கிப் போட்டோம். 



                                                   
       


காய் வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், பருப்பை  சேர்த்து விட்டோம்.  ஒரு கொதி வந்துள்ள நிலையில் பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்து மல்லி சேர்த்து,


           







கடுகு, காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை சீரகப்பொடி, ஒரு சிட்டிகை வெந்தயப்பொடி, தாளித்துச் சேர்த்து விட்டோம்.




 

(எங்களைப் பொறுத்தவரை) வித்தியாசமான சாம்பார் ரெடி. 

ஒரே வேளையில் இரண்டு முறை சாதத்தில் போட்டுப் பிசைந்து கொண்டு சாம்பார் காலி!