சங்கீத சீசன் என்பது எப்பொழுது துவங்குகிறது?
அது சென்னையில் நவம்பர் மாதமே துவங்கிவிடுகின்றது. பல இடங்களில் குறிப்பாக 12 B பஸ் செல்கின்ற தடங்களில் ஏதாவது நான்கு இடங்களில் இரண்டு வாழை மரங்கள் கட்டி, ஒரு வெள்ளைத்துணி பானர் அந்த மரங்களுக்கு இடையே கட்டி, ஒருநாள் மாலை நாதசுரக் கச்சேரியுடன் துவங்கும். மறுநாள் முதல் காலையில் ஒரு லெக் டெம் 'ஷாடவ/ஔடவ ராகங்களில் ஸ்வாதித் திருநாள் கிருதிகள்' என்று ஏதாவது ஒரு முழ நீளத் தலைப்பு. அவ்வளவுதான் - விழா ஆரம்பமாகிவிட்டது.

மேடையில் இருக்கின்ற மக்களில் பாதிப்பேர் அளவுக்கு ஆடியன்ஸ். அதிலும் அரைவாசிப் பேரு அரைத்தூக்கத்தில் - கை தட்டும் ஓசை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து, நான்கு தடவை கை தட்டி, தூக்க ஆவர்தனத்தின் அடுத்த காலத்திற்கு செல்வார்கள். இந்தத் திருவிழா சில இடங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறும். மேடையில் பாடுபவர்களது / பக்க வாத்தியம் வாசிப்பவர்களின் சுற்றமும் நட்பும் ஆடியன்ஸாக அமர்ந்து ஒவ்வொரு ராக ஆலாபனைக்கும், பாட்டுக்கும், கை தட்டி உற்சாகப்படுத்துவார்கள்!
பெரிய சபாக்கள் தங்கள் கடையை விரித்தவுடன், இந்த வாழை மர பார்ட்டிகள் சைலண்ட் ஆகிவிடுவார்கள்.
அடுத்த வகை இசை மண்டபங்கள் செவிக்கும், வயிற்றுக்கும் ஒருங்கே விருந்து படைப்பவர்கள். கச்சேரி வசூலை விட காண்டீன் விற்பனை வசூல் கொள்ளை போகும். ஒரு கப் காபியின் விலை ஒவ்வொரு சீசனுக்கும் ஏறிக்கொண்டே போகின்றது. சென்ற சீசனில் இருபது ரூபாய் என்று பார்த்தேன். இப்போ என்ன விலை என்று சொல்லுங்க ரசிகர்களே!
எனக்கு என்னவோ சங்கீத சீசன் என்கிற பீலிங் மியூசிக் அகடமியில் மார்கழி ஒன்றாம் தேதி காலை வேளையில் நுழைந்து, அங்கு நுழைவு வாயில் / ஃபிரன்ட் டெஸ்க் இருக்கின்ற இடம் அருகே சுவற்றில் இருக்கின்ற இசைக் கலைஞர்களின் படங்களைப் பார்க்கும் பொழுதும், நான் பிறந்த ஆண்டில் யார் சங்கீத கலாநிதி என்று பெயர்ப் பட்டியலைப் பார்க்கும் பொழுதும், அந்த இடத்திற்கு முதன் முதலில் என் அப்பாவுடன் சென்ற நினைவுகளை அசை போடும் பொழுதும்தான், (ஒவ்வொரு வருடமும்) சங்கீத சீசன் ஆரம்பிக்கின்றது என்கிற ஆழமான உணர்வு வரும்.
(இன்னும் சொல்வேன்)
======================================================
காலை முதலே சபாக்களில் கச்சேரிகள் இருக்கும். காசு கொடுக்காமல் பார்க்கலாம் / கேட்கலாம். அவ்வளவாக பிரபலம் ஆகாத கலைஞர்களின் கச்சேரிகள் அவை.

நெய்வேலி சந்தானகோபாலன் மகள் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன் அருமையாகப் பாடுகிறார். அவரை மாலை ஸ்லாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனாலும், இவ்வளவு கூட்டம் அலைமோதினாலும், அவர் தந்தை 'நெய்வேலி' அவரை இலவசக் கச்சேரி டைமில் பாடுவதையே ஊக்குவிக்கிறாராம். நல்ல விஷயம். அவர் பாண்டித்தியம் எல்லாருக்கும் சென்று சேர வேண்டும் என்ற அவா. இன்னும் பிரபலம் அடைய வேண்டும் என்பதும் காரணமாயிருக்கலாம். எப்படியோ, நல்ல விஷயம்.

ரித்விக் ராஜா அடுத்த வருடம் 'காசுக் கச்சேரிக்கு'ச் சென்று விடுவார் என்று நம்பலாம். T M கிருஷ்ணாவின் சிஷ்யர். இந்தமுறை கேட்டதில் ராமகிருஷ்ண மூர்த்தி நன்றாகப் பாடுவதாக மாமா சொன்னார். ஸ்வர்ண ரேதஸ் இன்னும் பிற்பகல் கச்சேரிதான் செய்து கொண்டிருக்கிறார்.
சபாக்களில் மெயின் கச்சேரி 6 மணிக்கு, 6.15 மணிக்கு, 6.30 மணிக்கு அல்லது 7 மணிக்குத் தொடங்குகின்றன. மெயின் கச்சேரி என்பது எல்லாம் 'காசு'க் கச்சேரிகள். (சீசன்) டிக்கெட் வாங்க வேண்டும். இப்போதெல்லாம் கல்யாண விருந்தில் ஒரே மாதிரி 'செட்'டில் உணவு வகைகள் பரிமாறுவது போல, ஒரு வர்ணம், ஒரு கன ராகம், ஒரு ராகம் தானம் பல்லவி, அப்புறம் ஒன்றிரண்டு துக்கடாக்கள், மணி என்ன ஆச்சு? 9.15? சபா செயலர் கொஞ்சம் ஓகே என்றால் 9.30 க்கு தில்லானாவோ, மங்களமோ பாடி கச்சேரியை முடித்து விடுவார்கள்.
Finished. Package system மாதிரி!
ரசிகர்களும் ராகம் தானம் பல்லவியிலேயே வாட்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஒன்று, கேண்டீனில் போய் குறைந்தபட்சம் ஒரு காஃபியாவது சாப்பிட்டு வர வேண்டும், அல்லது டிஃபன். சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பினால்தான் சென்னை டிராஃபிக்கில் காலாகாலத்தில் வீடு போய்ச் சேர முடியும். படுக்க முடியும். காலை அலுவலகம் செல்ல வேண்டுமே...
'தனி' வாசிக்க ஆரம்பிக்கும்போது மக்கள் கலைய ஆரம்பிப்பது பார்க்கவே சங்கடமான காட்சி.
சென்ற சீசனில் அபிஷேக் ரகுராம் சொன்னார் : "இந்தப் பாடலில் தனி ஆவர்த்தனம் வரும். அது தொடங்கும்போது கிளம்பிச் செல்வது என்பது அவர்களை அவமதிப்பது போலாகும். காஃபி அல்லது டிஃபன் சாப்பிடப் போக விரும்புபவர்களுக்காக இந்தப் பாடல் தொடங்குமுன்னர் செல்வதற்கு 3 நிமிடம் இடைவெளி விடுகிறேன்" கொஞ்சம் அனா பினாத் தனமாக இருந்தாலும் கலைஞர்களுக்கு ஏற்படும் இன்சல்ட்டுக்கு முன்னால் இது ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது.

கல்கி விமர்சனத்தில் டி எம் கிருஷ்ணா கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு (ஃப்ளூட்) மாலி உருவாகிறாரோ என்று பேசுகிறார்களாம். கச்சேரியில் சம்பிரதாயங்களை உடைக்கிறார். சென்றமுறை ஒரு ராக ஆலாபனை செய்துவிட்டு, பாடலுக்குப் போகாமல் அப்படியே அடுத்த பாடலுக்குப் போய்விட்டார்.
இந்த முறை வாணி மகாலில் ஆலாபனை, நிரவல் என்று
அற்புதமாய் ஒரு பாடலைப் பாடி விட்டு (அப்போது மணி எட்டு) இன்னும்
ஒன்றேகால் மணி நேரம் இருக்கிறது, என்ன பாடப் போகிறாரோ என்று பார்த்தால்
'போதும், இதற்குமேல் நான் பாடினால் போலியாக இருக்கும்' என்று கச்சேரியை முடித்து விட்டாராம்! என்னதான் ஓசிக் கச்சேரி என்றாலும் இப்படியா என்று முணுமுணுத்துக்கொண்டே கலைந்தனராம் ரசிகர்கள்.
இத்தனைக்கும் இந்தப் பாடலைத் தொடங்குமுன் எத்தனை மணி வரை பாடலாம் என்று சபா செயலரைக் கேட்டுக் கொண்டாராம். அவரும் 9.15 மணி வரை பாடலாம் என்று சொல்லியிருந்தாராம்!
கல்கி விமர்சனத்தில் டி எம் கிருஷ்ணா கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு (ஃப்ளூட்) மாலி உருவாகிறாரோ என்று பேசுகிறார்களாம். கச்சேரியில் சம்பிரதாயங்களை உடைக்கிறார். சென்றமுறை ஒரு ராக ஆலாபனை செய்துவிட்டு, பாடலுக்குப் போகாமல் அப்படியே அடுத்த பாடலுக்குப் போய்விட்டார்.
இத்தனைக்கும் இந்தப் பாடலைத் தொடங்குமுன் எத்தனை மணி வரை பாடலாம் என்று சபா செயலரைக் கேட்டுக் கொண்டாராம். அவரும் 9.15 மணி வரை பாடலாம் என்று சொல்லியிருந்தாராம்!
அந்தக் காலத்தில் கச்சேரிகள் 6 மணிநேரம், 7 மணி நேரம் கூட நடந்திருக்கிறது. மதுரை சோமு இரவு 9 மணிக்கு மேல்தான் கச்சேரியே தொடங்குவாராம். முடியும்போது காலை மணி 3 அல்லது நான்காகுமாம். மதுரை மணி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாதையர் பற்றியெல்லாம் தெரியாது. சோமு கச்சேரி தஞ்சையில் கண்காட்சியில் கேட்டிருக்கிறேன்.
கர்னாடக சங்கீதம் ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லாரையும் சென்றடைந்த காலம் அது.
[T M கிருஷ்ணா தன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது படித்ததும் இவை நினைவுக்கு வந்தன.]
====================================================
[முக நூலில் பகிரப்பட்டவை]