படித்துப் பார்த்து விட்டு இதுதான் எனக்குத் தெரியுமே என்பவர்களுக்கு...
"என்ன? புளியோதரை, தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று அமர்க்களப் படுது?"
"ஆடி பதினெட்டு.. பதினெட்டாம் பெருக்கு... அதான்"
(அப்போது எழுதி வைத்த பதிவு)
(அப்போது எழுதி வைத்த பதிவு)
"அது
காவிரிக் கரையில் வசிப்பவர்களுக்கு... அல்லது ஆற்றோரம் வசிப்பவர்களுக்கு..
உங்களுக்கு என்ன? நீ என்ன விதை விதைச்சு பொங்கல்ல அறுவடை செய்யப் போறியா"
"இல்லைதான்.. இன்னிக்கும் விட்டா இந்தக் கலந்த சாதம் அப்புறம் எப்போ செய்யறது?"
"அது என்ன வெள்ளையா? தேங்காய் சாதமா?"
"ஆமாம்.. நீங்கள் சொல்லிக் கொடுத்தது போல செய்யும் தேங்காய் சாதம் இன்று செய்யவில்லை. இது சுலப வழி.. மசாலா இல்லாதது"
"நான் சொல்லிக் கொடுத்தது நினைவில் இருக்கா... நாலைந்து வருஷங்கள் ஆச்சே நான் சொல்லிக் கொடுத்து..."
"ஆமாமாமாம்... ஆனால் அடிக்கடி அப்படியும் செய்யறோமே... சொல்லவா எப்படின்னு?"
"ம்ம்.. சொல்லு"
"ம்ம்...ஓகே.. ஐந்து பேர் சாப்பிடும் அளவு செய்ய எப்படின்னு சொல்றேன். ஓகேயா?
பெரிய தேங்காயாக இருந்தால் இரண்டு தேங்காய் - அதாவது நான்கு மூடி- எடுத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளணும்.
50
கிராம் இஞ்சி, ஒரு பதினைந்து பல்லு பூண்டு, பச்சை மிளகாய் அவரவர்கள்
காரத்துக்குத் தகுந்தவாறு பட்டை கொஞ்சூண்டு எடுத்து அரைத்துக் கொள்ளணும்.
குக்கரில்
எண்ணெய் ஊற்றி, கொஞ்சம் பெருஞ்சீரகம் போட்டு, முந்திரிப் பருப்பு
தேவையானால் சேர்த்து, பொடியாக நறுக்கிய இரண்டு மூன்று பெரிய வெங்காயத்தைப்
போட்டு, பதினைந்து நிமிடமாவது ஊறிய கால் படி அரிசியைப் போட்டு, அரைத்து
வைத்ததையும் இதில் கலந்து, தண்ணீருக்கு பதிலாக (அரிசி அளவுக்கு ஒன்றுக்கு
மூன்றோ, நான்கோ) தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி ஒரு
விசில், மூன்று நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி விடலாம்.
தேங்காய் சாதம் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள உருளைக் கிழங்கு ஃபிரை நன்றாக இருக்கும்..."
பின் குறிப்பு : இது சமீபத்தில் எங்கள் வீட்டில் செய்யாத காரணத்தால் சுடச்சுட இங்கு படங்கள் பகிராமல், இணையத்திலிருந்து (நன்றியுடன்) படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.