பிரமிட் மர்மங்களில் பெரியது!
......கடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின் குழு கண்டுபிடித்தது. அதன் வழியாகச் சென்றபோது, துட்டன்காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர்தான், 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது.
ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று துட்டன்காமனின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது.
கல்லறையைத் திறந்து 6 வாரங்களுக்குப் பிறகு, கொசுக்கடியால் ஏற்பட்ட தொற்றால், கெய்ரோ நகரில் கார்னர்வோன் மரணமடைந்தார். இதேபோல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வையிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங்களில் மர்மக் காய்ச் சலால் உயிரிழந்தார். துட்டன்காமனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வுசெய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார்.
இப்படிப் பலர் மர்மமாக உயிரிழந்தது பலரின் கற்பனையைப் பயங்கரமாகத் தூண்டிவிட்டது. எனினும், இந்த மரணங்களுக்கும் மன்னரின் சாபத்துக்கும் அறிவியல்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவியலாளர்கள் விளக்கமளித்துவிட்டனர்........
(தி இந்து பிப்ரவரி 16)
தாயை எரித்த தனயன்!
ஆலந்தூரில் சமையல் எரி வாயுவை கசிய விட்டு தாயை கொல்ல முயன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆலந்தூர் ஆண்டவன் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (58). இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது மகன் மதன்ராஜ் (26). மென்பொருள் பொறி யாளர். இவர் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது மதன்ராஜின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் மதன்ராஜ் தனது மனைவி யுடன் கோவிலம்பாக்கத்துக்கு தனிக்குடித்தனம் சென்று விட்டார்.
லட்சுமி அம்மாள் அங்கு அடிக்கடி சென்று ‘எனது மகனை பிரித்து தனிக்குடித் தனம் அழைத்து வந்து விட்டாய்’ என மருமகளிடம் சண்டை போட்டிருக்கிறார். இது மதன்ராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்த, கோபமடைந்த மதன்ராஜின் மனைவி பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தனது தாயாரால்தான் மனைவி பிரிந்து சென்று விட்டதாக நினைத்த மதன் ராஜுக்கு தாய் லட்சுமி மீது ஆத்திரம் வந்தது. நேற்று முன்தினம் பிற்பக லில் ஆலந்தூரில் உள்ள வீட்டுக்கு வந்த மதன்ராஜ், தாயாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவரை அடித்து உதைத்தார். அதில் லட்சுமி மயங்கி விழவே, சிலிண்டரில் இருந்த சமையல் எரிவாயுவை திறந்து கசிய விட்டு, கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
எரிவாயுவின் வாசனையை உணர்ந்து அருகே இருந் தவர்கள் லட்சுமியின் கணவர் ஸ்டாலினுக்கு தக வல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கதவை திறந்து மனைவியை காப் பாற்றினார். இது குறித்த புகாரின்பேரில் பரங்கிமலை போலீஸார் விசாரணை நடத்தி மதன்ராஜை கைது செய்தனர்.
இன்னொரு நேதாஜி!
ஏப்ரல் 10, 1980 அன்று தில்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த வி.வி. சடகோபன், ரயிலிலிருந்து கூடூர் ஸ்டேஷனில் இறங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதும், அவர் குடும்பத்தினர் அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவே நம்புகிறார்கள்! (தி இந்து)
கலை இலக்கிய எழுத்தாளரும்,கர்னாடக சங்கீத வித்தகருமான ஸுஜாதா விஜயராகவன் வி வி சடகோபனின் உறவினர்.