இரண்டாம் நாளும் மூன்றாம் நாளும் புத்தகச் சந்தை விஜயம். முதல் நாள் அப்பாவுடன். மறுநாள் மாமாவுடன்!
புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைப்பது பாவம் என்று நினைக்குமளவு
இருக்கிறது கண்காட்சி நடக்குமிடத்தை அடைவது. நந்தனம் YMCA மைதானம் என்பது
கேட்க மிக எளிதாக இருந்தாலும் உள்ளே சென்று வருவது அவ்வளவு சுலபமல்ல.
குறிப்பாக வயதானவர்களுக்கு. பழைய மைதானம் இந்த வகைகளில் ப்ளஸ்!
சனிக்கிழமை காலை 11.15 முதல் மாலை 4 மணி வரையும் ஞாயிறு மதியம் 2.15 முதல் மாலை ஆறரை மணி வரையும் உள்ளே சுற்றி வந்தோம்.

சனிக்கிழமை அன்று பார்த்த வி ஐ பி நடிகர் நாசர். அவ்வளவு கூட்டமில்லை, மாலை நாங்கள் கிளம்பும் வரையும் கூட! (மறுநாள் தினமணியில் சனிக்கிழமை காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் என்று செய்தி!). நடுவில் ஒரு வரிசை தவிர மற்ற வரிசையில் ஸ்டால்கள் போதிய இடைவெளியில் அமைந்திருந்தாலும் ஸ்டால்களுக்குள் நுழைந்து வருவது கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது.
கேமிரா வைத்து பு.ப எடுக்காமல் அவசரத்துக்கு அலைபேசியில் எடுத்த தெளிவில்லாத பு.படங்களுக்கு நானே பொறுப்பு!
வழக்கமான ஸ்டால்கள். வழக்கமான புத்தகங்கள். வெளியே சற்றுத் தள்ளி 'சாப்பிட வாங்க' மெண்டீன். ரவா தோசை, பூரி, சப்பாத்தி 40 ரூபாய். ,பூரியும் சப்பாத்தியும் மும்மூன்று வைத்தார்கள். ரவா தோசை (ஸ்டாக் இல்லை) கூட 3 கொடுப்பார்களோ என்று கேட்கத் தோன்றியது. கை கழுவ நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

சரிதாயணம் டிஸ்கவரியில் வாங்கிக் கொண்டேன். ஜவர்லாலின் 'மௌனத்தின் அலறல்' (மொழிபெயர்ப்பு) மற்றும் சில புத்தகங்கள்.

எல்லா ஸ்டால்களிலும் டி. செல்வராஜின் 'தோல்' (சாகித்ய அகாடெமி) கண்ணில் பட்டது. பாலகுமாரனின் 'கங்கை கொண்ட ராஜேந்திரன்' புதிய புத்தகம் இருந்தது. 330 ரூபாய்.
சாகித்ய அகாடமி அரங்கம் முதல் நாள் தப்பு ஸ்பெல்லிங் உடன் இருந்து மறுநாள் அது சரி செய்யப் பட்டிருந்தது! இந்த அரங்கில் 50, 60, 70 களில் வந்த சாகித்ய அகாடமி வென்ற புத்தகங்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கிடைத்தன.

வேறொரு ஸ்டாலில் யதேச்சையாக 'கோவை அனுராதா' புத்தகத்தை எடுத்துப் புரட்ட, அருகில் வந்த விற்பனையாளர் 'எடுங்க சார்... 50 சதவிகிதம் தள்ளுபடி' என்றார்

பரிசளிக்க என்று சில புத்தகங்கள் எடுத்தேன். கீதா பிரஸ்ஸில் பகவத்கீதைப் புத்தகம் 10 ரூபாய், திருப்பாவை விளக்கத்துடன் என்ற புத்தகம் 25 ரூபாய் என்று... இன்னொரு ஸ்டாலில் விஷ்ணுசஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், மற்றும் கனகதாரா ஸ்தோத்ரம் என்றும் வாங்கிக் கொண்டேன். 7 ரூபாய், 12 ரூபாய் என்று விலைகள். நண்பர்களுக்குப் பரிசளிக்க உதவும்!

அப்பா என் சுயசரிதை (உ.வே.சா), ராஜாஜி குழந்தைகளுக்கு எழுதிய புத்தகம், ராஜாஜியின் ஜெயில் டைரி, குண்டூசித் தொகுப்பு என்று வாங்கினார். என் பாஸ் கேட்ட வேதவல்லி வெங்கடாசலம் எழுதிய சமையல் புத்தகம் கிடைக்கவேயில்லை. 'மௌனியின் சிறுகதைகள்' இருக்கிறதா என்றால் சில ஸ்டால்களில் 'மௌலியா' என்றும் கேட்டார்கள். வைக்கப்போவதாகச் சொன்ன தொடுதிரைத் தேடு கணினி கண்ணில் படவேயில்லை. கழிவறை.... ம்ஹூம்... அது தனிக்கதை!