மலேசியா வாசுதேவன் பாடல்களில் நிறைய நல்ல பாடல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இளையராஜா பாடல்கள். இங்கு எனக்குப் பிடித்த அவரது பாடல்களில் சிலவற்றைப் பகிர்கிறேன்.
8) நீங்காத எண்ணம் ஒன்று...
பாக்யராஜின் குரலுக்கும், உடனே ஆரம்பிக்கும் பாடலில் உள்ள குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல்...! வழக்கம்தானே இல்லையா!
"என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்..."
7) குயிலே குயிலே பூங்குயிலே...
"பெண்ணே பழி அவன்மேலே சொல்லாதடி...ஆண்பாவம் பொல்லாது பொல்லாதடி..."
6) வான் மேகங்களே...
"தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே...."
5) கோவில் மணி ஓசை தன்னை...
"என்மனது தாமரைப்பூ... உன்மனது முல்லை மொட்டு.."
4) சுகம் சுகமே...
இந்தப் பாடலில் பின்னணி இசை ஒரு சுகம். ஆரம்பமும் சரி சரணங்களுக்கு இடையே வரும் இசையும் சரி...இளையராஜா தூள் கிளப்பியிருக்கும் பாடல்களில் ஒன்று.
3) ஒரு தங்கரதத்தில்...
தங்கைக்கோர் கீதம்!
2) கோடைக் கால காற்றே...
அலைகள் ஓய்வதில்லை படமும், பன்னீர் புஷ்பங்கள் படமும் ஒரே சமயத்தில் வெளிவந்தன இரண்டும் இளையராஜா. இரண்டும் ஒரே கதைக்களம். வெவ்வேறு ட்ரீட்மென்ட். பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் பாடல் இது. பாடலின் வரிகளைப் போலவே சுகமான இசை!
1) அள்ளித் தந்த பூமி...
வளர்ந்த ஊரையும் பழகிய மக்களையும் 'நண்டு'ப் பிடியில் நினைவுக்குக் கொண்டு வரும் பாடல். இளையராஜா!