புதன், 10 அக்டோபர், 2012

மலேஷியா வாசுதேவன்



மலேசியா வாசுதேவன் பாடல்களில் நிறைய நல்ல பாடல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இளையராஜா பாடல்கள். இங்கு எனக்குப் பிடித்த அவரது பாடல்களில் சிலவற்றைப் பகிர்கிறேன்.



8) நீங்காத எண்ணம் ஒன்று...



பாக்யராஜின்  குரலுக்கும், உடனே ஆரம்பிக்கும் பாடலில் உள்ள குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல்...! வழக்கம்தானே இல்லையா!



"என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்..."





7) குயிலே குயிலே பூங்குயிலே... 



"பெண்ணே பழி அவன்மேலே சொல்லாதடி...ஆண்பாவம் பொல்லாது பொல்லாதடி..."





6) வான் மேகங்களே...



"தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே...."




5) கோவில் மணி ஓசை தன்னை...



"என்மனது தாமரைப்பூ... உன்மனது முல்லை மொட்டு.."




4) சுகம் சுகமே...



இந்தப் பாடலில் பின்னணி இசை ஒரு சுகம். ஆரம்பமும் சரி சரணங்களுக்கு இடையே வரும் இசையும் சரி...இளையராஜா தூள் கிளப்பியிருக்கும் பாடல்களில் ஒன்று.




3) ஒரு தங்கரதத்தில்...



தங்கைக்கோர் கீதம்!





2) கோடைக் கால காற்றே...



அலைகள் ஓய்வதில்லை படமும், பன்னீர் புஷ்பங்கள் படமும் ஒரே சமயத்தில் வெளிவந்தன இரண்டும் இளையராஜா. இரண்டும் ஒரே கதைக்களம். வெவ்வேறு ட்ரீட்மென்ட். பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் பாடல் இது. பாடலின் வரிகளைப் போலவே சுகமான இசை!





1) அள்ளித் தந்த பூமி...



வளர்ந்த ஊரையும் பழகிய மக்களையும் 'நண்டு'ப்  பிடியில் நினைவுக்குக் கொண்டு வரும் பாடல். இளையராஜா!

20 கருத்துகள்:

  1. வித்தியாசமான குரல் வளம் உடையவர் மலேசியா வாசுதேவன்.
    பகிர்ந்துள்ள பாடல்கள் இனிமை.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமுமே பலமுறை ரசித்த பாடல்கள்...

    தொகுப்பிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பூவே புதிய பூவேயும் மிகவும் பிடிக்கும்.
    கோடைக்காலக் காற்றே மிக் மிகப் பிடிக்கும். மனதோடு ஓடு ம்ப்ராகங்கள் இவை. அவர் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு.
    நண்டு படப் பாடல் என்னந் அடக்கப் போகிறது என்று தெரிவதாலயே சோகம் மிகும்
    அருமையான தேர்வுகள் ஸ்ரீராம். மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  4. 7,4,2 அதிகம் கேட்டதில்லை. மற்றவை இரசித்த பாடல்கள்! இங்கிருக்கும் இணைப்பிலிருந்தே கேட்கிறேன் இன்று. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சார் உண்மைய சொல்லனும்னா மூணாவது பாட்டு மட்டும் தான் கேட்டது போன்ற நியாபகம்...

    பதிலளிநீக்கு
  6. எல்லா பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்கள் தான் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. நண்டு படப் பாடலும். பன்னீர்ப் புஷ்பங்கள் படப் பாடலும் என்றும் என் பேவரைட். கேட்டுக் கேட்டுக் கேட்டு கேட்டாலும் சரிக்காத இசையும் குரலும். ஞாபகங்களைத் தாலாட்ட வைத்து விட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  8. எல்லாமே அருமையான பாடல்கள். மனதை மயக்கும் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே அருமையான பாடல்களாகப் பகிர்ந்துருக்கீங்க. எனக்கு அவரோட "பூங்காற்று திரும்புமா"தான் ஆல்டைம் ஃபேவரிட்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் தந்த முதல் இரண்டு இடங்களுடன் முழுவதும் ஒத்து போகிறேன்

    ஒரு தங்கரதத்தில் பாடல் தர்மயுத்தம் அல்லவா? (அலுவலகத்தில் யூ டியூப் பார்க்க முடியலை)

    பதிலளிநீக்கு
  11. மலேசியா வாசுதேவனின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், என்னோட ஆல்டைம் பேவரிட் “தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளைச் சத்தம் கேட்டிருச்சு”. அப்புறம், “ஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்புக்குயிலாக...” பாட்டு கொஞ்சம் அசந்தால் டி.எம்.எஸ்.பாடின மாதிரியே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. எனக்கு பிடித்த மலேசிய வாசுதேவன் பாடிய பாடல்களில் இந்த லிஸ்டில் இருக்கும் ஒரே ஒரு பாடல் 'கோவில் மணி ஓசை' பாடல் மட்டும்தான்'. இரண்டு முறை கேட்டுவிட்டேன்.
    நன்றி.
    பாடலை பற்றிய பதிவுகள் எல்லாம் என்றுமே எனக்கு ஸ்பெஷல்தான். அதனால உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.


    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் தொகுத்துள்ள பாடல்கள் யாவும் மனித மனதை நெகிழ்வுக்குள்ளாக்குபவை.

    பதிலளிநீக்கு
  15. அனைத்துமே அருமையான பாடல்கள்....

    டப்பாங்குத்து பாடகராக பலர் பார்த்தாலும், நல்ல பாடகர்....

    அனைத்தையும் மீண்டும் ஒரு முறை கேட்கத்தந்தமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. எல்லாமே நல்ல பாடல்கள்..எனக்கு ஒரு தங்க ரதத்தில் பாடல் மிகவும் பிடிக்கு. நல்லதொரு மலரும் நினைவுகள் பதிவுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி T N MURALIDHARAN.

    ரசித்ததற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    வரணும் வல்லி மேடம்.. பூவே பாடலும் நல்ல பாடல். இன்னும் சிலபல பாடல்கள் கூடப் பிடிக்கும். ஒரே சமயத்தில் எங்கே போட? நண்டு பாடலும் அதன் வரிகளும் பிடிக்குமே தவிர அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதே! சிவசங்கரியின் கதையைக் கூடப் படித்ததில்லை. என்ன நடக்கும்?

    நன்றி எல்கே. அதிகம் 'கேட்காத'வா கேட்க முடியாத பாடல்களா?!! :))


    நன்றி ராமலக்ஷ்மி... இணைப்பிலிருந்து பாடல்கள் முழுதும் ரசித்ததற்கு!


    சீனு... அநியாயம்! புதுப் பாடல்கள் மட்டும்தான் கேட்பீர்களா?! இங்காவது எல்லா பாடல்களையும் ஒருமுறை கேட்டீர்களா?!!

    நன்றி லக்ஷ்மிம்மா...

    எங்களுடனே பாடல்களை ரசித்துக் கருத்துரை வழகிய பால கணேஷுக்கு எங்கள் இதயம் நிறை நன்றிகள்.

    நன்றி கோவை2தில்லி.

    நன்றி அமைதிசாரல். அந்தப் பாடலும் நல்ல பாடல். ஓரளவு அதிகம் அறியப் படாத நல்ல பாடல்களைப் பகிர எண்ணினோம்!

    நன்றி மோகன் குமார். சந்தேகமில்லாமல் அது தர்மயுத்தம் படத்தில்தான். பாடல் தங்கைக்கானது என்று சொல்ல, அந்த வார்த்தைப் பிரயோகம்!

    நன்றி சேட்டைக்காரன்... ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே கேட்டிருக்கிறீர்களோ... சி எஸ் ஜெயராமன் போல ட்ரை செய்திருப்பார்!

    மீனாக்ஷி.. அதிர்ச்சி எனக்கு! நண்டு, ப.பு பாடல்கள் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன்!

    நன்றி விமலன்.

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    நன்றி RAMVI .

    பதிலளிநீக்கு
  18. மலேசியா வாசுதேவன் குரலை அடையாளம் காணும்படியாகப் பாடல்கள் என்னைக் கவரவில்லை. என்றாலும் முதல் மரியாதை படப் பாடல் மட்டும் மிகப் பிடிக்கும்.

    "பூங்காற்று திரும்புமா?" மலேசியா தானே பாடினார்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!