என் இளையவன் பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல் 'இரவு நேரத்தில் மட்டும் வலி வர வைத்து விடாதே...' என்பதுதான்.... என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்... அது தொடர்கிறது...
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
யானை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யானை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
23.4.20
ஓரமாக ஒரு ஒற்றை யானை !
என் இளையவன் பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல் 'இரவு நேரத்தில் மட்டும் வலி வர வைத்து விடாதே...' என்பதுதான்.... என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்... அது தொடர்கிறது...
22.3.18
1.1.14
குட்டியானையின் கண்ணீர்.
அம்மா...அம்மா...
எழுந்திரிம்மா...
மனுஷக் கூட்டம் வர்றத்துக்குள்ள
வாம்மா போகலாம்
எழுந்திரிம்மா...வாம்மா போகலாம்
எழுந்திரிம்மா...
மனிதர்கள் யானைக் கூட்டத்திலிருந்து தங்களை, தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்திய மின்சார வேலியில் பட்டு உயிரிழந்த தன் தாயைத் தனது தும்பிக்கையால் தடவித் தடவிக் கண்ணீர் உகுத்த குட்டி யானையின் இந்தப் படம் மனதை ரொம்பவே பாதித்தது.
3.4.10
கார பூந்தி வரும் முன்னே, கார் ரிப்பேர் வரும் பின்னே!
சென்ற வாரம் ஒரு நாள் - சனிக் கிழமை என்று நன்றாக நினைவு இருக்கிறது - கார் துடைத்துக் கழுவி எல்லாம் செய்து விட்டுப் பின் அப்படியே ஏர்-ஃபில்டரையும் எடுத்துக் கிளீன் பண்ணிவிடலாம் என்று பான்னெட்டைத் திறந்து வைத்து விட்டு உள்ளே போய் ப்ளோயர் (Blower) எடுத்து வரலாம் என்று திரும்பினவன் "எவ்வளவு நேரம் தான் கூப்பிடறது ? நானும் ஒரு நாழியாக் கத்திண்டுருக்கேன். காதிலேயே வாங்காமல் அப்படி என்ன வெட்டி முறிச்சுன்டிருக்கேள் ?" என்ற மணியோசைக்குப் பின் வந்த யானையைப் பற்றி நான் குறிப்பிடவும் வேண்டுமோ?
"ஃபில்டரைக் கிளீன் பண்ணி வெகு நாட்களாயிற்றே என்று திறந்தேன் ரோடுலே இருக்கிற தூசு எல்லாம் நம்ம கார்லேதான் செட்டில் ஆகிற மாதிரி இருக்கு. " என்று சொல்லிக் கொண்டே சின்ன பிளாஸ்டிக் பிளேட்டில் ஒரு சின்ன ஸ்பூனுடன் வந்த கார பூந்தியையும் காப்பியையும் வாங்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தேன். ஒரு வழியாகக் கூலன்ட், பாட்டரியில் தண்ணீர், பிரேக் ஃப்ளூயிட் இப்படி எல்லாவற்றையும் செக் செய்து முடிப்பதற்குள் முதுகுவலி தாங்க முடியவில்லை. ஒரு வழியாக சாமான்களை எல்லாம் திரும்ப வைத்து விட்டு வந்து ஐ பி எல் கிரிக்கெட்டில் அடைக்கலமானேன். [அதென்ன ஐக்கியம் என்று தானே சொல்வார்கள் என்பவர்க்கு - அடைக்கலம் என்பதே சரி - மற்றவர்களும் கிரிக்கெட் சுவாரஸ்யத்தில் நமக்கு எதுவும் புதிது புதிதாக வேலை சொல்ல மாட்டார்கள்!]
மறு நாள் - ஞாயிறு மாலை, மயிலையில் ஒரு ரிசப்ஷன். பட்டுப் புடவை, பாங்காகச் சுற்றுப்புறச் சூழலை மனதில் கொண்டு தயாரிக்கப் பட்ட காகிதப் பையில் பரிசுப் பொருள் என்று வந்து காரிலும் ஏறிக் கொண்டு ஸ்டார்ட் செய்தால், "ஹி ஹிஹ ஹி " என்று குதிரை கனைக்கிற சப்தம் வந்ததே தவிர குதிரை ஒன்றும் கிளம்புவதாகத் தெரிய வில்லை. சரி, பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஆட்டோ சவாரி - அருணாசலம் தெரிந்தவர் தான் என்றாலும், அவருக்குத் தெரியும் எப்பொழுது எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று.
கார் ஸ்டார்ட் ஆகாததைப் பற்றி ஆளுக்கு ஆள் - குறை சொல்ல ஆரம்பித்தார்கள். "எங்கள் வீட்டுக் கல்யாணம் என்றாலே உங்கள் கார் சதி பண்ணி விடும் " என்பதிலிருந்து, "நீங்க உங்க ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர் இதை எல்லாம் தூக்கிக் காயலான் கடையில் போடும் வரை நாங்கள் எல்லாம் ஆட்டோவில் போவதுடன் அவ்வப்பொழுது நடந்தும் போக வேண்டியிருக்கும்" என்பது வரை வித விதமான வர்ணனைகள், உபதேசங்கள் அடுத்த கட்ட ஆக்ஷன் பிளான்கள் இப்படி எல்லாவற்றையும் எதிர் கொண்டு கார் பான்னெட்டைத் திறந்து பார்த்தவன், வழக்கம் போல எங்காவது எண்ணெய் சொட்டி இருக்கிறதா, தண்ணீர் சொட்டி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க, அங்கே - லக்ஷ்மியின் பிளாஸ்டிக் மணிகள் சிதறிக் கிடக்கக் கண்டு அவற்றைத் திரட்டினேன். மூன்று, நான்கு வர்ணங்களில், ஆனால் ரொம்ப தீர்மானம் செய்ய முடியாத வடிவங்களில் பிளாஸ்டிக். இப்பொழுது புரிந்தது கார் ஸ்டார்ட் ஆகாத கதை.
ஆகையால் தோழர்களே, கார பூந்தி சாப்பிட்டால் கண்ட இடங்களில் வைத்து மறந்து போகாதீர்கள். அப்படி மறந்தால் உங்களுக்கும் எங்கள் கதி தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)