உதவிய திருமதி ராமலக்ஷ்மிக்கு எங்கள் நன்றி.
நண்பர்
சொல்லியிருக்கும் வம்சி வெளியீடான "காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்"
புத்தகம் என்னிடமும் இருக்கிறது. எனக்கு அதை நண்பர் மூன்றாம் சுழி
அப்பாதுரை பரிசாக அளித்தார். அந்தப் புத்தகத்தில் அவர் படைப்பும், இந்தத் தொடர் பகுதியில்
ஏற்கெனவே தனது படைப்பைத் தந்திருக்கும் ஹேமா (HVL) படைப்பும் கூட இருக்கின்றன.
கீழே நண்பர் ரிஷான் ஷெரீபின் பக்கங்களின் சுட்டிகளைத் தொடர்ந்து அவர் கருத்தும், அதைத் தொடர்ந்து அவர் படைப்பும்...
======================================================
--
இந்தச்சிறுகதை 2011 ஆம்ஆண்டுஊரில்இருந்தபோதுஎழுதி யதாகஞாபகம்.
அக்காலத்தில்நிறையஎழுதுவதற்கா னவாய்ப்பும், நேரமும்கிடைத்துக்கொண்டேயிருந் தன. எழுதிஎங்காவதுசேமித்துவிட்டு,
மறந்துவிட்டிருப்பேன். பின்னர்வேறாவதொன்றைத்தேடும்போது கண்களில்சிக்கி, பயனுள்ளதாகும்.
'காக்கைகள்துரத்திக்கொத்தும்தலை க்குரியவன்' எனும்இந்தச்சிறுகதையும்அவ்வாறு ஒன்றுதான்.
2012 ஆம்ஆண்டுஇந்தியா, வம்சிபதிப்பகம்சர்வதேசரீதியில் ஒருசிறுகதைப்போட்டியைஅறிவித்தது .
அதில்கலந்துகொண்ட, வலைப்பதிவுலகில்2011 ஆம்ஆண்டுவெளிவந்த 373 சிறுகதைகளிடையேஎனது'காக்கைகள்து ரத்திக்கொத்தும்தலைக்குரியவன்'ச ிறுகதைக்குமுதல்பரிசான
10000/= வழங்கி, அதேதலைப்பில்தொகுப்பாகவும்வெளி யிட்டுகௌரவித்ததுவம்சிபதிப்பகம் .
இன்றுவரையில்இச்சிறுகதைசர்வதே சரீதியில்பலநாட்டுஇதழ்களிலும்பி ரசுரம்கண்டிருப்பதோடு,
சர்வதேசபல்கலைக்கழகசிறுகதைப்பயி ற்சிப்பட்டறைகளில்இச்சிறுகதையை முன்வைத்துபாடங்கள்நடத்தப்படு வதையும்,
கதைவிவாதங்களில்கலந்துரையாடப் படுவதையும்அறியத்தரும்போதுமகிழ் ச்சியடைகிறேன். இந்தியா,
இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவின்சிறந்தஎழுத்தாளர்கள் இச்சிறுகதைகுறித்துதமதுதிறனாய் வுக்கட்டுரைகளைஎழுதியிருக்கிறா ர்கள்.
சிறுகதைபற்றியஎனதுகுறிப்போடு, அவர்கள்சிலரதுகட்டுரைகளையும்இணை த்திருக்கிறேன்.
இச்சிறுகதைஏற்கெனவேகீழுள்ளஇதழ் களிலும், இன்னும்நானறியாதசிலஇதழ்களிலும் பிரசுரமானது.
# பெருவெளி - இலக்கியஇதழ் - 07, ஜனவரி,
2011
# கலைமுகம்இலக்கியஇதழ் - 51, ஏப்ரல் - ஜூன், 2011
# எங்கள்தேசம் - 200 ஆவதுசிறப்பிதழ்
# வடக்குவாசல் - செப்டம்பர், 2011
# காற்றுவெளிஇலக்கியஇதழ்
# உயிர்மைகலைஇலக்கியஇதழ்
# நவீனவிருட்சம்கலைஇலக்கியஇதழ்
# திண்ணை இணையத்தளம்
# தமிழ்எழுத்தாளர்கள்இணையத்தளம்
# கலைமுகம்இலக்கியஇதழ் - 51, ஏப்ரல் - ஜூன், 2011
# எங்கள்தேசம் - 200 ஆவதுசிறப்பிதழ்
# வடக்குவாசல் - செப்டம்பர், 2011
# காற்றுவெளிஇலக்கியஇதழ்
# உயிர்மைகலைஇலக்கியஇதழ்
# நவீனவிருட்சம்கலைஇலக்கியஇதழ்
# திண்ணை இணையத்தளம்
# தமிழ்எழுத்தாளர்கள்இணையத்தளம்
நீங்கள்இதைமீள்பிரசுரம்செய்யவி ருப்பதில்மகிழ்ச்சியும்,
அன்பும், நன்றியும் !
என்றும்அன்புடன்,
எம்.ரிஷான்ஷெரீப்
06.05.2016
============================================================
எம்.ரிஷான்ஷெரீப்
காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையை த்தான் குறிவைத்தன. அவன் பகல்வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன்வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக்காக்கையே னும் அவனதுதலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல் லும். ஒருமுறை கொத்திவிட்டுப் போன காக்கை , திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும்வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப் பகுதியில் சிறகு திர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்துகொண்டா ன். தங்களுக்குள் முறைவைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.
காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன்ஆதி முதல் கற்றறிந் த வசவுமொழிகளை வெளியில் உதிர்ப்பதைக் காணக் கிடைக்கும். ஓங்காரமான குரல், தெருவெல்லாம் அலறும். தலையைக் கொத்திப் போன வலி மறையும் வரை மிகக் கொச்சையான சொற்கள் எல்லா ம் அவனிலிருந்து காக்கைகளுக்குப் பறந்து கொண்டே இருந்தன. தெருவின் பெரியவர்கள் தமக்கிடையே திட்டிக்கொண்டும், வீட்டுக் கதவு ஜன்னல்களை அடைத்தபடியும் தாங்கொணா அவனது வசவு மொழிகள் தமது வீடுகளுக்குள் நுழைந்திடாதபடி தடுத்துக்கொண்டனர். சிறுவர்களுக்கு அவனது தலையை காக்கைகள் கொத்தி விட்டுப் பறப்பது மிகப் பெரும் வேடிக்கையாயும், அவனுதிர்க்கும் சொற்கள் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பியும் குழப்பி யும் விடப் போதுமானதாயும் இருந்தன. காக்கைகளெல்லாம் கொத்திவிட்டுப் பறந்த பின்னர் அவன் திட்டித் திட்டி ஓய்ந்து, தலையைத் தடவியபடியும், தடவியவிரல்களில் இரத்தச் சிவப்பு களேதேனும் ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தபடியும் வரும்போது சிறுவர் கள் 'கா..கா' எனக் காக்கையின் மொழியைக் கத்திவி ட்டு ஓடுவார்கள். அவன் விந்தி விந்தி ஓடித் துரத்துவா ன். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.
ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங் கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளை ந்திருந்தன. இன்னும் அவன் மிகவும்ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும் . கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒருமாதிரியாக வெள்ளைக் காகிதத்தி ல் செம்மண்தூசுஅப்பியதைப் போன்ற வெளிறிப் போனநிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது மு ப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒரு போதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை.
சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசு வதில்லை. எந்தக் கொம்பனாலும் அவன துநாவசைய வை த்து, வாயிலிருந்து ஒற்றைச் சொல்லை உருவி யெடுக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் 'ஆம்,இல்லை' என்ற ஆமோதிப்பு அல்லது மறுப்புக்களைக் குறிக்கும் தலையசைவுதான் அவனிடமிருந்து வெளிப்படும். மிகவும் முக்கியமென்றால் மட்டும் கைகளால் கூடச் செய்கை செய்வான். அவனுக்கு அவர்கள் புரட்டிப் புரட்டிப் பேசும் மொழிகளெல்லாம் நன்கு தெ ரிந்திருந்தது. அவை அவனிடமிருந்து ஏதோ ஒன்றைக் காற் றுக்கு எடுத்துப் போவதாக நினைத்தானோ என்னவோ அவன் ஏனோ சொற்களை உதிர்க் கப் பயந்தான். ஒருவேளை அவனிடம் நிறைந்திருக்கும் சொற்களையெல்லாம் உதிர்க்க வைப்பதற்காகத்தான் காக்கைகளும் வந்து கொத்தி விட்டுப் பறக்கின்றனவோ என் னவோ? வானொலிப் பெட்டிக்கு அதன் தலையில் ஒரு அழுத்தி இருக்கும். அதை அழுத்தி விட்டால் பேசும். ஒலிக்கும். பாடும்.
அதுபோல அவனது பேச்சுப் பெட்டிக்கும் தலையில்தான்அ ழுத்தி இருப்பதாகவும் காக்கைகள் வந்து அழுத்திவிட் டுச் சென்றால்தான் அது பேசுமெனவும் குழந்தைகளுக்குக் கதை சொன்னபடி தா ய்மார் உணவூட்டினர்.
அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ் வூரில் நீண்ட காலமாக வாழ்ந்துவந்தா ன். காக்கைகள் துரத்திக் கொத்துமெனக் கண்டறிந்த நாள் முதல் அவன் பகல்வேளை களில் வெளியே வரத் தயங்கினான். மிக முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே பகலில் வெளியே வருவான். அவன் அவ்வூரில் பெரிய ஹோட்டல் வைத் திருக்கும் பெரியவர் ஹோட்டலிலேயே வேலைக்கிருந்தான். அவனுக்கென்று சிறுகுடிசையொன்றை ஹோட்டலுக்கருகிலேயே கட்டிக்கொள்ளு ம் அனுமதியைப் பெரியவர் அவனுக்கு வழங்கியிருந்தார். அவன் அதில்தான் வசித்தான். ஒரு தண்ணீர்க் குடம், இரண்டு அலுமினியப் பீங்கான்கள், ஒரு கேத்தல், ஒரு சிறுகுவளை, ஒரு சாக்குக் கட்டில், ஒரு தலையணை, இரண்டு வெள்ளைச்சாரன்கள், முன் பக்கத்தில் இரண்டு பாக்கெட்டு க்கள் வைத்த இரண்டு வெள்ளை அரைக்கை ச் சட்டைகள் அவனது உடைமைகளென அக்கு டிசையை நிரப்பின. அடுத்த நாள் ஹோட்டலில் வழங்கும்ரொ ட்டிக்காக இரவில் மா பிசைந்து ரொட் டி தயாரிப்பது அவன் வேலை. காக்கைகளுக்குப் பயந்து அவையெல்லா ம் கூடடைந்த பின்னரான முன்னிரவில் அவன் ஆற்றுக்குப் போய்க் குளித்து வருவான். பிறகு ஹோட்டலுக்குப் போய் பகல் சமை த்து மீதமிருக்கும் சோற்றை உண்டுவி ட்டு ரொட்டி தயாரிக்கத் தொடங்குவா ன். வேலை முடிந்த விடிகாலையில் காலை மற் றும் பகலுணவுக்கென சில ரொட்டிகளைப் பார்சலாக எடுத்துக்கொண்டு அவன் கு டிசைக்கு வந்தால் இனி அந்திசாயும் நேரம் வரை உறக்கம்தான். உணவுக்கும் தண்ணீருக்குமென மட்டும் எழும்புபவன் மீண்டும் உறங்கிப் போவான்.
காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன்ஆதி முதல் கற்றறிந்
ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்
சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசு
அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ்
எப்பொழுதாவது மிகவும் முக்கியமா கத் தேவைப்பட்டு, பெரியவர் உத்தரவிட்டால் மட்டுமே அவன் பகல் வேளையில் வெளியே வருவான். ஒருமுறை இப்படித்தான் பெரியவர் வீ ட்டில் விறகு வெட்டித் தரும்படி அவனைக் கூப்பிட்டிருந்தார். வீதி தோறும் விரட்டிக் கொத்திய காக் கைகள், பெரியவர் வீட்டு முற்ற மாமரத்தில் வசித்த காக்கைகளெனப் பல காக்கைகள் கொத்தியதில்விறகுவெட்டும்போது அவனது வியர்வையோடு சொட்டு இரத்தமு ம் நெற்றியிலிருந்து கோடாய் வழியலா யிற்று. வசவுமொழிகள் வாயிலிருந்து பெருஞ் சத்தமாக உதிரலாயிற்று. வீட்டின் கன்னிப் பெண்கள் யன்னல் வழி விசித்திரமாகப் பார்த்திருந் தனர். பெரியவரின் தாய்க் கிழவி அவனை விறகு வெட்ட வேண்டாமெனச் சொல்லி அவனது வீ ட்டுக்கு அனுப்பி வைத்தாள். அவனது சிறு வயதில் குஞ்சுகளிருந் த காக்கைக் கூடொன்றைக் கைகளால் பிய் த்தெறிந்தாகவும் அதற்காகத்தான் கா க்கைகள் எப்பொழுதும் அவனைப் பழி வா ங்குவதாகவும், காக்கைகள் அவனைக் கொத்துவது குறித் து ஊருக்குள் நிலவி வந்த கதையைக் கி ழவி அப் பெண்களோடுப கிர்ந்துகொண்டா ள். வரும் வழியில் கொத்தி ஓய்ந்த எந்தக் காக்கையும் அவனைக் கொத்தவுமில்லை. துரத்தவுமில்லை. அவன் அமைதியாகக் குடிசை வந்து சேர் ந்தான். தலையைத் தடவியபடியே உறங்கிப் போனா ன்.
ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச் சமயங்களில் பெரியவர்அவனை மீன் வாங் க அனுப்பி வைப்பார். அதுதான் அவனுக்கு அவனது வேலைகளிலே யே மிகவும் வெறுப்பான வேலை. மீன் வாடிக்கருகில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் காக்கைகள் குறித் துஅவன் பயந்தான். மீனின் உதிரிப் பாகங்களைக் கொத்தி த் தின்று பழகிய அவைகளின் சொண்டுகள் மிகக் கூர்மையானவை என்பதனை அவன் உணர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் சொண்டிலிருக்கும் உணவுப் பாகத்தைத் துப்பிவிட்டு, அவை ஒரு கடமையை நிறைவேற்றுவது போ ல அவனது தலையைக் கொத்திவிட்டுப் பறந்தன. சந்தைக்கு வந்திருக்கும் அவனையறியாத புதிய மனிதர்களெல்லாம் அவனை ஒரு அதிசயப் பிராணியாகப் பார்த்தனர். இடுப்பில் குழந்தைகளைச் செருகியிருக்கும் அம்மாக்கள், குழந்தைகளுக்கு அவனை வேடிக்கை காட் டினர். சந்தையிலிருக்கும் ஒரு விசித்திர, வேடிக்கைப் பொருள் என்பது போல அக்குழந்தைகளும் அவற்றின் கண்கள் மின் னவும், வாய் பிளந்தும், சிரித்தும் அவனைப் பார்த்து ரசித் தன.
இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையி லிருந்து மீன் வாங்கி வரும் வேளை பள் ளிக்கூடச் சீருடையோடு ஒரு சிறுமி, புளியங்காட்டுக்குள் தனியாக அழுது கொண்டிருந்ததைப் பார்த்தான். அவளது இதழ்கள் கோணி, எச்சிலும், மூக்குச் சளியும், கண்ணீரும் ஒருசேர வடிய கைகளில் இரு புளியம் பழங்களோடு அந்தஅத்துவானக் காட்டுக்குள் அவள் தனித்திருந்ததை ப் பார்த்தான். நின்று அருகில் போய் என்னவென்று கை களால் விசாரித்தான். யாருமற்ற காட்டுக்குள் வெண்ணிற ஆடை யோடு கால்கள் வளைந்து குட்டையா ன இவனைப் பார்த்ததும் முதலில் அச்சமுற்ற சிறுமி பின்னர் தான் பழம் பறி க்க வந்து வழி தவறிப் போனதைச் சொல்லி விசித்தழுதாள். அவளை அழைத்துக் கொண்டு மீண்டும்சந் தைப் பகுதிக்கூடாக வந்து அடுத்த ஊரு க்கான தெருவிலுள்ள அவளது வீட்டுக் கு அவளைக் கொண்டு சேர்த்தான். இடையில் புளிய மரக் காக்கையொன்று அவன் தலையைக் கொத்திவிட்டுப் பறந் தது. அந்தத் தெருவிலுள்ள ஒன்றிரண்டு காக்கைகளும் அவனது தலையைக் கொத்திப் பறந்தன. காக்கை பறந்து வரும் 'விஸ்க்' எனும் ஒலியைக் கேட்ட போதெல்லாம்சி றுமி விம்மியபடி திரும்பி காக்கையை ப் பயத்தோடு பார்த்தவாறிருந்தாள். சில சிறுவர்கள் 'கா..கா'
எனக் கத்தி விட்டுஓடினர். மிகவும் அதிசயப்படத்தக்கதாக அவன் அச் சிறுமி முன்னால் காக்கைக்கெதி ரான வசவு வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை. அச் சிறுவர்களைத் துரத்தி ஓடத் துணி யவில்லை. மௌனமாக,
அத்தோடு அச் சிறுமியிடம் கேட்காமலே யே அவளது வீட்டுக்கு அவளை மிகச் சரி யாகக் கொண்டு வந்து சேர்த்திருந்தா ன். அன்றிலிருந்துதான் ஊரில் எல்லோரை யும் அவன் நன்றாகஅறிந்து வைத்திரு க்கிறானென்ற செய்தி ஊருக்குள் பரவி யது. காக்கையன் என ஊருக்குள் அழைக்கப் படுபவன் சிறுமியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த செய்தி அவன் பற் றிய நல்லெண்ணத்தை ஊருக்குள் விதைத் தது.
அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் கா ணும் சிலர் அவனின் நலம் விசாரித் தனர். பதில்களெதுவும் வராது எனினும் அவனை க் காக்கைகள் கொத்தாமலிருக்க வெளி யே வரும்போது தொப்பி அணிந்து கொள்ளு ம்படியும் அல்லது காக்கைகள் பார்த் து மிரளும் படியாக மினுங்கும் ஏதா வதொரு நாடாவைத் தலையைச் சுற்றிக் கட்டியபடி வெளியே வரும்படியும் சி லர் ஆலோசனைகள் கூறினர். சிலர் பலாப் பழத்தோலைப் போல கூறுகூ றாய் மேல் நோக்கி வளர்ந்திருந் த அவனது தலை முடியினை முழுவதுமா க அகற்றி மொட்டையடித்துக் கொள்ளும் படியும், அல்லது நீண்ட கூந்தல் வளர்க்கும் படியும் கூடச் சொல்லினர். இன்னும் சிலர் இது ஏதோ செய்வினை, சூனியமெனச் சொல்லி அவர்களுக்குத் தெரிந்த மாந்திரீகர்களிடம் தாயத் து வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி கூறினர். அவன் எதுவும் பேசாமல் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டதாகச் செய்கை செய்தா ன். அடுத்தமுறை பகலில் வெளியே வருகையி ல் அவர்கள் சொன்னவற்றை நடைமுறைப் படுத்தப் பார்த்தான். எதற்கும் அசையாக் காக்கைகள் அதன்பின்னால் தொப்பியைக் கொத்திப் பறந்தன . ஒருமுறை கொத்திய காக்கைகள் கூட மீண் டும் மீண்டும் சுற்றி வந்து திருப்பித் திருப்பிக் கொத்தின. கூடி நின்று ஒருசேரக் கொத்தின. அவ்விடத்திலேயே பெருத்த ஓசையுடனான வசவு வார்த்தைகளோடு தொப்பியையும் நாடாவையும் கழுத்தில் ஏறியிருந் த கறுப்புத் தாயத்தையும் கழற்றி வீ சியெறிந்தான்.
ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டி தயாரிக்க வராததைக் கண்டு பெரியவர் அனுப்பிய ஆள் அவனது குடிசை திறந்து தேடிப் பார்த்தான். தண்ணீர்குடத்தையும், இருந்த ஆடைகளையும் காணப் பெறாதவன் அவன் ஊரைவிட்டு எங்கோ போய் விட்டதா க வந்து சொன்னான். அவனைத் தேடிப் போக அலுத்தவர்கள் ஓரி ரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாம் என இருந்தனர். ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு நெடு ங்காலமாக ஆவலாகக் காத்திருந்த, வேலை தேடிப் போயிருந்த ஒருவனுக்கு க் கொடுக்கப்பட்டது. மறுநாள் விடிகாலையில் குளிக்கப்போ ன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதா ன் கரையோரப் பாறையொன்றில் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப் பு எறும்புகள் மொய்க்க, குருதிகாயச் செத்துக் கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருதமரத்தில், அயல் மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை.
எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லா ம் ஒன்று சேர்ந்தாப் போலக் கூட்டமா க இருந்து அவனைப் பார்த்துக் கரைந்தன. இரைதேடி அலைதல் மறுத்து அப்பிணம் அகற்றப் படும்வரையில் அங்கேயே கி டந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப் பெட்டி யை அழுத்தி, ஒலிக்க வைக்கச் செய்யமுடியாதென அறி ந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.
ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச்
இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையி
அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் கா
ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டி
- எம்.ரிஷான்ஷெரீப்
