இசை அமைப்பாளர் ரவீந்திரன் மாஸ்டர் முதலில் பின்னணிப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் அவரின் இசைக்கல்லூரி நண்பர் கே ஜே யேசுதாஸ் ரவீந்திரன் திறமைகளை உணர்ந்து அவரை இசை அமைக்க வைத்தாராம். அதுவரை அவர் சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் இசையமைத்த முதல் படம் 1979 ல் வெளிவந்தது.