வெள்ளி, 3 செப்டம்பர், 2021

வெள்ளி வீடியோ : கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு ; கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு ...

 இசை அமைப்பாளர் ரவீந்திரன் மாஸ்டர் முதலில் பின்னணிப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்.  ஆனால் அவரின் இசைக்கல்லூரி நண்பர் கே ஜே யேசுதாஸ் ரவீந்திரன் திறமைகளை உணர்ந்து அவரை இசை அமைக்க வைத்தாராம்.  அதுவரை அவர் சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.  அவர் இசையமைத்த முதல் படம் 1979 ல் வெளிவந்தது.

2005 ல் காலமாகி விட்ட இவர் சுமார் 148 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.  அதில் ஒன்று இந்தப் படமும்.

1986 ல் வெளிவந்த இந்தப் படத்தை பாலு ஆனந்த் இயக்கி இருக்கிறார்.  சத்யராஜ் அம்பிகா ஜெய்சங்கர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஏழு பாடல்கள்.  இதில் சூப்பர்ஹிட் பாடல்கள் இரண்டு.  ஏழிசை கீதமே, மற்றும்  பாடி அழைத்தேன். மற்ற பாடல்களும் சற்றும் குறைந்தவை அல்ல.  காற்றினிலே வரும் கீதம் என்று வாணி ஜெயராம் பாடும் பாடலும் இனிமை.   பாடல்களை வாலி, நா காமராசன், கங்கை அமரன், புலமைப்பித்த, எம் ஜி வல்லபன் என்று இவ்வளவு பேர்கள் எழுதி இருக்க, இந்தப் பாடல் யார் எழுதியது என்று கண்டு பிடிப்பது அவரவர் சாமர்த்தியம்!

ரவீந்திரன் மாஸ்டர் மலையாளத்திலும், தமிழிலும் இசை அமைத்த பாடல்களில் 98 சதவிகிதம் யேசுதாஸ்தான் பாடி இருக்கிறார்.  நண்பர் அல்லவா...  வழிகாட்டியும் கூட.  இவர் பாடல்கள் லிஸ்ட் தந்திருக்கும் விக்கி எந்தெந்தப் பாடல் என்னென்ன ராகம் என்றும் சொல்கிறது.

முதலில் பாடி அழைத்தேன் பாடல்.  இதை எழுதி இருப்பவர் புலமைப் பித்தன் என்கிறது பாடல் வரும் பக்கம்.  இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கும் பக்கத்தில் ஏகப்பட்ட காதல் தோல்விப் புலம்பல்கள் பின்னூட்டங்களாய்..   தாஸேட்டன் குரல் இந்தப் பாடலையும் அடுத்த பாடலையும் கேட்கும் அனைவர் மனதையும் கட்டிப் போடக்கூடியது.

பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் 
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் 
வாராய் என் தேவி 
பாராய் 
என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை 

கோவிலில் தேவிக்கு பூசை அதில் ஊமத்தம்பூவுக்கேன் ஆசை 
தேவதை நீ என்று கண்டேன் உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன் 
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சின் காயங்கள் 
கண்ணீரில் ஆறாதோ கோபம் தீராதோ 

நீ அந்த மாணிக்க வானம் இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம் 
உன்னிடம் நான் கொண்ட மோகம் இந்த ஜென்மத்தில் தீராத பாவம் 
மேடைக்கு ராஜாபோல் வேஷங்கள் போட்டாலும் 
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது 


இந்தப் பாடல் கங்கை அமரன் எழுதியதாம்.  மிக நன்றாய் எழுதி இருக்கிறார்.  பல்லவி முழுக்க பாடல் கீழ் ஸ்தாயியில் வருவது போல ஆரம்பிக்கிறது.அதுவும் கானம் வார்த்தைக்குப் பின் மந்திர ஸ்தாயியைத் தொடுகிறதோ என்று தோன்றவைக்கும்..  

சரணத்தில், சாலையில் ஒரு பாம்பு நெளிந்து ஓடுவது போல நான்கு வரிகள்.  நாம் பின்னாலேயே போகிறோம்.  அது மெல்லத் திரும்புகிறது.  

அடுத்த நான்கு வரிகள்,  நாகம்திரும்பி நம்மைப் பார்த்ததும் மெல்ல உயர்ந்து படமெடுக்கத் தொடங்குகிறது.  

நம்மால் ஆபத்தில்லை என்று தெரிந்ததும் சரணத்தின் கடைசி இரண்டு வரியில் படத்தைத் தணித்துக் கொண்டு தரையில் படர்ந்து நெளிந்து மறுபடி மெல்ல நகரத்தொடங்குகிறது.  இரண்டாவது சரணம் முடிந்ததும் புதருக்குள் சென்று மறைந்து விடுகிறது! 

போதை என்பதை "ப்போதை" என்று சொல்வதைத்தவிர் யேசுதாஸ் குரலில் மகா இனிமையான, மிக திறமையான பாடல்.

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே 
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான் 
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் -கானம் 
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே 

ஏதோ ராகம் எனது குரலின் வழி 
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர 
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது 

அழகு மொழியில் ஒரு அமுத மொழியும் விழ
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ 
ஏனோ...
நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம் 
உயிரே..  உயிரே 

கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு 
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு 
 போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு 
உறவு எதுவுமிலை கவலை சிறிதுமில்லை 
தனிமை கொடுமையில்லை  இனிமை இனிமை இதுதான்...
நான்தான்..
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன் 

55 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோயற்ற வாழ்வை இறைவன் எல்லோருக்கும்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஜேசுதாஸ் குரலில் சோகப்பாடல்கள் வெகுவாக எடுபடும்.

    பக்திப்பாடல்கள் இன்னும் சிறப்பு. உருகி உருகிப் பாடுவார்.
    இந்தப் பாடலில் வரும் நாயகன் யாரென்று தெரியவில்லை.

    புலமைப்பித்தனின் கவிதை வரிகள் காதலனின்
    ஏக்கத்தைப் படம் பிடிக்கிறது.
    ரவீந்திரன் மாஸ்டரின் இசையும் வேறு பட்டுத் தெரிகிறது.
    சோகத்தைப் பிழிந்தாலும் சுகமான ராகம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா... அருமையான பாடல்கள்.

      நீக்கு
    2. //ஜேசுதாஸ் குரலில் சோகப்பாடல்கள் வெகுவாக எடுபடும்.

      ஹிஹி.. சோகப் பாடல்கள் மட்டுமே எடுபடும்னு என் கருத்து .. ஒவ்வொரு பாட்டையும் நீயும் பொம்மை நானும் பொம்மை மாதிரி பாடினார்.

      நீக்கு
    3. அப்படிச் சொல்லி விட முடியாது!!!!

      நீக்கு
    4. திடுமென அதிமுக தீவிர தொண்டர் (எஸ் பி பி காதலன்) திமுக ஆளைப் பாராட்டுவது போல இருக்கு...ஹிஹிஹி

      நீக்கு
    5. எனக்கு ஜெயச்சந்திரன் குரலில் 90% பாடல்கள் பிடிக்கும்.  யேசுதாஸ் குரலும் பிடிக்கும்.  டி ஈ.எம்.எஸ் குரலும்..  ஏன் எம் கே டி கூட...   அதிக அளவில் பிடித்தது எஸ் பி பி!  

      நீக்கு
    6. துள்ளும் காதல் பாட்டைக் கூட புத்திர சோகப் பாட்டு மாதிரி பாடியவர் யேசுதாஸ். என்ன பார்வை உந்தன் பார்வை உதாரணம். இன்னும் எத்தனையோ பாட்டு.

      நீக்கு
    7. //என்ன பார்வை உந்தன் பார்வை உதாரணம்.// இது என்ன புதுக்கதை? ஜேசுதாஸின் சாஸ்த்ரிய சங்கீதத்திற்கு முன் திரைப்படப் பாடல்கள் அவ்வளவாய் எடுபடவில்லை. உச்சரிப்புப் பிழைகள் வேறே!

      நீக்கு
    8. அருமையாய்ப் பாடி இருப்பார் "என்ன பார்வை, உந்தன் பார்வை!" பாடலை! ஹூம்! :(

      நீக்கு
  3. ஏதோ ராகம் எனது குரலின் வழி
    தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
    கேட்கும் யாரும் உருகி உருகி விழ
    காதில் பாயும் புதிய கவிதை இது //////////


    கங்கை அமரனின் வரிகளும் ஜேசுதாஸ் குரலும்
    பாடிப்பாடி மடியப் போகும்
    மதுவேந்திய
    கதா நாயகனுக்குத் தோதாக அமைகின்றன.

    இந்தப் படம் எங்கேயும் பார்க்கவில்லை.
    நல்ல பாடல்களுக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படம் பார்க்கவில்லை அம்மா. ஆனால் இந்தப் பாடல்களும், டிபெயர் போடும்போது வரும் பாடலும் அடிக்கடி கேட்பதுண்டு.

      நீக்கு
    2. படம், மட்டுமா? இசை அமைப்பாளரும் கூட! எங்கேயும் பார்க்காதவர்கள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். படம் பார்க்கவில்லை.
    நடிகர் யார் தெரியவில்லையே.

    ரவீந்திரன் மாஸ்டர் பற்றி தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. இரண்டும் சோகமான பாடலாக இருந்தாலும் கேட்க இனிமை.

    பதிலளிநீக்கு
  7. இதெல்லாம் சூப்பர் ஹிட்.. என்ன சொல்ல?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பரைக் கழற்றி விட்டு ஹிட் என்று சொல்லி விடலாமா?!!

      நீக்கு
  8. //கே.ஜே.யேசுதாஸ். //

    கே.ஜே.ஜேசுதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு. அவர் பெயர் கே ஜே ஏசுதாஸ்/யேசுதாஸ். எல்லோரும் கே ஜே னு சொல்லிட்டு, உச்சரிப்பு வராத்தால் ஜேசுதாஸ்னு சொல்றாங்க

      நீக்கு
    2. அப்படியா? ஏசுதாஸ் என்ற பெயரை அவர் ஜேசுதாஸ் என்று மாற்றிக் கொண்டார் என்று எங்கேயோ வாசித்த நினைவில் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      பெயரை மாற்றி உச்சரிப்பதற்கு நீங்கள் சொல்லும் காரணமும் வெகு பொறுத்தமாகத் தான் இருக்கிறது.
      தவறாக எண்ணிக் கொண்டிருந்ததை திருத்தியமைக்கு நன்றி,நெல்லை.

      நீக்கு
    3. நானும் முன்பே சில முறை உங்களுக்கு இதைச் சொல்லி இருக்கிறேன் ஜீவி ஸார்.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. அப்படியா?..

      அப்போ நீங்களும் ஜேசுதாஸ் என்று அவர் தன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்கிறீர்களச்?

      (நெல்லைக்கு ஒரு மாதிரி பதில் சொன்னால் உங்களுக்கு வேறு மாதிரி சொல்ல வேண்டும், இல்லையா?
      :))

      நீக்கு
    6. சுட்டிக் காட்டும் தவறுகளுக்கு பதிலளிப்பவர்கள் வெகு சிலரே. அந்தப் பழக்கம் வளர வேண்டும் என்பதற்காகத் தான் நெல்லைக்கு அப்படி பதில் சொன்னது.

      நீக்கு
    7. ஜேசு யேசு ரெண்டும் ஒண்ணு தான் பாரத நாட்டிலே.
      ஆங்கில J எழுத்துக்கு ஸ்பேனிஷ் உச்சரிப்பு யே.
      நாம் ஜேனு சொன்னா ஒரு தவறுமில்லே. வேணும்னா எயமோகன்னும் சொல்லலாம்.

      ஹிந்து உச்சரிப்பு ஜே தான். (மோடிக்கு யே ஐ மீன் ஜே)

      நீக்கு
    8. ஜீஸஸ் = யேசுஸ் ஒரே அர்த்தம். ஏ ஜே ஆனா என்ன?

      நீக்கு
    9. யே ஜே எதுவானா என்ன? பாட்டு சகிக்குதா? அதான் முக்கிஜம்.

      நீக்கு
    10. ஹிந்து உச்சரிப்பு?

      அப்படீன்னா?..

      நீக்கு
  9. //பாடி அழைத்தேன்.. //

    இசையை முக்கியபடுத்தி பாடல் வரிகளை அலங்கோலப்படுத்துவதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம்.

    இசைக்கேற்றவாறு பாடல் வரிகளையும்
    பிரமாதப்படுத்துவது கண்ண்தாசன், வாலி போன்றோரின் தனித்துவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்படி ஒப்பீடு செய்வதில்லை ஜீவி ஸார்...   மற்றவர்கள் எழுதுவதையும் ரசிக்க வேண்டுமே..

      நீக்கு
    2. இது ஒப்பீடு இல்லை. இதுவும் ரசனை சம்பந்தப்பட்டது தான்.

      நீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களும் :-

    கேட்கும் யாரும் உருகி உருகி விழ
    காதில் பாயும் புதிய கவிதை இது...

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பாடல்களுமே இனிமை! தமிழில் கேட்ட ஞாபகமில்லை. மலையாளத்தில் இரண்டு பாடல்களையுமே கேட்டிருக்கிறேன். முதல் பாடல் ' தேனும் வயம்பும்' என்ற படம். பிரேம் நசீர், மோகன்லால் நடித்தது. ஜானகியும் தனியாக பாடியிருப்பார். 1981ல் மிகவும் பிரபலமான பாடல்! என்னுடைய ஆடியோ டேப் கலெக்க்ஷனில் இருந்தது. இரண்டாவது பாடல் ' சிரியோ சிரி' என்ற படத்தில் வந்தது. பாலச்சந்திர மேனன் நடித்த படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா...  நானும் இதன் மலையாளத்தை எப்படித் தேடுவது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  விதம் விதமாக முயற்சித்தும் பார்த்தேன்.    படங்களின் பெயர்களைக் கொடுத்திருப்பதற்கு நன்றி.

      நீக்கு
  13. இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன்.. வெகுவாக ரசித்து ஆழ்ந்ததில்லை..

    நிஜ வாழ்க்கையின் சோகங்களே போதும் என்று இப்பாடல்களைக் கடந்து விடுவேன்..

    வாழ்க வையகம்..
    வாழ்க மகிழ்வுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைத் தாக்கும் சோகமில்லை.  இசைக்கு என்ன பாகுபாடு?  நன்றாயிருந்தால் நான் அனைத்தையும் ரசித்து விடுவேன்!

      நீக்கு
    2. @ அன்பின் ஸ்ரீராம்..

      // மனதைத் தாக்கும் சோகமில்லை. இசைக்கு என்ன பாகுபாடு?.. //

      இசைக்கு பாகுபாடு உண்டு..

      தீபங்கள் சுடர் ஒளி சிந்தியதும்
      நோய்கள் தீர்ந்ததும் பச்சை மட்டைகள் பற்றிக் கொண்டு எரிந்ததும் வரலாறு..

      நீக்கு
    3. தம்பி துரையின் சுவாரஸ்யமான பதில். கலம்பகப் பாடல்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் பதில்.

      நீக்கு
    4. நானும் துரையுடன் ஒத்துப் போகிறேன் ஸ்ரீராம்.

      வாழ்வில் மகிழ்ச்சிமட்டுமே இருக்கும் என்று சொல்லவில்லை.
      சோகத்தை அனுபவிக்க வேண்டாம்
      என்றே நினைக்கிறேன்.
      சந்தோஷம் இது சந்தோஷம்
      ஒரு பொன்வீணை தரும் சங்கீதம்,.
      எல்லோரும் நலமுடன் இருப்போம்.

      நீக்கு
    5. அபிப்ராயங்கள் மாறுபடலாம் அம்மா. ​

      நீக்கு
  14. இரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தவையும் கூட.

    பதிலளிநீக்கு
  15. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். இனிமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!