ரிக் ஷா! முன்பு கையால் இழுத்துக் கொண்டு செல்வது போல இருக்கும். பின்னர் அது மிதிக்கும் வாகனமாக மாற்றப்பட்டது. பின்னர் அதிலேயே மோட்டார் பொருத்தப்பட்டு வந்தது. வாகனங்களை வைத்து படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சில.. குதிரையில், மாட்டுவண்டியில், சைக்கிளில், பைக்கில், ரயிலில் என்று வாகனங்களில் பாடிக்கொண்டே வருவது ஒரு ஸ்டைல்... அதில் இந்தவாரம் ரிக்ஷாவில் வந்துகொண்டே பாடும் சில பாடல் காட்சிகளை பதிவேற்றுகிறேன்.. சும்மா ஒரு சுவாரஸ்யம்தான்!
இந்தப் பாடல் நாகேஷ் நடித்த கல்யாண ஊர்வலம் படத்திலிருந்து.. அருமையான நாகேஷ்.. டி எம் சௌந்தர்ராஜன் குரலில் என்ன ஒரு அருமையான பாடல்!
அடுத்து எனக்குப் பிடிக்காத நடிகர் ( ! ) ஆனால் பிடித்த பாடகர் டி எம் எஸ் பாடிய ஒரு பாடல். முருகன் காட்டிய வழி படத்திலிருந்து.. ஒரு கொசுறுத் தகவல். இதில்தான் நடிகை ஸ்ரீப்ரியா அறிமுகம்.
இளையராஜா இசையில் உருவான பாடலாக இருந்தாலும் அவ்வளவாக பிரபலமாகாத பாடல். இந்தப் பாடல்தான் பிரபலமில்லையே தவிர இந்தப் படத்தில் மற்ற பாடல்கள் மிக நன்றாக இருக்கும். மனோ குரலில் ரிக் ஷா மாமா படத்திலிருந்து..
போஜ்புரி படம் ஒன்றில் வரும் ரிக் ஷா பாடல். ஹீரோ மனோஜ் திவாரியாம். தேடும்போது கிடைத்தது.. பரவாயில்லை ராகம்... ச்சே.. ரகம்!
சட்டம் என் கையில் பாடலைத் தவிர்க்கிறேன்!!