சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7
இந்த ஊரில் தமிழ் பேசுபவர்கள், தமிழ் தெரிந்தவர்கள் அதிகம். அதனால இதுல விசேஷமா எதுவும் இல்லை.
கட்டிடத் தொழிலாளர்கள் தொடங்கி காய்கறிக் கடைக்காரர் வரை எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள்.
ஏதேனும் கல்யாண மண்டபத்தில் உறவினருக்கு நண்பர் அல்லது நண்பருக்கு நண்பர் என்று பார்த்துப் பேசி இருப்பேனோ? ஊஹூம் - உறவினர்களிடமே அதிகம் பேசாதவன் என்று எனக்குப் பெயர்.
ஏதாவது ரயில் சிநேகமாக இருக்குமோ? சான்ஸ் இல்லை.
(இது என் படம் இல்லை!)
ரயிலில் நான் தனியாக வரும்பொழுதெல்லாம் ஒன்று புத்தகம் படிப்பேன் அல்லது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பேன். இல்லையேல் கண்ணை மூடிக்கொண்டு ஆத்மவிசாரம் பண்ணிக்கொண்டு வருவேன்! (திருமதியுடன் வரும்பொழுது திருமதியின் பேச்சு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கும்!)
எனக்கு அவரைத் தெரியவில்லை என்று இருக்கும் பொழுது, அவருக்கு மட்டும் எப்படி என்னைத் தெரிந்திருக்கும்?
(தொடரும்)
