சில நாட்களுக்கு முன்னால் ரிடிஃப் மணி செய்திகள் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, எங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு செய்தியின் தமிழாக்கம் இங்கே கொடுத்திருக்கிறோம்.
(இந்த செய்தி, சீனாவில் நடக்கும் ஹோண்டா தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தம் பற்றியது. இதில் எங்கள் கவனத்தைக் கவர்ந்தது அவர்கள் (ரிடிஃப் மணி) கொடுத்திருந்த யு எஸ் டாலர் / சீன யுவான் ஒப்பீடு மதிப்புகள்தான்.)
"தொழிலாளர்கள், தங்கள் மாத வருவாயை, தற்போதைய 1000 யுவான் முதல் ~ 1500 யுவான் வரை ($147 ~ $194) இருப்பதை, 2000 யுவான் முதல் ~ 2500 யுவான் வரையிலும் ($220 ~ $367) உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்."
இதன்படி பார்த்தால், கணக்கிட்டால், ஒரு யு எஸ் டாலருக்கு, எவ்வளவு சீன யுவான் என்று கணக்காகிறது?
நாங்களும் கூகிளிட்டு, ஒரு யு எஸ் டாலருக்கு, சற்றேறக்குறைய 6.83 சீன யுவான் என்று கணக்கிட்டுப் பார்த்தோம். அதுவும் சரியாக வரவில்லை. எங்கள் சார்பாக நீங்க கொஞ்சம் குழம்பி தெளிவாக சீன நாணய மதிப்பைக் கூற இயலுமா?
நேற்று வெளியிட்ட நோட்டுப் புதிருக்கு, பெரும்பாலானவர்கள் விடை அளித்திருக்கிறார்கள். முறையே அந்த ஐந்து கரன்சிகளும் - எகிப்து, கிரீஸ், ஓமன், சைனா, ரஷ்யா - என்று கூறியிருக்கிறீர்கள். இப்போ கீழே இருக்கின்ற சில கரன்சிகளைப் பாருங்கள். இவைகள், அந்த கரன்சிகள் காணப்பட்ட அதே மெயிலில் வந்தவை . எகிப்து, சைனா, (இரண்டு) ரஷ்யா கரன்சிகள் இங்கு உள்ளன. முந்தைய பதிவில் பார்த்த எகிப்து, சைனா, ரஷ்யா நோட்டுகளுக்கும், இவைகளுக்கும் என்ன வித்தியாசம்?
EGYPT
CHINA
RUSSIA 1
RUSSIA 2



