kaettadhu kaettapadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kaettadhu kaettapadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.9.15

வெள்ளிக்கிழமை வீடியோ 150911 + கே கே 5/7


      


இரவு மணி பத்து ஆக பத்து நிமிடங்கள் இருக்கும்போது வாசலில் கார் சப்தம். ஸ்விப்ட் கார் வந்து நின்றது. 

'ஏதேனும் பேச்சுக் குரல் கேட்கிறதா?' 

'ஒன்றும் இல்லையே! ' 

'ஓட்டை வாய் முகுந்தன் எப்படி ஒன்றும் பேசாமல் மெளனமாக....' 

நாராயணன் மட்டும் ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து, செருப்பை வாசலில் கழற்றிவிட்டு, கெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றார். 

"முகுந்தன் வரலியா? அவர் எங்கே, நாராயணன்?" 

"அவரு பிரீப் கேசை மட்டும் எடுத்துக்கொண்டு, பார்க் ஹோட்டலுக்குப் போயிருக்கார். வந்துகொண்டு இருக்கும்பொழுது, நேரே ஹோட்டலுக்கு வரச் சொல்லி அவருடைய ஆபீஸ் நண்பரிடமிருந்து ஒரு கால் வந்தது." 

"ஓஹோ! எப்போ இங்கே வருவாராம்?" 
         
"நாளைக்கு சாயந்திரம் வருவேன் என்று சொன்னார்." 
           
"கார் கீ எங்கே?" 
           
" இதோ இந்தாங்க." நாராயணன் கொடுத்துவிட்டுப் போனார். 
             
ரெக்கார்டிங் டிவைசைக் கொண்டுபோய், தன அறையில், கம்பியூட்டரில் இணைத்து, உரையாடல்கள் எல்லாவற்றையும் கேட்ட ஜானகிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தன்னைப் பற்றி சம்பிரதாய விசாரிப்புகள் மட்டுமே முகுந்தன் கேட்டிருந்ததுதான் அந்த ஏமாற்றத்தின் காரணம். 
                 
" நாராயணன் எப்படி இருக்கீங்க?" 
             
"நல்லா இருக்கேன் ஐயா."
             
" மாதவன்  எப்போ ஊரிலேயிருந்து வராரு?" (நன்றி கீ சா)  
         
"இன்னும் ரெண்டு நாளில் அல்லது அதிகமாப் போனா மூன்று நாளில் வந்துவிடுவார் ஐயா ."
           
"சின்னம்மா சௌக்கியமா?" 
             
" உம். சௌக்கியம்." 
            
அப்புறம் ஏதோதோ அலைபேசி அழைப்புகள், கேள்விகள், பதில்கள். 
               
"மெட்ராஸ் இந்த ஆறு வருஷத்துல ரொம்ப மாறிப்போயிடிச்சு நாராயணன்."
                
"ஆமாம் ஐயா. " 
             
"நாராயணன் - உங்க கிட்டே ஜானகியின் மொபைல் நம்பர் இருக்கா?" 
            
"இல்லை சார். என் கிட்ட மாதவன் சார் நம்பர் மட்டும்தான் இருக்கு. மா ஜா எண்டர்ப்ரைசஸ் கம்பெனியின் லாண்ட்லைன் நம்பர்கள் இருக்கு." 
            
"ஜானகி கிட்ட ....." 
            
திரும்பவும் அலைபேசி அழைப்பு. "சரி சார் நான் நேரே ஹோட்டலுக்குப் போய் அந்த பிரசன்டேஷன் சரியா இருக்கா, ஏன் ஓபன் ஆகவில்லை என்று செக் செய்கின்றேன். அன்சாரி ரூமிலேயே அவர் கூடவே இருந்து பார்த்து, நீங்க சொன்ன கரெக்ஷன் எல்லாம் செய்து விடுகின்றேன். அது ஒன்றும் பிரச்னை இல்லை. நாளைக்கு சாயந்திரம் என்னுடைய நண்பன் வீட்டுக்குப் போய்க்கொள்கின்றேன் .. சரி சார். ஓ கே. " 
            
"நாராயணன் என்னை நேரே பார்க் ஹோட்டலில் கொண்டு போய் இறக்கிவிடுங்கள். என் பெட்டியிலிருந்து, நாளைக்கு வேண்டிய டிரஸ் மட்டும் எடுத்துக்கொள்கின்றேன். பெட்டியை மாதவன் வீட்டு கெஸ்ட் ரூமில் வைத்துவிடுங்கள். ஜானகி கேட்டால் நாளை சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிடுங்கள்." 
            
"சரி ஐயா " 
              
(தொடரும்)