2) சுய அனுபவம் சமுதாயத்துக்குப் பாடுபடும் எண்ணத்தை விதைக்கிறது. மும்தாஜ் போல! அதையும் செயல்படுத்த வேண்டுமே.. நாலுபேருக்கு நல்லது செய்யும் மனுஷி.
3)
A 4,818 வயது மனிதர், 120வயது மனிதர்... இதெல்லாம் எங்கு? வாக்காளர்
பட்டியலில்! 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் பலரைச் சொல்லி
இருக்கிறார்களாம். இதைச் சரிப்படுத்த முனைந்திருக்கும் 66 வயது P G பட்.
4) நடனமாடிய குழந்தைகளின்
பாதங்களை அவ்வப்போது குத்தியது, இது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியதோ
இல்லையோ மேடையில் விழா தலைவராக அமர்ந்திருந்த ஒருவருக்கு வலியை
ஏற்படுத்தியது.
அவர் யாரையாவது கூப்பிட்டு நடனத்தை நிறுத்திவிட்டு கற்களை அப்புறப்படுத்தச்சொல்லி இருக்கலாம், யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவரே விறுவிறுவென எழுந்துவந்து குழந்தைகளை ஒரு ஒரமாக இருக்கச்சொல்லிவிட்டு துருத்திய கற்களை எந்த கவுரவமும் பார்க்காமல் குனிந்து பொறுக்கி ஒரு ஓரமாக போட்டுவிட்டு தரையை செம்மைப்படுத்திவிட்டு பிறகு குழந்தைகளை ஆடவைத்தார். பி.சங்கர் மகாதேவன்.
7) நல்ல மனம் வாழ்க.. உலகம் போற்ற வாழ்க.. எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.
9) இலவசமாகத் தருகிறார் என்றதும், நான் கூட மக்கள் இதை உபயோகப் படுத்திக் கொள்வார்களே தவிர, இதனால் அர்த்தமில்லை என்றுதான் நினைத்தேன். நல்லெண்ணத்தைப் பரப்பச் சொல்கிறார், தேவையில் இருப்போருக்கு உதவச் சொல்லி, அதைத்தான் விலையாகக் கேட்கிறார் என்றதும் மதிப்பு வந்தது. மிராஜுதின் சையத்.
12) விளையும் பயிர். அனிருத் கதிர்வேல்.
13) நெகிழ வைக்கிறார் திவ்யா. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
======================================================================
கேட்டது கேட்டபடி 6/7
அந்த மறுநாளும் இதோ வந்துவிட்டது.
அது சனிக்கிழமை.
மா ஜா எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்திற்கு அரை நாள் வேலை, அரை நாள் லீவு. மறுநாள் ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் எல்லோருமே ரொம்ப உற்சாகமாகக் காணப்பட்டனர்.
மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று.
'முகுந்தன்
எப்போது வருவான்? அவனிடம் நாமே பேச்சை ஆரம்பிப்பதா அல்லது அவன் பார்த்து
மன்னிப்புக் கேட்கட்டும் என்று இருந்துவிடுவதா? ' ஜானகிக்கு ஒரே குழப்பம்.
மாலை
நாலரை மணிக்கு டாக்சி வந்தது. அதிலிருந்து கோட் சூட் அணிந்து, டை, கூலிங்
கிளாஸ் சகிதம் இறங்கிய முகுந்தனை மாடி பால்கனியிலிருந்து நோட்டமிட்ட
ஜானகியின் மனம், 'அட ஆள் எப்படி மாறிப் போயிட்டான்! முந்தி இருந்த
முகுந்தன் எங்கே? இப்போ இருக்கின்ற இந்த முகுந்தன் ஹிந்தி சினிமா ஹீரோ
மாதிரி ஆயிட்டானே! ' என்று எண்ணியது.
மாடி அறையிலிருந்து கீழே முகுந்தன் பேசியது எல்லாம் நன்றாகக் கேட்டது. அந்த வெண்கலக் குரல் மட்டும் மாறவே இல்லை.
"நாராயணன்
! வெந்நீர் ரெடியா இருக்கா? முதல் விஷயமா குளிக்கணும். பார்க் ஹோட்டல்
பாத் டப் குளியல் பிரயோசனமே இல்லை. சின்னம்மா எங்கே? "
"சின்னம்மாவை ஏன் தேடறீங்க?"
(தொடரும்)