வாரப் பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பி
அந்தந்தப் பத்திரிகாசிரியரின் பதிலுக்காய்க் காத்திருப்போம். இங்கு நாமே
ராஜா... நாமே மந்திரி! எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிக் கலக்கலாம்!
முன்னர் 'எங்கள் ப்ளாக்'கில் வந்து கொண்டிருந்த ஒரு பகுதிதான் இது. பயப்பட வேண்டாம்! மீண்டும் தொடங்கவில்லை. அவ்வப்போது கேள்விகள் வரும்.. ஆனால் வாரா வாரம் தொடராக வராது! ஏனென்றால், ஏற்கெனவே, திங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்களால் நிரம்பி இருக்கிறது!
ரெடியா.... ஜூட்....!
கேள்விகள் :
1) முதலாளிகளிடம் இருக்கும் பணம் அல்லது தொழிலாளிகளிடம் இல்லாத பணம் - எதற்கு சக்தி அதிகம்?
2)
இரண்டு நண்பர்கள். ஒருவர் ஈஃபில் டவர் உச்சியில். மற்றவர் அதன் அடியில்,
அல்லது பத்து மீட்டர் உயரத்தில். இருவருக்கும் சூர்யோதயம் ஒரே நேரத்தில்
தெரியுமா?
3) ஹர்திக் படேல்?
====================================================================
கேட்டது கேட்டபடி 4/7
டிரைவர் நாராயணன் வந்தார்.
கேட்டது கேட்டபடி 4/7
டிரைவர் நாராயணன் வந்தார்.
" நான் ஏர் போர்ட் போகின்றேன். முகுந்தன் ஐயாவை அழைத்து வருவதற்கு. நீங்க வரீங்களா?"
"நான் வரவில்லை. ஒரே தலைவலியாக இருக்கு. நீங்க போய் கூப்பிட்டு வாருங்கள். எத்தனை மணிக்கு கோலாலம்பூர் பிளைட் அரைவல்?"
"இரவு மணி எட்டு பத்துக்கு என்று சொன்னார்கள்."
"எந்தக் கார் எடுத்துக்கிட்டுப் போகப்போறீங்க? "
" ஸ்விப்ட் கார்."
"இருங்க கார் சாவியைக் கொண்டு வந்து தருகிறேன்."
கார் சாவி வளையத்தில், மிக விரைவாக அந்த ரெக்கார்டிங் டிவைஸ் மாட்டப்பட்டு, ஆன் செய்யப்பட்டு,அது நாராயணனிடம் கொடுக்கப்பட்டது.
நாராயணன் அதை கவனிக்கவில்லை. சாவிக்கொத்தில் இருக்கின்ற பிளாஸ்டிக் பட்டை என்று நினைத்தாரோ என்னவோ.
"முகுந்தன் வீட்டுக்கு வந்து சேரும்பொழுது, நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். கார் சாவியை, இந்த கீ ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, நீங்க வீட்டுக்குப் போகலாம்."
"சரி" என்று கூறியபடி, காரை நோக்கிச் சென்றார் நாராயணன்.
(தொடரும்)

