ஒரு பணக்காரர் அவருக்கு நண்பராக ஒரு புலவர். பணக்காரருக்கு ஒரு பெண் மேல் பிரியம் வந்தது. ஆனால் அவள் அவரை கண்டுகொள்ள வில்லை. புலவரை தூது அனுப்புகிறார் ஹீரோ .
புலவர் போய் பேசத் துவங்குகிறார்.
வெள்ளரிக்காயா, விரும்பும் அவரைக்காயா உள்ளமிளகாயா ஒரு பேச்சுரைக்காயா..
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். முழுப்பாட்டும் எனக்கு நினைவில்லை. தேடிக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
****
முழுப்பாட்டு நினைவில் இருக்கும் ஒரு தகவல் இதோ.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை -- மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே.
திருவேரகம் என்ற தலத்தில் விளங்கும் இறைவனே , சூடு இருக்கும் வரை உயிர் வாழும் இந்த உடம்பு (வெம் காயம்) உலர்ந்து வற்றினால் (சுக்கு) அயக்காந்த பஸ்பம் போன்ற (வெந்த அயம்) ஆவதுதான் என்ன ? அதன் பின் இந்த உடலை யார் தாங்குவார்கள்? சிறப்பில் குறையாத சீர் மிகுந்த அகமாகிய கைலாயத்தைத் தருவீரேல் பெரும் காயம் (பரு உடல்) நான் ஒரு நாளும் வேண்டேன்.
பிரார்த்தனை எவ்வளவு சுவாரசியமாகச் செல்கிறது !!
***
இங்கிதமாய் இங்கனைவரும் வேண்டுவது யாதெனில்
வெங்காயம் மணக்கின்ற சாம்பார்
எனும் கிறளோடு முடித்துக் கொள்வோம்.