to come up in life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
to come up in life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.10.09

வாழ்க்கையில் முன்னேற ... 002


அரை நிமிடம் படியுங்கள்; இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்கள். உடனே கடைபிடியுங்கள்.
பாடம் இரண்டு: கண் விழித்து எழுந்தவுடன் - இந்த ஐந்து வார்த்தைகளை மனதிற்குள் நிறுத்தி நிதானமாக குறைந்த பட்சம் ஐந்து முறைகள் கூறுங்கள் : " இன்று எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கும் "
(ஹேமா - இதில் கஷ்டம் ஒன்றும் இல்லைதானே!).
முடிந்தால் - பாத ரூம் / டாய்லட்டில் இருக்கின்ற நேரம் முழுவதுமே - இந்த ஐந்து வார்த்தைகளை (கண்ணாடி இருந்தால் - அதில் உங்கள் அழகிய முகத்தை, கண்களைப் பார்த்தபடி) சொல்லிக் கொள்ளலாம். பாடத் தெரிந்தவர்கள், இந்த ஐந்து வார்த்தைகளையும் உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்களே இசை அமைத்த டியூனில் பாடலாம் / ஹம செய்யலாம்.
(தொடரும்)

12.10.09

வாழ்க்கையில் முன்னேற ... 001



அரை நிமிடம் படியுங்கள் - இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்கள்; உடனே கடைபிடியுங்கள்.
முதல் பாடம் : உங்கள் ஊரில் சூரியோதயம் எத்தனை மணிக்கு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் முதல் நாள் இரவு - படுக்கப் போகும் முன், அந்த நேரத்தை, உங்கள் அலாரம் கடிகாரத்தில் செட் செய்யுங்கள். 
மறுநாள் - காலை - அலாரம் அடிக்கும்பொழுது - ஒன்று நீங்கள் ஏற்கெனவே எழுந்திருத்திருக்கவேண்டும். அல்லது அலாரம் அடிப்பதை நிறுத்த எழுந்து, நிறுத்திவிட்டு, திரும்ப படுக்காமல் - அன்றைய அலுவல்களைத் தொடங்கவேண்டும்.
(தொடரும்)