சமையலில் (சமையலறையில்) செய் / செய்யாதே (Dos / Don'ts)
- தினமும் காலையில் கேஸை நேரடியாகப் பற்ற வைக்கப் போகாமல், ஜன்னல் கதவுகளைத்திறந்து வைத்து சற்று நேரம் கழித்து பற்றவைக்கும் பழக்கம் வைத்துக் கொள்ளலாம்.
- எந்த சுவிட்சும் ஆன்/ஆஃப செய்யும் முன்பு காஸ் வாசனை வருகிறதா என்று பார்த்தல் மிகவும் நலம். If you smell gas, do not light anything or switch on / off anything in that area.
- நறுக்கவேண்டிய பொருட்களை முன்னரே தயாராக நறுக்கி தயாராக வைத்துக் கொண்டும், தாளிதப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டும் அடுப்பு பற்ற வைக்கலாம்.
- குழிவான குறுகிய பாத்திரங்களை அடுப்பில் வைப்பதைவிட அகலமான பாத்திரங்கள் வைப்பதால் எளிதில் சூடாகி, எரிபொருளை மிச்சப்படுத்தும். அடுப்பில் என்றால் குழிவான குறுகிய வாய் உடைய பாத்திரங்கள் கை சுடுவதைக் கட்டுப்படுத்தும். கொதிக்கும்பொழுது கன்வெக்ஷன் முறையில் கிளறிவிட வேண்டிய அவசியம் குறையும். மின் அடுப்பு காஸ் இவற்றுக்கு அகலப் பாத்திரங்கள்தான் சரி. அம்மாவிடம் சொல்லிப் பாருங்கள் "அவ்வளவு அகலச் சட்டியில் வடை போடணும்னா எவ்வளவு எண்ணெய் செலவாகும் தெரியுமா?" என்பார். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தேர்ந்தெடுங்கள்.
- ஈயச் சொம்பு ரசம் என்றால் தனி ருசிதான். இன்னமும் என் பாட்டி ஈயச் சொம்பில் ரசம் வைக்கிறார். ஆனால் ஒன்று, கவனமில்லாமல் சீரியல் பார்க்கப் போய் விட்டாலோ, தொலை பேசிக் கொண்டிருந்தாலோ திரும்பி வந்து பார்க்கும் போது சொம்பே உருகி காணாமல் போய் இருக்கும். ( ஈயச் சொம்பை குக்கருக்குள் வைத்து ரசம் பண்ணிப் பாருங்களேன்.)
- வேலை முடிந்தவுடன் கேஸ் சிலிண்டர் ரெகுலேடர் வால்வ் மூடி வைத்துவிடுதல் நலம்.
- வெந்நீர், பால் போன்றவற்றுக்கு, ஏன் இட்லிக்குக் கூட induction stove வும், திரும்பச் சூடு படுத்தும் வேலைகளுக்கு microwave oven உம உபயோகித்தால் எரிபொருள் மிச்சப் படுத்தலாம்.
- Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் load shedding தவிர்க்கலாம். ( ஆம். திரவப் பொருள்களைக் கொதிக்கவைக்கும் எந்த சமையலுக்கும் induction stove மிகவும் பொருத்தம். Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான உஷ்ண நிலை அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் மின்செலவு குறைக்கலாம்.)
- நான் எப்பவுமே ஃபிரிட்ஜ் பால் பாக்கெட் வைக்கும்பொழுது, பாக்கெட்டின் வெளிப்புறம் நன்றாகக் கழுவி, ஏற்கெனவே இருக்கும் பால் பாக்கெட்டுகளை, பிராண்ட் பெயர் மேலே வரும் வகையில் - திருப்பி வைத்து, புது பாக்கெட்டின் நிறமில்லா வெள்ளைப் பக்கம் மேலே வரும்படி வைப்பேன். இதன் மூலம், பால் பாக்கெட்டை, ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கும்பொழுது, பழைய பால் பாக்கெட் எது, புதியது எது என்று ஈசியாகத் தெரியும்.
- ஃப்ரிஜ்ஜில் வைத்திருப்பதை நேரடியாக அடுப்பில் ஏற்றாமல் சற்று நேரம் வெளியில் வைத்திருந்து பின்னர் அடுப்பில் வைத்தால் எரிபொருள் மிச்சமாகும். ( ஃ ப்ரீசரிலிருந்து எடுக்கப் பட்ட பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்பொழுது உள்ளிருந்து சூடாவதால், வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது. பலாக்கொட்டையை சூடாக்கிப் பின் படாத பாடு பட வேண்டி வந்தது ஓவனை சுத்தம் செய்ய!)
- ஃபிரிஜ், கேஸ் ஸ்டவ் அருகருகே இருக்கக் கூடாது. ஃ பிரிஜ் என்றில்லை. மின் பொறி உண்டாக்கக்கூடிய எந்த உபகரணமும் காஸ் அடுப்பு அருகிலோ அல்லது காஸ் அடுப்புக்குக் கீழோ கட்டாயம் இருக்கக்கூடாது.
//ஏற்கெனவே இருக்கும் பால் பாக்கெட்டுகளை, பிராண்ட் பெயர் மேலே வரும் வகையில் - திருப்பி வைத்து, புது பாக்கெட்டின் நிறமில்லா வெள்ளைப் பக்கம் மேலே வரும்படி வைப்பேன். //
பதிலளிநீக்குஎங்கள் ஊரில் ரெண்டு பக்கமும் பிரிண்ட் போடறாங்களே.. அதனால FIFO (First-In-First-Out) முறை பின்பற்றப்படுகிறது.
//ப்ரிஜ்ஜில் வைத்திருப்பதை நேரடியாக அடுப்பில் ஏற்றாமல் சற்று நேரம் வெளியில் வைத்திருந்து//
ஏற்கனவே வெந்நீர் போட்டு வைச்சுருந்தால் (for some reason ), அதன் சூடு பால் பாக்கெட் மீது மறைமுகமாக (indirect ) படுமாறு செய்தால், சீக்கிரம் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சுவதற்கு ஏதுவாகும்.
Good tips regarding 'Cooking Gas' also. Hope the point about 'Gas Cylinder' as said in http://madhavan73.blogspot.com/2010/01/yerivaayu-urulai.html also be useful.
[ ஹி.. ஹி.. சுயவிளம்பரம் (நல்ல chance , விடுவேனா? ]
ஈயத்தைத் தவிர் என்று ஆத்திசூடியிலேயே சொல்லியிருக்குங்க.
பதிலளிநீக்குஈயச்சொம்பு ருசி misleading என்பது என் எண்ணம். ஈயம் உடல் நலத்தைத் தீவிரமாகப் பாதிக்கும். வயிற்று வலி, மலச்சிக்கல், ரத்த சோகை, மூளைக்கோளாறு, விடாத தலைவலி, ஆத்திரம், தூக்கமின்மை என்று பல வகை உடல்/மன உபாதைகளுக்கு ஈயக்கலப்பு காரணமாகலாம். உலக முழுவதும் இன்றைக்கு ஈயத்தை சூ சூ போ அந்தண்டை என்று விலக்கிக் கொண்டிருக்கிறது. குக்கரில் வைத்து ஈயச்சொம்பு ரசமா? வேண்டாமே.
நல்ல தகவல்கள், இல்லத்து அரசரே.... ச்சும்மா.... :)
பதிலளிநீக்குசில விஷயங்கள் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கூட அதை மற்றவர் கூறும்போதோ/நினைவுபடுத்தும்போதோ தான் மீண்டும் அது நம் மண்டைக்குள் ஏறும் (குப்பையை குப்பை தொட்டியில் போடவும்!). அதுபோல் இந்த(சமையலில் (சமையலறையில்) செய் / செய்யாதே (Dos / Don'ts) பதிவு எல்லோருக்கும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குஆதிமனிதியை கூப்பிட்டு காட்டினேன். பலன் - தினமும் இனி நீங்கதான் தூங்கபோகும் முன் சிலிண்டர் நாப் மூடவேண்டும் காலையில் எழுந்ததும் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும் என உத்தரவு:(
//கவனமில்லாமல் சீரியல் பார்க்கப் போய் விட்டாலோ//
பதிலளிநீக்குதொலைக்காட்சி சீரியல் பார்ப்பது நம் நாட்டின் கொடிய நோய் இப்போது ! தாய் தந்தை வேலைக்கு போவதால் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளும் பாட்டியுடன் சேர்ந்து கண்ட சீரியல் பார்ப்பதால் - பேச்சே இப்போதெல்லாம் சரியாக இல்லை !
கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் யாராவது வீட்டிற்கு போனால் அதே கர்ம சீரியலை அவர்களுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டி இருக்கு !
ஈய சோம்பு இல்லை, வீடே கொள்ளை போனாலும் திருந்தாத ஜென்மங்கள் !
//எந்த சுவிட்சும் ஆன்/ஆஃப செய்யும் முன்பு காஸ் வாசனை வருகிறதா என்று பார்த்தல் மிகவும் நலம்.//
எங்கள் ஊரில் (திருநெல்வேலி - பாளையம்கோட்டை) எங்கள் தாத்தா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒருவர் காது ரொம்ப மோசம் - அவர்
தீபாவளியன்று நல்ல ஒரு ஆட்டாம்பாம் வெடித்த பிறகு -
"டேய், அங்கே ஏதோ புகையர்து பார்" என்பார் !
அதே போல் - கொஞ்சம் திறந்து அல்ல மொத்த கேஸ் திறந்து இருந்தாலும் - அதை கண்டிபிடிக்க சிலருக்கு மூக்கே இருக்காது !
அத்தனையும் நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குஎன்றாலும் விறகு அடுப்பும் மண்சட்டிச் சமையலும் சுவையே தனிதான்.
நல்ல தகவல்கள்
பதிலளிநீக்குஆக்கப்பூர்வமான தகவல்கள். எரிபொருள் சிக்கனம் குறித்து அழுத்தி சொல்லுங்கள்
பதிலளிநீக்குgood tips:)
பதிலளிநீக்கு//ஹேமா said... அத்தனையும் நல்ல தகவல்கள். என்றாலும் விறகு அடுப்பும் மண்சட்டிச் சமையலும் சுவையே தனிதான்.//
பதிலளிநீக்குஹேமா
ஐயோ, இந்த கால சாப்பாடே மண்ணு மாதிரி இருக்குங்கறேன் !
நீங்க வேற - மண் சட்டியாம்லே !
- சாய்ராம்
அடடா நல்ல பதிவு .
பதிலளிநீக்குசொல்லிட்டீங்கள்ல இனி பாருங்க நாங்களும் பண்ணி பார்திருவொம்ல வேற வேலை நமக்கு .