அட பட்டங்கள் பறக்க ஆரம்பித்து (பிறந்து) இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டனவா? அது பிறந்த நாட்டில் அதற்கு சீனத்துப் பட்டுமேனியாமே!
(படம்: நன்றி கூகிள்)
வாழ்க்கையில் நான் பட்டம் பெற்றது இல்லை என்று சொல்லுவோர் இருக்கலாம்; அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நான் பட்டம் விட்டது இல்லை என்றோ - பட்டத்தின் நூலை பத்து நிமிடங்கள் கூடப் பிடித்ததில்லை என்றோ இன்றுள்ள இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் யாராவது கூறினால் - ஒன்று அது பச்சைப் பொய்யாக இருக்கலாம்; அல்லது அவர்கள் இதுபோன்ற வாழ்க்கையின் சுவாரஸ்யமான பல விஷயங்களைக் கோட்டை விட்டவர்களாக இருக்கலாம். இதில் நீங்க என்ன ரகம் நீங்களே கூட்டிக் கழிச்சிக் கணக்குப் போட்டுக்குங்க.
இதுவரை பட்டம் செய்யாதவர்கள் படைப்பாற்றலே சுத்தமாக இல்லாதவர்கள் என்று கூறி விடலாம். பட்டம் செய்யத் தேவையானவை மிகவும் அற்பமான சில பொருட்களே. அவை - செய்தித் தாள்கள் (அந்தக் கால ஹிந்து பேப்பர் மிகவும் உறுதியானது) - இரண்டு ஃபுல் தாள்கள், விளக்கு மாற்றுக் குச்சிகள் இரண்டு, ஒட்ட'கம்' -அதாவது Camel Gum (நான் பயன் படுத்தியது அசல் ஐ ஆர் எட்டு சோற்றுப் பருக்கைகளே!) வீட்டில் மளிகை சாமான்கள் கட்டி வந்த நூல் அல்லது சணல் - இவைகள் இருந்தால் எதேஷ்டம்.
செய்முறை (பார்க்க: படம் இரண்டு)
ஹிந்து பேப்பரின் ஒரு தாள் சதுரமாக வெட்டப் பட்டு, பட்டத்தின் முகமாகவும், மற்ற தாள் நீள நீளமாக வெட்டப்பட்டு வாலாகவும் மாறும். ஒரு விளக்கமாற்றுக் குச்சி வில் (விஜய் படம் அல்ல) லாக வளைக்கப்பட்டு பட்டத்தின் பின் மண்டைப் பகுதியில் (ஆமாமுங்க முன் பக்கம் முகம் என்றால் - பின் பகுதி பின் மண்டை தானே!) அதற்குப் பின் மற்றும் ஒரு குச்சி - பட்டத்தின் முதுகெலும்பாக (முகத்துக்கு ஏது முதுகெலும்பு என்று வினவுவோர் - மூளைக் குச்சி என்று எடுத்துக் கொள்க - வாலுக்கு மேலே இருப்பது முதுகெலும்புதானே) ஓட்டப் படும். பட்டத்திற்கு 'சூழ்ச்சம்' வைத்தல் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட - பார்முலா. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். எங்கள் தெருவில் சேட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு பையன் (இயற்பெயர் மறந்து விட்டது - குமார்?) இந்த சூழ்ச்சம் அமைப்பதில் பெரிய விற்பன்னன். பட்டம் செய்யும் பையன்களுக்கு, பம்பரம் அல்லது பலப்பம் அல்லது பளிங்கு போன்ற இன்னோரன்னபிற பொருட்களை கப்பமாகப் பெற்று, அவன் அவர்களுடைய பட்டத்திற்கு சூழ்ச்சம் அமைத்து, பாலன்சிங் செக் செய்து கொடுப்பான். அவன் சூழ்ச்சம் வைத்துக் கொடுத்த பட்டம் நன்றாகப் பறக்கும்.
பட்டத்தை சிலர் காற்றாடி என்று கூறுவார்கள் - எனக்கு அது பிடிக்காது. பட்டம் என்றால் பறக்கவேண்டும் - காற்றாடி என்றால் சுற்றவேண்டும் - இதுதான் என் வாதம்.
பொட்டிப் பட்டம் என்ற ஒரு பட்டத்தை, இரண்டு கன சதுர வடிவ வண்ணத்தாள் அமைப்பு கொண்டது நான் நாகையை விட்டு வந்த பிறகு எங்கேயும் பார்க்க வில்லை. அதே போன்றது வீணைப் பட்டம் என்ற பட்டம். நூலுக்கு மாஞ்சா, கண்ணாடிக் குழம்பு தடவுதல், டீல் போடுதல் - இவை எல்லாம் அஹிம்சை வழி கிடையாது. காந்தி பிறந்த மண் மனிதர்கள் கவனிக்கவும்.
சென்ற நூற்றாண்டில் உயரே பறக்க வைக்கப்பட்ட பட்டம் - வயர்லெஸ் கருவியின் ஆண்டெனாவை அதிக உயரத்திற்குக் கொண்டு சென்று வயர்லஸ்சுக்கு துணை புரிந்ததும் உண்டு. பட்டத்தின் உதவியால் மேலே ஏறிய அதை 'ஏரியல்' என்று சொல்லாமல் 'ஏறியல்' என்று சொல்லலாமோ? அந்த பட்டத்தின் ஈரக்கயிறு வழியாக சில சமயங்களில் மின்சக்தி பாய்ந்து - கயிற்றைப் பிடித்தவரின் கை வழியாக 'இறங்கிய' கதைகளும் உண்டாம். அப்போ அது ஏரியல் இல்லை இறங்கியல்! அந்த அதிர்ச்சிகள் மின்னியல் மின்னலியல் எல்லாவற்றையும் ஆராய வகை செய்ததாம். மார்க்கோனி சந்தோஷமாக, 'சம்சாரம் அது மின்சாரம்' என்று பாடியிருப்பார். எப்படியோ - மார்க்கோனியின் மகிழ்ச்சி - எங்கள் மகிழ்ச்சி - (அப்பாதுரை கவனிக்க - மார்க்கோனியின் மனைவி சம்பந்தம் இங்கேயும் கொண்டுவந்துவிட்டோம்)
அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன் - பட்டத்தின் பறக்கும் திசையையும், அது நூல் சுண்டப்படுவதால் பாய்கின்ற திசையையும் வைத்து - இராணுவ வீரர்கள் - தாம் எந்த திசை நோக்கி முன்னேறவேண்டும் என்பதை - தலைவரின் விருப்பத்தைத் - தெரிந்துகொள்வார்களாம் . அப்பொழுது பறக்கும் பட்டத்தின் வால் துண்டாகி, அது கரணம் அடித்திருந்தால் - வீரர்களும் - கரணம் அடித்து எதிரிகளின் காலில் சரண் அடைந்திருப்பார்களோ?
'பழைய, பயன்படாத சி டி க்களின் இருபது பயன்கள்' என்கிற படைப்பாற்றல் நூல் எழுதிய எங்கள் ஆசிரியர் குழு (விஞ்ஞான) ஆசிரியர் - பழைய 'பாடா'வதி(!) ஆடியோ கேசட்டுகளின் டேப்பை எடுத்து - பட்டத்திற்கு நூலாகப் பயன்படுத்தலாம் என்று, அவர் இப்போ எழுதிக் கொண்டிருக்கும் - 'பழைய பொருட்கள் - புதிய உபயோகங்கள்' புத்தகத்திலிருந்து - நமக்கு ஒரு இலவச ஐடியா கொடுத்துள்ளார் - குஜராத்தி 'பட்ட' மகிஷர்களும் மகிஷாஷினிகளும் - முயற்சி செய்து பாருங்கள்.
பட்டத்திற்கு வால் என்பது பட்டம் கரணம் அடிக்காமல் காப்பாற்றும் ஒட்டு - ஆனால் வாலில்லா பட்டங்களும் நகரங்களில் பார்த்ததுண்டு.
பன்ச் டயலாக் : வாலிருக்கிற பட்டம் கரணம் அடிச்சா பார்க்கிறவன் எல்லாம் சிரிப்பான்; வாலில்லா பட்டம் கரணம் அடிச்சா - அதைப் படைச்சவனுக்குக் கூடத் தெரியாது!
தை முதல் நாள் பட்டம் விட்டு பதிவை உயரே பறக்க விட்டுடீங்க! நல்லா இருக்கு கட்டுரை!
பதிலளிநீக்குபட்டம் காற்றில் ஆடுவதால் காற்றாடி (எங்க ஊர்ல எல்லாம் காத்தாடின்னு சொல்லுவோம்) என்கிறோம். பட்டம் உயரே பறந்தாலும் காற்றில் அழகாய் ஆடுகிறதே! அதனால் இந்த பெயரும் இதற்கு பொருத்தம் என்பது என் வாதம்.
நன்றி மீனாக்ஷி. ஆணாலும், பதிவாசிரியர் - காத்தாடி என்றால் - பனை ஓலையில் செய்வதுதானே - என்றுதான் இன்றும் கேட்கிறார்.
பதிலளிநீக்குகாத்துல ஆடறது எல்லாம் காத்தாடின்னா - கட்சிக்கொடி கூட காத்தாடிதான் என்கிறார். நாங்க என்ன சொல்வது?
நல்லாச் சொல்லியிருக்கீங்க!! பட்டம் எனக்கும் ரொம்பப்பிடிக்கும்!!
பதிலளிநீக்குஅதென்ன ஹிந்து பத்திரிகை? பார்ப்பனர் சதி பட்டத்தின் கதி.
பதிலளிநீக்குநன்றி தேவன் மாயம்.
பதிலளிநீக்குஅப்பாதுரை - இப்படி நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத திசையில் இருந்து வெச்சீங்க ஒரு அடி! ஹூம் எல்லாம் எங்கள் விதி!
வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஅட பட்டம் செய்விளக்கம் மிகவும் அருமை. நிறைய தகவல்களை சேகரித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது மாதிரி, ஹிந்து பேப்பர் தான் சரியா வரும்.
பதிலளிநீக்குபட்டம் நானும் எங்க நந்தாவில் வெளில விட்டிருக்கேன்.கொழும்பில காலிமுகத் திடலில போட்டியே நடக்கும்.அழகழகா விதம் விதமா பாக்கவே நல்லாயிருக்கும்.இங்க செய்து எங்க விடுறது.
பதிலளிநீக்குஸ்ரீராம் பட்டத்தைவிட பஞ்ச் சூப்பர்.
ஸ்ரீராம்,மீனாட்சி என் பதிவின் பக்கம் வந்திருந்தாங்க.சந்தோஷமாயிருக்கு.
உங்க மூலமா அவங்களுக்கு என் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்களச் சொல்லிக்கிறேன்.
நன்றி ஹேமா. உங்கள் பதிவிலேயே உங்களுக்கு என் வாழ்த்தை செலுத்தி விட்டேன். இதோ மீண்டும் ஒருமுறை 'இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஹேமா'! இரட்டிப்பு வாழ்த்து! இனி, எல்லாவற்றிலும் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாய் பொங்கட்டும்.
பதிலளிநீக்கு//ஹிந்து பேப்பரின் ஒரு தாள் சதுரமாக வெட்டப் பட்டு, பட்டத்தின் முகமாகவும், மற்ற தாள் நீள நீளமாக வெட்டப்பட்டு வாலாகவும் மாறும்.//
பதிலளிநீக்குஇன்றைய ஹிந்து நாளிதழ் தாள் 'பட்டம்' செய்து விடத்தான் லாயக்கு ! நன்றாகச் சொன்னீர்கள்.
இங்கப் பாருங்க - அப்பாதுரை ஒருபக்கம் ஹிண்டு பெயர் சொல்லி சிண்டு முடிந்துவிடுகிறார்; இப்போ மாதவனும் மறுபக்கம் எங்களை ஹிந்துவிடம் மாட்டிவிடப் பார்க்கிறார்!
பதிலளிநீக்குஇதோ என் பங்குக்கு:))
பதிலளிநீக்கு//ஹிந்து+வாலிருக்கிற பட்டம் கரணம் அடிச்சா பார்க்கிறவன் எல்லாம் சிரிப்பான்//
இதான் செம பஞ்ச்=))
அந்தக் காலத்தில், அப்பா காலேஜிலே படிக்காமல் ஊர் சுற்றியபோது, இந்து என்றால் திருட்டுப் பட்டம் தேடி வரும் என்கிறார்.
பதிலளிநீக்குகொஞ்ச நாட்களுக்கு முன் அரசியலில்- குறிப்பாகத் தமிழக - இந்துவும் அதன் அகராதி அர்த்தங்களும் அல்லோலகல்லோலப் பட்டன
//எங்கள் said..."இப்போ மாதவனும் மறுபக்கம் எங்களை ஹிந்துவிடம் மாட்டிவிடப் பார்க்கிறார்!" //
பதிலளிநீக்குI said about 'ஹிந்து நாளிதழ்' only.. not abt. 'Hindu' religion ( its believers), which I also follow.
And needless to say, everyone, who were strong followers of that news-papers till 90s will agree with me.
maddy73 - பயப்படாதீங்க - நீங்க வேடிக்கையா சொன்னதை நாங்களும் வேடிக்கையாத்தான் எடுத்துகிட்டு - வாடிக்கையா ஒரு பதில் சொல்லியிருக்கோம்!
பதிலளிநீக்கு//எங்கள் said..."maddy73 - பயப்படாதீங்க - நீங்க வேடிக்கையா சொன்னதை நாங்களும் வேடிக்கையாத்தான் எடுத்துகிட்டு - வாடிக்கையா ஒரு பதில் சொல்லியிருக்கோம்!"//
பதிலளிநீக்குஎல்லாம் ஒரு விளம்பரம் தான்.. (பின்னூட்டத்துக்கே பின்னூட்டம் போடாச சொல்லி, புது பதிவருக்கான டிப்ஸ் எங்கேயோ படிச்சேன் சார்.. அதான்... ஹி... ஹி.. ஹி.)
//காத்துல ஆடறது எல்லாம் காத்தாடின்னா//
பதிலளிநீக்குநான் ஒண்ணும் இப்படி சொல்லவில்லையே! பட்டம் காத்துல ஆடுவதால் காத்தாடி அப்படின்னு சொல்றோம்னு எழுதினேன், அதுக்காக காத்துல ஆடறது எல்லாத்தையுமே காத்தாடின்னு சொல்றதா? குப்பை கூடதான் ரொம்ப காத்தடிச்சா, தரையிலேயே சுத்தறது, அதுக்காக அதை காத்தாடின்னு சொல்லமுடியுமா? இல்லை ஒரு காகிதம் காத்துல கோபுரம் வரைக்கும் பறந்தா அது பட்டம் ஆயிடுமா?
வைரமுத்து எழுதி இருக்கார் 'ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே' அப்படின்னு. பாருங்க! நாட்டுல நிறைய பேர் என்னை மாதிரி நினைக்கறாங்க. அதனால உங்க பதிவாசிரியர் கிட்ட சொல்லுங்க, என்னோட வாதமும் சரிதான்னு!:)
// ஒரு விளக்கமாற்றுக் குச்சி வில் (விஜய் படம் அல்ல) //
பதிலளிநீக்குவிஜய் படம் உங்களுக்கு விளக்குமாறு போல் உள்ளதா உமக்கு !
இருங்க அவர்களின் விசிறிகளிடம் சொல்லறேன் !