மாதவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி - ஒரே ஒரு அலைபேசி படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முயற்சி செய்து பார்த்தார் ஓர் ஆசிரியர்.
படமும் எண்களும் தரவிறக்கம்.
விவரம் மட்டும் நம் கைங்கரியம்.
1. ஒலி கேட்கும் பகுதி. குயிலோ வீணையோ - குழைந்தால் காதருகே வைத்து கேட்டு ஆனந்தப்படுங்கள். சிங்கம் கர்ஜித்தால் - கொஞ்சம் தூரத்தில் வைத்துக் கேளுங்கள். கடன் கொடுத்தவர் கூப்பிட்டால் - வேறு யாரையாவது விட்டு பேசச் சொல்லுங்கள், கேட்டுச் சொல்லச் சொல்லுங்கள்.
2. ஃபிலிம் பார்க்கும் பகுதி. உங்கள் கற்பனை திறனுக்கேற்றாற்போல் உபயோகம். நாங்க அதிகமா இது பற்றி சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோம்.
3. விரும்பியவற்றைத் தேர்ந்தெடுக்கும் விசைகள்.
4. கூப்பிடு தூரத்தில் இருப்பவரைக் கூட - இதைத் தட்டி அழைத்து - பேசி மகிழலாம், (உங்கள் கணக்கில் நிறைய பைசா இருந்தால்.)
5. குறுக்குச் சந்துகள் எவை என்று தட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
6. எடுப்பது, தொடுப்பது - எல்லாத்துக்கும் இது.
7. (வழி) நடத்தும் விசை
8. விசைகளைப் பூட்டி வைக்கும் விசை. (விசை எண் மூன்றுடன் கூட்டணி அமைத்து செயல்படும்)
9. பெரிதாக்கும் விசைகள் - சத்தத்தையும், திரைக் காட்சிகளையும்.
10. (ஃபிலிம்) படமெடு / நிறுத்து. (Start Camera - Action - Cut)
11. முடி விசை / மேலும், திற / அணை (ஐயோ! ஆன் / ஆஃப் தான் வேற எதுவும் இல்லை)
12. பிடித்த காட்சிகளை / நபர்களை பிடித்து வை.
13. சுத்தமா துடைத்தெறி
14. இதுதாண்டா படமெடுக்கும் கண்ணாடி - படமெடுப்பவர் இதுக்குப் பின்னாடி.
15. இதுல நீங்க எந்த கேபிள் சொருகுகிறீர்களோ அதற்குத் தகுந்தாற்போல் - அலை பேசி விவரங்களை அனுப்பும் / பெறும் அல்லது சக்தி பெறும் !
நல்ல பதிவு மற்றும் தமிழாக்கம். உங்களது தமிழாக்கத்தினை படிக்கையில், எனது பள்ளி நாட்களின் ஞாபகங்கள் வருகிறது.
பதிலளிநீக்குநான் 6ம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி பயின்றேன். அறிவியல், கணித பாடங்களில் சில தமிழ் வார்த்தைகளும் நண்பர்கள் (தமிழ் வாயிலாக கல்வி பயின்ற) மூலம் தெரிய பெற்று வந்தேன். (ஞாபகங்கள்).
differentiation - வகைகெழு
integration - தொகைகேழு
differential equation - வகைகெழு சமன்பாடுகள்
calculus - நுண்கணிதம்
quadratic equation - ஈருறுப்புக் கோவை சமன்பாடு
polynomial - பல்லுறுப்புக் கோவை
matrices - அணிகள்
cyclic quadrilateral - வட்ட நாற்கரம்
Waat 's Governer - வாட்டின் வேகம்காட்டும் கருவி (புகை வண்டியில் பயன் படுத்தப் பட்டது)
spectrum - நிறமாலை
triangular prism - முக்கோணப் பட்டகம்
ஓகே .. ஓகே.. இத்துடன் இந்த பின்னூட்டம் முடிவடைந்தன. அடாடா.. இந்த செய்திகளை(ஆங்கில - தமிழ் மொழி பெயர்ப்பு) , ஒரு தனிப் பதிவு என்னோட பிளாக்கிலேயே போட்டிருக்கலாமே!
மாதவன் - ஒரு தடவை நீங்க எழுதி இருப்பவை எல்லாவற்றையும் வாய்விட்டுப் படித்துப் பார்த்தோம்.
பதிலளிநீக்குபல்லு நாக்குல குத்தி, நாக்கிலேருந்து கோவைபபழக் கலரில் இரத்தம் வந்து, வேகமாக வட்டம் அடித்து, புகைவண்டியில் ஏறி, தட்டாமாலை சுற்றி, கீழே விழுந்தது போல ஒரு ஃபீலிங்.
நான் ஆங்கில வழி கல்வியில் படித்து வந்தாலும் எனக்கு தமிழ் மேல் எப்போதும் தீராத காதல் உண்டு.
பதிலளிநீக்குமேடி குறிப்பிட்டது போல் formula - வுக்கு தமிழில் "சூத்திரம்" என எனது தமிழ் வழி கல்வி கற்கும் நண்பர்கள் மூலம் (முதல் முறை) தெரிந்து கொண்ட போது அது ஏதோ ஒரு கெட்ட வார்த்தையை தான் எனக்கு கற்று கொடுக்கிறார்கள் என்றே நான் பல நாட்கள் நம்பிக்கொண்டு இருந்தேன். இப்போதும் நான் யாரவது "சூத்திரம்" என கூறினால் எனக்கு உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முடியாது.
ஆதிமனிதன் சொல்வது சரிதான். சில வார்த்தைகள், அவைகட்குரிய உணர்வுகளை எழுப்பாமல், அல்லது அவைகட்குரிய பொருளைவிட - மாற்று உருவம் / பொருள் நம் மனத்தில் எழுப்பி மயங்க வைப்பதோ, சிரிக்க வைப்பதோ அடிக்கடி நடப்பதுதான்.
பதிலளிநீக்கு:)))
பதிலளிநீக்குமிஸ்டு கால் கொடுக்காதீங்க. அது ரெம்ப கெட்ட பழக்கம்
பதிலளிநீக்கு//மிஸ்டு கால் கொடுக்காதீங்க. அது ரெம்ப கெட்ட பழக்கம்//
பதிலளிநீக்குநான் கால் பண்றதோட சரி.. மிஸ் பண்றதும் பண்ணாததும் அவங்க இஷ்டம்.. இதை எப்படி நான் 'missed call ' கொடுத்ததாக சொல்லமுடியும்.. ? ஹி.. ஹி.. சும்மா !
உண்மையில் missed call செய்வதனால் லைனை ரொம்ப நேரம் engaged ஆகாம பாத்துகரோமுங்கோ..
ஏற்கெனவே தெரிந்த பாகங்கள் (அலைபேசி பாகங்கள்!!) என்றாலும், உங்களின் நகைச்சுவை கலந்த எழுத்து நடை சுவாரசியமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குதமிழுதயம் - மிஸ்ஸுடு கால் பலவகைப் படும்.
பதிலளிநீக்கு"என்னை திரும்ப அழை"
"நான் ரெடி, நீ ரெடியா?"
"ஆபீஸ் வந்து சேர்ந்துட்டேன்"
"ஆபீஸ் லேருந்து கிளம்பியாச்சு"
"நினைவூட்டுகிறேன்"
எல்லாமுமே இடம், நேரம், அழைப்பவரைப் பொறுத்தவை. அழைப்பு பெறுபவரைப் பொறுத்தவை.
நன்றி மாதவன், சைவகொத்துப்பரோட்டா !
பதிலளிநீக்குஅலைபேசியை வைத்து நீங்கள் பதிந்த இரண்டு பதிவுகளையும் பார்க்கும்போது நாங்கள் இங்கு அலைபேசியைப் பாவிப்பதைவிட எங்கள் நாடுகளில்தான் அதிகமாக விளையாட்டுத்தனமாகப் பாவிப்பதாய் யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம் இது எவ்வளவு தூரம் உண்மை ?சொல்லுங்களேன்.
அழகான தமிழ் வார்த்தைகள்.
நித்தமும் பாவித்தால் மட்டுமே நினைவில் நிற்கும்.என்றாலும் பாராட்டுக்கள்.
நன்றி ஹேமா - எங்கள் எழுத்துக்களையும் தமிழ் என்று கூறியதற்கு.
பதிலளிநீக்குவரலாறு பாடத்தின் பரிச்சையில்
பதிலளிநீக்கு"அசோகரின்" படம் வரைந்து பாகங்களை கூறி என்று சொல்லாமல் இருந்தால் போதும் !!
பதிவைவிட பின்னூட்டங்கள் மேலும் சில செய்திகளைக் கொடுக்கின்றன, நன்றி, மாதவன், ஆதிமனிதன்.
பதிலளிநீக்கு(நன்றி பதிவருக்கும் - இந்தப் பதிவு இல்லைன்னா, இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் இல்லை அல்லவே, அதற்குத்தான்)