பல வருடங்களுக்கு முன்னே - தாம்பரம் பீச் மின்வண்டியில், ஒருவர் - பல சிறிய கண்ணாடி குழாய் பாட்டில்களைக் கையில் வைத்துக்கொண்டு, அதேபோல நிறைய குழாய்களை கையில் உள்ள பையில் வைத்துக்கொண்டு, இவ்வாறு கூவியவண்ணம் வருவார்:
" நோட்டு தைக்கலாம், துணி தைக்கலாம், கிழிந்த துணிகள் தைக்கலாம், ஜாக்கெட் தைக்கலாம், பாவாடை தைக்கலாம், டிராயர் தைக்கலாம், சட்டை தைக்கலாம், கோணி தைக்கலாம், பேப்பர் தைக்கலாம், ஹெமிங் பண்ணலாம், பூ வேலை செய்யலாம், பூ கோர்க்கலாம், மாலை செய்யலாம், இருபத்தொரு விதமான ஊசிகள், ஐந்தே ரூபாய்."
எதையும் முதன் முறையாகப் பார்க்கும்பொழுது அல்லது கேட்கும்பொழுது - அது சல்லிசான விலையில் இருந்தால், வாங்கிவிடுவது என்னுடைய வழக்கம். அந்தக் கண்ணாடிக் குழாயை வாங்கிச் சென்று, வீட்டில் உள்ள பழைய 'சைபால்' டப்பாவில் போட்டு வைத்தேன். அதில் இருந்த ஊசிகளில் இரண்டை மட்டும் - இரண்டு சந்தர்ப்பங்களில் உபயோகித்திருப்பேன் என்று ஞாபகம்.
இப்போ ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இன்னும் சில வருடங்களில் - இதே மின்சார வண்டியில், அலைபேசிகள் - இவ்வாறு விற்கப்படலாம் - என்று தோன்றியதால்தான். அப்போ விற்பவர் என்ன கூறி விற்பார்?
" அவசரமா பேசலாம், ஆதரவா கேட்கலாம், இயல்பாகச் சிரிக்கலாம், ஈயையும், ஈ என்று சிரிப்பவரையும் படமெடுக்கலாம், உண்மை பேசலாம், ஊருக்குப் பேசலாம், எப் எம் கேட்கலாம், ஏதும் பார்க்கலாம், ஐங்கரனையும் (பின்னணிப் படமாக) சேமிக்கலாம், ஒரு நாள் முழுவதும் ஓயாம செய்தி அனுப்பலாம் / படிக்கலாம், ஔவையார் படம் கூடப் பார்க்கலாம்.... ஃபைவ் ஹண்ட்ரட் தான் ஒண்ணு!!"
"நெட் பார்க்கலாம், பங்கு வாங்கலாம், பார்த்து விற்கலாம், (எம் பி த்ரீ) பாட்டுக் கேட்கலாம், (எஸ் ஜே சூர்யா) போட்டுத் தாக்கலாம், ட்விட்டர் ட்விட்டலாம்.... வாங்குங்க சார் - அலைபேசி - ஐநூறு ரூபாய்க்கு ஒன்று!"
" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"
"நெட் பார்க்கலாம், பங்கு வாங்கலாம், பார்த்து விற்கலாம், (எம் பி த்ரீ) பாட்டுக் கேட்கலாம், (எஸ் ஜே சூர்யா) போட்டுத் தாக்கலாம், ட்விட்டர் ட்விட்டலாம்.... வாங்குங்க சார் - அலைபேசி - ஐநூறு ரூபாய்க்கு ஒன்று!"
" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"
அப்டி நடந்தா ஆளுக்கு ஒன்னு வாங்க வேண்டியதுதான்
பதிலளிநீக்குHA HA HA...
பதிலளிநீக்குThings, those come down in price as days go on, are 'Electronic Items'
அகர வரிசை சூப்பர். 'ஃ ' எழுத்தை அற்புதமா பயன் படுத்திட்டீங்க. வெரி குட்.
//ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"//
பதிலளிநீக்குகட்டுபடியாகாது சார், ஆனா ஒன்னு வாங்கினா, இன்னொன்னு ப்ரீ... :))
அப்பா...டி எவ்ளோ ளொள்ளு காலேலயே !
பதிலளிநீக்குபதிவு போட்டது யாரு ?
வேற யாரு ஸ்ரீராமுக்குத்தான் இப்பிடியெல்லாம் தோணும்.
அலை பேசி ஆத்திசுவடி அட்டகாசம்!
பதிலளிநீக்குநடந்தாலும் நடக்கும்..
பதிலளிநீக்குஅருமை..:))
இத... இத த்தான் எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்கு//" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"//
பதிலளிநீக்குபடிக்கும் பொழுது ஆரம்பத்தில் லேசான புன்முறுவலுடன் ஆரம்பித்தது, போகப் போக புன்முறுவலின் பக்க வாட்டு நீட்சி கூடி, முடிக்கும் பொழுது வெடிசிரிப்புடன் முடிந்தது.
ஆயிரம் சொல்லுங்கள், நகைச்சுவைக்கு இருக்கும் சக்தியே அலாதிதான்!
கங்கிராட்ஸ்!
//" ஏம்பா - ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு தருவியா?"//
பதிலளிநீக்குஅருமை...நல்ல நடை சார்...
விரைவில் இப்படி கேட்டாலும் கேட்கலாம்..
"உம்... அப்படிக்கா போனா ,அங்கனே சும்மா
தருவாங்க "
Pranav Mistry an Indian IIT student who is pursuing research currently in MIT, USA and is developing a wearable device.
பதிலளிநீக்குHe calls it as 6th Sense that allows hand movement and digitization of information beyond imagination.
See below
http://www.pranavmistry.com/projects/sixthsense/
There are more videos about his invention / research in Youtube as well
So we may have future days, where we just need to think about someone and we may see them on video and exchange information. Just got to be careful not think about wife when in chinna vidu !!
அண்ணாமலையான் - சரியாச் சொன்னீங்க. ஆமாம். ஐநூறு ரூபாய்க்கு மடி கணினி கிடைக்கும் என்று செய்தி எங்கேயோ படித்தேன். அதுபோல, இதுவும் எதிர்காலத்தில் நடக்கும்.
பதிலளிநீக்குநன்றி மாதவன். உன்னிப்பா படிச்சிருக்கீங்க.
சைவகொத்துப்பரோட்டா - நல்ல தமாஷ்.
ஹேமா - ஸ்ரீராம் சிரிக்கிறார். ஏன் என்று எங்களுக்குத் தெரியலை.
நன்றி மீனாக்ஷி, பலா பட்டறை, தமிழ் உதயம், ஜீவி, பட்டாப்பட்டி.
நன்றி சாய்ராம் கோபாலன். நீங்க சொல்லியிருக்கிற வெப் சைட் - பார்க்கிறோம்.
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் ஆசை பட்டுடாதீங்க சார்! உலகமே தலைகீழானாலும் நம்ம ஆளுங்க ஏழைங்க சந்தோஷப்படற அளவுக்கு இப்படி விலை குறைச்சி வித்திட மாட்டாங்க. பாருங்க சைனாமொபைல் தூர்தர்ஷனோட வருது 3500/- ரூபாய்க்கு அதுவும் டச் ஸ்க்ரீன். ஆனா நம்ம நாட்ல நிலத்தையும் குடுத்து உழைக்க ஆளும்கொடுத்து, இலவச மின்சாரமும் கொடுத்தா வெரும் டப்பாவை 5000/- விக்கரான் நோக்கியா. என்ன செய்ய?? இன்னும் இருபது வர்ஷம் ஆகும் உங்க ஆசை நிறைவேற. என்ன??
பதிலளிநீக்கு'ஹேராம்' ! - ஜனவரி முப்பது மாலை, ஹேராம் - நீங்க ஏழைமக்களுக்காக எழுதியிருப்பதைப் படித்து மெய்சிலிர்த்தோம். நாட்களானாலும் - நிறைவேறினால் சரிதான் என்று நினைக்கிறோம்.
பதிலளிநீக்குநாள் கடந்து வந்து என்ன ப்ரயோஜனம். அதுக்குள்ள உலகம் நம்மைத்தாண்டி எங்கோ போய்டும்.
பதிலளிநீக்கு///Pranav Mistry an Indian IIT student who is pursuing research currently in MIT, USA and is developing a wearable device. ///
சாய்ராம் கோபால் சொல்லியிருக்கிற இந்த ப்ரனாவகூட நம்ம அரசியல்வியாதிகள் உபயோகிக்க மாட்டாங்க. அவனை வெச்சு எனன சம்பாதிக்கலாம்ன்னு தான் பாக்கப் போறாங்க. இன்னும் சொல்லப் போனால் ப்ரனாவ் ஓபன் ஸோர்ஸ் வெளியிடப்போறதா சுயநலம் இல்லாம சொல்லி இருக்கார். அதை உபயோகப்படுத்தினாலே நம்ம இந்தியா உண்மையில் புராண கால மாயாஜால காலத்திற்கு போய்டலாம். இவங்க செய்ய மாட்டாங்களே...பாப்போம் நம்ம பேரப்புள்ளைங்கலாவது உபயோகிப்பாங்களான்னு.
மிகவும் ரசித்துப் பல முறை படித்த பதிவு. brought back great memories.
பதிலளிநீக்குஹிஹிஹி, அப்படியும் நாங்க 2010 வரைக்கும் அலைபேசியே வைச்சுக்கலை. பையர் கல்யாண சமயம் ஒண்ணு அவசரத்துக்குனு வாங்கினது! அதையே அவ்வப்போது ஓட்டிட்டு இருந்தோம். ஒரு தரம் மாயவரத்திலே நான் ஒரு பக்கம் ரங்க்ஸ் ஒரு பக்கம்னு போனதிலே தான் ஆஹா, நாம காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிப்பதுனு மண்டையிலே உறைக்க அலைபேசிகள் வாங்கி ஆளுக்கு ஒண்ணுனு வைச்சிருக்கோம். ஆரம்பத்தில் அதையும் மறந்து வீட்டில் வைச்சுட்டுப்போயிடுவோம். இப்போத் தான் நினைவா எடுத்துட்டுப் போறோம். :)
பதிலளிநீக்கு