செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதல் கட்கவி...

       
                      
பேதைக் காதல், பெதும்பைக் காதல், 
அறியாக் காதல், உண்மைக்காதல், 
ஒருதலைக் காதல், சுயநலக் காதல்...
முதிர்ந்த காதல், இளமைக் காதல்.
ஜெயித்த காதல், தோற்ற காதல்,
   
ஆயிரம் உண்டிங்கு காதல்   
எந்தக் காதல் உசத்தி என்று
எதை வைத்துச் சொல்வீர்?
                
ஐந்து வயதில்
அன்னையைக் காதலித்தேன்
பத்து வயதில் படிப்பைக் காதலித்தேன்
பதினைந்து வயதில் 
சினிமாவைக் காதலித்தேன்
பதினெட்டு வயதில்
பெண்ணைக் காதலித்தேன்
கல்யாணத்துக்குப் பின்
மனைவியைக் காதலித்தேன்
பின்னர் குழந்தைகளைக்
காதலித்தேன்
    
முப்பது வயதில்
வேலையைக் காதலித்தேன்
நாற்பது வயதில் 
பணத்தைக் காதலித்தேன்
ஐம்பது வயதில் ஓய்வைக் காதலித்தேன்..
அறுபது வயதில்
கடந்து வந்த
அனுபவங்களைக் காதலித்தேன் 
      
எப்போதுமே நான்
என்னைக்
காதலித்ததால்
எல்லாக் காதலுமே 
சுலபக் காதலானது !
    
ஒவ்வொரு முறையும் மாறியது முந்தைய காதல்
ஒரு முறையும் மாறாதது
இசையின்மீது காதல்.. ருசியின் மீது காதல்...     
    
ஒரு காதல்
வரும்போது
முந்தைய காதல் மறைவது
வழக்கமாயிற்று 
காதல் மட்டுமே
மாறாத பழக்கமாயிற்று !
           
வாழ்வைக் காதலித்த நான்
சாவையும் காதலிக்கப் 
பழகி வருகிறேன்.
                  
காதல் இல்லா மனிதன் இல்லை
இதில் எதையாவது
காதலிக்காத(வன்)
மனிதனே இல்லை !
              
ஆணும் பெண்ணும் காதலிப்பதுதான்   
காதல் என்று
நாள் வைக்காமல்
எல்லா நாளும்
எல்லாவற்றையும் காதலித்தால்
காதலின் மீதே காதல் வரும்.
                          

23 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரிகளிலும் வாழ்வு குறித்த அழுத்தமான கருத்துக்கள்.எம்மை நாமே காதலிக்கப் பழகினால் வாழ்வு இலேசாகிறது.எங்கள் புளொக் எல்லோருக்கும் காதலர்தின
    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு பருவத்திலும் செய்ய வேண்டிய காதல்களைச் சுட்டிச் சென்ற கவிதை நன்று. காதல் ஓய்வதில்லை!

    பதிலளிநீக்கு
  3. /எல்லா நாளும்
    எல்லாவற்றையும் காதலித்தால்
    காதலின் மீதே காதல் வரும்./

    அப்படிப் போடுங்கள்:)!

    அருமையான கவிதை.

    எங்கள் ப்ளாக் குழுவினருக்கு அன்பு தின வாழ்த்துக்கள். அன்பே சிவம்!!

    பதிலளிநீக்கு
  4. காதல், காதல், காதல்... எங்கேயும் காதல், எப்போதும் காதல்... நீங்கள் தந்ததோ பல வயது காதல், பல ரசனை காதல். ஏற்று கொள்ள கூடிய காதல்.

    பதிலளிநீக்கு
  5. அருமையாய் இருக்கு. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆமா, அது வந்து, “கட்கவி”ன்னா என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  7. என்றும் அழியாக் காதல் பற்றிய மிக அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  8. பாட்டு பரவாயில்லை, ஆனா சீட்டு ஜோர்.

    [உணர்வு ரெண்டு பக்கமும் இருந்தால் தான் காதல்னு நினைக்கிறேன். இயற்கையைக் காதலிச்சேன்றதெல்லாம் சும்மா வெத்துனு நினைக்கிறேன். ரசிச்சேன்னு சொல்லலாம். இந்த விஷயத்தில் ஆங்கில love வார்த்தையை விட தமிழில் சொல்வளம் அதிகம்னு தோணுது. காதல் என்கிற தமிழ்ச் சொல்லின் இலக்கிய (ஹ்க்க்க்க்ம்ம்ம்ம்) பயன்பாட்டு பொருளை வச்சுப் பாத்தா (அதாங்க.. கண்ணொடு கண்ணும் நெஞ்சொடு நெஞ்சும் கலக்கும் ஈருடல் ஓருயிரெனத் துடிக்கும்..இத்யாதி இத்யாதி..) ஒத்த (ரொம்ப கவனமா எழுதினேன்) மனதுடையோருக்கு ஏற்படும் இருவழி உணர்வு காதல்னு சொல்லலாம். அம்மாவைக் காதலிச்சேன்ன் சொன்னா ஒண்ணு ஈடிபஸ் இல்லேன்னா லேடிபஸ்.]

    பதிலளிநீக்கு
  9. சீட்டுக்கட்டு படம்:
    தலைகீழ் 3 ஹார்டினுக்கு அப்புறம் தலைகீழ் 5 ஹார்டின் வந்திருக்கணும்...

    ஏன் தெரியுமா ?

    பதிலளிநீக்கு
  10. //அப்பாதுரை said...

    பாட்டு பரவாயில்லை, ஆனா சீட்டு ஜோர்.//

    அதில் ஒரு தவறு இருக்கிறது, அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  11. அட?????? நீங்க ரெண்டு பேரும் சொன்னதும் தான் சீட்டுக்கட்டையே கவனிச்சேன். :))))))

    பதிலளிநீக்கு
  12. smart observation Madhavan.. நீங்க சொன்ன பிறகு தான் பொருத்தத்தைக் கவனிச்சேன்.
    ஆனா இப்ப இருக்குறதுல என்ன பிழை புரியலியே? மண்டையைக் குடையுதே?!

    பதிலளிநீக்கு
  13. மாதவன் சார் -
    இந்தக் காதல் புதுக்கவிதை போன்றது;
    இலக்கணங்கள் இதற்கு இல்லை!

    பதிலளிநீக்கு
  14. காதல் என்றாலே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒருவரை ஒருவர் காதலிப்பதில் தோன்றும் அந்த சுகமான உணர்வு மட்டும்தான். அன்னை மற்றும் குழந்தைகள் மீது கொள்ளும் காதல், தொழிலை காதலிப்பது, பணத்தை காதலிப்பது, இசையை காதலிப்பது, மனதிற்கு நிறைவான செயலை முழு ஈடுபாடோடு செய்வது போன்றவைகளில் கிடைக்கும் உணர்வே வேறுதான். இந்த காதல் காதல்தான். அந்த காதல்கள் வேறுதான்.
    கவிதை நன்று. படங்கள் கலக்கல்!

    பதிலளிநீக்கு
  15. "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"னது அர்த்தமே மாறிப் போய் இன்னிக்கு எங்கே வந்து நிக்குது! :))))))))

    பதிலளிநீக்கு
  16. // இந்தக் காதல் புதுக்கவிதை போன்றது;
    இலக்கணங்கள் இதற்கு இல்லை! //

    ஆமா.. உங்க கவிதை.. படம்லாம் ஓகே..

    கொலவெறி வரி ஸ்டைலுல பாடினாதான்.. ஓவர்..

    பதிலளிநீக்கு
  17. // ஹுஸைனம்மா said...
    ஆமா, அது வந்து, “கட்கவி”ன்னா என்ன அர்த்தம்?//

    கட்டுரை பாதி, கவிதை பாதி கலந்து வந்ததாம் இந்த இலக்கியப் பதிவு! (சொல்கிறார் பதிவாசிரியர்!)

    பதிலளிநீக்கு
  18. அன்பர்கள் தின வாழ்த்துகள்.
    ஆங்கில லவ் அர்த்தம் எல்லாருக்கும் பொருந்தும். தமிழ்க் காதல்
    அதுதான் காதல்:)

    பதிலளிநீக்கு
  19. கட்டை வெட்டி கட் கவி பண்ணி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  20. அம்மா காதல் அப்பா காதல் எல்லாம் கொஞ்சம் நெருடுகிறது.
    அன்பே சரி.

    படங்கள் அருமை. அதிலும், நின்று நிதானமாய் காதல் செய்யவேண்டும்(அப்படித்தானே?) என்ற கருத்தில் STOP sign போட்டு அசத்தி விட்டீர்கள் !!

    பதிலளிநீக்கு
  21. அம்மா காதல் அப்பா காதல் எல்லாம் கொஞ்சம் நெருடுகிறது.
    அன்பே சரி.//

    எனக்கு நெருடலை; காதல் என்பதன் அர்த்தம் மாறிப் போயிருப்பதால் நெருடல் தோன்றுகிறது. சாதாரணமாகப் பொருள் எடுத்துக்கொண்டால் இறைவனில் ஆரம்பித்து அனைத்தையும், அனைவரையும் காதலிக்க முடியும்.

    ஞானசம்பந்தர் மட்டுமில்லாமல் அனைத்து இறையடியார்களும் இறைவனைக் காதலித்திருக்கின்றனர். ஆகவே அம்மாவையும், அப்பாவையும், வேலையையும், எல்லாத்தையும் காதலிக்கலாம்; காதலிக்க முடியும். காதலிக்க வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!