("இலக்கியப் பீடம் ('ப்' வருமோ?!!) '2/2012 இதழில் படித்ததை, நடுவில் ஓரிரு
இடைச்செருகல்களுடன் பகிர்கிறேன் - பாஹே.)
@@@@@@@@@@@@
கவிதையை மொழி பெயர்க்கும்போது நம் மொழி பெயர்ப்பில் வந்திருப்பவை
எல்லாம் உரை..
எவை விடுபட்டனவோ அவைதான் கவிதை. (ராபர்ட் ஃப்ராஸ்ட்)
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
என்ன செய்து கிழித்தாய்?
நாள் தோறும் கேட்கும்
நாட்காட்டி - (பல்லவன்.)
வரிகளுக்கிடையில்
ஒளிந்துகொண்டிருக்கிறது
கைகுலுக்கியபின்
எண்ணிப்பார்த்து விடுங்கள்
இஸ்திரிப் போடுபவனின் வயிற்றில்
ஏன் இத்தனைச் சுருக்கங்கள்?
கஞ்சி போடாததால். (லிங்குசாமி).
ஊரெல்லாம் 'பவர்கட்'
என்றாலும் இயந்திரங்கள் இயங்குகின்றன.
இரண்டு அடி கொடுத்தால்தான்
நீ திருந்துவாய்!
உடைந்த வளையல் துண்டைக்
குளத்தில் எறிந்தேன் -
பேருந்துகள் மட்டுமே
இங்கே நிற்கும் -
நேரம் அல்ல.- (ஜப்பானியப் பழமொழி).
வீட்டின் பெயர்
'அன்னை இல்லம்!'
அன்னை இருப்பது
அநாதை இல்லம்!- (யாரோ).
வயலை விற்ற இரவு
உறக்கமே இல்லை
தவளைகள் இரைச்சல்.- (ஹொ கூஷி)
எச்சரிக்கை!
எரிவது எண்ணெயல்ல
முதியோர் விடுதி மரக்கிளையில்
தாய் பார்த்தாள்
இரையூட்டும் குருவி!- (கருமலைப்பழம்நீ).
குப்பைத்தொட்டிக்குள் குழந்தை
எட்டிப் பார்த்தது நாய்
தன குட்டிகளுடன்.- (கருமலைப்பழம்நீ).
வெறுங்கை நானென்ன செய்ய?
கையைப் பிசைந்தவனைப் பார்த்து
நகைத்தன விரல்கள்.- (கருமலைப்பழம்நீ).
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்.- (தாராபாரதி?)
காடு விளைஞ்சென்ன மச்சான்
நமக்குக்
கதவைச் சாத்தி விளக்கை அணைத்து
அப்படி என்ன தண்டனை -
திரையில் படம்.- (ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).
உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்திதான்
ஊதி அணைத்ததில் பெரிதும் மகிழ்ந்தது
பிறந்தநாள் விழாவில். -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).
ஒவ்வொரு வெற்றி பெற்ற
மனிதனுக்குப் பின்னாலும்
'பல' பெண்கள்! -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).
எவருடைய நினைவுதினமோ
பிரியமாய்ச் சாப்பிடுகிறார்கள்
தள்ளு வண்டியில் ரோஜாச் செடிகள்
வாங்கியதும் பூத்தது
விற்றவன் முகம்! - (சென்னிமலை தண்டபாணி.)
ஒரு இலை உதிரும்
வேதனை அறிய
மரமாக வேண்டும்.- (சென்னிமலை தண்டபாணி).
கணினிக்குள் தேடுகிறான்
தொலைந்துபோன
வாழ்க்கை எங்கென்று! - (சென்னிமலை தண்டபாணி.)
பூனை வயிற்றில் எது பிறந்தாலும் -
அது எலிபிடிக்கும்.-( சீனப் பழமொழி).
ஏசுவாக எல்லோருக்குமே ஆசை!
சிலுவை தூக்க மட்டும்
யாரும் இல்லை.- (யாரோ).
ஓநாயின் உயிரைக் காக்க
ஆடுகளே
அர்ச்சனை செய்கின்றன-( யாரோ).
வேகத் தடைகள் எதற்கு
நத்தைகளுக்கு? -( யாரோ).
கரும்பலகை கதறியது
நீ கற்றுக் கொள்ள
மரம் நடுவிழா
மேடை அமைக்கணுமே -
பத்துமரம் வெட்டினோம்.- (ஆலந்தூர் மோகனரங்கன்).
கலப்பை -
குடியானவன் சிலுவை. - (கவிஞர் மீரா.)
"படுபாவிப் பசங்களா!
எங்கே தொலைஞ்சீங்க?"
சாந்தமூர்த்தி அலறினார்.-( பாஹே).
எல்லாமே நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஅறிவுமதியின் திருக்குறள், சென்னிமனலை தண்டபாணி, சீன பழமொழிகள் இரண்டும் மிகவும் பிடித்தது.
ஹைக்கூக்கள் "ஹை" என்று வியக்க வைத்தது. எழுதியவர்களுக்கும், எடுத்து தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குரசிக்கவைத்த அருமையான பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குகைகுலுக்கியபின்
பதிலளிநீக்குஎண்ணிப்பார்த்து விடுங்கள்
விரல்களை. - (யாரோ)
முதியோர் விடுதி மரக்கிளையில்
தாய் பார்த்தாள்
இரையூட்டும் குருவி!- (கருமலைப்பழம்நீ).
குப்பைத்தொட்டிக்குள் குழந்தை
எட்டிப் பார்த்தது நாய்
தன குட்டிகளுடன்.- (கருமலைப்பழம்நீ).
nice. thanks for sharing.
இது நல்லாயிருந்துச்சுன்னு தனியா எடுத்துக் காட்டறதுக்கு இடமில்லாம எல்லாமே ரசிக்க வைத்தன. அருமையான தொகுப்புக்கு அநேக நன்றி!
பதிலளிநீக்கு//ஊரெல்லாம் 'பவர்கட்'
பதிலளிநீக்குஎன்றாலும் இயந்திரங்கள் இயங்குகின்றன.
பெண்கள்! - //
எது இயந்திரம்
யார் இயக்குபவர்
என்றே தெரிவதில்லை
பல நேரங்களில்
இரண்டு நிலைகளும்
மாறி மாறிப் போவதினால்!
எல்லாமே நல்லாருக்கு..
பதிலளிநீக்குஎல்லாம் எல்லாம் எல்லாமே மிக மிக அற்புதமான சிந்தனைகள் !
பதிலளிநீக்குஎல்லாமே சிறப்பாக இருக்கு.
பதிலளிநீக்குஅதிலும்..
//என்ன செய்து கிழித்தாய்?
நாள் தோறும் கேட்கும்
நாட்காட்டி - (பல்லவன்.)//
அருமை.
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்கு/அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்/
கவித்துவம்.
அன்னை இல்லம், முதியோர் விடுதி, குப்பைத் தொட்டிக்குள்.., நினைவு தின
ஹைக்கூக்கள் உருக்கம்.
பகிர்வுக்கு நன்றி.
அனைத்துமே அருமை.
பதிலளிநீக்குவாங்க மோ சி பாலன்! ஊருல இருக்கீங்களா! பதிவு ஏதும் போட்டீங்களா?
பதிலளிநீக்குஅனைத்துக் கவிதைகளும் அருமை.
பதிலளிநீக்குஆலந்தூர் மோகனரங்கன் சூப்பர்.
பட்டுக்கோட்டை வரிகளும் அதற்கு மேல் இருந்த வரிகளும் மறக்க முடியாதவை.
காடுவிளையட்டும் பொண்ணே
நமக்குக் காலம் இருக்குது பின்னே'
எப்பொழுதோ!!
எனக்கு பொதுவாக கவிதைகள் அலர்ஜி! இந்த ஹைக்கூக்களையும் வார்ப் பத்திரிகைகளில் தத்துப் பித்துத் தனமாக எழுதியிருப்பார்கள். உங்கள் செலக்ஷன் ப்ரமாதம் - ஒன்று, இரண்டு தவிர. பதிவு செத உங்களுக்கும் எழுதியவர்களுக்கும் பாராட்டுக்கள். - ஜெ.
பதிலளிநீக்குமுத்துக் குவியலாக இருந்தது
பதிலளிநீக்குஅனைத்துக் கவிதைகளும்
ஒரே பதிவில் கொடுத்து திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எல்லாமே ரசிக்க வைக்குது..
பதிலளிநீக்கு