ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஞாயிறு - 137


18 கருத்துகள்:

  1. அருமை.

    கவனிப்பாரற்ற ஆலயம் வாழ வைத்துக் கொண்டேதான் இருக்கிறது அண்டி வந்தோரை (கொடிகள்)!

    பதிலளிநீக்கு
  2. நிறைய பழங்கால பொக்கிஷங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

    ராமல்ஷ்மி அக்காவின் கருத்து ரசிக்க வைத்தது.

    “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” - தன் நிலையே பரிதாபமானது என்றாலும், நம்பி வந்தவரைக் கைவிடார்!! :-)))))

    பதிலளிநீக்கு
  3. ஒரு பெரிய மண்டபம் வருபவரை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல ஒரு பிரமை கிடைக்கிறது. இரண்டு பக்கமும் கண்கள் இருப்பது போல.
    இதற்கும் ஒரு காலம் வரும்.

    பதிலளிநீக்கு
  4. சிவராத்திரி நேரத்தில பார்க்கவே கஸ்டமாயிருக்கு.சமய நம்பிக்கைகள் குறைந்து வரும் தலைமுறைகளால் கடவுள்கூட இனிக் கவனிப்பாரற்றுத்தான்.

    நம்பிக்கை வைத்திருந்த நம் முன்னோர்கள் அளவோடு ஆலயங்களைக் கட்டியிருக்கலாம்.நம் நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால்...ஐரோப்பிய நாடுகளில் இதே நிலைமை இப்போ ஆரம்பித்திருக்கிறது.இங்கு பிறந்து வளரும் வருங்காலக் குழந்தைகள் கோயில்களைப் பராமரிக்கப் போவதில்லை.

    போட்டி போட்டு வியாபார நோக்கோடு முழத்துக்கு முழம் கோயில்கள் கட்டுபவர்களால்தான் இந்த நிலைமை.(சரி அந்தக் காலத்தில் வியாபார நோக்கம் இருந்திருக்காது.)நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றுகூடும் இடமாக ஒன்றிரண்டு கோயில்கள் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது !

    பதிலளிநீக்கு
  5. சோழநாட்டுக் கோபுரம் டைப்பில் இருக்கு. அநேகமாப் பிற்காலச் சோழர் படைப்பாய் இருக்குமோ? அல்லது காஞ்சிபுரத்துக்கு அருகே ஏதேனும் கோயிலா? அங்கேயும் சில கோயில்கள் இப்படிக்கண்களில் படறதுண்டு.

    பதிலளிநீக்கு
  6. சோழர் படைப்பு -ஆம்
    பிற்காலச் சோழர் - ஆம்
    காஞ்சி அருகில் - இல்லை
    பின் எங்கு ? - திருவாரூருக்கும் மன்னார்குடிக்கும் இடையே ஒரு குக்கிராமம்
    நாங்கள் இப்பொழுதுதான் ராமாயணம் படிக்க ஆரம்பித்துள்ளோம். அடுத்து ?

    பதிலளிநீக்கு
  7. தொப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

    காலங்கார்த்தாலே எங்கள் ப்ளாக் கமென்டுக்குக் கொடுத்திருக்கும் பதிலைப் பார்த்த அதிர்ச்சியிலே மயங்கி விழுந்துட்டேன்!! இனிமே நாளைக் காலையில் தான் எழுந்துப்பேனோ! :))))))

    ம்ஹும், இங்கே இப்போ மாலை ஏழு மணி தான்! அதனாலே யாரானும் தண்ணி தெளிச்சு எழுப்புங்கப்பா!!

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்ம் திருவாரூருக்கும் மன்னார்குடிக்கும் நடுவில் மட்டுமில்லாமல் அந்தச் சுற்றுவட்டாரத்தில் பல கோயில்களை இந்த நிலைமையில் காணலாம். பல கோயில்களிலும் போய்ப் பார்த்ததில் லிங்கனார் மட்டுமே தன்னந்தனியாக எந்தப் பயமும் இல்லாமல் இருக்கார். ஊரிலே விசாரித்தால் வரும் பதில்! ம்ஹும், சொன்னால் வம்பு! :))))))

    கப்சிப் காராவடை,
    காலணாவுக்கு ஓசி வடை!

    பதிலளிநீக்கு
  9. சும்மா கோபுரத்தைப் பாத்தே இத்தனை கண்டுபிடிக்க முடியுமா? அதுவும் அரைகுறையா தெரியுற கோபுரம்..

    நான் சொல்ல நினைச்சதை ஹேமா சொல்லிட்டாங்க.. லேட்டு.

    பதிலளிநீக்கு
  10. engal6 (twitter) and kggouthaman facebook entries show the location of this temple.

    பதிலளிநீக்கு
  11. இங்கேயும் சொல்லுங்க. ஃபேஸ்புக்குக்கெல்லாம் தினம் போகறதில்லை. டிவிட்டர் எல்லாம் இல்லை. இன்னும் linkedln தான் பாக்கி. :))))))

    பதிலளிநீக்கு
  12. @அப்பாதுரை, பிற்காலச் சோழர் காலத்திலே தான் கருவறைக்கு மேலே விமானம் எழுப்பி அதை ராஜகோபுரத்தை விட உயரமாகக் கட்டும் வழக்கம் வந்தது. மேலும் இது கற்றளியாகவும் இருக்கு பாருங்க. :))))))

    பதிலளிநீக்கு
  13. சுற்றுச் சுவரில் செங்கல்லும் தெரியுது.

    பதிலளிநீக்கு
  14. சொல்லி வாய் மூடலை, Vallisimhan linkedln invite அனுப்பி வைச்சிருக்காங்க. :))))

    பதிலளிநீக்கு
  15. ராமலஷ்மி அவர்களின் கருத்து அருமை.
    நல்லதோர் கோயில் செய்து அதில் செடி கொடி வளர்ந்திடப் புரிகுவையோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!