செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கனாக் கண்டேனடி....



வீட்டிலிருந்து கிளம்பி சாலைக்கு வந்தபோது காட்சிகள் எதிர்பார்த்த மாதிரியேதான் இருந்தது. 




சாலையெங்கும் ஜன வெள்ளம்.  ஏதோ திருவிழாவுக்குப் போவது போல...இவ்வளவு பேரும் எந்நேரமும் சாலைகளில் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். 



அஜீரண பஸ்கள் மக்களை வாந்தி எடுத்தபடி சென்றன.பார்க்கும்போதே ஏற மனமில்லை. கால்டேக்சிகள் போகும் இடத்தைக் கேட்டுதான் வண்டி இருக்கிறதா என்றே சொல்கிறார்கள். நெரிசல் பயம்! குறைந்தது நான்கு நபர்கள் வேறு சேர வேண்டும்.



மெல்ல நடக்க ஆரம்பித்தேன். அரசாங்கம் வாழ்க!



தாண்டிச் சென்ற அத்தனை வண்டிகளிலும் பில்லியன் ரைடர் இருந்ததைக் கவனித்தேன்.  எனக்கு நம் மக்கள் மீது நம்பிக்கை இருந்தது! யாராவது தனியாக வருவார்கள்!

தாண்டிச் சென்ற வண்டியிலிருந்து ஒருவர் இறங்க காலியான பைக் காரர் ஏக்கக் கண்களால் சுற்றுமுற்றும்பார்த்தார். 

என்னைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. 

"வாங்க...எங்கே போகணும்..."

சொன்னேன். இதற்காகத்தானே அந்த திசையில்தானே நடக்கிறேன்...

"ஏறிக்குங்க..." பின் சீட்டைத் தட்டினார். "எனக்கும் டைம் ஆகுது...என் வைஃப் ஸடனா இன்னிக்கி லீவ் போட்டுட்டா..."

நான் ஏறவில்லை. "எவ்வளவு" என்றேன்.

"இருபது ரூபாய்"

மேலே நடக்கத் தலைப் பட்டேன்.

"சரி...இருபத்தைந்து"

மெளனமாக நடந்தேன்.

"சார்...நியாயமா நடந்துக்குங்க...முன்னால இறங்கினாரே பத்தே ரூபாய்தான்..."



"நாற்பதுன்னா ஓகே.." என்றேன்.

"ஓகே..உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை...முப்பது ரூபாய்... வாங்க" என்றார்.

சற்று தூரத்தில் இன்னொரு நடைவாசி வருவதைக் கண்டதும் இதற்குமேல் பேரம் பேசாமல் முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு (முதலிலேயே கொடுத்து விட வேண்டும்) வண்டியில் ஏறினேன். நான் செல்ல வேண்டிய தூரம் இன்று பக்கம்தான் என்பதால் எனக்குக் கொஞ்சம் நஷ்டம்தான்!




அரசாங்கம் வாழ்க... போக்குவரத்து கன்னாபின்னா நெரிசலைச் சமாளிக்க ஒரு புதிய முயற்சியாக "எந்த டூ வீலரிலும் ஓட்டுனர் மட்டும் என்று தனியாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் போகுமிடம் பொறுத்து அபராதமோ கட்டத் தவறினால் சிறைத் தண்டனையோ கிடைக்கும் " என்று புதிய சட்டம் போட்டுள்ள அரசாங்கம் வாழ்க...!



22 கருத்துகள்:

  1. நல்ல கனா... நல்ல சட்டம்... வரும். வர வேண்டாம்... பிற நாட்டில் இப்படி சட்டம் ஏதும் இருக்கிறதா என்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பொறியை இன்னும் கொஞ்சம் ஊதியிருக்கலாம்! :-)

    பதிலளிநீக்கு
  3. கனவா இது?? ரொம்ப நல்ல ஏற்பாடாக இருக்கே!!

    பதிலளிநீக்கு
  4. கனவு பலிக்கட்டும்.ஆசிகள் !

    பதிலளிநீக்கு
  5. நூறு ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கம் வாங்கற மாதிரி நான் ஒருநாள் கனவு கண்டேன். இப்ப... இங்க ஒரு சூப்பர் கனவு. ஹூம்...

    பதிலளிநீக்கு
  6. mhum continue optione varalai! commentsum enakku mail le varalai! enna seyyalam?? :(

    பதிலளிநீக்கு
  7. விபரீதக் கனவு:))! எப்படி ஓட்டுவார்களோ, என்ன நிலையில் இருப்பார்களோ, ஆளில்லா இடத்துக்கு அழைத்துச் சென்றுக் கத்தியைக் காட்டுவார்களோ...கனவு கனவாகவே போகட்டும்:).

    பதிலளிநீக்கு
  8. இந்தமாதிரி என்னைக்காவது நடந்துடுமுன்னுதான்.. நா, டிரைன் வாங்க வேண்டாம்ணு இருக்கேன்..


    PS... Good lateral thinking...

    பதிலளிநீக்கு
  9. ஆகா! ரொம்ப நாள் ஞாபகம் இருக்கப்போற கதை.

    டாட்காம் வெறி நாட்களில் கலிபோர்னியா நெடுஞ்சாலைகளின் car pool (தமிழ் வேண்டாம்) laneல் போறதுக்கு இலவசமா ஏதாவது கொடுத்து, mostly beer, ஆள் பிடிச்சு போனதுண்டு - இப்பவும் நடக்கிறது :)

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை - நீங்கள் can-கொடுத்து lane பிடித்தது OK.
    ஆனால் beer குடித்துவிட்டு gear பிடிக்கவில்லை என நம்புகிறோம்.

    எங்கள் குழுவினரே - car pooling சட்டம் போடுங்கள் அது நியாயம். bike-ல் doubles என்ற சட்டம் கொஞ்சம் over.

    பதிலளிநீக்கு
  11. காலம் தாண்டாமல் இவ்வளவு அருமையான கற்பனை .. இப்படியே இதை விடக்கூடாது.. ஆர்.வி.எஸ் சொன்னமாதிரி பொறியை ஊதி ,இதை ஒரு யோசனையாக போக்குவரத்து துறைக்கு அனுப்பலாம்...இரண்டளவுக்கு இல்லாவிட்டாலும் நான்கிற்கு சில கட்டுபாடுகள் கொண்டுவரலாம்..
    சட்டம் வந்தால்
    கல்லூரி வாண்டுகள் நான்கு பேர் ஐந்து பேர் பைக்கில் சென்று இன்செண்டிவ் கோரிக்கை வைக்கும் வரை செல்லும்...

    பதிலளிநீக்கு
  12. பின்னிட்டீங்க போங்க. ஆனா நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்ல பாலன் சார். கியர் பிடிச்சதும் தான் பியர்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி தமிழ் உதயம், ஹுஸைனம்மா, ஆர் வி எஸ், ராம்வி, ஹேமா, கீதா சாம்பசிவம், கணேஷ், ராமலக்ஷ்மி, மாதவன், அப்பாதுரை, மோ சி பாலன், பத்மநாபன்....

    ஆர் வி எஸ்...இன்னும் கொஞ்சம் நீட்டி ட்விஸ்ட்டை கடைசியில் வைத்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். ஊக்கத்துக்கு நன்றி

    நிஜம்னு நம்பக் கூடிய அளவிலா இருக்கு கீதா மாமி..? :))

    கணேஷ்... இது சாத்தியப் படக் கூடிய கனவு...!!

    ராமலக்ஷ்மி...இதற்கு சட்டம் போட்டவர்கள் அதிலும் சட்டம் கடுமையானதாகத்தானே இருக்கும்? மேலும் ஊருக்குள் மட்டுமே சட்டம்...! - அமெண்ட்மென்ட்!


    லேட்டரல் திங்கிங்....! நன்றி மாதவன்.

    ஊக்கத்துக்கு நன்றி அப்பாஜி...

    சபாஷ் மோ சி பாலன்...

    நன்றி பத்மநாபன்...நம் யோசனையை எல்லாம் யார் கேட்கிறார்கள்...!

    பதிலளிநீக்கு
  14. நல்ல கனா ...
    இது தொடர்பாக நானும் பல ஏற்பாடுகள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்...
    *நாம் விரும்புகிற அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது
    இந்த அலுவலகம் அந்த அலுவலகம் என்ற பாகுபாடு கூடாது..-யாரும் கேட்க கூடாது
    *நாம் விரும்புகிற நேரத்திற்கு ,விரும்புகிற நாளில் வேலைக்கு செல்வது-
    பேருந்தில்,ரயிலில் உட்காருபவர்களுக்கு ஒரு டிக்கெட்
    நிற்பவர்களுக்கு பாதி டிக்கெட்
    தொங்குபவர்களுக்கு கால் டிக்கெட் என கட்டணத்தை நிர்ணயம் செய்வது.
    எப்படி?!?!

    பதிலளிநீக்கு
  15. பாப் அப் வின்டோ தான் வருது. இதிலும் பின் தொடரும் ஆப்ஷன் வரலை. :(((((

    பதிலளிநீக்கு
  16. குரோம்பேட்டைக் குறும்பன்29 பிப்ரவரி, 2012 அன்று 10:53 PM

    //பேருந்தில்,ரயிலில் உட்காருபவர்களுக்கு ஒரு டிக்கெட்
    நிற்பவர்களுக்கு பாதி டிக்கெட்
    தொங்குபவர்களுக்கு கால் டிக்கெட் என ...//
    படிக்கட்டு அருகே தொங்குபவர்களுக்கு எந்த டிக்கெட்டும் தேவை இல்லை. கொஞ்சம் கால் / கை தவறினால் - அவர்களே டிக்கெட் வாங்கிக் கொண்டுவிடுவார்கள்!

    பதிலளிநீக்கு
  17. நிஜம்னு நம்பக் கூடிய அளவிலா இருக்கு கீதா மாமி..? :))//

    hehehe :P icon irukke parkkalai? :P:P


    //hehehehe oruu nimisham nijamonu ninaichen. :P//

    ஹும், என்னவோ போங்க கமென்ட்ஸ் எதுவுமே தொடர முடியலை! தேடிப் பிடிச்சுண்டு வரேன். இதிலேயே நேரம் போயிடுது. இதுக்கு என்ன வழினும் புரியலை! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!