செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தி சாஸ்திரி காமராஜ் கக்கன்....


இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் முழு அதிகாரத்தோடு வீற்றிருந்த லால்பகதூர் சாஸ்திரிஜி அமரர் ஆகும்போது அவருக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. ஓர் அங்குல நிலம் இல்லை. அவரது குடும்பத்துக்கு அவர் விட்டுச் சென்றது ஒரு கார் வாங்கியதற்கானக் கடனைத்தான்.



1965 ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிரதம மந்திரியாக தேசியக் கொடி ஏற்றினார் சாஸ்திரிஜி. அடுத்த ஆண்டு ஆட்சி மாறி 1966-ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவுக்கு அவரது குடும்பத்தைத் தேடி ஓர் அழைப்பிதழ் கூடப் போகவில்லை. [விகடன் பொக்கிஷம் பகுதியில் லால்பகதூர் நினைவுகள் புத்தகம் பற்றிய பகிர்வில்]

அவ்வளவுதான் நாம் உண்மையான, தன்னலமில்லாத  தலைவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை!



இதைப் படிக்கும்போது கக்கன்ஜி நினைவும், காமராஜர் நினைவும் தப்பாமல் வந்தது. காமராஜரின் சொத்துக் கணக்குகள் பற்றி எதிர்க் கட்சிகள் கண்டபடி பேசிக் கொண்டிருக்க, உறக்கத்திலேயே உயிர் பிரிந்த நிலையில் காமராஜரின் சொத்து என்பது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர, வங்கிக் கணக்கோ சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இருக்கவில்லை. இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்த தலைவர் அவர். 



காமராஜர் அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சரவையிலும் சுமார் ஒன்பதாண்டு காலம் அமைச்சரவைப் பதவி வகித்தவர் கக்கன் அவர்கள். ஓரிரு நாள் பதவி கிடைத்தாலே சொத்து சேர்க்கும் இந்நாளில் அமைச்சரை இருந்தபோதும் அரசுப் பேருந்தில் அலுவலகத்துக்குச் சென்றவர்.  மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெற்றவர். 



காந்தி கற்றுக் கொடுத்த அஹிம்சைப் போராட்டத்தை சுத்தமாக மறந்து போனோம். அவர் கற்றுக் கொடுத்த உண்ணாவிரதத்தை இதற்குமேல் கேவலப் படுத்த முடியாது என்ற நிலையில் வைத்திருக்கிறோம். தலைவர்களை மறந்தோம். அவர் கற்றுக் கொடுத்த கொள்கைகளை மறந்தோம். அதை வைத்து வியாபாரம் செய்யும் கலைகளைக் கற்றோம்.

இனி இது மாதிரித் தலைவர்களை இந்தியா காணுமா? நாமே நினைத்தாலும், நாமே தலைவர்களாக வந்தாலும்  அபபடி இருக்க முடியாது என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை!
                   

15 கருத்துகள்:

  1. ...ம்...ஸ்..ஸ்... (பெருமூச்சு தான்...)

    எப்படி வளர்ந்துள்ளோம் என்பதை முடிவில் சொல்லி விட்டீர்கள்... (உண்மை)

    பதிலளிநீக்கு
  2. நூலில் கட்டிக் கோர்த்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. Puthiya thalaimuraikku ivarkal ellar peyarum theriyuma enpathe oru periya kelvikkuri.:-(

    பதிலளிநீக்கு
  4. ஏன் பாஸ் ஃபீல் பண்றீங்க... அதான் அண்ணா ஹசாரே, தம்பி ஹசாரேலாம் இருக்காங்களே....:)

    பதிலளிநீக்கு
  5. பெருமூச்சுதான் வருகிறது தனபாலன். நன்றி கருத்துக்கு.

    நன்றி ஜீவி சார்... படித்ததும் பகிரத் தோன்றியது. நாளும் பொருத்தமாக இருந்தது.

    நன்றி middleclassmadhavi. நிறைய பேருக்குத் தெரியாதுதான்.

    நன்றி அப்பாதுரை. எளிமைதான் பெரிய சாதனை. இந்தக் காலத்தில் பார்க்க முடியாதது. உடல்நிலை சரியில்லை என்ற நிலையிலும் தாஷ்கண்ட் கிளம்பியவருடன் தானும் வருகிறேன் என்று சொன்ன மனைவியிடம் 'நான் என்ன உல்லாசப் பயணமா போகிறேன்' என்று கேட்டு தான் மட்டும் சென்று வந்த எளிமை. கடன்தான் இருந்தது, சொத்து எதுவும் இல்லை என்பது சாதனை இல்லையா?!

    ஹா..ஹா மயிலன்... ! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஒப்பற்ற தலைவர்கள். இறுதியில் சொல்லியிருப்பது வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

    பதிலளிநீக்கு
  7. ஒப்பற்ற தலைவர்கள். இறுதியில் சொல்லியிருப்பது வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

    பதிலளிநீக்கு
  8. இத்தகைய தலைவர்கள் ஒருவரும் இன்று இல்லை. இனி வருவதும் சந்தேகமே

    பதிலளிநீக்கு
  9. //நாமே தலைவர்களாக வந்தாலும் அபபடி இருக்க முடியாது என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை!//

    ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. உறுதி இருந்தாலும், சிலபல கட்டாயங்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என்று புரிகிறது (மன்மோகன், வாஜ்பாய் போல)

    இருப்பினும், (நான் ஆளும்) சர்வாதிகார ஆட்சி வந்தால் முழுக்க முழுக்க சாத்தியமே. வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள். நோ ஸ்மைலி!!

    பதிலளிநீக்கு
  10. //சென்று வந்த எளிமை. //

    சென்ற எளிமை.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. //இனி இது மாதிரித் தலைவர்களை இந்தியா காணுமா? //

    எனக்கென்னவோ ஐம்பது ஆண்டுகளில்இப்போதிருப்பவர்களெல்லாம் தெய்வமாகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

    அப்போது இதே கேள்வியை நம் சந்ததியினர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  13. எளிமையின் மறு உருவங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
    வீட்டுக்கு வரவங்களுக்குக் கலர் சோடா வாங்கித்தர காசு போதவில்லை. 120க்குப் பதிலாக முப்பது கூட்டி அனுப்பமுடியுமா என்ற தாய்க்கு மறுப்பு சொன்னவர் ஐயா காமராஜ்.
    எங்கள் காலங்களில் இவர்கள் இருந்ததால் எங்களுக்கும் கொஞ்சம் தேசப்பற்று ஒட்டியது. இப்போதோ...ஒண்ணும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!