=================================
='ஆல்ஃபா தியானம்' - நாகூர் ரூமி.
=======================================
அமுதசுரபியைத்தான் நீ தந்து சென்றாய்
இப்போது....
எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்
அணைக்கட்டுகளில் திறக்கப்படும் தண்ணீர்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டை நோக்கியே பாய்கிறது
சேரிகளில் மட்டுமே யாத்திரை செய்வாய் என்பதைத்
தெரிந்துகொண்டதால் உன்னை நேசித்தவர்கள்
தேசத்தையே சேரியாக மாற்றி விட்டார்கள்!
-மு.மேத்தா.
========================================
.....சிவாஜி கணேசனைப் போன்ற நடிப்பும், எம் ஜி ராமச்சந்திரனைப் போன்ற சண்டைப் பயிற்சியும், இந்த இருவரிடமும் இல்லாத பாட்டுத் திறமையும் கொண்ட ஒரே கலைஞர் பி யு. சின்னப்பாதான். ஆனால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தத்திற்கு உரியதுதான்.
பாகவதரிடம் பாட்டுத் திறமை மட்டுமே இருந்தது. தோற்றப் பொலிவு அவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. பொது ஜனங்களுக்கு ஏற்ற புகழ்மிக்க சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்டார். அவர் பெயரில் சில நூல்கள். அவருக்கான சில அங்கீகாரங்கள்.
ஆனால் சின்னப்பாவோ பாட்டுத் திறமையுடன் நடிப்பும், சண்டைப் பயிற்சியும், மானமிக்க மறவாழ்வும் கொண்டிருந்தார். எனினும் இவரைப் பற்றி ஒரு நூல் கூட வெளிவரவில்லை. இதுவே இவரைப் பற்றிய முதல் நூல்........
....உத்தமபுத்திரனில் இரட்டை வேடம்.
மங்கயர்க்கரசியில் மூன்று வேடம்.
ஜகதலப்ரதாபனில் ஐந்து வேடம்.
காத்தவராயனில் பத்து வேடம்......
-'தவ நடிக பூபதி சகலகலா வல்லவன் ஜகதலப்ரதாபன் பி யு சின்னப்பா- காவ்யா சண்முகசுந்தரம்.'
========================================
.......இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்த அப்போதைய இந்தியாவின் ஜனாதிபதி முதல்வர் எம் ஜி ஆரை மதிய உணவுக்கு ராஜ் பவனுக்கு அழைத்தார். எம் ஜி ஆர் தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணியிலிருந்தே இருந்தார். நானும் உடன் இருந்தேன். மிகத் தீவிரமாக தலைமைச் செயலக அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் மாநிலம் பற்றிய விவாதங்களில் ஆழ்ந்திருந்தார். மதியம் 12.15 மணிமுதலே ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எம் ஜி ஆரின் தனிச் செயலருக்கு பதட்டமான தொலைபேசிகள் வந்தவண்ணம் இருந்தன. தொந்தரவு தாங்காத தனிச் செயலர் எம் ஜி ஆரிடம் சென்று விவரத்தை எடுத்துரைத்தார். கண்களைக் கூட இமைக்காமல் எம் ஜி ஆர் அவரிடம், "தயவுசெய்து ஜனாதிபதியிடம் நான் மிகவும் முக்கிய வேலைகளில் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்து, மதிய உணவிற்கு வர முப்பது நாற்பது நிமிடங்கள் தாமதமாகும் என்பதைத் தெரிவித்து விடுங்கள் எனது வருத்தங்களையும் தெரிவித்து விடுங்கள்" என்றார்!
அதுதான் எம் ஜி ஆர்!
-MGR : Tha Man and The Myth - K. Mohandas.
===============================================
.... அந்த நாட்களில் நான் மற்ற பையன்களால் லேசாக நிராகரிக்கப்பட்டதும் என் எழுத்துக்கு ஒருவாறான ஆதாரம் என்று சொல்லலாம். எந்த ஆட்டத்திலும் எனக்கு என் அண்ணன் போலத் திறமை இல்லை. அவன் கிரிக்கெட் நன்கு ஆடுவான். பம்பரம் நன்றாக ஆடுவான். தீபாவளியில் தெள்ளு குண்டு ஆட்டத்தில் விற்பன்னன். எனக்குக் கிரிக்கெட்டின் 11வதாக அனுப்புவார்கள். ஃபீல்டில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் லாங் ஸ்டாப் என்றொரு இடம். பம்பரத்தில் தலையாரி விளையாட்டில் என் பம்பரத்தை சொறிநாய் மாதிரிக் குத்தி விடுவார்கள் 'குச்சி ப்ளே' என்று ஒரு ஆட்டம். யாரோ ஒரு Masochist கண்டுபிடித்தது. தெற்குவாசல் வரை என் குச்சியைத் தள்ளிக் கொண்டு பொய், அங்கிருந்து நொண்டச் சொல்வார்கள் இளவயது விளையாட்டுகளில் மெளனமாக நிறைய அழுதிருக்கிறேன். இழந்து போன பந்துகளைத் தேடி வரவும், இழந்து போன பட்டங்களைத் துரத்தவும் பயன்படுத்தப்பட்டேன். இந்த நிராகரிப்பும் ஓர் எழுத்தாளனுக்குத் தேவை எனப் படுகிறது.....
...வல்லபபாய் பட்டேல் பற்றி அறுசீர் விருத்தம் எழுதி, அது தென்றலில் பிரசுரமாக, கீழச் சித்திரை வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதை எழுதியவர் மனதில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. வாசகங்கள் ஞாபகமில்லை.
-'அக்னி' அமைப்பு அளித்த விருதை ஏற்றுக் கொண்டபோது சுஜாதா உரை.
==================================================
படங்கள் உதவி : நன்றி இணையம்.
படங்கள் உதவி : நன்றி இணையம்.
'படித்ததிலிருந்து' பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு// ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள்.//
மூச்சோட்டத்தை காப்பி அடிக்கணுமா? அதெப்படி?
நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்குபடித்த விஷயங்களும் பகிர்ந்த விதமும் அருமை
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
அதானே, காப்பி எல்லாம் எப்படிச் செய்ய முடியும்? காப்பி குடிக்கத் தான் தெரியும்.
பதிலளிநீக்குகாப்பி குடித்துக்கொண்டே........
படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
அனைத்தும் பிடித்திருந்தது... நன்றி...
பதிலளிநீக்குஅத்தனை பகிர்வும் அருமை. முதலாவது ஆச்சரியம்.
பதிலளிநீக்குபடித்த விஷயங்களை மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.நன்றி.
பதிலளிநீக்குமீனாக்ஷி,கீதா
பதிலளிநீக்குகாப்பி அடிக்கணும்னா நான் சொல்லித்தரேன்:)
அவரையே மாதிரி மூச்சு விடுவது. அவர் உகத்தையே பர்த்துக் கொண்டிருந்தால் அது தெரியும். அவரது ஸ்வாசம் ஏற்றம் இறக்கம் எல்லாம் தெரியும்:)
அவர் அடிக்க வருகிற நிலைக்குச் செல்லாமல் இதைச் செய்யணும். சீரியஸ்லி இதைச் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். விக்டிம் எங்க சிங்கம்.:)
அனைத்தும் ரசித்தேன். குறிப்பாய் தல போல நானும் எல்லா விளையாட்டுகளிலும் நிராகரிக்க பட்டவனே. அதான் இப்ப எதோ கிறுக்கிட்டு இருக்கேன்
பதிலளிநீக்குஅட தியானத்தில் இது ஒரு வகையாப்பா? ஆச்சர்யமா இருக்கே... நடத்தி பார்த்தால் என்னன்னு கூட தோண்றது.... மூச்சு ஓட்டத்தை காப்பி அடிக்கிற அளவுக்கு அவரை ஆழ்ந்து கவனிக்கவேண்டுமே... அருமையான விஷயம் இது.... பத்துன்னு நினைப்பதை கரெக்டா நாம சொல்லிரும்படியும் அவர் நாம் நினைப்பதை அப்டியே சொல்லிரும்படியும் இருந்தால் இதே ரீதியில் சென்றால் மனதில் இருப்பதெல்லாம் சொல்லிடுவோமே? ம்ம்ம்ம்ம்???
பதிலளிநீக்குமு.மேத்தாவின் கவிதை வரிகள் தென்றல்.....நிதர்சனமும் உரக்கச்சொல்கிறது.... அருமையான சிந்தனை வரிகள்.... பள்ளங்களில் சேரவேண்டிய நீர் மேட்டை நோக்கியே பாய்கிறது.... ஏழைகளின் இருப்பிடம் சேரி தான் நீ நடந்த இடம் என்பதை அறிந்து.... தேசத்தையே சேரியாக மாற்றிவிட்டார்கள்... அழுத்தமான வரிகள் இவை....சொல்லவந்த விஷயங்கள் அதிகம் இதில்...
பி யு சின்னப்பா அவர்களின் திறமைகளை அறிய முடிந்தது ஒரு பாக்கியமே... ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமை ஹைலைட் செய்து காண்பிக்கப்படும். ஆனால் இவரோ சகலகலாவல்லவராக இருந்து திறமைகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான மனிதராக இருந்தும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அறிந்தபோது வேதனையானது. ஆனாலும் இவர் செய்த விஷயங்கள் பிரமிப்புக்குள்ளாக்கியது. உத்தமப்புத்திரனில் இரட்டை வேடம்.... அடேங்கப்பா இப்ப கமலஹாசன் தொழில்நுட்ப துணையுடன் செய்த பத்துவேடங்கள் தசாவாதாரம் அப்பவே பி யு சின்னப்பா காத்தவராயனில் செய்ததா? வணங்க தோன்றுகிறது இந்த மா மனிதரை...
நாடு தான் முக்கியம்.. நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம்... அவர்களுக்காக செலவிடப்படும் நேரம் தான் அதிமுக்கியமானது என்பதைச்சொல்லும் மிக அருமையான விஷயம் எம் ஜி ஆரைப்பற்றிச்சொன்னது. இருந்தாலும் இறந்தாலும் அவரைப்பற்றி உலகம் போற்றும் ஒரே மனிதர் திரு எம் ஜி ஆர் ஆக தான் இருப்பார் என்று நம்புகிறேன்....
தோல்வியும் அவமானமும், ஒதுக்கப்படும் வேதனையும் தான் ஒரு மனிதரை வெறியாக உழைத்து தனக்குள்ள தனித்தன்மையை சிறப்புடன் பாடுப்பட்டு உழைத்து வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொள்கிறது என்பதை அழுத்தமாகச்சொல்லும் வரிகள் சுஜாதாவின் வரிகள்...
அறியாத அரிய விஷயங்களின் தொகுப்பு பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம் எங்கள் ப்ளாக் குழுவினர் அனைவருக்கும்...
இத்தனை திறமையாய் நடித்த. பாடிய அவரை பி.யு.பெரியப்பான்னே சொல்லலாம் போலருக்கே... சுஜாதா பாட்டம்ல வந்தாலும் எப்பவும் போல டாப் அவர்தான்.
பதிலளிநீக்குபடிச்சதை அடிக்கடி பகிருங்க நண்பர்களே... நான் மின்னல் வரிகளைப் பகிர்ந்து நாளாச்சு என் தளத்துலன்னு நினைவு வந்துடுச்சு இதைப் படிக்கறப்ப. நன்றி.
நன்றி வல்லி மேடம். எனக்கு இதெல்லாம் ட்ரை பண்ணி பாக்க ரொம்ப பிடிக்கும். நானும் ட்ரை பண்றேன்.
பதிலளிநீக்குஆல்பா தியானம் பிறர் மூச்சுக் காற்றை நம்மால் கணிக்க முடியுமா என்ன.. முடியும் என்றால் முயன்று பார்த்து அதையும் செயல் முறைப் பயிற்சியாக பகிருங்களேன்...
பதிலளிநீக்குசுஜாதா பிரம்மித்தேன் சார்
அனைத்துமே அருமை. அதிலும் ஆல்ஃபா தியானம் வியக்க வைக்குது.
பதிலளிநீக்குநான் கொட்ட கொட்ட என் பையனையே பாத்துண்டு இருந்தேன். அப்பறம் அவனை பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்ல சொன்னேன். நான் ஒரு நம்பர் நெனச்சேன்.
பதிலளிநீக்குஆனா அவன் வேற சொல்லிட்டான். :) சரி இன்னொரு தடவ ட்ரை பண்ணுவோம்னு திரும்ப பண்ணினேன். அது இன்னும் மோசம். அட போங்கப்பான்னு வேலையே பாக்க போயிட்டேன். :)))
நாகூர் ரூமி குடிப்பதும் பிடிப்பதும் எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா?
பதிலளிநீக்கு“எண்ணவோட்டம்” கேட்டிருக்கோம். அதென்ன, "மூச்சோட்டம்” - பேரே புதுசா இருக்கே.
பதிலளிநீக்கு----
அப்ப, (என்னைப் போல) எழுத்தாளர்களுக்கெல்லாமே இதுபோல ஒரு புறக்கணிப்புதான் காரணமா இருக்குமோ? :-))))
இனிமே விளையாட்டில் யாரையும் ஒதுக்காதீங்கப்பா, எழுதியே உங்களைக் கொன்னுடுவாங்க!! :-)))
படித்ததிலிருந்து - சுவாரசியமாக இருந்தது.
பதிலளிநீக்கு