வலைச்சரத்தில் எங்கள் முதல் பதிவு "இங்கே சொடுக்குக!"
காதல் உளறல்
என் தவிப்பு
அவளுக்கு
சிரிப்பாக இருக்கலாம்
ஆனால்
அவளுக்குத் தெரியாது,
நான் தவிப்பதே
அவளின் சிரிப்புக்காகத்தான் என்று...!
********
பிரிவு என்பது
உறவின் முடிவு அல்ல...
நினைவின் ஆரம்பம்.
=========================
என்ன அர்த்தம்?
உங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் எல்லோருடனும் பகிருங்கள்.
உங்கள் உணர்வுகளை உங்களை விரும்பும் ஒருவருடன் பகிருங்கள்!!
============================== =
பதில் சொல்ல முடியா காரணம்!
உங்கள் நண்பரிடமிருந்து உங்கள் கேள்விக்கு நேரிடையான பதில் வரவில்லை என்றால் ஒன்று அது உங்களுக்கு அதிக துன்பத்தைத் தரலாம் அல்லது அவர்கள் ஒத்துக் கொள்ள முடியாததாய் இருக்கலாம்.
==============================
கெட்ட நேரமாத்தான் இருக்கணும்!
சூரியனைப் பார்த்தும் நேரம் சொல்லலாம்...கரண்ட் போறதை வைத்தும் நேரம் சொல்லலாம்..
------------------------------ ---------
அப்படிப் போடு...
எல்லாரையும் இழந்து தனியாக நிற்கும்போதும் 'அப்பாடி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற எண்ணமே பாசிட்டிவ் திங்கிங்!
===========================
ஜோக்'கடி' 1
டீச்சர் : "ஏன் லேட்?"
மாணவன் : "அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.."
டீச்சர் : "அவர்கள் சண்டையிட்டால் உனக்கு ஏன் லேட்?"
மாணவன் : "என்னுடைய ஒரு ஷூ அப்பா கையிலும் இன்னொரு ஷூ அம்மாவின் கையிலும் இருந்தது"
============================== ===
ஜோக்'கடி' 2
பெண் : "ஹலோ....இது 'கஸ்டமர் கேர்'தானுங்களே..."
கஸ்டமர் கேர் : "ஆமாம் மேடம்...சொல்லுங்கள் என்ன பிரச்னை?"
பெண் : "என் அஞ்சு வயசுப் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான்...அதுல எழுபத்தைந்து ரூபாய் மிச்சம் இருந்தது...."
கஸ்.கேர் : "சொல்லுங்க மேடம்..."
பெண் : இப்போ அவன் பேசும்போது காசு போகுமா.."
============================== ===================
ஆமாம்...தெரிஞ்சுக்குங்க..!
பிரார்த்தனை என்பது கடவுளின் சித்தத்தை மாற்ற அல்ல... நம் மனதைத் தயார் செய்ய...
==========================================
அற்புத கணங்கள்...
தனிமையின் கணங்கள்தான் உலகின் மிகச் சிறந்த கணங்கள். ஏனெனில் அப்போதுதான் அப்போதுதான் நம்முடைய ஆழமான ரகசியங்களை உலகிலேயே நாம் நம்பும் ஒருவரிடம் நாம் பகிர்ந்து கொள்கிறோம். நம் உள்மனதுதான் அது!
============================== ==
முதியோர் இல்லத்தில் தாயின் கண்ணீர்
நீ இருக்க
ஒரு
கருவறை இருந்தது
என்
வயிற்றில்...
ஆனால்
நான் இருக்க
ஒரு
இருட்டறை கூடவா
இல்லை உன் வீட்டில்....
========================
ஆமாம் இல்லை?!
குழந்தைகளின் மனம் ஈர சிமென்ட் போல.... எது விழுந்தாலும் பதிந்து விடுகிறது!
============================== ========
வாழ்க்கை ஒரு வட்டம்டா...!
கரப்பு எலிக்கு பயப்படுகிறது
எலி பூனைக்கு
பூனை நாய்க்கு
நாய் மனிதனுக்கு
மனிதன் தன் மனைவிக்கு
மனைவி கரப்புக்கு...
============================== ======
ஜோக்'கடி' 3
கணவன் :"ஹிப்னாடிசம் என்றால் என்ன...?"
மனைவி ;"அடுத்தவர் மனத்தைக் கட்டுப் படுத்தி நம் இஷடத்துக்கு ஆட்டுவிப்பது..."
கணவன் :"என்னை முட்டாளாக்காதே...அதற்குப் பெயர் திருமணம்..."
=============================
சிந்தனை முத்து...
கௌரவமான, உண்மையான இதயங்களை வெளியில் தேடுவதை விட ஏன் நாமே அபபடி இருந்து விடக் கூடாது?
============================== =
இது பதில்...!
கடல் ஆற்றைக் கேட்டது. "இன்னும் எத்தனை நாள் என் உப்பு இதயத்துக்குள் ஊடுருவிக் கொண்டே இருக்கப் போகிறாய்..."
ஆறு சொன்னது " நீ இனிப்பாகும் (இனிமையாகும்) வரை"
============================== ==
எல்லாமே அருமை.
பதிலளிநீக்குஅடித்த ஜோக்ஸ் கடிக்கவில்லை! அதிலும் இரண்டாவது சூப்பர்:)!
அனைத்தும் கலக்கல்...
பதிலளிநீக்குவலைச்சரம் செல்கிறேன்...
நன்றி...
பாசிடிவ் திங்கிங், அற்புத கணங்கள் இரண்டுமே அற்புதம்.
பதிலளிநீக்குஜோக் 2 சிரிச்சு மாளல.
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். வாழ்க்கை ஒரு வட்டமா ஹாஹாஹா ஹா.
பதிலளிநீக்குமுதியோர் அச்சோ அம்மா:(
பிரிவு நினைவு சூப்பர்,.
எல்லாமே நல்லா இருக்கு
பதிலளிநீக்கு//எல்லாரையும் இழந்து தனியாக நிற்கும்போதும் 'அப்பாடி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற எண்ணமே பாசிட்டிவ் திங்கிங்!//
பதிலளிநீக்குஆஹா.. என்னா ஒரு தத்துவம் :-))
ரெண்டாவது ஜோக்கு.. சிரிச்சு முடியலை :-))
எல்லாமே அருமையாக இருந்தது.முதுமையின் வரிகள் சிறப்பு.
பதிலளிநீக்குஉள் பெட்டி சிரிப்பு, சிந்தனை.. கலவை..சுவையாக இருக்கு.
பதிலளிநீக்குஅடடா! அருமை. :)
பதிலளிநீக்குபடிச்சதும் மனசு காற்றாகிப் போச்சு.
முதல் நாள் 'நமக்கு நாமே' அங்கே முடிந்ததா?..
பதிலளிநீக்குபோகட்டும். இன்னும் 6 நாட்கள் பாக்கி.
'வலைச்சரத்'தில் புதுசாக ஏதாவது செய்யுங்கள்.. முதன் முதலாக இவர்கள் என்கிற பெயராவது கிடைக்கும்!
Lot of content this time. Good
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் எல்லோருடனும் பகிருங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் உணர்வுகளை உங்களை விரும்பும் ஒருவருடன் பகிருங்கள்!!//
அருமையான கருத்து; உண்மையானதும் கூட. வலைச்சரம் ஆசிரியரா இந்த வாரம்? ஐந்து பேரும் சேர்ந்து எழுதுவீங்களா? இல்லாட்டி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நாளுக்கா? அப்போக் கடைசி இரண்டு நாள் யார் எழுதுவாங்க? சீனியாரிடி உண்டா இதிலே? இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு. மெதுவா வந்து கேட்கிறேனே! :)))
ஹூம், இந்தப் பதிவே இப்போத் தான் அப்லோட் ஆயிருக்கு. :( நாளைக்கு நான் பார்க்கிறதுக்குள்ளே விடிஞ்சுடும். :(((
பதிலளிநீக்கு//ஐந்து பேரும் சேர்ந்து எழுதுவீங்களா? இல்லாட்டி... //
பதிலளிநீக்கு'எங்கள்'லேயே அஞ்சு பேரையும் பாக்க முடியறதில்லே...
சிறப்பான பகிர்வு. அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅனைத்துமே அருமை.
பதிலளிநீக்கு”உளறலை”த் தவிர எல்லாம் ஓக்கே. :-)))))
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கு நன்றி.
_/\_