பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
இங்கு ஒரு மாறுதல்.
எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...
====================================================================
1) குற்றங்கள் அதிகம் செய்வது படித்த மக்களா, படிக்காத மக்களா?
2) இலக்கியங்கள் எனப்படுவது சமூகத்தையோ, கலாச்சாரத்தையோ மாற்றும் என்று நம்புகிறீர்களா?
3) உங்கள் வாழ்வில் உங்களை மிக அதிகம் பாதித்த மரணம் எது?
2) இலக்கியங்கள் எனப்படுவது சமூகத்தையோ, கலாச்சாரத்தையோ மாற்றும் என்று நம்புகிறீர்களா?
3) உங்கள் வாழ்வில் உங்களை மிக அதிகம் பாதித்த மரணம் எது?
1. இதிலே படிப்புக்கும், படிப்பில்லாமைக்கும் சம்பந்தமே இல்லை. படித்தவர்கள் கூட அராஜகமாக நியாயமே இல்லாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கோம்? ஆகக் கூடி அவரவர் வளர்ந்த, வளரும், இருந்த, இருக்கும் சூழ்நிலையும், வாழ்க்கைத் தரமுமே முக்கியக் காரணம், உயர்ந்த வாழ்க்கைத்தரம் குற்றங்களை மறைக்கத் தூண்டினால், குறைந்த வாழ்க்கைத் தரம் குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. உதாரணம் சமீபத்திய டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவியின் விவகாரத்தில் பதினேழே வயதான சிறுவனின் வன்முறை! இவனை எல்லாம் வெளியே விடலாமா? :((((
பதிலளிநீக்கு2. இலக்கியம் என எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? ரொம்ப நாட்களாக/வருடங்களாக அறிய ஆவல். சமீபத்தில் ஒருத்தரின் சாதாரணமான பயணக்குறிப்பே இலக்கியத்தரமாக இருப்பதாக எல்லாரும் பாராட்டியதைக் கண்டேன். ஆகவே என்னால் இதில் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. :(
3. நிறைய இருக்கு! ஆனால் அதிர்ச்சி அடைய வைத்தது என்னமோ ராஜீவ் காந்தியின் மரணம் தான்.
இரண்டாவது கேள்விக்கான ஜீவி சாரின் பதிலை எதிர்பார்க்கிறேன். இலக்கியம் என்பது கலாசாரத்தை/சமூகத்தை மாற்றாவிட்டாலும் அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபாதித்த மரணம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் இறுதி ஊர்வலத்துல் பங்குபெற் ரயில் வண்டியின் கூரை மீதெல்லாம் ஏறி சென்று பல உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்ததது ..
பதிலளிநீக்குமகாகவி பாரதி தேசபக்தர் இறப்போ வெறும் பதினோரு மட்டுமே கலந்துகொண்டு அவர் முகத்தில் மொய்த்த ஈக்களைவிட குறைவாக இருந்தது ..அதிர்ச்சியளித்தது ..
அன்ணா அளவுக்கு பாரதியார் நாட்டுக்கு உழைக்கத் தவறிவிட்டாரா ?
சமூகத்திலிருந்தே இலக்கியங்கள் தோன்றுவதால்
பதிலளிநீக்குசமூகம் தான் இலக்கியங்களைப் பாதிப்பதாகக் கருதுகிறேன்...
அவரவர் மனநிலையைப்பொறுத்தும் , தேவைகளைப் பொறுத்தும் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன..
படித்தவன் படிக்காதவன் என்று இல்லை..
படித்தவன் திட்டமிட்டு குற்றங்களை நிகழ்த்தி தப்பிக்க முயற்சிப்பான் ..
படிக்காத மேதைகளும் குற்றத்தில் நிபுணத்துவம் பெற்று தொழிலாகக் கொண்டு நிபுணத்துவம் பெறுவதுண்டு ..
சுவாரஸ்யமான கேள்விகள் சுவாரஸ்யமான பதில்கள். 1. குற்றங்கள் அதிகம் செய்வது படித்த மக்களே! அதற்கு உதாரணம் இன்றைய தினமலர் போட்டோகேலரி. 2.இக்கால இலக்கியங்கள் மாற்றியதோ இல்லையோ அக்கால இலக்கியங்கள் மாற்றியுள்ளன.புத்தரின் கருத்துக்களை படித்து ஹர்சர் பௌத்த மதத்தினை ஏற்றுக்கொண்டார். இந்திய சுதந்திர போருக்கு அப்போது இயற்றப்பட்ட பாரதியின் பாடல்கள் தாகூரின் கீதங்கள் போன்றவை பெரும் பங்கு அளித்தன. 3.என்னுடைய டியுசன் வகுப்பில் படித்த 10வயது சிறுமி மீனாவின் மரணம் பாதித்தது. அதிர்ச்சி அளிக்க வைத்தது இங்கிலாந்து இளவரசி டயானா மரணமும், ராஜிவ் காந்தியின் மரணமும்.
பதிலளிநீக்கு1. இரண்டு பேரும் தான். ஆனால் படித்தவன் பிடிபடுவதற்கு நேரம் ஆகும்.
பதிலளிநீக்கு2. நம்பவில்லை. மாற்றுவதாக இருந்தால் எல்லோருமே ராமர்களாக இருப்பர்.
3.1975 ல் நடந்தது. எனது பால்ய நண்பர் எம்..ஐ.டி யில் கெமிகல் எஞ்சினீரிங் ப்ரொஃபசராக இருந்தவர். தனது 35 வது வயதில்
திடீரென் இறந்த்து .
சுப்பு தாத்தா.
http://subbuthatha.blogspot.in
தனது தாய் அல்லது தந்தையரின் மறைவினால் சிறிதேனும் பாதிப்பு அடையாத, எந்த ஒரு சமூகத்தையும் அல்லது கலாச்சாரத்தையும் மாற்ற முடியாத குற்றவாளி தான் இன்றைய மனிதன்...
பதிலளிநீக்கு1.படிக்காதவர்களைவிட படித்தவர்கள் தான் குற்றம் அதிகம் செய்கிறார்கள்.
பதிலளிநீக்கு2. அந்த அந்த காலங்களில் சமூகத்தின் வெளிபாடுதான் இலக்கியம்.
3.என் தந்தையின் மரணம்,( வயது 51) அதை தொடர்ந்து சகோதரியின் மரணம்(வயது 25)
அண்ணனின் மரணம்( வயது 38) மறக்க முடியாத சோககடலில் மூழக வைத்த மரணங்கள். எங்கள் குடும்பத்தையே பாதித்த மரணங்கள்.
1. படித்தவர்கள் தான் - தங்கள் படிப்பறிவினால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்ற எண்ணம்.
பதிலளிநீக்கு2. இலக்கியம் என்பது ஏட்டுச் சுரைக்காய். எத்தனை பேர் படித்து அதன்படி நடக்கிறார்கள்?
திரு எம்.எஸ். உதயமூர்த்தியின் மரணம்!
1) சந்தர்ப்ப சூழ்நிலைகள் குற்றம் செய்யத் தூண்டுகின்றன. இதில் படித்தவன் என்ன... படிக்காதவன் என்ன... இருவரும்தான்!
பதிலளிநீக்கு2) இன்ன புத்தகத்தைப் படித்து இன்ன தேதியில் நான் திருந்தினேன் என்று எவரும் கூறியதாய் சரித்திரம்/பூகோளம் எதுவும் இல்லை. இலக்கியங்கள் அந்தந்த காலகட்டத்தின் கண்ணாடிகள். அவ்வளவே!
3) என் அப்பாவின் மரணம். என் 7 வயதிலேயே அவர் மரணிக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கைப் பாதையும் இன்று வேறுவிதமாய் அமைந்திருக்கும்!
1. இருவரும்தான்.
பதிலளிநீக்கு2. நிச்சயம் இல்லை. யாரையும் யாராலேயும், எதனாலயும், எப்பவும் மாத்தவே முடியாது. மாறணும்னு அவங்க அவங்க மனசு வெச்சு மாறினாதான் உண்டு.
3. நிறைய இருக்கு. கும்பகோணம் பள்ளி குழந்தைகள் மரணம். சமைக்கும்போது தெரியாம சுட்டுண்டா உடனே அந்த குழந்தைகளை நெனச்சு அழுதுடுவேன். வலில வேதனை பட்டு எங்க அப்பா இறந்தது. இந்த இரண்டை மட்டும் இப்ப எழுதறேன்.