சனி, 19 ஜனவரி, 2013

பாசிட்டிவ் செய்திகள் 13/1/2013 முதல் 19/1/2013 வரை.

எங்கள் B+ செய்திகள்.        

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....          
=======================================================================

1) மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP .NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12-ந் தேதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத் தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.                       
                                    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.எஸ்.பி.டாட் நெட் தேர்வு: 9 வயது தமிழக சிறுவன் சாதனை

மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP .NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12-ந் தேதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத் தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். 

சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார். 

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.
சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார். 

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.   (முகநூலிலிருந்து)    
2) தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.                                     
                               "குடி'க்கு சாவு மணி அடித்த "மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்

தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.

சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: 

ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.

மூக்கம்மாள், சரந்தாங்கி: 

மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.
 சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: 
               
ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.
               
மூக்கம்மாள், சரந்தாங்கி: 
     
மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.  (முகநூலிலிருந்து).     
                                 
15 கருத்துகள்:

  1. குடிப் பழக்கம் இல்லாத கிராமம்... அதிசயம் தான் - தமிழகத்தில் டாஸ்மாக் வெள்ளம் ஓடும் சமயத்தில்....

    சிறுவனின் சாதனை - பாராட்டுக்குரிய விஷயம்.

    நல்ல செய்திகள். தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு
  2. குடிப்பழக்கம் இல்லாத கிராமம் பெரிய விஷயம் தான்....

    தொடரட்டும் நல்ல செய்திகள்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையிலேயே பாசிட்டிவ் செய்திகள்தான்

    பதிலளிநீக்கு
  4. அத்தனையும் நல்ல செய்திகள்.

    பதிலளிநீக்கு
  5. இந்த ஒரு செய்தியே போதும். வாழ்க சரந்தங்கி மக்க்ள். தமிழ்நாடு,இந்தியா முழுசும் இப்படி இருந்தால் எவ்வளவு நல்லது.

    பதிலளிநீக்கு
  6. சரந்தாங்கி 'அற'ந்தாங்கி வாழ்கிறார்கள்...

    இந்த வாரம் பாசிடிவ் விஷயங்கள் குறைந்து விட்டதா சார்.. :-)

    பதிலளிநீக்கு
  7. நல்ல செய்திகள்!பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    பதிலளிநீக்கு
  8. விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

    - கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

    வேண்டுதல் நிறைவேறுமா ?

    பதிலளிநீக்கு
  9. சந்தோஷமான செய்திகள் தொடரட்டும் !

    பதிலளிநீக்கு
  10. பிரணவ், மற்றும் சரந்தங்கி மக்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. சிறுவன் பிரணவ்க்கு வாழ்த்துக்கள்.
    சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடிக்கும் அந்த ஊற் மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. சரந்தாங்கி சிறந்த முன் மாதிரி கிராமம். தலைவரும் ஒத்துழைக்கும் மக்களும் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல உந்துதல் பதிவு நற்செய்திகளை வழங்கும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!