சனி, 26 ஜனவரி, 2013

செய்திகள் ஒரு பார்வை. குடியரசு தின வாழ்த்துகள்.

              
இந்த வார பாசிட்டிவ் நியூஸ் இல்லை! இல்லை என்றில்லை, எல்லோருக்கும் தெரிந்த பிரேமா C A முதல் வகுப்புத் தேர்ச்சியும், பாண்டிசேரியையைச் சேர்ந்த ஹமீத் மரைக்காயர் தண்ணீரை எரிபொருளாக உபயோகித்து, சமையல் உபயோகத்துக்கும் வண்டியோட்டவும் உபயோகப் படுத்த முயற்சித்திருக்கிறார் என்றும் இரண்டே நியூஸ். நிறைய இல்லையா, எங்கள் கண்ணில்தான் படவில்லையா தெரியவில்லை.      

                                    

திருக்கடையூர் யானை அபிராமி நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் இறந்த செய்தி மனதுக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. 26 வயதாம். யானைகள் புத்துணர்வு முகாமுக்குச் சென்று வந்த அலைச்சல் ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. புத்துணர்வு முகாம் சென்ற இன்னும் இரண்டு யானைகள் கூட இறந்து போனதாகப் படித்த ஞாபகம். இன்னொரு யானைக்குத் திடீரென கண் தெரியாமல் போனது இன்னொரு வருத்தம். புத்துணர்வு முகாமில் ஏதாவது தவறா, புத்துணர்வு முகாமே தவறா என்று பார்க்க வேண்டிய நேரம். சமீபத்தில் அபிராமியை அருகிலேயே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

மும்பையில் சி ஏ வென்ற பிரேமாவுக்கு ஒரு கட்சி 1 லட்சமும், போட்டியோ இல்லை தானாகவோ அரசு 10 லட்சமும் கொடுத்துள்ளது பாராட்டத் தக்கது.

குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் பாகிஸ்தானிடம் இனியும் பொறுமை காட்ட முடியாது  என்ற ரீதியில் - "நட்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்"  - சொல்லியிருக்கிறார். நல்லவேளை, பாகிஸ்தானின் அத்துமீறல் ஜனவரி 26 க்கு அப்புறம் நடந்திருந்தால், இந்த எச்சரிக்கை விட ஆகஸ்ட் 15 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

         
ஸ்ரீதேவிக்கும், பாடகி எஸ். ஜானகிக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டிருந்தாலும் ஜானகியம்மா விருதைப் புறக்கணிப்பதாக தற்போது வந்த செய்திகள் சொல்கின்றன.

வர்மா கமிஷன் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசாங்கமும், அப்படியே ஏற்க வேண்டும் தமிழகத் தலைவர் ஒருவரும் சொல்லியிருப்பது செய்திகளில்..


டீசல் விலையைக் கூட எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசு.


மக்களாட்சி தினம் இன்று...


* காதலிக்க மறுக்கும் பெண் மீது அமிலம் வீசாதிருப்போம்.

 
* டாஸ்மாக் 3 நாள் லீவு என்றால் வீட்டில் வாங்கிப் பதுக்காமலிருப்போம்.
 
* குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்களை மதிக்கவும் நல்ல பழக்கங்களையும், ஊழலற்ற சமுதாயம் அமைக்கவும் சொல்லிக் கொடுப்போம்.
 
* லஞ்சம் வாங்காதிருப்போம் / கொடுக்காதிருப்போம்.
 
* தினம் ஒரு நல்ல காரியமாவது செய்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.........
   
குடியரசு தின வாழ்த்துகள்.  
                       

12 கருத்துகள்:

  1. //இந்த எச்சரிக்கை விட ஆகஸ்ட் 15 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.// உடன் வரும் இந்த குசும்பு தான் ரசிக்க வைக்கிறது சார்

    பாசிடிவ் செய்தி யானை மீது கொண்ட பாசத்தால் வெறும் செய்திகள் ஆகிப் போனது சிறிது வருத்தமே...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வு! குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. 'எங்கள்' குழாமிற்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. // ஜனவரி 26 க்கு அப்புறம் நடந்திருந்தால், இந்த எச்சரிக்கை விட ஆகஸ்ட் 15 வரை காத்திருக்க வேண்டியிருக்கும். //


    Reality... Rightly said

    பதிலளிநீக்கு
  5. புத்துணர்வு முகாமினால் யானைகள் அடையும் நன்மையை விட சிரமங்களே அதிகமெனத் தோன்றுகிறது.

    குடியரசு தினச் செய்தி நன்று.

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. குடியரசு செய்திகள் நன்றாக உள்ளன. பிரேமாவிற்கு எப்படியாயினும் பரிசுகள் கிடைத்த‌து மகிழ்வாக உள்ள‌து!

    பதிலளிநீக்கு
  7. இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அபிராமி இறந்த செய்தி வருத்தமாக இருக்கிறது.
    பிரேமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல செய்திகளையே கொடுத்து இருக்கிறீர்கள்.
    செல்வி பிரேமாவுக்கு நல் வாழ்த்துகள்.
    யானைகள் இறப்பது அனியாயம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல செய்திகளையே கொடுத்து இருக்கிறீர்கள்.
    செல்வி பிரேமாவுக்கு நல் வாழ்த்துகள்.
    யானைகள் இறப்பது அனியாயம்.

    பதிலளிநீக்கு
  11. சுவாரசியமான செய்திகளின் தொகுப்பு.யானைகள் இறந்தது வேதனை.

    பதிலளிநீக்கு
  12. ஆரம்பத்தில் புத்துணர்வு முகாம்கள் சிறப்பு எனச் சொன்னார்களே. இப்போ ஏன் யானைகளுக்குப் பாதிப்பு வருது? தரம் குறைந்துவிட்டதோ?

    மக்களாட்சி தின உறுதிமொழிகள்... குற்ற உணர்வைத் தருகின்றன. :-(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!