செவ்வாய், 8 ஜனவரி, 2013

எஸ்ரா சிறுகதை, ஓவியங்கள், படித்தவை ரசித்தவை வெட்டி அரட்டை.


கணினி உடம்பு சரியில்லாமல் 4 நாட்கள் படுத்து எழுந்தது. இன்னமும் வீக்காகவே இருக்கிறது. போஷாக்குக் கொடுக்க வேண்டும்.

வாரப் பத்திரிகைகளில் வரும் தொடர் / சிறுகதைகளுக்கு  போடும் படங்களைப் பார்ப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யம். நாம் படிக்கும் பகுதிகள் மட்டுமல்லாது, படிக்காத பகுதிகளுக்கு போடப் பட்டிருக்கும் ஓவியங்களைக் கூட ரசிப்போம் நாம்.

அந்தக் காலத்தில் தேவன், சாவி  கதைகளுக்கு கோபுலு படம், சுஜாதா கதைகளுக்கு ஜெ படம், சாண்டில்யனுக்கு லதா, அப்புறம் சிறுகதைகளுக்கு மாருதி, ராமு, வர்ணம், வினு.....

போடப் படும் ஓவியம் கதை படிப்பவர்களுக்கு அந்தக் காட்சியை கண்ணில் காட்ட வேண்டும். நிறைய ஓவியங்கள் அப்படித்தான். அப்போதெல்லாம் ஓவியர்கள் வெளியாகப் போகும் அந்த வாரப் பகுதியையோ
, குறிப்பிட்ட கதை / கட்டுரையையோ முழுதும் படித்து விட்டு, அந்த உணர்வுகளை உள்வாங்கி ஓவியம் போடுவார்கள்.

இப்போது கொஞ்சம் அவசரம் போலும். கடைசி வார விகடனில் 'நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதைகள்' வரிசையில் எஸ்ரா எழுதிய 'ஓலைக் கிளி' சிறுகதை.

கதையில் வரும் வரிகள்...   ".....படிகளில் இறங்கி முன் கேட்டை நோக்கிப் போனபோது பிங்க் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண்..."   

இங்கு இந்த வரி போதும். கொஞ்சம் பொறுத்து வரும் வரிகளில், "..... வீட்டுக்குள் வந்த அவர்கள் இருவரும் சோபாவில் உட்காராமல் ஷோகேஸை ஒட்டிய தரையில் உட்கார்ந்து கொண்டார்கள்.... 'அவங்களுக்குக் காபி கொடு' என்றபடியே பரமன் அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தான்."  இந்த வரிகளைப் படித்து விட்டு ஓவியத்தைக் கண்கள் மேய்ந்தபோது...
                                            
                                     
படத்தில் பெண் பிங்க் நிற சுடிதார் அணிந்திருக்கிறா
ளா? இவர் நாற்காலியிலா அமர்ந்திருக்கிறார்?!!

இந்தச் சிறுகதை பற்றியும் ஒரு விஷயம்.
படித்தபோது தோன்றிய ஒன்றைச் சொல்ல வேண்டும். முன்னாள் ரௌடி ஒருவன், அந்நாளையச் சிறுவன், இந்நாள் மருத்துவர் ஒருவரிடம் தன பெண் படிப்புக்கு உதவி என்று சொல்லி ரூபாய் வாங்கிப் போவதாகக் கதை. ஆனால் அது பொய். ஏமாற்றி விட்டானா, என்றால் இல்லை. போலீசுக்கு பயந்து ஓடிய ஓர் நாளிரவில் ஒளிந்துகொள்ள இடம் தந்த வீட்டுப் பெண்ணுக்கு திருமணம் நடக்க உதவி.  சில நாட்களுக்குப் பின்னர் ஒரு கடிதம் மூலம் உண்மையை இவர்களுக்கு உரைக்கும் அந்த ரௌடி,  நன்றி சொல்லி அழுத அந்தப் பெண்ணைப் பற்றி எழுதும் போது வரும் வரிகள் படிக்காத முரட்டு ரௌடி எண்ணத்தில் இல்லாமல் இலக்கியத் தரத்தில் இருக்கிறது.  எஸ்ரா  ரௌடியின் எழுத்துகளை சாதாரண வரிகளில் காட்டி விட்டு, பின்சிந்தனையாக அந்த வரிகளைக் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

ஓவியங்கள் பற்றிப் பேசும்போது ரசித்த ஓவியம் ஒன்று இதே விகடனில் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்' தொடர்கதைக்கு ஓவியர் வரைந்த ஓவியம். அறை
வாங்கும் பெண்ணின் வலிமிகு முகம், வர்ணனைகளுக்குத் தகுந்தாற்போல் காதட்டி அறுந்து பறப்பது...

                                                                          
 
தினமணிக் கதிரில் வந்திருக்கும் ஒரு சிறுகதைக்கு வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தை வரைந்திருப்பது ஜெ என்பது நம்ப முடியவில்லை. வேறு 'ஜெ' யோ....!



கொஞ்ச நாள் முன்பு விகடனில் வந்த ஒரு, ரசித்த துணுக்கு!
                                          


கருப்பு - கறுப்பு வித்தியாசம் தெரியுமோ? நான் சமீபத்தில் படித்துத் தெளிந்தேன்!

15 கருத்துகள்:

  1. //கருப்பு - கறுப்பு வித்தியாசம்//
    ”எங்கள்”க்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லமாட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் ரசித்ததை நாங்களும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  3. ஓவியங்களைக் கூட ஆய்வு செய்யும் பாங்கு வியக்கிறேன் சார்.... எஸ் ரா பற்றி மனம் திறந்து நீங்கள் எழுதி இருப்பது சூப்பர்... கருப்பு கறுப்பு எங்க ஆயா மேல சத்தியமா தெரியல

    பதிலளிநீக்கு
  4. இந்த காலத்து படத்தை பத்தி நல்லா சொன்னீங்க. :)
    துணுக்கு சூப்பர். :) 'ஜெ' எனக்கு மிகவும் பிடித்த ஓவியர். இவர்தான் அவரா, அவர்தான் இவரா? தெரியலைன்னாலும் இந்த ஓவியம் அழகா இருக்கு.

    ஹுசைனம்மா நல்லா கேட்டீங்க. :)) நானும் சேந்துக்கறேன் உங்களோட.
    கருப்பு, கறுப்பு. ஒரு வேளை பெயர்சொல், வினைச்சொல் வித்யாசமா இருக்குமோ! தெரியலைங்கோ!

    பதிலளிநீக்கு
  5. சார், சொல்லீடுங்க சார், தலை வெடிச்சுடும்போல இருக்கு. கருப்பு, கறுப்பு - என்ன வித்தியாசம், சார், சீக்கிரம் சொல்லீடுங்க சார்,சார்,சார்,சார்,சார்,சார்,சார்,சார்,சார்

    பதிலளிநீக்கு
  6. எந்த எந்த எழுத்தாளர்களுக்கு யார் யார் ஓவியம் வரைந்தார்கள் என ஞாபகம் வைத்து எழுதியிருக்கீங்களே எனக்கு மறந்தே விட்டது.

    ஹுஸைனம்மா கேட்ட மாதிரி வித்யாசம் எங்களுக்கு தெரிவிக்க கூடாதா?

    பதிலளிநீக்கு
  7. படங்களுக்காகவே கதை படித்தகாலம் உண்டு. இப்பொழுது மணியம் செல்வன் அருமை
    இளைய ராஜாவும் தான்.அவர் ஓவியங்களுக்குப் பாடல்கள் எழுதப் படுவதாகப் படித்தேன்.
    கல்கியில் வரும் படங்கள் கண்ணுக்கு அழகு.சுஜாதா ஜெ ஜோடி எப்பவும் சூப்படர்.

    கருப்பு வெளிர் கருப்பு பெயர்ச்சொல்லோ.
    கறுப்பு நிறத்தைக் உறைக்கிறதா?

    பதிலளிநீக்கு
  8. சாண்டில்யனுக்கேத்த ஜோடி லதா, சுஜாதாவுக்கேத்த ஜோடி ஜெ..

    கருப்புக்கும், கறுப்புக்கும் வித்தியாசம் அடுத்த இடுகையில் தெரிய வருமா :-))

    பதிலளிநீக்கு
  9. கருப்பு என்பது கடவுளின் பெயர். கறுப்பு என்பது நிறம். சரியா... தப்பா இருந்தா குட்டாதீங்க. ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்9 ஜனவரி, 2013 அன்று 12:14 PM


    கருப்பு - கறுப்பு பிரச்னையில், ஓவியம் பற்றியும் பதிவின் மற்ற பகுதிகள் பற்றியும் ஒன்றும் பின்னூட்டம் இல்லாமல் போனதே.. என்று மனம் ஏங்கினாலும் அடுத்த பதிவுக்கு வழி வகுத்த ஹுஸைனம்மா முதல் அனைவருக்கும் மிக்க நன்றி!

    நன்றி.. நன்றி...

    @ஹுஸைனம்மா

    @ சே. குமார்

    @சீனு

    @faiza kader

    @மீனாக்ஷி

    @கந்தசாமி சார்

    @ராம்வி

    @வல்லிம்மா

    @அமைதிச்சாரல்

    @பாலகணேஷ்

    பதிலளிநீக்கு
  11. ஓவியம் ஒரு கதைக்கு முக்கிய அம்சம்.. சில நேரங்களில் ஓவியம் கூட கதை படிக்க தூண்டும்!!

    பதிலளிநீக்கு
  12. 'ஓலைக் கிளி' படித்த போது நான் கூட கவனிக்க வில்லை!
    சபாஷ்!
    கரு(று)ப்பைப் பத்தி யோசிக்க வச்சுட்டீங்க... ம்ம்ம் . . . எனக்கு தெரிஞ்சதெல்லாம் வெள்ளை X கறுப்பு இன்னொன்னு காத்து கருப்பு.('று' 'ரு' பிழையிருந்தால் மன்னிக்கவும்) அதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. / உணர்வுகளை உள்வாங்கி ஓவியம் போடுவார்கள். /

    அதனாலாயே இன்றளவிலும் பல தொடர் மற்றும் சிறுகதைகளின் கதாபாத்திரங்கள் வரையப்பட்ட ஓவியங்களால் உயிர்ப்புடன் நினைவில் உலாவுகிறார்கள். இன்றைய ஓவியர்கள் அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இல்லை என்பதும் அவசரமாக வாசித்து வரைந்து விடுகிறார்கள் என்ப்தும் உண்மை.

    பதிலளிநீக்கு
  14. ஒரு கதை வாசிக்கும்போது எத்தனை அவதானிப்புக்கள் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!