சனி, 9 பிப்ரவரி, 2013

பாசிட்டிவ் செய்திகள் 3/2/2013 முதல் 9/2/2013 வரை

எங்கள் B+ செய்திகள்.        

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

====================================================================

1) 05/02/2013அன்று டிரைவர் பாண்டியன் அவர்கள் அளித்த தகவலைக் கொண்டு கோவையில் அரசு மருத்துவ மனை அருகே ஆதரவற்று இருந்த கண்ணன் என்னும் முதியவர் வயதுசுமார் (65) ஈர நெஞ்சம் அமைப்பால் மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் .

                                                 ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

05/02/2013அன்று டிரைவர் பாண்டியன் அவர்கள் அளித்த தகவலைக் கொண்டு கோவையில் அரசு மருத்துவ மனை அருகே  ஆதரவற்று இருந்த கண்ணன் என்னும் முதியவர் வயதுசுமார் (65) ஈர நெஞ்சம் அமைப்பால் மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் .
திரு பாண்டியன் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இன்னும் பல நல்ல செயல்களை அவர் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (138/2013)
ஈரநெஞ்சம்

 .MR.KANNAN AN OLD MAN WAS FOUND BY MR PANDIAN AT Coimbatore on 05/02/13, (A DRIVER),AND HE INFORMED IT TO OUR ORGANIZATION , WE MADE ARRANGEMENTS TO ADMITMR.KANNAN IN TO KOVAI MANAGARATCHI KAPPAGAM, COIMBATORE. Our organization Eera Nenjam appreciates the timely help of Mr. PANDIAN and also seeks the Almighty’s help to do such services in the future.

Thanks(138/2013)
Eera Nenjam

திரு பாண்டியன் அவர்களை ஈர நெஞ்சம் மனதாரப் பாராட்டுவதோடு இன்னும் பல நல்ல செயல்களை அவர் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது. [முக நூலில் திரு ரத்னவேல் Share செய்ததிலிருந்து]

2) ஏற்கெனவே பெங்களுருவில் மாடித் தோட்டம் பற்றிப் படித்திருந்தோம். இப்போது சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்படித் தோட்டம் அமைத்துத் தரும் திரு என். மாதவன், சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 'வெங்கடேஸ்வரா நர்சிங்' எனும் பண்ணை வைத்துள்ளார்.

200 சதுர அடி இருந்தால், பூமியில் விவசாயம் செய்வதைப் போல காய்கறித் தோட்டம் அமைத்து அறுவடை செய்யலாம் என்கிறார். [ தினமலர் ]

3) உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விஷயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.
                                        
                              தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! 

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.
மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்று வந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரத்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கான இன்சுலினை ஊசியூடாகப் பெற்று வந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூட தனது பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
[ முக நூல் ]

4)  228 தலித் குடும்பத்தை தத்தெடுத்து உணவு, கல்வி என, அனைத்தையும் வழங்கும் மயிலானந்தம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியின், சாமிநாதபுரத்தை சேர்ந்தவன். மயில்சாமிக் கவுண்டர் என்ற என் பெயரை, ஜாதியை நீக்கி, மயிலானந்தம் என, மாற்றினேன்.
                                            இங்கு அனைத்தும் இலவசம்!

228 தலித் குடும்பத்தை தத்தெடுத்து உணவு, கல்வி என, அனைத்தையும் வழங்கும் மயிலானந்தம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியின், சாமிநாதபுரத்தை சேர்ந்தவன். மயில்சாமிக் கவுண்டர் என்ற என் பெயரை, ஜாதியை நீக்கி, மயிலானந்தம் என, மாற்றினேன். 

ஆரம்பத்தில் சிறு மளிகைக் கடையாக ஆரம்பித்து, இன்று மாட்டுத் தீவனம், எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள, எஸ்.கே.எம்., நிறுவனத்தை உருவாக்கி, ஒரு தொழில் அதிபராக உள்ளேன்.தொழிலில் மற்றவரால் வளர்ச்சியடைந்து உயர்ந்த நான், பிற்பட்ட சமுதாயமாக இருக்கும் தலித்களுக்கு உதவ,பள்ளிக்கூடம் கட்ட நினைத்தேன். 

முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம், "தலித் மாணவர்கள், மற்ற ஜாதி மாணவர்களோடு படித்தால் தான், போட்டியிட்டு வெல்லலாம். எனவே மற்ற உதவிகளை செய்' என, ஆலோசனை கூறினார்.

என் ஊரில் உள்ள, இரண்டு தலித் காலனிகளின் மொத்தம், 228 குடும்பத்தை தத்தெடுத்து, எஸ்.கே. எம்., சேவை மையம் மூலம், அனைத்து உதவிகளையும் இலவசமாக, 1999ம் ஆண்டு முதல் செய்து வருகிறேன்.

 முதியவர்களுக்கு, காலை, 7:00 மணிக்கு, தேநீர், 11:00 மணிக்கு மதிய உணவு, மாலை 6:00 மணிக்கு இரவு உணவு என, தினமும் வழங்கி வருகிறேன். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை, 8:00 மணிக்கு, மேசை வசதியுடன் கூடிய உணவறையில் சிற்றுண்டி, பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர இரண்டு வாகனம், பள்ளி முடிந்து வந்ததும், உணவு, விளையாட்டு, இரவு, 9:00 மணி வரை, படிக்க பயிற்சி வகுப்புகளும் உண்டு. 

கணினி, ஆங்கிலம், இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குகிறோம்.இதுவரை, 25 பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இன்னும், 10 ஆண்டுகளில் அனைத்து குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதே, சேவை மையத்தின் நோக்கம்.
ஆரம்பத்தில் சிறு மளிகைக் கடையாக ஆரம்பித்து, இன்று மாட்டுத் தீவனம், எண்ணெய் உற்பத்தியில் முன்னணியிலுள்ள, எஸ்.கே.எம்., நிறுவனத்தை உருவாக்கி, ஒரு தொழில் அதிபராக உள்ளேன்.தொழிலில் மற்றவரால் வளர்ச்சியடைந்து உயர்ந்த நான், பிற்பட்ட சமுதாயமாக இருக்கும் தலித்களுக்கு உதவ,பள்ளிக்கூடம் கட்ட நினைத்தேன்.

முன்னாள் ஆளுநர் சி.சுப்ரமணியம், "தலித் மாணவர்கள், மற்ற ஜாதி மாணவர்களோடு படித்தால் தான், போட்டியிட்டு வெல்லலாம். எனவே மற்ற உதவிகளை செய்' என, ஆலோசனை கூறினார். 

என் ஊரில் உள்ள, இரண்டு தலித் காலனிகளின் மொத்தம், 228 குடும்பத்தை தத்தெடுத்து, எஸ்.கே. எம்., சேவை மையம் மூலம், அனைத்து உதவிகளையும் இலவசமாக, 1999ம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். 

முதியவர்களுக்கு, காலை, 7:00 மணிக்கு, தேநீர், 11:00 மணிக்கு மதிய உணவு, மாலை 6:00 மணிக்கு இரவு உணவு என, தினமும் வழங்கி வருகிறேன். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை, 8:00 மணிக்கு, மேசை வசதியுடன் கூடிய உணவறையில் சிற்றுண்டி, பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர இரண்டு வாகனம், பள்ளி முடிந்து வந்ததும், உணவு, விளையாட்டு, இரவு, 9:00 மணி வரை, படிக்க பயிற்சி வகுப்புகளும் உண்டு.  கணினி, ஆங்கிலம், இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகம், சீருடை வழங்குகிறோம்.இதுவரை, 25 பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இன்னும், 10 ஆண்டுகளில் அனைத்து குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதே, சேவை மையத்தின் நோக்கம். [ தினமலர் ]

5) கிரிக்கெட் உலகில் நமது ஆண் வீரர்கள் உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம். இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.

துவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில் வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.

திருஷ் காமினி பற்றி:

சென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த "ஜூனியர்' வீராங்கனை (2007-08), சிறந்த "சீனியர்' வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார்.[ முக நூல் }

6) சற்று மாற்றி யோசித்தால், சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என, "சமர்ப்பண்' தொண்டுஅமைப்பு நிரூபித்து உள்ளது."கோடை காலத்தில் குளிர்ச்சியும்,குளிர் காலத்தில் வெப்பமும் தரக்கூடியபசுமை வீடுகளை, பிளாஸ்டிக்கழிவுகளை வைத்து உருவாக்க முடியும்' என, இந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

செங்குன்றத்திற்கு அருகே, பம்மதுகுளம்ஊராட்சிக்கு உட்பட்ட, சரத்கண்டிகை கிராமத்தில், "சமர்ப்பண்' தொண்டு நிறுவனத்தின் பசுமைவீடு திட்ட மையம் உள்ளது. இங்கு, இரண்டுஏக்கர் இடத்தில் மாதிரி பசுமை வீடு உருவாகிவருகிறது.முதல் கட்டமாக, இந்த தொழில்நுட்பத்தில்,ஒரு ஜெனரேட்டர் மேடை அமைக்கப்பட்டுஉள்ளது. இது முற்றிலும் பழைய பிளாஸ்டிக்பாட்டில்களால் ஆனது!சுற்றுச்சூழலின் எதிரியாக உருவெடுத்திருக்கும்பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம், பசுமைவீடுகளை கட்ட முடியும் என்பதை, டில்லியில்நிரூபித்து, சென்னைக்கு அருகே அத்திட்டத்தைசெயல்படுத்தும் முயற்சியில், "சமர்ப்பண்' ஈடுபட்டுள்ளது.
                                    "மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!

சற்று மாற்றி யோசித்தால், சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என, "சமர்ப்பண்' தொண்டுஅமைப்பு நிரூபித்து உள்ளது."கோடை காலத்தில் குளிர்ச்சியும்,குளிர் காலத்தில் வெப்பமும் தரக்கூடியபசுமை வீடுகளை, பிளாஸ்டிக்கழிவுகளை வைத்து உருவாக்க முடியும்' என, இந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

செங்குன்றத்திற்கு அருகே, பம்மதுகுளம்ஊராட்சிக்கு உட்பட்ட, சரத்கண்டிகை கிராமத்தில், "சமர்ப்பண்' தொண்டு நிறுவனத்தின் பசுமைவீடு திட்ட மையம் உள்ளது. இங்கு, இரண்டுஏக்கர் இடத்தில் மாதிரி பசுமை வீடு உருவாகிவருகிறது.முதல் கட்டமாக, இந்த தொழில்நுட்பத்தில்,ஒரு ஜெனரேட்டர் மேடை அமைக்கப்பட்டுஉள்ளது. இது முற்றிலும் பழைய பிளாஸ்டிக்பாட்டில்களால் ஆனது!சுற்றுச்சூழலின் எதிரியாக உருவெடுத்திருக்கும்பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம், பசுமைவீடுகளை கட்ட முடியும் என்பதை, டில்லியில்நிரூபித்து, சென்னைக்கு அருகே அத்திட்டத்தைசெயல்படுத்தும் முயற்சியில், "சமர்ப்பண்'ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோமின் கூறியதாவது:

பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படும்பசுமை வீடுகள், மிகவும் பாதுகாப்பானவை.1,560 ஆண்டுகள் வரை சேதாரமின்றி உறுதியாகஇருக்கும். இதற்கு தேவையான, காலி பிளாஸ்டிக்பாட்டில்கள், சென்னையில் உள்ள நட்சத்திரஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பொதுவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இருந்து,ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்.அவற்றை அளவுக்கு ஏற்ப பிரித்து; சவுடு மண்,சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் வீணானமண் ஆகியவற்றை கொண்டு நிரப்பி, பாட்டிலைஉறுதியாக்கி, கட்டட பணிக்கு பயன்படுத்துகிறோம்.பாட்டிலின் தட்டையான பின்பகுதியைசுவரின் வெளிப்புறம் மற்றும் தரை தளத்தில்இருப்பது போல் பயன்படுத்தினால், "சம நிலையில்' இருக்கும். மூடியிருக்கும் மேல்பகுதி"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!உட்புறத்தில் இருக்கும். இதனால், சுவரை,சிமென்ட் மூலம் எளிதாக பூச முடியும்.செங்கல் வாங்கும் செலவை தவிர்க்கலாம்.அதே போன்று, சிமென்ட் வாங்கும் செலவும் பாதியாக குறையும். 

மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில்குளிர்ச்சியாகவும் இருக்கும். இது போன்றபசுமை வீட்டை, டில்லியில், பள்ளி கட்டடமாக கட்டி கொடுத்துள்ளோம். 15 அடிநீளம், 12 அடி அகலம் கொண்ட வீடு கட்ட,30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.இங்கு, 2,400 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன், கூடுதலாக ஒரு மேல் தளமும்கொண்ட கட்டடத்தை கட்ட உள்ளோம்.அதற்கான தூண் மேல் தளத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பதை அறிய ஐ.ஐ.டி.,மூலம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. 

எதிர்காலத்தில் இது போன்ற பசுமை வீடுகளின் மேல் தளத்தில், சூரிய மின் சக்தி உருவாக்கும் வகையில் கூரைகள் அமைக்கும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்,பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.                                        
இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோமின் கூறியதாவது: 

பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படும்பசுமை வீடுகள், மிகவும் பாதுகாப்பானவை.1,560 ஆண்டுகள் வரை சேதாரமின்றி உறுதியாகஇருக்கும். இதற்கு தேவையான, காலி பிளாஸ்டிக்பாட்டில்கள், சென்னையில் உள்ள நட்சத்திரஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பொதுவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இருந்து,ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்.அவற்றை அளவுக்கு ஏற்ப பிரித்து; சவுடு மண்,சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் வீணானமண் ஆகியவற்றை கொண்டு நிரப்பி, பாட்டிலைஉறுதியாக்கி, கட்டட பணிக்கு பயன்படுத்துகிறோம்.பாட்டிலின் தட்டையான பின்பகுதியைசுவரின் வெளிப்புறம் மற்றும் தரை தளத்தில்இருப்பது போல் பயன்படுத்தினால், "சம நிலையில்' இருக்கும். மூடியிருக்கும் மேல்பகுதி"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!உட்புறத்தில் இருக்கும். இதனால், சுவரை,சிமென்ட் மூலம் எளிதாக பூச முடியும்.செங்கல் வாங்கும் செலவை தவிர்க்கலாம்.அதே போன்று, சிமென்ட் வாங்கும் செலவும் பாதியாக குறையும்.   

மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில்குளிர்ச்சியாகவும் இருக்கும். இது போன்றபசுமை வீட்டை, டில்லியில், பள்ளி கட்டடமாக கட்டி கொடுத்துள்ளோம். 15 அடிநீளம், 12 அடி அகலம் கொண்ட வீடு கட்ட,30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.இங்கு, 2,400 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன், கூடுதலாக ஒரு மேல் தளமும்கொண்ட கட்டடத்தை கட்ட உள்ளோம்.அதற்கான தூண் மேல் தளத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பதை அறிய ஐ.ஐ.டி.,மூலம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது.   

எதிர்காலத்தில் இது போன்ற பசுமை வீடுகளின் மேல் தளத்தில், சூரிய மின் சக்தி உருவாக்கும் வகையில் கூரைகள் அமைக்கும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்,பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்.

7) தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து, சிறுவன் ஒருவன் குறித்த நேரத்தில் தகவல் தெரிவித்ததால், சப்தகிரி விரைவு ரயில் தண்டவாளத்தில் விபத்தில் இருந்து தப்பியது. சப்தகிரி விரைவு ரயில், நேற்று மதியம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள, பொன்பாடி - தடுக்குபேட்டை ரயில் நிலையகளுங்களுக்கு இடையே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தது.சப்தகிரி விரைவு ரயில் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்றது. அந்த ரயிலின் கடைசி பெட்டி, மேற்கண்ட இரு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து சென்றதும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது.

இதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிரஞ்சீவி என்ற சிறுவன் கவனித்தான். உடனே, அருகில் இருந்த, ரயில்வே கடவுபாதையில், பணியில் இருந்த ஊழியரிடம், விஷயத்தைக் கூறினான். அவர் இதுகுறித்து, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் துரிதமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை நிறுத்தினர். தகவல் அறிந்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர்.

இதையடுத்து, சப்தகிரி ரயில் ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. சிறுவன் சமயோசித புத்தியால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளும், பயணிகளும் சிறுவனை பாராட்டினர்.

8) சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப, சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை தயாரித்த, முரளி: மாற்று எரிபொருளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்தாலும், மக்களின் கவனத்தை சரியாக ஈர்ப்பதில்லை. சூரியனின் வெப்பத்தை, சோலார் பேனல்கள் மின்சாரமாக மாற்றி, மின்கலன்களில் சேமிக்கின்றன. சோலார் பேனல்கள், மதிய நேரத்தை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும், அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்நிலையை மாற்றி, சூரியன் உமிழும் வெப்ப கதிர்களின் திசைக்கேற்ப, சூரியனை நோக்கி சோலார் பேனல்கள் திரும்பும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்ததன் மூலம், எப்போதுமே அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.இதற்கு, தரங்கம்பாடியில் அமைந்துள்ள, "ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன்' உதவியது.
                                       அதிகபட்ச மின் உற்பத்தி!

சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப, சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை தயாரித்த, முரளி: மாற்று எரிபொருளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்தாலும், மக்களின் கவனத்தை சரியாக ஈர்ப்பதில்லை. 

சூரியனின் வெப்பத்தை, சோலார் பேனல்கள் மின்சாரமாக மாற்றி, மின்கலன்களில் சேமிக்கின்றன. சோலார் பேனல்கள், மதிய நேரத்தை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும், அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்நிலையை மாற்றி, சூரியன் உமிழும் வெப்ப கதிர்களின் திசைக்கேற்ப, சூரியனை நோக்கி சோலார் பேனல்கள் திரும்பும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்ததன் மூலம், எப்போதுமே அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.இதற்கு, தரங்கம்பாடியில் அமைந்துள்ள, "ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன்' உதவியது.

சூரிய கதிர்கள், செங்குத்தாக விழும் நேரமான நண்பகல், 12:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, சோலார் பேனல்கள், 180 டிகிரியில் படுக்கை வசமாக இருக்கும்போது, அதிகபட்சமான, 100 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய கதிர்கள் சாய்வாக விழும் மற்ற நேரங்களில், 180 டிகிரியில், படுக்கை வசமாக இருக்கும் பேனல்கள், 85 சதவீதத்திற்கும் குறைந்த அளவில் மட்டுமே, மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும். 

சூரிய கதிர்கள் விழும் கால நேரம் கணக்கிடப்பட்டு, அந்த தகவல்கள், நேரம் கணக்கிடும் கருவியில் பதியப்பட்டு, கருவியின் கட்டளைக்கு ஏற்ப, நான்கு சக்கர வாகனங்களை தூக்கப் பயன்படும், ஜாக்கி மூலம், சூரிய கதிர்கள் பூமியில் படும் திசைக்கு ஏற்ப எப்போதுமே, 100 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திசைக்கு, சோலார் பேனல்கள் திரும்புகின்றன. மாலை சூரியன் மறைந்ததும், மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே பேனல்கள் திரும்பிவிடும். 

இவ்வகை தொழில் நுட்பத்தை மேம்படுத்த கூடுதலாக, 3,000 ரூபாய் மட்டுமே செலவாகும்.                                                          
சூரிய கதிர்கள், செங்குத்தாக விழும் நேரமான நண்பகல், 12:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, சோலார் பேனல்கள், 180 டிகிரியில் படுக்கை வசமாக இருக்கும்போது, அதிகபட்சமான, 100 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய கதிர்கள் சாய்வாக விழும் மற்ற நேரங்களில், 180 டிகிரியில், படுக்கை வசமாக இருக்கும் பேனல்கள், 85 சதவீதத்திற்கும் குறைந்த அளவில் மட்டுமே, மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் 
 
சூரிய கதிர்கள் விழும் கால நேரம் கணக்கிடப்பட்டு, அந்த தகவல்கள், நேரம் கணக்கிடும் கருவியில் பதியப்பட்டு, கருவியின் கட்டளைக்கு ஏற்ப, நான்கு சக்கர வாகனங்களை தூக்கப் பயன்படும், ஜாக்கி மூலம், சூரிய கதிர்கள் பூமியில் படும் திசைக்கு ஏற்ப எப்போதுமே, 100 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திசைக்கு, சோலார் பேனல்கள் திரும்புகின்றன. மாலை சூரியன் மறைந்ததும், மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே பேனல்கள் திரும்பிவிடும்.  
 
இவ்வகை தொழில் நுட்பத்தை மேம்படுத்த கூடுதலாக, 3,000 ரூபாய் மட்டுமே செலவாகும். [ தினமலர் ]

9) போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் டாக்டராகி, தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.                                                     
                               விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி; டாக்டராகி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம்

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் டாக்டராகி, தற்போது அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.

ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியர் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், தற்போது தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு டாக்டராக உயர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், தன்னைப் போல் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

"நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.
ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர்,  தற்போது தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு டாக்டராக உயர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், தன்னைப் போல் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

"நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.

10) பிரிட்டனில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பாக பங்காற்றிய, டாக்டர் கீதா நாகசுப்ரமணியத்துக்கு, அந்நாட்டின் உயரிய, "பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் காரைக்குடியை சேர்ந்தவர்': பிரிட்டனில் உள்ள, "தி டவர் ஹாம்லெட்ஸ் கன்ட்ராசெப்ஷன் அண்டு செக்சுவல் ஹெல்த் சர்வீஸ்' என்ற மருத்துவ பிரிவின் தலைவராக பணிபுரிபவர், தமிழகத்தை சேர்ந்த, கீதா நாகசுப்ரமணியம். காரைக்குடியை சேர்ந்த இவருக்கு, அந்நாட்டில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவையாற்றியதற்காக, அங்கு வழங்கப்படும் உயரிய கவுரவங்களில் ஒன்றான, "மெம்பர் ஆப் த ஆர்டர் ஆப் த பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

                                              தமிழகத்தை சேர்ந்தவருக்கு பிரிட்டனின் உயரிய விருது

 பிரிட்டனில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பாக பங்காற்றிய, டாக்டர் கீதா நாகசுப்ரமணியத்துக்கு, அந்நாட்டின் உயரிய, "பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

காரைக்குடியை சேர்ந்தவர்':

பிரிட்டனில் உள்ள, "தி டவர் ஹாம்லெட்ஸ் கன்ட்ராசெப்ஷன் அண்டு செக்சுவல் ஹெல்த் சர்வீஸ்' என்ற மருத்துவ பிரிவின் தலைவராக பணிபுரிபவர், தமிழகத்தை சேர்ந்த, கீதா நாகசுப்ரமணியம். காரைக்குடியை சேர்ந்த இவருக்கு, அந்நாட்டில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவையாற்றியதற்காக, அங்கு வழங்கப்படும் உயரிய கவுரவங்களில் ஒன்றான, "மெம்பர் ஆப் த ஆர்டர் ஆப் த பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வழங்கப்படும், "பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரான இந்த அந்தஸ்து, குறிப்பிட்ட துறைகளில், மிக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், பிரிட்டனின் அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் பெண் மற்றும் தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்ற பெருமையும், இவருக்கு கிடைத்துள்ளது.

http://www.redhotcurry.com/profiles/geetha_nagasubramanian.htm                             

நம் நாட்டில் வழங்கப்படும், "பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரான இந்த அந்தஸ்து, குறிப்பிட்ட துறைகளில், மிக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், பிரிட்டனின் அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் பெண் மற்றும் தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்ற பெருமையும், இவருக்கு கிடைத்துள்ளது.

11) வழிதவறி தத்தளித்துக் கொண்டிருந்த வயதான பெண்மணி பற்றி தினமலரில் வந்த செய்தி பார்த்து அவரைத் தவற விட்டுத் தவித்துக் கொண்டிருந்த அவரது இரு பாசமான மகன்களும் அவரை, ஓடோடியும் வந்து அழைத்துச் சென்றனர். (தவித்துக் கொண்டிருந்த பாட்டி படம் முதலில் செய்தித் தாளில் பார்த்தபோது வேண்டுமென்றே தொலைத்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று தோன்றியது அந்த என் கணிப்பு தோற்றுப் போனதில் ரொம்ப சந்தோஷம்.)
                               "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்

வழி தவறி பிரிந்து சென்ற தாயை, சென்னை முழுக்க தேடிக்கொண்டிருந்த மகன்கள், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, புழல் பகுதிக்கு நேரில் வந்து, அவரை அழைத்து சென்றனர்.

சென்னை கொரட்டூர் பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்சங்கர். இருவரும், சகோதரர்கள். இவர்களது தாய் முல்லையம்மாள், 60. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், புழல் கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகே, வந்து சேர்ந்தார். அன்று முதல், அங்கு வருவோரிடம், "வெற்றிலை வாங்க கடைக்கு வந்து, வழி தவறி இங்கு வந்து விட்டேன். என்னை, என் மகன்களிடம் சேர்த்து வையுங்கள்' என, கேட்டு வந்தார்.

இவர் குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் வெளியானது. செய்தி மூலம், தாயின் இருப்பிடத்தை அறிந்த மகன்கள், அன்றே, அவரை நேரில் வந்து அழைத்து சென்றனர். மகன்களுடன் இணைந்த அவரை, நேற்று சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தாயை பிரிந்தது குறித்து, ராஜன், ஜெய்சங்கர் கூறியதாவது:

. "தினமலர்' உதவியால் :

கடந்த, ஆகஸ்ட், 16ம் தேதி பிற்பகலில், வெற்றிலை வாங்க சென்றவர், வீடு திரும்பவில்லை. "பார்வை குறைவு' காரணமாக, புழல் கதிர்வேடு பகுதிக்கு போய் சேர்ந்து இருக்கிறார். நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம். அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள் என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம். இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், எங்கள் தாயின் படத்துடன் வந்த செய்தியை, சென்னை போரூரில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர் பார்த்து, உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம், எங்கள் தாயை மீட்டோம். "தினமலர்' உதவியால், ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர், மீண்டும் கிடைத்துள்ளது என, கண்களில் நீர் பெருக்குடன், நன்றி தெரிவித்தனர்.

சென்னை கொரட்டூர் பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்சங்கர். இருவரும், சகோதரர்கள். இவர்களது தாய் முல்லையம்மாள், 60. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், புழல் கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகே, வந்து சேர்ந்தார். அன்று முதல், அங்கு வருவோரிடம், "வெற்றிலை வாங்க கடைக்கு வந்து, வழி தவறி இங்கு வந்து விட்டேன். என்னை, என் மகன்களிடம் சேர்த்து வையுங்கள்' என, கேட்டு வந்தார்.
இவர் குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் வெளியானது. செய்தி மூலம், தாயின் இருப்பிடத்தை அறிந்த மகன்கள், அன்றே, அவரை நேரில் வந்து அழைத்து சென்றனர். மகன்களுடன் இணைந்த அவரை, நேற்று சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தாயை பிரிந்தது குறித்து, ராஜன், ஜெய்சங்கர் கூறியதாவது:

  "தினமலர்' உதவியால் :
கடந்த, ஆகஸ்ட், 16 ம் தேதி பிற்பகலில், வெற்றிலை வாங்க சென்றவர், வீடு திரும்பவில்லை. "பார்வை குறைவு' காரணமாக, புழல் கதிர்வேடு பகுதிக்கு போய் சேர்ந்து இருக்கிறார். நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம். அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள் என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம். இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், எங்கள் தாயின் படத்துடன் வந்த செய்தியை, சென்னை போரூரில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர் பார்த்து, உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம், எங்கள் தாயை மீட்டோம். "தினமலர்' உதவியால், ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர், மீண்டும் கிடைத்துள்ளது என, கண்களில் நீர் பெருக்குடன், நன்றி தெரிவித்தனர்.

18 கருத்துகள்:

  1. "மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!

    இன்றைய பகிர்வுகள் மனம் மகிழ்ச்செய்தன ...பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. சிறுவன் சிரஞ்சீவி மற்றும் மயிலானந்தம் ஈர நெஞ்சம் நண்பர்கள் ஏற்கனவே அறிந்தவர்கள் எனினும் இது போன்ற நற்பண்புகள் நாளடைவில் அனைவரிடமும் வளர வேண்டும். நாடும் வீடும் பசுமையடைய வேண்டும். டிவி செய்தித்தாள் என எதனை பார்த்தாலும் திருப்பதியில்லை தங்கள் தகவல்கள் நிம்மதி தருகிறது நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  3. பிளாஸ்டிக் கழிவுகளை கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என்னும் செய்தி வரவேற்கத்தக்கது...

    பதிலளிநீக்கு
  4. மனதைத் தொடும் பதிவுகள் தொடரட்டும்...!

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே அருமையான செய்திகள். நல்லதொரு தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே அருமையான செய்திகள். நல்லதொரு தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரம் நிறைய பாஸ்டிவ் செய்திகள் இருக்கே! அனைத்துமே அருமை.
    பிளாஸ்டிக்கில் பசுமை வீடு சிறப்பான தகவல்.

    பதிலளிநீக்கு
  8. இந்த வாரம் மிகவும் நல்ல வாரம் என்று தோன்றுகிறது. 11 பாசிடிவ் செய்திகள் வந்திருக்கின்றனவே!
    இந்தச் செய்திகள் வரக் காரணமாக இருந்தவர்களுக்கும், தொகுத்துக் கொடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.
    எனக்கு மிகவும் பிடித்த செய்தி சர்க்கரை நோய்க்கு மாதம் ஒரு இன்சுலின் ஊசி போதும் என்ற செய்தி தான். கணவரின் அல்லல் குறையுமே!

    பதிலளிநீக்கு
  9. பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. பசுமை வீடு அருமை.
    தொலைந்த தாய் கிடைத்ததில் பிள்ளைகளின் மகிழ்ச்சி படத்தில் தெரிகிறது. வயதானவர்கள் எப்போதும் வீட்டு முகவரி, தொலைபேசி, அல்லது அலைபேசி நமபர் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  10. வாவ்! எல்லாமே அருமையான செய்திகள். அந்த சிறுவன் எவ்வளவு பெரிய விபத்தை தடுத்திருக்கிறான். அவனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வளவு அருமையான செயலை செய்த அவனுக்கு வெறும் பாராட்டு மட்டும் இல்லாமல், அவன் படிப்புக்கான செலவை அரசாங்கம் மேற்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. போன வாரம் எதுவும் கிடைக்கலன்னதுக்கு சேத்து வச்சு, இந்த வாரம்!! சந்தோஷம்.

    பிளாஸ்டிக் பாட்டில்களால் சாலை போடுவார்கள் தெரியும். வீடு கட்டுவது புதுமை. பொதுவாக ப்ளாஸ்டிக், மக்காது என்றாலும், வெயிலில் தொடர்ந்து இருந்தால், பொடிப்பொடியாக உதிர்ந்து விடும். இதில் எப்படி என்று தெரியவில்லை. வெகுகாலம் தாங்கும் என்று சொல்கிறார்களே!! இருக்கட்டும், நல்லது.

    //ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்//
    ஏ...யப்பா... அப்ப அதெல்லாம் முறையா மறுசுழற்சிக்கு அனுப்பப்படுமா.. தெரியலையே..

    ரயிலைத் தடுத்து நிறுத்திய சிறுவனைக் குறித்து வேறு எந்த விபரமும் இல்லையே செய்தித்தாட்களில்? பெயர்கூட இந்தப் பதிவைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அவன் படத்தை வெளியிட்டு, எப்படிக் கண்டுபிடித்தான், என்ன எப்படி செய்தான் என்பதையெல்லாம் நியூஸ் சேனல்களில் விளக்கமாகச் சொல்லிருந்தால், இது பலருக்கும் - குறிப்பாகச் சிறுவர்களுக்கு - ஊக்கமாக இருக்குமே!! தேவையில்லாததுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிப் பிரபலப்’படுத்தும்’ சேனல்கள் இதைச் செய்தால் என்ன? (செய்தார்களா?)

    அதுபோல இந்த “தண்டவாள விரிசல்” என்றால் என்ன, எப்படிக் கண்டுபிடிப்பது என்றெல்லாம் இந்த ரயில்வேக்காரங்களும் விளம்பரங்கள் செய்து ஒளிபரப்பலாம்தானே?

    //சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப, சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை //
    இது ஏற்கனவே வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ள தொழில்நுட்பம்தான். என்றாலும், இந்தியாவில் முதல்மூறை, அதுவும் கொஞ்சம் சீப்பாக என்பதால் வரவேற்கவேண்டியதே. (ஆமா, ஒவ்வொரு பேனலுக்கும் 3000 ரூபாயா, அல்லது மொத்தமாக ஒரு செட்டுக்கா?)

    பதிலளிநீக்கு
  12. முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர். நன்றி எபி.
    இரண்டாவது முதியவர் பாதுகாப்பு பெற்றது. மூன்றாவது ப்ளாஸ்டிக் வீடு.

    மற்ற எல்லா பாசிடிவ் செய்திகளைவிட எனக்கு முக்கியம்.....டைப் 2 மருந்து
    செய்தி;)

    எல்லா செய்திகளுக்கும் மிக மிக நன்றி

    பதிலளிநீக்கு
  13. முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர். நன்றி எபி.
    இரண்டாவது முதியவர் பாதுகாப்பு பெற்றது. மூன்றாவது ப்ளாஸ்டிக் வீடு.

    மற்ற எல்லா பாசிடிவ் செய்திகளைவிட எனக்கு முக்கியம்.....டைப் 2 மருந்து
    செய்தி;)

    எல்லா செய்திகளுக்கும் மிக மிக நன்றி

    பதிலளிநீக்கு
  14. முதலில் பாட்டி(?) வீட்டுக்கு வந்தது.நன்றி தினமலர். நன்றி எபி.
    இரண்டாவது முதியவர் பாதுகாப்பு பெற்றது. மூன்றாவது ப்ளாஸ்டிக் வீடு.

    மற்ற எல்லா பாசிடிவ் செய்திகளைவிட எனக்கு முக்கியம்.....டைப் 2 மருந்து
    செய்தி;)

    எல்லா செய்திகளுக்கும் மிக மிக நன்றி

    பதிலளிநீக்கு
  15. எல்லாமே மனதிற்கு இதமளித்த செய்திகள்....

    பதிலளிநீக்கு

  16. ராஜராஜேஸ்வரி, சசிகலா, DD, மதுரை அழகு, கீதா சாம்பசிவம், ராம்வி, ரஞ்சனி நாராயணன், கோமதி அரசு, மீனாக்ஷி, ஹுஸைனம்மா, வல்லிசிம்ஹன், கோவை2தில்லி

    அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி.

    வல்லிம்மா... உண்மை. மார்க்கெட்டுக்கு வந்து விட்டதா என்று தெரியவில்லை.

    ஹுஸைனம்மா... உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. மேல்விவரங்கள் சம்பந்தப் பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும்! படித்ததை மட்டும் பகிர்ந்திருக்கிறோம். ரயில் பயணிகளைக் காப்பாற்றிய சிறுவன் படம் போடவில்லையா என்று முகநூலில் கூடக் கேட்டிருந்தார்கள்.

    நல்ல யோசனை மீனாக்ஷி.

    பதிலளிநீக்கு
  17. //மேல்விவரங்கள் சம்பந்தப் பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும்! படித்ததை மட்டும் பகிர்ந்திருக்கிறோம்.//

    ம்ம்ம்.. இங்க வாசிக்கிறவங்க யாருக்காவது தெரிஞ்சாச் சொல்வாங்களேங்கிற எதிர்பார்ப்பிலும்; ஒருவேளை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க நேரிட்டால் கேட்டுக் கொள்ளலாமே என்பதற்காகவும்தான் இங்கே பதிவது. (ஸ்ஸப்பா.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...) :-)))))

    பதிலளிநீக்கு

  18. //(ஸ்ஸப்பா.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)//

    சமாளிப்பு இல்லை ஹுஸைனம்மா... நீங்கள் சொல்வது உண்மையே. உங்கள் கேள்விகள் எல்லோருக்கும் உதவலாம். யாராவது பதிலும் சொல்லலாம். நாங்கள் 'எங்கள்' நிலையை மட்டும் - உங்களுக்கும் தெரியும் என்றாலும் - சொன்னோம். :))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!