விஜயபாரதம் பத்திரிகையில் சமீபத்தில் படித்ததன் பகிர்வு இது. செய்தியின் நம்பகத் தன்மைக் குறித்துத் தெரியவில்லை. உண்மையாக இருந்தால் மிக உபயோகமான ஒன்று. யாராவது ஒரிவருக்காவது உபயோமாகலாம். தொலைபேசி எண்ணும் தரப் பட்டுள்ளதால் குறிப்பிட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியுமே... இனி படித்த விஷயம் கீழே.
நீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவை மாசு பட்டுள்ளதால் பல்வேறு உடல்குறைகள் ஏற்படுகின்றன. புற்று நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காசர்க்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்டோசஃல்பான் அதிக அளவு காணப்படுகிறது. எனவே புற்று நோய் அதிக அளவில் பரவியது. இப்போது கேரளாவில் என்டோசல்பான் தடை செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, என்டோசல்ஃபானை உற்பத்தி செய்யக் கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்ச்சி வலுத்துள்ளது.
இந்நிலையில் சிமரூபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA) இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த புற்று நோயாளிகள் பலருக்கு சிமரூபா கஷாயத்தை பெங்களுருவைச் சேர்ந்த தம்பதியர் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி கொடுத்தனர். இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்தக் கஷாயத்துக்காக அவர்கள் காசு பெற்றுக் கொள்வதில்லை. சேவையாகச் செய்து வருகிறார்கள்.
'சிமரூபா வளர்ப்பது கடினமானதல்ல. இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும். இந்த மரத்தை வீட்டுக் கொல்லையில் கூட வளர்க்கலாம். இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமமாகும்' என்று ஷியாம் சுந்தர் ஜோஷி கூறுகிறார். அவரை 080-23335813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிமரூபாவில் 'கோசினாய்ட்ஸ்' என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்று நோய்க்கு எதிராகச் செயல் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அருமருந்தாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம் கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். புற்று நோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சிமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாசும் அவரது மனைவி ஷீலாவும் கேள்விப் பட்டனர். சிமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராமதாசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்று நோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சிமரூபா கஷாயத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது என்று ராமதாசும் ஷீலாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர் .
புற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் வரப்பிரசாதம். இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு, மத்திய அமெரிக்கா. இது ஒருவகை எண்ணெய் மரம். இந்த மரத்திலிருந்து எடுக்கப் படுகின்ற உணவு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணையாகப் பயன்படுத்தினால் நோய் குணம் அடைகிறது என்று பயனாளிகள் கருதுகின்றனர்.
சிமரூபா விவரங்கள் ஆங்கிலத்தில் ... இது சுட்டி.<<<
அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகை போல் அல்லவா உள்ளது சிமரூபா கஷாயம். என் அக்காவிற்கு அப்போது கிடைத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என மனம் நினைக்கிறது.
பதிலளிநீக்குபுற்று நோயாளிகள் எல்லோருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
ஷியாம் சுந்தர்ஜோஷி-சாந்தாஜோஷி இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்ந்து எல்லோருக்கும் நலம் அளிக்க வாழ்த்துக்கள்.
நல்ல பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.
எத்தனை வயதுக்குரியவர்கள் முதல் இம்மருந்தை எடுத்துக்கொள்ளலாம்? குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
பதிலளிநீக்குநல்லதொரு தகவல். மேலும் விவரங்கள் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குபலருக்கும் உதவலாம்... பகிர்கிறேன்... உண்மை என்று தெரிந்தால் பகிருங்கள்... நன்றி...
பதிலளிநீக்குஅம்மா இருந்திருந்தால்??? இப்படி நினைப்பதைத் தவிர்க்க முடியலை. இது குறித்து இன்று வரை எதிலும் படிக்கவும் இல்லை. தகவலுக்கு நன்றி. இது பலன் தரக்கூடியது எனில் இதில் ஆயுர்வேத முறைப்படி மாத்திரைகள், கஷாயம் தயாரித்துக் கொடுக்க லைசென்ஸ் பெற்று விநியோகிக்கலாம்.
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியரின் சேவை பாராட்டுக்குரியது. பகிர்ந்த தங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇந்த செய்தி உண்மைதான்.
பதிலளிநீக்குநண்பனின் தாயாருக்கு புற்றுநோய் தீர மருந்தாக, கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா தாண்டி, ஆனந்தபுரா என்ற ஊருக்குச் சென்று மருந்து வாங்கி வந்தோம். மூன்று மாதங்களுக்கான மருந்து கிடைத்தது. பணம் கிடையாது. விருப்பப்பட்டு தருவதை மறுப்பதில்லை. நோயின் தீவிரம் அதிகமாயிருந்தமையால் தாயாரை காக்க முடியவில்லை. வேரை அரைத்து மருந்தாய்த்தான் தந்தார்கள். வேரைத் தரவில்லை. (பனிரெண்டு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு). ஷிமோகாவிலிருந்து அழகியபுரா சென்றபின் அங்கிருந்து ஆனந்தபுர/நகரிற்கு இலவச பேருந்து வசதியை அக்குடும்பத்தினரே ஏற்படுத்தி உள்ளனர். (மனிதம் மீது நம்பிக்கைக் கொண்ட தருணங்களில் வெகுசில..)
- சென்ஷி
இந்த அருமையான விஷயத்தை பதிவாக வெளியிட்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
பதிலளிநீக்குஇந்த பதிவின் லிங்க் -ஐ என் நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
பலருக்கும் நம்பிக்கை தரும் நல்ல செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதுளசி டீச்சர் தன் தளத்தில், முன்பு, ஒரு நாட்டு மருத்துவ முறையை அறிமுகம் செய்த ஞாபகம்.
கேரளாவில் மலிந்து கிடக்கும் “ஆத்தா சக்கை” என்கிற Graviola பழமும் சிறந்த மருந்து என்று ஒரு பதிவில் (http://payanikkumpaathai.blogspot.com/2012/02/blog-post.html) படித்தேன்.
பெயரைக் கேட்டவுடனேயே ரெண்டு டம்ளர் வாங்கிக் குடிக்கணும் போலத் தோணுதே?
பதிலளிநீக்குசிறப்பான தகவல். ஜோஷி தம்பதியினரின் சேவை பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்...
நன்றி சுபத்ரா. குழந்தைகளுக்கு எவ்வளவு என்று நீங்கள் பதிவில் கொடுக்கப் பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று தோன்றுகிறது. படித்த இடத்தில் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் போடவில்லை.
நன்றி ராம்வி.
நன்றி DD. உண்மை என்று எப்படித் தெரிந்து கொள்வது? படித்ததைப் பகிர்ந்து கொள்கிறோம். யாருக்காவது உதவினால் சரிதான். தேவை உள்ளவர்கள் கொடுக்கப் பட்டிருக்கும் எண்ணுக்குத் தொலைபேசுவார்கள் இல்லையா?
நன்றி கீதா மேடம்..
நன்றி ஸாதிகா..
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி சென்ஷி.
நன்றி மீனாக்ஷி.
நன்றி ஹுஸைனம்மா. நீங்கள் கொடுத்துள்ள லிங்க் திறந்து எல்லோரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி அப்பாதுரை.
நன்றி கோவை2தில்லி.
வெகு நல்ல செய்தி. மிக மிக நன்றி. ஷாந்தா ஜோஷி தம்பதிகள் நீண்ட நாட்கள் நிறைவாக வாழவேண்டும் . நன்றி எங்கள் ப்ளாக்.
பதிலளிநீக்குஇதுகுறித்து, துளசி டீச்சர் ஒரு பதிவு எழுதிருந்தாங்கன்னு சொன்னேனில்லையா? அதில் குறிப்பிட்டிருந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற தன் தாய் நலமாக இருப்பதாக இந்தப் பதிவர் கூறுகிறார்:
பதிலளிநீக்குhttp://nunippul.blogspot.ae/2013/03/blog-post.html
நல்லதொரு தகவல். உண்மையாவே இதுல குணம் கிடைக்குதுன்னா நிச்சயமா அந்தத்தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள்தான்.
பதிலளிநீக்குஎங்க வாங்குவது.எப்படி சொல்லுங்க pls
பதிலளிநீக்கு