1) வழிகாட்டும் மதுரை பெண்!
14 மாஸ்டர் டிகிரி பெற்று, 64 சாப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல்
பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாளரான, விஜயலட்சுமி: சொந்த ஊர் கோவை.
இன்ஜினியரிங் படிக்கும் போது, வீட்டை எதிர்த்து, காதல் திருமணம் செய்து
கொண்டேன். திடீர் விபத்தில், கணவன் இறந்த போது, என் வயது, 25. காதல் கணவன்
இல்லாத வெறுமை, தற்கொலைக்குத் தூண்டியது. குழந்தைகளின் முகம் மனதில்
நிழலாடியதால், குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற, மன உறுதி பிறந்தது.
வங்கியில், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று, சிறிய சாப்ட்வேர் நிறுவனத்தை, 12 ஊழியர்களுடன், கணவர் வீட்டிலேயே ஆரம்பித்தேன். கடின உழைப்பால் இன்று, 400 ஊழியர்களுடன், மதுரை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் என, நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள், கணினி தொடர்பாக படிக்கின்றனரே தவிர, தொழில் ரீதியான திறனை வளர்க்காததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.
எனவே, நான் சாப்ட்வேர் துறையில் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப் டெவலப்பிங்' பயிற்சியை இலவசமாக தந்து, "மைக்ரோசாப்ட்' துணையுடன், "ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன். இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாப்ட்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி., நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர்.
ஆண்டிற்கு, 200 கிராம மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். இதுவரை, யாரும் தோல்வி அடையவில்லை. மேலும், விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிக்கல் டிரெய்னிங், மன உறுதியை வளர்க்க, கவுன்சிலிங் போன்றவற்றை இலவசமாக வழங்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறேன். சாப்ட்வேர் துறையில் வெற்றியடைந்ததற்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசிடமிருந்தும், இங்கிலாந்தின், "விமன் ஆப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன்.

தொடர்புக்கு: 98421 74800.
2) இரு கால்களை இழந்த இளைஞர் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார்
பயங்கரவாத தாக்குதலில், இரு கால்களையும் இழந்த, மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர், மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை எதிர்பாராமல், வாழ்வில் முன்னேற, திறமை மட்டுமே போதுமானது என, நிரூபித்துள்ளார். ஓவியக் கலையில், சர்வதேச அளவில் சாதனை படைத்து வரும் மைக்கேல், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவராக திகழ்கிறார்.
குண்டு வெடிப்பு:
மணிப்பூரைச் சேர்ந்தவர், கொன்தொஜம் மைக்கேல், 24. இம்பால் கலைக் கல்லூரியில், நுண்கலையில் பட்டம் பெற்ற இவர், தன் முழு கவனத்தையும் ஓவியத்தில் செலுத்தினார். 2007ம் ஆண்டு, உலக அமைதியை மையப்படுத்தி, நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்று வீடு திரும்பிய மைக்கேல், பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில், தன் இரு கால்களையும் இழந்தார். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்ததால், சுய நினைவை இழந்து, "கோமா' நிலையில் இருந்த மைக்கேல், பல நாள் சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பினார். அதன் பின், தன்னம்பிக்கையை மட்டுமே துணையாக கொண்டு, சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, தங்கப் பதக்கங்களை வென்று வருகிறார். கால்களை இழந்த பின், 2009ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச ஓவியப் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
சர்வதேச விருது:
மாநில அரசு, 2011-2012ம் ஆண்டின் சிறந்த கலைஞருக்கான விருதை, மைக்கேலுக்கு வழங்கியது. 17க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருகளை பெற்ற மைக்கேல், சாதிக்கத் துடிக்கும், இன்றைய இளைஞர்களுக்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார். எனினும், இவரது திறமையை பாராட்டி, மத்திய அரசோ, மாநில அரசோ எவ்வித உதவித் தொகையும் இதுவரை வழங்கவில்லை. அவருக்கு அரசு வேலையும் வழங்க முன்வரவில்லை. ""இதுகுறித்து நான் வருந்தவில்லை; என்னை கவனித்துக் கொள்ள, என் திறமையே போதும்,'' என்கிறார், மைக்கேல்.
3) ஸ்டவ் வெடித்து தீவிபத்தில் சிக்கிய மருமகளின் முன் உடல் பகுதிகள் பாதிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது தோலை கொடுத்து மருமகளுக்கு உதவிய மாமனார் பற்றி அறிய இங்கு
4) மனைவி, குழந்தைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குடிகாரப் பெயிண்டர், திடீரென தன்னுடைய பெண் குழந்தையைத் தூக்கி அடையாறு ஆற்றில் வீசி, அடுத்த குழந்தையையும் தூக்கியபோது திகைத்துப் போன மனைவி, அந்தக்குழந்தையை இறுகப் பிடித்துக் காப்பாற்ற, பெயிண்டர் 'சட்' டெனத் தான் ஆற்றில் குதித்து விட்டார். என்ன தெரியாது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தையை நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க தினகரன் நாளிதழ் ஊழியர் தினேஷ் ஆற்றில் குதித்து, காப்பாற்றினார்.
5) நம்பிக்கை .
7) மரம் வளர்ப்பதில் சாதனை, அதிலும் தேச பக்தி.. மயிலாடுதுறையைச் சேர்ந்த, கோவையில் பேருந்து நடத்துனராகப் பணிபுரியும் ம. யோகநாதன். அவரைப் பற்றிப் படிக்க...
8) தனது ஆட்டோவில் காற்றிலேயே சிறு மின்விசிறியைச் சுற்ற வைத்து தயாரித்து செல்ஃபோன் சார்ஜர் வைத்திருக்கும் பரமக்குடிக்காரர் பற்றிய செய்தி.
9) உடை இல்லாமல் வீதியில் நின்ற சிறுமிக்கு புதிய உடை வாங்கி கொடுத்த போலீஸ் அதிகாரி.. (From Face Book)
மதுரைப் பெண் பத்திப் படிச்சேன். பெயின்டர் பத்தித் தொலைக்காட்சிச் செய்தி வந்தது. :(
பதிலளிநீக்குமற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குடிடி எங்கே ஆளையே காணோம்????????
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநானும் நினைத்துக் கொண்டேயிருந்தேன். உங்கள் கேள்வியைப் பார்த்ததும் அவருக்குத் தொலைபேசிப் பார்த்தேன். DD ஃபோன் செய்தால் எடுக்க மாட்டேங்கறார்.
Who is DD ?
பதிலளிநீக்குYou mean Delhi Doordharsan?
They will take the telephone only between 10 am. and 4.p.m. from Monday to Friday. Saturday and Sunday are holidays.
hi hi.
subbu thatha.
back to Chennai.
Superb!
பதிலளிநீக்குThanks.
Sury Sir,
பதிலளிநீக்குThe famous one and only DD in the Web World is Our Dindugal Danapalan. avarai ennamo 4 nala kanom. athan kavalaiya irukku! :(
அருமையான தகவல்கள்......
பதிலளிநீக்குDD எங்கே காணோம்.... நானும் நேற்று நினைத்தேன்.... பின்னூட்டப் புயலை காணோமே என!
எல்லாமே அருமையான தகவல்கள்....
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் சுற்றுபயணத்தில் இருக்கிறார். தொடர் அழைப்பு ஒன்றுக்கு சுற்றுபயணத்தில் இருப்பதால் வந்து எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தார்.
பதிலளிநீக்குஇன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாம் வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டுவதாயும், மனிதநேயம் உள்ளவர்களை அடையாளம் காட்டுவதாகவும் இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
தனபாலன் தற்சமயம் குற்றாலத்தில் இருக்கிறார். திண்டுக்கல் திரும்ப இன்னும் 15 நாட்களாகலாம் என்கிறார்!
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் அருமை...
பதிலளிநீக்குதனபாலன் சாருக்கு நான் தொடர்பதிவு அழைப்பு விடுத்திருந்தேன். அவர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.
ஸ்ரீராம் அண்ணா உங்கள் அழைப்பை ஏற்று தொடர்பதிவு எழுதியாச்சு... அழைப்புக்கு நன்றி.
http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_10.html
டிடி குறித்துத் தகவல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. :))))
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குசெய்திகளுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி. கடைசிச் செய்தி மட்டும் அறிந்திருந்தேன்.
பதிலளிநீக்குசுற்றுப் பயணத்திலிருக்கும் தனபாலன் குறித்து அறியத் தந்தவர்களுக்கும் நன்றி:)! காணவில்லையே சிலகாலமாக என நானும் நினைத்தேன்.
இப்படி எல்லோரையும் தேடவைத்த நல்ல உள்ளம் தனபாலனுக்கு.வாழ்க. அனைத்துச் செய்திகளும் அருமை. ஊன்றுகோலால் சைக்கிள்ரிகஷா ஓட்டிப் பிழைப்பவர் டாப் க்ளாஸ்ஸ். தோல் தந்த மாமனருக்கு ஜே.
பதிலளிநீக்குமுத்தான தொகுப்புகள். யோகநாதன் கடந்த ஆண்டு சிறிய பதிவர் சந்திப்பில் பேசினார். ஆச்சர்யப்பட வைத்த மனிதர்.
பதிலளிநீக்குபரமக் குடிக்காரருக்கு பாராட்டுக்கள். ஆட்டோவின் இயக்கத்தை விசிறி சுற்ற பயன்படுத்தி அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதை பயன்படுத்தியது ஒரு innovative திங்கிங்.
நமது கல்வி முறை சரியாக இருப்பின் அடிப்பது தத்துவங்களை புரிய வைத்து மாணவர்களை இது போல் கருவிகள் கண்டுபிடிக்க ஊக்கம் அளிக்க முடியும்.