திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இரண்டு விஷயங்கள் சொல்லுங்க...

 

நண்பர்களே...
         
ஒரு புதிய முயற்சி. 
          
இரண்டு வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  
             
இந்த இரண்டு வார்த்தைகள் பற்றியும் தனித்தனியாகவோ, சேர்த்து சம்பந்தப்படுத்தியோ, உங்களுக்குத் தெரிந்த, அல்லது உங்களுக்குத் தோன்றும் இரண்டு  விஷயங்கள் பகிர வேண்டும். வேறொருவர் பகிர்ந்திருப்பதை மறுபடியும் சொல்லாதிருப்பது நலம். 

அரட்டை அடிக்கவும் செய்யலாம். புதிய விஷயங்களைத் தெரிந்தும் கொள்ளலாம். சொல்லப்பட்டிருக்கும் வார்த்தையை ஒட்டி ஒருவரே எவ்வளவு விஷயங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம். 

தத்துவமாகவும் இருக்கலாம். பிறர் மனம் புண்படாத நகைச்சுவையாகவும் இருக்கலாம். பொது அறிவு விஷயங்களாகவும் இருக்கலாம்.
    
1) சுதந்திரம்

2) வெற்றிலை  
   

32 கருத்துகள்:

  1. சுதந்திரம்
    =========

    ”நாம் நள்ளிரவில் பெற்றதால்
    இன்னும் விடியவில்லை”

    என்று எழுதியிருந்தார் ஒரு கவிஞர்.

    பதிலளிநீக்கு
  2. இலை வெற்றிபெற்றதால் அது
    வெற்றி + இலை = வெற்றிலை
    என்று ஆனது.

    Otherwise

    வெற்று இலை என்று தான் அழைக்கப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வெற்றிலையை சுதந்திரமாக சுவைக்க முடியாது.

    கூடவே இலவச இணைப்புகள் போல பாக்கும் சுண்ணாம்பும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வெற்றிலை போடுபவர்கள் சுதந்திரமாக தெருவெங்கும் துப்பக்கூடாது.

    பதிலளிநீக்கு
  5. வெற்றிலை பாக்குத்தட்டில் வைத்து சும்மா கொடுக்கப்படவில்லை சுதந்திரம். அது போராடிப்பெறப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அகிம்சையை வெற்று இலையாய் பார்க்கவில்லை காந்தி..
    வெற்றிலையாய் பார்த்ததினால் சுதந்திரத்தை சுவைத்தார் அந்த மகாத்மா.

    பதிலளிநீக்கு
  7. வெற்றிலைக் கொடியின் மீது சுதந்திரமாய் ஏறியது எறும்பு....

    வெற்றிலைக் கொடியின் மீது
    சுதந்திரமாய் சிறுநீர் கழித்தது நாய்...

    பாக்கும் சுண்ணாம்பும் சேர்ந்ததால்
    சுதந்திரமிழந்த வெற்றிலை உயிரை விட்டது...

    பதிலளிநீக்கு
  8. எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் என்று பேசும்நாம் நம் கைகள் வீசி சுதந்திரமாய் நடக்கும் போது அடுத்தவர் மூக்கில் இடிக்காத அளவு சுதந்திரம் வரையறுக்க பட்டு இருக்கிறது.

    வெற்றிலைக்கு தனியாக சிவக்கும் தன்மை இல்லை பச்சையான வெற்றிலையுடன் வெள்ளை சுண்ணாம்பு, சிவப்பு பாக்கு சேர்த்தால் தான் சிவக்கும். அது நம் தேசியகொடியைநினைவு படுத்தும்.
    இரத்தமாய் வாய் சிவப்பது.
    எத்தனை பேர் நம் சுதந்திர காற்றை அனுபவிப்பதற்கு இரத்தம் சிந்தினர் அதை நினைவு படுத்தும்.

    பதிலளிநீக்கு
  9. சுதந்திரதினம் என்றால் பள்ளிப் பருவத்தில் சுதந்திரதினத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டது நினைவுக்கு வரும், ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல், ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே!உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே! என்ற பாடல் , ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம் என்ற பாடல், அதோ அந்த பறவை போல வாழவேண்டும் என்ற பாடல்களுக்கு எல்லாம் தோழியருடன் நான் ஆடிய நினைவு வரும்.
    கொடி ஏற்றியவுடன், தாயின் மணிக் கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர் என்று பாடிய நினைவுகள் வந்து போகும். சிவகாசியில் நாங்கள் இருந்த போது பள்ளி முடிந்து வீடு திரும்பும் வரை வழி எல்லாம் மிட்டாய்,தேசியக் கொடி கொடுப்பார்கள், கதர் சட்டை அணிந்தவர்கள்
    .
    நான் சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவள். அதனால் இது எல்லாம் வியப்பாய் இருக்கும். பள்ளியில் பேச வருபவர்கள் வீராவேசமாய் சுதந்திரம் பெற்றதைப் பற்றிப் பேசுவார்கள்.

    எப்போது மிட்டாய் கொடுப்பார்கள் எப்போது வீட்டுக்குப் போகலாம்.விடுமுறையை மகிழ்ச்சியாய்க் கொண்டாடலாம் என்று இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. வெத்திலையைப்போடேன்டி.சுற்றுப்புறம் நாறுதடி !

    பதிலளிநீக்கு
  11. வெற்றிலை இல்லாமல் மங்கலம் இல்லை.

    சுதந்திரம் இல்லாமல் வாழ்வு இல்லை.
    வெற்றிலை மணப்பது பாக்கு சுண்ணாஆம்பு சேர்த்து.
    சுதந்திரம் மணப்பது மனித நேயம்,சுயமரியாதை கலக்கும் போது.

    பதிலளிநீக்கு
  12. சுதந்திரம்
    தந்திரமாய் நள்ளிரவில்
    வழங்கப்பட்டது ..!

    அடுத்த நாள்
    அஷ்டமி என்பதால் ..!!

    பதிலளிநீக்கு
  13. வெற்றிலையைப் பார்த்ததும் என் நினைவிற்கு வந்தது திருமணம். சுதந்திரம் அங்கு இருவருக்கு பறிபோவது உறுதி.. அதை கொண்டாட வெற்றிலைப் பாக்கு!.

    பதிலளிநீக்கு
  14. ஆனைமுகனுக்கும்
    அனுமனுக்கும்
    வெற்றிலை மாலை
    அணிவித்தால்
    வெற்றிகள் தேடி வரும் ..!

    பதிலளிநீக்கு
  15. நள்ளிரவில் பெற்றோம் இன்னும் விடியவே இல்லை என்று
    வளரும் நாடாய் எத்தனை ஆண்டுகளுக்குத்தான்
    முகாரி பாடிக்கொண்டிருக்கப்
    போகிறோம் நாம் ..??!!

    வல்லரசாய் மாறி
    விடியலில் பூபாளம்
    இசைக்கும் நாள் எந்நாளோ..!!??

    பதிலளிநீக்கு
  16. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  17. சுதந்திரம் என்பதன் உண்மையான பொருள் என்ன?? நம் நாடு சுதந்திரம் ஆகிவிட்டதுனு சொல்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி இருக்கா? சந்தேகமே! முன்னே ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டுக் கிடந்த நாம் இன்று கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், அவங்க கொடுக்கும் இலவசங்களுக்கும் அடிமை. இதிலே சுதந்திரம் எங்கே இருந்து வந்தது? ஒண்ணுமே புரியலை உலகத்திலே! :))))))))

    வெற்றிலை குழந்தைங்களுக்கு வயிற்றுக் கோளாறுன்னா வெற்றிலை ஒன்று, ஓமம் ஒரு டீஸ்பூன், இரண்டு பல் பூண்டு, ஒரு சிட்டிகை கல் உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் வைத்து அம்மியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாலாடைச் சாறு புகட்டி விட வேண்டும். சிறிது நேரத்தில் குழந்தையின் வயிற்றுக் கோளாறு சரியாகும். சில குழந்தைகளுக்குப் பெரியதாக சத்தமாக ஏப்பம் மூலமும் வாயு வெளியேறும். அதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. இது கொடுத்ததும் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்காவது பால் புகட்டக் கூடாது. வேறு எந்த ஆகாரமும் கொடுக்கக் கூடாது. :)))))))


    ஸ்ரீராம், தலையில் நச் நச் னு அடிச்சுக்கிற சத்தம் இங்கே வந்து காதில் விழுது.

    இனிமே இம்மாதிரிக் கேள்வி கேப்பியா, கேப்பியா, கேப்பியானு யாரோ கேட்கறாங்களே, ஹிஹிஹி, அவரோட ம.சா. தான். :)))))

    பதிலளிநீக்கு
  18. இம்மாதிரிக் கேள்வி கேப்பியா, கேப்பியா, கேப்பியா, கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா , கேப்பியா...

    பதிலளிநீக்கு
  19. சுதந்திரம்:
    காந்தி தாத்தா வாங்கி கொடுத்தது...

    வெற்றிலை:
    எங்கள் தாத்தா வெட்டியாக இருக்கும் போது போட்டு துப்புவது...

    எப்பூடி.............!!!

    பதிலளிநீக்கு
  20. எல்லார் வாயிலயும் வெத்திலையப் போட்டு விட்டா, (கேள்விக்கணைகள், வெட்டிப்பேச்சுகளிலிருந்து தப்பித்து) நாம கொஞ்ச நேரம் சுதந்தரமா இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. ஹூசைனம்மா, பின்னிட்டீங்க போங்க. சி.சி.மா.

    பதிலளிநீக்கு
  22. //சுதந்திரம்:
    காந்தி தாத்தா வாங்கி கொடுத்தது...//

    அவரோட பேரு என்ன சார் ?
    அப்படியே காந்தி(யோட) கொள்ளு தாத்தா பேரையும் சொல்லிப்புடுங்க (தெரிஞ்சா)

    பதிலளிநீக்கு
  23. வெற்றிலையால்
    நாக்கு சிவக்க ஆசை படவில்லை
    குண்டாந்தடியால்
    உடல் சிவக்க ஆசை பட்டான்
    தியாகி !

    பதிலளிநீக்கு
  24. சுதந்தரம் - சுதந்தர தினத்துக்கு விடுமுறை என்று குழந்தைகள் குதிக்கிறார்கள்! பெரியவர்கள் முட்டாள் பெட்டிக்கு முன் உட்கார்ந்து நடிகர், நடிகைகளின் பேட்டிகளைப் பார்க்கப் போகிறார்கள்!!

    வெற்றிலையின் முக்கியத்துவம் போய், அது வெற்று இலையாகவே ஆகி விடும் போலிருக்கிறது; ஆம், முன்பு திடீர் விருந்தினருக்கும் விடைபெறுகையில் வெற்றிலை பாக்கு கொடுப்பார்கள், இந்தக் காலத்தில் யார் வீட்டில் வெற்றிலை ஸ்டாக் இருக்கிறது? ஆக மொத்தம் வெற்றிலையின் முடியாட்சி பறிபோய், சுதந்தரம் கிட்டி விட்டது!! {ஸ்.. அப்பாடி :-)) }

    பதிலளிநீக்கு
  25. வெற்றிலையைப் போட்டு எங்கு வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் (பேருந்து, ரயில்) துப்பும் சுதந்திரம் நம் நாட்டில் மட்டுமே உண்டு.

    இது எப்படி இருக்கு?

    பதிலளிநீக்கு
  26. எனது சுதந்திரம் அடுத்தவா்களின் மூக்கு நுனி வரைதான்.

    பதிலளிநீக்கு
  27. @அப்பாதுரை
    மேலோட்டமாக நோக்கினால் நகைச்சுவையாகத் தோன்றும். ஆனால் மனம் முழுக்க வருத்தத்துடன் இதை எழுதினேன். அதுவும் ஒருமுறை வடக்கே போய்விட்டு வந்துவிட்டால் பலநாட்கள் யாரோ 'புளிச்' புளிச்' என்று துப்புவதுபோலவே கனவு வருகிறது எனக்கு!

    இதை எழுத எனக்கு எழுத்துச் சுதந்திரம் கொடுத்த இந்த தேசத்தை வருத்தத்துடன் கவனித்து வரும் பல குடிமக்களில் நானும் ஒருத்தி.

    பதிலளிநீக்கு
  28. இரண்டும் கொடியுடன் சம்பந்தப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. சொ.மு. முத்து என்பவர் இந்த வார தினமணிக் கதிரில் எழுதியிருப்பது :

    வெற்றிலையில் 3 வகை உண்டு. வெற்றிலையின் காம்புநுனி வலதுபுறம் சாய்ந்திருப்பது ஆண் இலை. அது இடதுபுறம் சாய்ந்திருப்பது பெண் இலை. சாயாமல் நேராக இருந்தால் அலி இலை. வெற்றிலையின் நரம்புப் பகுதிக்குக் காமத்தைத் தூண்டும் சக்தி இருப்பதால் கிரகஸ்தர்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். பிரம்மச்சாரிகளும், சன்யாசிகளும் உபயோகிக்கக் கூடாது. ஆண் இலையை ஆண்களும், பெண் இலையை பெண்களும் உபயோகிக்க வேண்டும். அலி இலையை உபயோகிக்கக் கூடாது.

    வெற்றிலையை முதலில் போட்டு பிறகு பாக்கைப் போட்டு
    மெல்பவர்கள் வாயில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!