புதன், 28 ஆகஸ்ட், 2013

ஆதார் அப்டேட், ஒல்லி விக்ரம், மோசர் விளக்கு - வெட்டி அரட்டை

       
தினமணியில் 24/8 அன்று படித்த செய்தியின்படி  சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் பெற ஆதார் எண் அவசியமில்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருப்பதாக மாநிலங்களவையில் சொல்லப் பட்டிருக்கிறது.
  

ஒரு டென்ஷன் குறைந்தது.

ஆனால் இந்த நிலைப்பாடும் பின்னர் மாற்றப் படலாம். இந்த அரசைக் குறித்து எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியாதே....!

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
ஐ விக்ரம் எடை குறைந்திருப்பதாய்ச் சொல்லி விகடனில் போடப் பட்டிருக்கும் படம் பார்க்க பரிதாபமாய் இருக்கிறது. அழகான விக்ரம் காணமல் போய்  சூம்பிய கன்னங்களுடன் நோயால் தாக்குண்டவர் போல இருக்கிறார்!   
   
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
எப்போதோ ஹுஸைனம்மா பதிவில் படித்தேன் என்று ஞாபகம். ஒரு 2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் சுத்தமான தண்ணீரை நிரப்பி மூடி, (கருப்பு மூடியாக இருந்தால் பயன் அதிகம்) கூரையில் கச்சிதமாக ஓட்டை போட்டு திறப்பைக் கச்சிதமாக மூடி விட்டால் சூரிய ஒளி வீட்டினுள் கொடுக்கும் வெளிச்சம் காரணமாக பல ஏழை நாடுகளில் மின்சாரக் கட்டணம் குறைவாகச் செலுத்த முடிந்ததாம். பிரேசில் நாட்டு மெக்கானிக் ஆல்ஃபிரெட் மோசர் என்பவர் தன் வீட்டில் செய்து பார்த்தது, அருகிலிருப்போர், அருகிலிருப்போர் என்றே பரவி இப்போது உலகம் முழுக்க இதற்கு மோசர் விளக்கு என்றே பெயராம். 
   
விகடனில் பாரதி தம்பி இதைப் பற்றி எழுதி இருக்கிறார்.
  
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அதே விகடனில் பொக்கிஷம் பகுதியில் மகேந்திரன் சாசனம் என்ற ஒரு படம் எடுத்தபோது எடுத்த பேட்டியைப் பிரசுரம் செய்திருக்கிறார்கள். முத்தாய்ப்பாக அவர் சொல்லியிருந்தது கவர்ந்தது. "நான் நினைவுகொள்ளப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லைனு தோணுது. ஒரு நல்ல சிற்பம் செதுக்குறவன் அதன் கீழ தன் பெயரை எழுத வேண்டியது இல்லை. பின்னால வர்றவங்க பார்க்க, சிற்பம் மட்டும் இருந்தால் போதும். காத்துல எழுதின பாட்டு மாதிரி கரைஞ்சு போயிடணும்னு ஆசைப்படறேன்" 
   
மகேந்திரன் படங்களில் மிகவும் பிடித்தது முள்ளும் மலரும். அடுத்து நெஞ்சத்தைக் கிள்ளாதே, அப்புறம் உதிரிப் பூக்கள். (பூ.பூ ஏனோ கவரவில்லை!)

[][][][][]][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

ஃப்யோதர் தஸ்தவேஸ்கி எழுதிய 'இடியட்' என்ற 1000 பக்க நாவலை 'அசடன்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் திருமதி எம் ஏ சுசீலா. முன்னரே தஸ்தயெவ்ஸ்கியின் 'கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட்' புத்தகத்தை 'குற்றமும் தண்டனையும்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கும் இவரது பேட்டியும் இந்த வார விகடனில். 
    
"ஒரு கலாச்சாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாச்சாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்" என்ற ஜெயகாந்தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் கருத்தை முன்வைக்கிறார்.
     
என் மனைவி இவரிடம் படித்தவர் என்பதில் எனக்கு ஒரு சந்தோஷம்.  
                
{}{}{}{}{}{}{}}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}}}   
      
மும்பையில் மறுபடி ஒரு கொடூர பாலியல் பலாத்காரச் சம்பவம். அதுவும் பாதிக்கப்பட்டவர் ஒரு ஜர்னலிஸ்ட்.  பழைய சம்பவங்களில் பிடிக்கப் பட்ட குற்றவாளிகள் என்னவானார்கள்? இவர்களை பொது இடத்தில் நிற்கவைத்து சுட்டாலொழிய இது மாதிரி சம்பவங்கள் நிற்கப் போவதில்லை.
              
*************************************************************************
பாஸிட்டிவ் செய்திகள் தொடரவா வேண்டாமா என்ற வாக்கெடுப்புக்கு எல்லோரும் பாஸிட்டிவாகவே பதில் சொல்லியிருந்தீர்கள். நல்ல யோசனைகளும் சொல்லியிருந்தீர்கள். குறிப்பாக, ஹுஸைனம்மாவின் கமெண்ட் "நச்" !  'உண்மைதான் இல்லை?' என்று ஆடிப் போய் விட்டேன்!
சற்றே மாறுதல்களுடன் வெளியிடப்படும் பாஸிட்டிவ் செய்தித் தொடருக்கு இப்போது வாசகர்கள் கூடியிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
                          
   

15 கருத்துகள்:

  1. மனம் கவர்ந்த செய்திகள்
    ஒன்றைத் தவிர
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மும்பை செய்தி பற்றிப் பலரும் கருத்துக் கேட்கிறாங்க. நானெல்லாம் சொல்லி என்ன ஆகப் போகிறது? இன்னொரு பக்கம் இம்மாதிரிக் குற்றம் செய்பவர்கள் மிகவும் கீழ்மட்டத்திலிருந்தே வருவதாகவும் சொல்கின்றனர். இவங்களுக்கு சினிமா ஹீரோக்கள் தான் முன் உதாரணம். :(( இப்போ ஞாயிறன்று கூட ஒரு படம் பாதி(வழக்கம் போல்) பார்த்தப்போ, எம் ஐ டியில் படிக்கும் கதாநாயகியைப் படிப்பறிவற்ற ரவுடியான கதாநாயகன் காதலிக்கிறானாம். அந்தப் பெண்ணையும் தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான். இம்மாதிரித் தானே அந்த இளைஞர்களுக்கும் நினைப்பு வரும்! :(

    பதிலளிநீக்கு
  3. இந்தக் "காதல்" னு ஒரு தமிழ்ப்படம் வந்ததே! அது இதை விட மோசம்! :(((

    பதிலளிநீக்கு
  4. மும்பை செய்திக்காக கண்டிப்பா வெட்கப்படனும். நம்ம வீட்டு பொண்ணு நல்லா இருக்கும் வரை இதெல்லாம் பெருசா தோணாது. எனக்கு தெரிஞ்சு இது மாதிரி விசயத்துல ஈடுபடுறாவங்க நாக்கையும், கண்ணையும் பிடுங்கிகிட்டு நெத்தில பச்சை குத்தி, குடியுரிமையை பறிச்சுக்கிட்டு விட்டுடனும். அப்போதான் வேதனை புரியும். மத்தவங்களுக்கும் ஒரு படிப்பினையா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஹை, இந்தப் பதிவில் எம்பேரும் வந்திருக்கு - அதுவும் ரெண்டு வாட்டி!! வாவ்!! ரொம்ப நன்றி.

    அந்த ‘மோஸர் லைட்’ - ஆமாம், ரொம்ப நாள் முன்னாடி என் பதிவில் சொல்லிருந்தேன். ஆனா அதுக்குப் பேர் இப்பத்தான் தெரியும்.

    விக்ரம் - காணச் சகிக்கலை.

    நம்ம தேனம்மையும் சுசீலா மேடத்தின் மாணவிதான்.

    மும்பை - ரொம்பக் கொடுமை. அன்றாட விபத்துகள் மாதிரி, இதுவும் ஒரு சாதாரண நிகழ்வாகவே மாறி வருவது வேதனை. போதை, பெண்கள் குறித்த மீடியா சித்தரிப்பு மற்றும் சில பெண்களின் உடை உள்ளிட்ட பல காரணங்கள் இதனடிப்படையாக இருக்க, பெண்கள் தனியாக/துணையோடு இரவு நேரத்தில் சென்றதாக (தவறான செய்தி) சிலர் குறைகூறுவது வருத்தமாருக்கு. அப்படின்னா, பீஹார் பெண் போலீஸ் உறவுகளோடுதானே கூட்டமாகப் போனாங்க?

    சினிமாக்கள் - இதுல வர்ற கொடுமைகளைக் கண்டா... ரவுடிகளைக் காதலிப்பதும், அதுக்கும்மேலே மனநிலை பிறழ்ந்தவரைக்கூட காதலிப்பதும்...

    காதல் படத்தோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? தன் மனசுக்குப் பிடிச்சவனைப் பார்த்த பிறகுதான் கதாநாயகி வயசுக்கே வருவா.. ச்சை.. அந்த அதியற்புதம் ‘மைனா’விலும் தொடர்ந்தது.. இப்பவும் சமீபத்துல ஏதோ ஒரு படத்துல இந்த கண்றாவி வந்துச்சாம்... இதையெல்லாம் தடை செஞ்சாப் போதும்.. ஓரளவு சரியாகிடும்னு ஒரு நம்பிக்கை...

    பதிலளிநீக்கு
  6. //ஒரு கலாச்சாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாச்சாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச்செல்வதுதான் மொழிபெயர்ப் பின் தலையாய சவால்" என்ற ஜெயகாந்தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் கருத்தை முன்வைக்கிறார்.//

    வரிகளின் அமைப்பு குழப்பமேற்படுத்துகிறது. இது யார் கருத்து என்பது தான் குழப்பம்.
    ஆனந்தவிகடனின் வரிகளைப் போட்டால் நலம்.

    பதிலளிநீக்கு
  7. ஆதார் அட்டை விஷயம் ஆறுதல் தருகிறது!

    'காற்றில் எழுதின கவிதை மாதிரி க‌ரைந்து போய் விடவேண்டும்!" என்ன அழகான வரி!!

    தொகுப்பு மிகவும் சிறப்பு!!

    பதிலளிநீக்கு
  8. #என் மனைவி இவரிடம் படித்தவர் என்பதில் எனக்கு ஒரு சந்தோஷம்.#
    அவரிடம் படித்தவரை நீங்கள் மனைவியாய் அடைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்...சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  9. எம்.ஏ. சுசீலா அவர்கள் மொழிபெயர்ப்பு கதைகள் படித்து சிலவற்றை குறிப்பு எடுத்து வைத்து இருக்கிறேன். டெல்லியில் பதிவர் சந்திப்பில் அவர்களை பார்க்க முடியவில்லை.
    சில புத்தகங்கள் டெல்லியை விட்டு போகும் போது என் மகளிடம் கொடுத்து சென்றார்கள். பழக இனிமையானவர்கள் வயது ஒரு பொருட்டல்ல என்று சாதனைகள் படைப்பவர். அவர் உங்கள் மனைவியின் ஆசிரியர் என்றால் பெருமை படவேண்டிய விஷயம். நம் தேனம்மைக்கும் அவர் ஆசிரியர் தான்.
    பாஸிடிவ் செய்திகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்லியிருக்கும் ஆதார் அட்டை விஷயம் எனக்குப் பெரிய நிம்மதியை தந்த விஷயம்.எப்படியும் பாசிட்டிவாக செய்திகள் இருக்கும் என்ற ஆவலுடனே படிக்க வருவேன்.இந்த பாசிடிவ் செய்திகளின் ரசிகை ஆகிவிட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. A+ B+ O+ All+ = Author positive, Bloggers positive, Omniverse positive, So All positive!!

    பதிலளிநீக்கு

  12. <> நன்றி ரமணி ஸார்.

    <> நன்றி கீதா மேடம். காதல் படம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.

    <> நன்றி ராஜி.

    <> நன்றி ஹுஸைனம்மா. //நம்ம தேனம்மையும் சுசீலா மேடத்தின் மாணவிதான்.//

    தெரியும். அவர் பதிவில் அப்பவே பதில் சொல்லியிருக்கேன்!

    மும்பை - பொதுவாகவே தனிமனித ஒழுக்கம் என்பது நம்நாட்டில் சகல விதங்களிலும் குறைந்து வருகிறது.

    <> நன்றி ஜீவி ஸார்.. நான் வரிகளை மாற்றவில்லை. அப்படியேதான் தந்திருக்கிறேன். சுசீலாம்மா பக்கத்துக்குச் சுட்டி தருகிறேன். அங்கே முழு பேட்டியும் பதிவில் வெளியாகியுள்ளது.
    http://www.masusila.com/

    <> நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

    <> நன்றி பகவான்ஜி.

    <> நன்றி கோமதி அரசு மேடம்.

    <> நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். எனக்கும் பெருத்த நிம்மதியைத் தந்த விஷயம் அது! ஏனெனில் எங்கள் ஏரியா பக்கம் இன்னும் ஆதாரக் குழு வரவில்லை!

    பதிலளிநீக்கு
  13. /சிற்பம் மட்டும் இருந்தால் போதும். காத்துல எழுதின பாட்டு மாதிரி கரைஞ்சு போயிடணும்னு ஆசைப்படறேன்/ ஆஹா! ம். எடுக்கிற படங்களில் எல்லாம் வாட்டர் மார்க் சேர்க்கிற என் போன்றவரை சிந்திக்கச் வைக்கிறார்:)!

    /"ஒரு கலாச்சாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாச்சாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்"/

    அருமையான மேற்கோள்.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!