வெந்தயக் கீரை ஒரு கட்டு.
நல்லெண்ணெய் ஆறு டீஸ்பூன்.
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்.
பெருங்காயப் பொடி அரை சிட்டிகை.
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்.
கடலை மாவு அரை கப்.
உப்பு: தேவைக்கு ஏற்ப.
வெந்தயக் கீரை இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து, நன்றாகக் கழுவி, பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பிலேற்றி, எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயம், கீரை இலைகள் இரண்டையும் அரை கப் தண்ணீர் விட்டு, வதக்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கடலைமாவு இவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும்.
வாணலியில் இருக்கும் கீரை வதக்கலில் கடலைமாவுக் கலவையை மெதுவாகத் தூவி, கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
பிறகு, ஸ்டவ்வை சிம்மரில் வைத்து, வாணலியை மூடி வைத்து, மூன்று நான்கு நிமிடங்கள் கழித்து, இறக்கிவிடலாம்.
இதை சாதத்தோடு பிசைந்தோ அல்லது சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.
சத்துள்ள குறிப்பு... நன்றி...
பதிலளிநீக்குஆகா, அருமை, பருப்பு உசிலி செய்யறாப்போலேயே பருப்புக்களை உப்பு, காரம் சேர்த்து அரைத்துக் கொண்டு கீரையைப் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் தனியாக வைத்து விட்டுப் பின் அரைத்த பருப்பில் பிழிந்து போட்டுக் கலந்து கொண்டு எண்ணெயில் உசிலியாக வதக்கலாம். அல்லது எண்ணெய் குறைத்துச் சேர்ப்பவர்கள் எனில் இட்லித் தட்டில் கொஞ்சம் வேக வைத்து எடுத்துப் பின்னரும் உசிலிக்கலாம். இன்னிக்கு வெந்தயக் கீரை சப்பாத்தி தான் பண்ணப் போறேன். நினைவு இருந்தால் படம் எடுக்கணும். :)
பதிலளிநீக்குகடலை மாவில் பஜியா செய்கையில் மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வெந்தயக் கீரை, பாலக், கடுகுக் கீரை, முள்ளங்கிக் கீரை ஆகியவற்றையும் சேர்ப்பார்கள். காலை நாஷ்டாவுக்கு பஜியாவும், மைதாமாவில் செய்த ஜிலேபியும் தான் சூடாகக் கிடைக்கும்.
பதிலளிநீக்குவெந்தயக்கீரையை நறுக்கினால் கசப்பு அதிகமாகத் தெரியுமே! அப்படியே கூடப் பண்ணலாமே!
பதிலளிநீக்குசப்பாத்திக்கு பண்ண ஒரு side-dish ரெசிபி கொடுத்ததற்கு நன்றி! நிச்சயம் செய்து பார்க்கிறேன்
அருமையான சத்துள்ள உணவுக்குறிப்பு! நன்றி!
பதிலளிநீக்குநல்ல குறிப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு