புதன், 5 மார்ச், 2014

உள்பெட்டியிலிருந்து 3 2014



                                                          

ஜோக்....ஜோக்...ஜோக்...!

வாத்தியார் : ஏண்டா டெய்லி என்னைப் பார்த்ததும் மட்டும் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கறே?"
மாணவன் : "டாக்டர்தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போடச் சொன்னார்!"
 
*******************************************************************
ச்சே.... என்ன கண்டுபிடிப்பு!

உலகம் எவ்வளவு வேகமாக வெளியே மாறுதலடைந்தாலும் அதைப் பகிர நாம் தேடுவதென்னவோ நம் பழைய நண்பர்களைத்தான் இல்லை?
 
******************************************************************

அடுத்த கண்டுபிடிப்பு!

 
ரசாயன ஆயுதத்தைவிடத் தீவிரமான ஆயுதம் நேசிப்பவர்களின் மௌனம்.
 
****************************************************************************

ச்ச்ச்சே.... என்ன உலகமடா.... 

நம்மை விரும்புபவர்களை அலட்சியம் செய்கிறோம். அலட்சியம் செய்பவர்களை விரும்புகிறோம். புன்படுத்துபவர்களை நேசிக்கிறோம். நேசிப்பவர்களை புண்படுத்துகிறோம். விந்தையான உலகம்!
 
*********************************************************************
 
                                                      


கொடைவள்ளல்
 
உச்சியிலிருந்த அழகிய ஒற்றை மலரைப் பறிக்க மரம் ஏறியவன் தவறி விழுந்தானாம். கடவுளைச் சபித்தவண்ணம் கண்திறந்த போதுதான் தெரிந்ததாம் அழகிய தாமரை மலர்களின் நடுவே விழுந்திருப்பது. நம் விருப்பங்களைக் கடவுள் பறிப்பதில்லை. இன்னும் அதிகமான வாய்ப்புகளை அள்ளித் தருகிறான்.
 
***********************************************************

                                                             
 
வெள்ளைமனம் 
 
ஆசிரியர் கரும்பலகையை அழிக்கும்போது குழந்தையும் தான் எழுதியதை ரப்பரால் அழிக்கிறது. குழந்தை மனம்!
 
*************************************************************
 
                                                       
                                                       
யாதோங் கீ பாராத்...

நினைவுகள் விநோதமானவை. கூட்டத்திலிருக்கும்போது நம்மை அண்டுவதில்லை. தனித்திருக்கும்போது ஒரு பொதுக்கூட்டம் போலவே சூழ்ந்து கொள்கின்றன.
 
******************************************************************

எது பாஸிட்டிவ்?
 
மிகச் சிறப்பான விஷயங்கள் நல்லதாக நடக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது பாஸிட்டிவ் எண்ணம் அல்ல. எது நடந்தாலும் ஏதோ நல்லதுக்குத்தான் நடந்திருக்கிறது என்று எண்ணுவதே பாஸிட்டிவ் எண்ணம்.
 
*****************************************************************
 
                                                     

அம்மாடி... இதுதான் காதலா...அட ராமா...

ஒரு இனிய சண்டைக்குப் பின்,

காதலன் : "எதற்காக எனக்கு பிளாங்க் மெசேஜாக அனுப்புகிறாய்?"
காதலி : "ஏனென்றால் நான் உன்னுடன் பேச மாட்டேன்!"
 
******************************************************************

ஆமாம்... கஷ்டமுங்கோ...

அன்பின் அளவை அளப்பது கடினம். அன்பின் காரணம் அறிவதும் கடினம். 
 
****************************************************************

டீலா?
 
"நீங்கள் தூங்குமுன் உங்களைப் புண்படுத்திய எல்லோரையும் மன்னித்து விட்டால், நீங்கள் விழித்து எழுமுன் உங்களை நான் மன்னித்து விடுவேன்" - சாய்ராம்.
 
***************************************************************

தவறில்லை...
 
தவறுகள் வெற்றியின் ரகசியக் கதவு. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கின்றன. அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கின்றன. 

*******************************************************************
 
                                                

பலரும் சிலரும்!

நம்மை அறிந்தவர்கள் ஆயிரம் பேர்கள் இருக்கலாம். ஆனால் நம்மைப் புரிந்தவர் சிலரே. 

*************************************************************

17 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமையான கருத்துக்கள் கொண்ட்வை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. கண்ணாடி ஹா... ஹா... அட ராமா - ஹிஹி...

    விந்தை உலகம் + பலரும் சிலரும் உண்மை...

    பதிலளிநீக்கு
  3. அனைத்து மொழிகளும்
    நகைச் சுவைத் துணுக்குகளும் அருமை
    குறிப்பாக தலைவலிக் கண்ணாடி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை. நேசிப்பவர்களை வெறுப்பதும்,வெறுப்பவர்களை நேசிப்பதும். தனிமையில் வெறுமைக் கூட்டமும் உண்மை.சேர்ந்திருக்கும்போது வெறுமை ஓடுவதும் உண்மை. நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. 'நம்மை நேசிப்பவர்களை அலட்சியம் செய்வது - அலட்சியம் செய்பவர்களை நேசிப்பது ' என்ற வரிகள், எழுதியவர் ஒரு பெண் ணோ என்று ஐயுற. வைக்கின்றன ;

    பதிலளிநீக்கு
  7. அனைத்திலும் குழந்தை மனம் அதிகம் ரசிக்கச் செய்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. முதல் ஜோக் அரதப் பழசு! :))) இதுவே கணவன், மனைவி, மாமியார் , மருமகள் பேசுகிறாப்போல் வந்தாச்சு. அனைத்தும் அருமை. :))))))

    பதிலளிநீக்கு
  9. இது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளறைப் பெட்டி போல, ஒரு பொக்கிஷமே இருக்கும் போல! :))))

    பதிலளிநீக்கு
  10. //நம்மை விரும்புபவர்களை அலட்சியம் செய்கிறோம். அலட்சியம் செய்பவர்களை விரும்புகிறோம். புன்படுத்துபவர்களை நேசிக்கிறோம். நேசிப்பவர்களை புண்படுத்துகிறோம். விந்தையான உலகம்!
    // செம லைன்ஸ்

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார்

    பதிலளிநீக்கு
  11. இரசிக்க, சிரிக்க, சிந்திக்க வைத்தன. அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  12. தவறுகள் வெற்றியின் ரகசியக் கதவு. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கின்றன. அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கின்றன. //முத்துக்களில் இது நன் முத்து:)

    பதிலளிநீக்கு
  13. "எது நடந்தாலும் ஏதோ நல்லதுக்குத்தான் நடந்திருக்கிறது என்று எண்ணுவதே பாஸிட்டிவ் எண்ணம்" - அர்த்தமுள்ள பொன்மொழி

    பதிலளிநீக்கு
  14. அட? மாடிப்படி மாதுவா? எப்போ மாடி வீட்டு மாது ஆகப்போறீங்க? :))))))

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் அருமை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!