ஞாயிறு, 23 மார்ச், 2014

ஞாயிறு 246:: கவிஞர்களே வாருங்கள்!

               

கவிதை எழுதுங்கள்! 
          

33 கருத்துகள்:

  1. நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா
    மலை மேலே ஏறி வா
    மல்லிகைப் பூக் கொண்டு வா

    காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
    குருவி குருவி கொண்டைக்குப் பூக்
    கொண்டு வா
    கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா
    கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டுவா

    பதிலளிநீக்கு

  2. வானம் என்னும் பந்தலில்
    நிலவு நீந்தும் காட்சி - அழகு..!

    பதிலளிநீக்கு
  3. அருமையான படம்......

    கவிஞர்களுக்கு அழைப்பு..... சீக்கிரம் வாருங்கள் கவிஞர்களே!

    பதிலளிநீக்கு
  4. வெளக்கி வச்சிருந்த

    வெள்ளித்தட்டுல

    ஒண்ணு

    கொறயுதேன்னு

    தேடிக்கிட்டிருந்தேன்.

    இங்கதான் இருக்கா......?

    பதிலளிநீக்கு
  5. காட்சியே கவிதைதான்!

    @ கீதாம்மா,

    நிலாவா:))? கவிதைக்குப் பொய் அழகு. சரிதான்:)!

    பதிலளிநீக்கு
  6. @ரா.ல., நிலா இல்லையா, அப்புறமா அழுதுடுவேன்! :)))))) பாவம் மீ குழந்தை ஒன்லி! :))))

    பதிலளிநீக்கு
  7. @கீதா,
    கவிதை எழுத வரவங்களுக்குத் தான் - ராமலக்ஷ்மி மாதிரியானவர்களுக்குத்தான் இது நிலாவா, சூரியனான்னு தெரியும்!
    நாம் ஒதுங்கிடலாம், வாங்க!
    (கோவிச்சுக்காதீங்க, ப்ளீஸ்!)

    @ராமலக்ஷ்மி , நீங்கள் புகுந்து விளையாடுங்க, உங்கள் கவிதையை நாங்க வந்து படிச்சு ரசிக்கிறோம், சரியா?

    பதிலளிநீக்கு
  8. லேபில்லேயே மூன் டவர்னு தான் போட்டிருக்கு ரஞ்சனி. இதைச் சந்திரன்னே வைச்சுப்போமே! :)))))

    பதிலளிநீக்கு
  9. பொன் விளைகையில் அறுவடைக்கு கிளம்பின மேகங்கள்! மாலைச்சூரியன்!

    பதிலளிநீக்கு
  10. நீ காலைச் சூரியன்.கால்களுக்கு வலு கொடுக்க நடக்கச் சொல்லும் சூரியன். எழுந்து என்னைப் பார் விழித்துக்கொள் அறிவுக் கண்ணைத் திற. இந்த ஜோதியில் உன் அழுக்குகளைப் போக்கு. இருளிலிருந்து வெளியே வா. மிக நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  11. இந்த நேரம் பாத்து எனக்குக் கவிதை எழுத வரலையே... (இல்லாட்டி அருவியாக் கொட்டிடுமாக்கும் - சிரிக்குது மனஸ்) சொக்கா... ஸாரி... ஸ்ரீராமா...!

    பதிலளிநீக்கு
  12. லேபிள் உறுதிப்படுத்தி விட்டதா:)? அப்ப சரி.

    பதிலளிநீக்கு
  13. வானத்தில் வலம் வருவது
    நிலவும் முகிலும்

    அழுதவுடன் காணாமல் போகும்
    கண்ணீர் போல் முகில்
    தான் சுமந்து வந்த நீரை மழை பெய்தவுடன்
    காணாமல் போகும்

    குளிர் நிலவோ அல்லியை
    மலரச்செய்யும்
    ஆனால் ஆதவன் வந்ததும்
    காணாமல் போய்விடும்.

    இரண்டும் காணாமல் போனாலும்
    மீண்டும் மீண்டும் வந்து போவது
    இயற்கையில் தினசரி நடக்கும்
    அதிசயம்.

    எது வந்து போகினும்
    என்றும் மாறாதிருப்பது
    வானம் ஒன்றே

    அதுபோல் இன்பம் வரினும்
    துன்பம் வரினும் என்றும் மாறுபடா
    மனதை பெற்றிடுவோம்.

    பதிலளிநீக்கு
  14. வானத்தில் வலம் வருவது
    நிலவும் முகிலும்

    அழுதவுடன் காணாமல் போகும்
    கண்ணீர் போல் முகில்
    தான் சுமந்து வந்த நீரை மழை பெய்தவுடன்
    காணாமல் போகும்

    குளிர் நிலவோ அல்லியை
    மலரச்செய்யும்
    ஆனால் ஆதவன் வந்ததும்
    காணாமல் போய்விடும்.

    இரண்டும் காணாமல் போனாலும்
    மீண்டும் மீண்டும் வந்து போவது
    இயற்கையில் தினசரி நடக்கும்
    அதிசயம்.

    எது வந்து போகினும்
    என்றும் மாறாதிருப்பது
    வானம் ஒன்றே

    அதுபோல் இன்பம் வரினும்
    துன்பம் வரினும் என்றும் மாறுபடா
    மனதை பெற்றிடுவோம்.

    பதிலளிநீக்கு
  15. பட்டாபி ராமன் - சூப்பர்! கலக்கிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  16. வல்லி சிம்ஹன், மாடிப்படி மாது, நல்லா இருந்தது கவிதைகள்.
    கீதாம்மா - நர்சரி பாடல்களா! குழந்தை மனசு உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  17. இராஜராஜேஸ்வரி, தளிர் சுரேஷ் இரண்டு வரிகளில் சிக்கனமாக சீரிய கற்பனை! அற்புதம்! நன்றி!

    பதிலளிநீக்கு

  18. முழு நிலவா நீ
    என்னவளுடன் போட்டியிட முன்
    வருகிறாயா. ? இல்லை பயந்துபோய் முகிலின் பின்னே மறைகிறாயா?;

    பதிலளிநீக்கு

  19. அது என்ன ... ஞாயிறு 246...? விளங்கவில்லையே...!

    பதிலளிநீக்கு
  20. ரா.ல. ஒத்துண்டீங்களா, அப்பாடா!

    கெளதமன் சார், குழந்தை மனசா? நான் குழந்தையே தான் சார்! ஒன்லி குழந்தை இன் தி வெப் வேர்ல்ட்!

    பதிலளிநீக்கு
  21. எனக்கென்னவோ கீதா சாம்பசிவம் எழுதிய கவிதை தான் பொருத்தமாக தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  22. ஆஹா, செல்லப்பா சார், தாங்கீஸ்ஸ்ஸ், தாங்கீஸ்ஸ்ஸ், :)))))) காலம் காலமாச் சொல்ற கவிதையாச்சே! :))))

    பதிலளிநீக்கு
  23. மூனுக்கு செல்ல இஷ்டமில்லை
    ஹனிமூனுக்கு செல்ல கஷ்டமில்லை !

    பதிலளிநீக்கு
  24. ஜி எம் பி சார் நல்ல கற்பனை! இது எங்கள் ப்ளாக் தொடங்கிய பின் இருநூற்று நாற்பத்தாறாவது ஞாயிற்றுக் கிழமை. ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு படம் வெளியிட்டு வந்துள்ளோம்.
    பகவான்ஜி (புனை பெயரா?) நல்லா இருக்கு உங்க சிந்தனை!

    பதிலளிநீக்கு
  25. காலை இளம் கதிரில் உன் காட்சி தெரியது .
    மாலை இரவும் சந்திக்கும் நேரத்தில் மயங்கிய ஓளியினைப்போல! மனமயக்கத்தில் இருக்கிறது மனம். காலையா, மாலையா என்று.

    கதிரவனை மறைக்கும் முகிலே முகிலே ! மழை கொண்டுவா.

    பதிலளிநீக்கு
  26. காலை இளம் கதிரில் உன் காட்சி தெரியது .
    மாலை இரவும் சந்திக்கும் நேரத்தில் மயங்கிய ஓளியினைப்போல! மனமயக்கத்தில் இருக்கிறது மனம். காலையா, மாலையா என்று.

    கதிரவனை மறைக்கும் முகிலே முகிலே ! மழை கொண்டுவா.

    பதிலளிநீக்கு
  27. வளர்பிறையாகி
    மூன்றாம் பிறையாகி
    அரை நிலவாகி
    முழு நிலவாகி - அந்த
    ஞாயிற்று ஒளியை வாங்கி
    நமக்கு ஒளி தரும் நிலவே - உன்னை
    என்னால் மறக்க முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
  28. மெஜாரிடி நிலா தான். அதனாலே நிலாதான்னு தீர்ப்புச் சொல்லிப் பொற்கிழியை அனுப்பி வைங்க கெளதமன் சார். :)))))

    பதிலளிநீக்கு
  29. கோமதி அரசு, ஜீவலிங்கம் - இரசித்தோம்.
    கீதாம்மா - கண்ணாடிக் கவிதைகளுக்கெல்லாம் பரிசு கிடையாது!

    பதிலளிநீக்கு
  30. @கெளதமன் சார், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேண்டாம் போங்க, சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்.:P :P :P :P :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!