அண்மையில் இரு பதிவர்களை சந்தித்து அளவளாவியது மகிழ்ச்சியான விஷயம். சிறந்த உபசரிப்பு, மனம் திறந்த பேச்சு நெகிழ வைத்தது.
இருவரும் தாம் பதிப்பித்த தம். நூல்களை அன்பளித்தனர். ஓசியில் பெறுகிறோமே என்ற குற்ற உணர்வு இருப்பினும் புத்தகம் படிக்கும் ஆசை மேலோங்கிடப் பெற்றுக் கொண்டோம்.
கடமை உணர்வோடு இரண்டு புத்தகங்களையும் ஒரே மூச்சில் படித்து ரசித்தேன். நண்பர்கள் எழுதியது,என்பதால் அவை டாப்பாக இருப்பதாய்த் தோன்றுகிறது.
நாம் அறிந்தவர், நமது நட்பு வட்டத்தில் இருப்பவர் எழுதிய நூல்களை நாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். நூலாசிரியர்களும் நூல் விலையை (பெற்றுக்கொண்டவர் தர முன் வந்தால்) பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிரபலம் இல்லாத ஒரு பெயரை ஆசிரியர் என்று குறிப்பிடப் பட்டுள்ள, ஒரு நூலை சாதாரணர் வாங்க எந்த மாதிரியான தூண்டுகோல் உதவும் ?
விளம்பரம் இல்லாத ஒருவரை புத்தகம் வெளியிட தைரியம் தருவது எது ?
சிந்திக்கத் தூண்டும் விஷயம்.
ஒருத்தர் வைகோ, இன்னொருத்தர் யாரு? புத்தகம் அச்சில் பார்க்க வேண்டும் என்ற ஆசையே வெளியிட தைரியம் தருவதாக நினைக்கிறேன். ஆனால் அச்சில் போட ஒவ்வொருத்தரும் படும் பாட்டை நினைத்தால் பயம்மாகவும் இருக்கிறது! :( விற்க வேண்டும். இல்லை எனில் சி.சு.செல்லப்பா மாதிரி எல்லாவற்றையும் நாமே வைத்துக் கொண்டு பார்க்க வருகிறவர்களுக்குக் கொடுக்கும்படியா ஆயிடும். :( ஒரு சிலர் மேலும், மேலும் புத்தகங்களை வரிசையாக வெளியிடுகின்றனர்.
பதிலளிநீக்குஆம்! நமது நண்பரே ஆனாலும் அவரது நூலை பெற்றாலும் அதற்கான விலையைக் கொடுத்து வாங்குவது என்பது மிகச் சிறந்த எண்ணம். அவர் பெறுவாரா என்பது ..ம்ம்ம்ம் நாம் நமது நூலை நம் நண்பருக்குக் கொடுக்கும் போது அவர் அதற்கான விலையைக் கொடுத்தால் நாம் வாங்குவோமா?!!!!.....
பதிலளிநீக்குஎன்றாலும், //நாம் அறிந்தவர், நமது நட்பு வட்டத்தில் இருப்பவர் எழுதிய நூல்களை நாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். //
யெஸ், யெஸ், யெஸ்....
பதிவு இருக்க
பதிலளிநீக்குபதிப்பிப்பது எதற்கு என இருத்தலே சிறப்பு
என்பது என் கருத்து
வருங்காலம் - மின்னூல்...!
பதிலளிநீக்குTrue Sir.
பதிலளிநீக்குBut, one should understand the feeling (embarrassment) of the author who gifts this to his friend (be it blog or FB). The author might have thought the receiver should not feel that the author is business (commercial) minded. This could be reason, I guess, in this case.
புத்தகங்கள் வெளியிடுபவர் முதலீடு செய்வதே லாபத்திற்காகத் தான். சமூகத் தொண்டு அவர் குறிக்கோள் ஆக இருக்க முடியாது. சில சில சந்தர்ப்பங்களைத் தவிர.
பதிலளிநீக்குபுத்தக ஆசிரியருக்கு சந்தையில் விலை Market value என்ன என்பதும் அவரது உள் மதிப்பு intrinsic value என்ன என்பதும் வெவ்வேறு.
பல புத்தகங்கள் ஆசிரியர்கள் ஒரு அளவுக்கு படிப்பவருக்கு பரிச்சயம் ஆன பின் தான் தான் விற்கத் தொடங்கு கின்றன. அதுவரை, முதல் போட்டு அச்சிட்டவர் கை கட்டிக்கொண்டு போட்ட முதல் திருப்பி வருமா வராதா என்ற நிலை தான் இருக்கிறது.
அதனால் தானோ என்னவோ, நூலாசிரியர்களே தனது புத்தகத்தை இனாமாக பரிசளித்து அதனால் நன்பர்களை படிக்கசெய்து அவர்கள் மூலம் அவருடைய நன்பர்களுக்கு அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கும் நிலை, புதிய ஆசிரியர்களுக்கு உள்ளது.
ஒரு உதாரணமாக சொல்கிறேன்.
எனது நண்பர் ஒருவர். வடமொழி இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றவர். அவர் வால்மீகி இராமயணத்தை ஆராய்ச்சி செய்து, விஷ்ணு சஹச்ர நாமத்தில் உள்ள 1000 பெயர்கள், வால்மீகியில் எங்கு எல்லாம் எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ளன என்று ஒரு புத்தகம் எழுதி, வெளியிட முயற்சி செய்தார். அதை படிக்க கூட இன்று உள்ள பதிப்பகங்கள் தயாராக இல்லை. ஏன் ? இந்த புத்தகத்தின் சந்தை விலை என்ன ? ஒன்றும் இல்லை. ஆனால் இலக்கிய மதிப்பு பெரிதும் உள்ளது. இது தான் இன்றைய நிலை.
அது இருக்கட்டும்.
புத்தகத்தை படியுங்கள் என்று தருபவர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் தருகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். ஆனால், அது புத்தகத்தின் விலை அல்ல.
அவர்கள் வேண்டுவது.நமது கருத்து .
சுப்பு தாத்தா.
சுப்புத் தாத்தா சொல்வது மிகச்சரி. புத்தகத்தைப் படியுங்கள் என்று தருபவர்களின் எதிர்பார்ப்பு படிப்பவரின் கருத்தே. ஆனால் எத்தனை பேர் கருத்தைச்சொல்கிறார்கள்?
பதிலளிநீக்குநல்ல நட்புக்கு நடுவில் பணம் குறுக்கே வந்துவிடலாகாது என்பது அடியேனின் கருத்து!
பதிலளிநீக்குஆரண்ய நிவாய் ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தும்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசரி நண்பரே விமர்சனத்தைப்போடுங்க....
தங்கள் கருத்து உண்மை அண்ணா...
பதிலளிநீக்குஅன்பளிப்பாகக் கொடுத்தாலும் நாம் அதற்கான பணத்தைக் கொடுப்பதே சிறந்தது.
அச்சில் தன் எழுத்துக்களை காணும் இன்பம், பெற்ற மகவை தாய் கண்ணுறும் முதல் தருணத்தை ஒத்தது. பெரும்பாலும் லாபத்தை எண்ணி யாரும் தன் முதலிரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் வெளியிடுவதில்லை. அவற்றை தாக்குப்பிடிக்கும் தெம்பு குறையாத போதே மேலும் வெளியீடுகள் வரலாம்.
பதிலளிநீக்கு"வாழ்க்கையில் ஒரு தரமாவது....." எனும் பட்டியலில், ஒரு புத்தகமாவது வெளியிட வேண்டும் எனும் அவா, இலக்கிய ஈடுபாடு உள்ளவருக்கு இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். புத்தகத்தை பெற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு பணம் தருவது அழகு. அதைப் பெற மறுப்பது எழுத்தாளருக்கு அழகு.
G.M.B சார் புத்தகத்திற்கான என் கருத்துரை பாதியிலேயே நிற்கிறது. விரைவில் அனுப்புவதே எனக்கு அழகு !
கோபால் சார் & ஆர் ஆர் ஆர் சார் புக்ஸா..
பதிலளிநீக்குஎனக்கு எடுத்து வைங்க. ஹாஹா காசெல்லாம் தரமாட்டேன். என் புத்தகமாற்றுதான். :)
இக்கட்டான சூழல் தான் இது...
பதிலளிநீக்குஇருந்தாலும் படித்து முடித்து நமது கருத்தினை தெரிவித்து விடுவது நல்லது......