புதன், 25 பிப்ரவரி, 2015

தியானம் என்ன எப்படி ?


பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலைக்கேற்ற நிலை தியானம் என யாரும் ஒப்புக்கொள்வர்.

"இறைவனிடம் பேசுதல் பிரார்த்தனை, இறைவன் பேச்சைக் கேட்பது தியானம் " என்று ஒரு ஆழ்பதிவு அண்மையில் கண்ணில் பட்டது.

எண்ணங்கள் அலைமோதும் மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நல்லெண்ணம் அல்லது எண்ண அலைகள் சஞ்சலிக்காத ஆழ் நிலையிலிருப்பது தியானம். இது குரு முகமாக, ஒரு மந்திரச்சொல் அல்லது மூர்த்தத்தின் துணை கொண்டு அடையப் படுவதாய் சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தனி மனிதனின் சாதனை அல்லது சித்தி. பயிற்சியால் பெறப்படுவது சாதனை, அருளால் வரப்படுவது சித்தி என்கிறார்கள். இது பற்றி சாதனையோ சித்தியோ கைவரப்பெறாத எவரும் எதுவும் சொல்வதற்கில்லை. அவரவர் தம் முயற்சியால்தான் பெற்றாக வேண்டும். அதிர்ஷ்டம் குறித்த விஷயம்.

மற்றபடி, அதிவிடிகாலை நேரம் இசை பாடுவதில் அல்லது கேட்பதில், ஆன்மீகம் படிப்பதில் செலவழியலாம்.

எது எப்படியானாலும், காலையில் கணிசமான பொழுது சஞ்சலமற்ற அமைதியில் தொடங்கப்படுவது உன்னதமானது -- ஐயமில்லை.

செய்தி அறிக்கைகள், "நிஜம்" நிகழ்ச்சிகள், கந்தல் காமெடிகள் குறுக்கிடாத எல்லாக் காலையும் நல்ல தொடக்கமே .

8 கருத்துகள்:

  1. //செய்தி அறிக்கைகள், "நிஜம்" நிகழ்ச்சிகள், கந்தல் காமெடிகள் குறுக்கிடாத எல்லாக் காலையும் நல்ல தொடக்கமே .//
    ஆம்.. காலையில் இரண்டு மணிநேரம் பக்தி சேனல்கள்தான் வேறு எதையும் பார்பதில்லை. பேப்பர் கூட 10 மணிக்கப்புறம்தான் படிக்கிறேன்.

    அருமையான கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. காலை எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன் உட்காருவதுதான் நான் செய்யும் தியானம்.காலையில் வேளுக்குடி கிருஷ்ணின் உரைகளை கேட்பது உண்டு

    பதிலளிநீக்கு
  3. காலை எழுந்ததும் கனிவு கொடுக்கும் நல்ல யோகா! அதிலேயே மூச்சுப் பயிற்சி, தியானம் எல்லாமும் வந்துடும். அப்புறமா வீட்டு வேலைகள். :)

    பதிலளிநீக்கு
  4. நிஜம்தான். அதிகாலையில் மனம் நிர்மலமாய் இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  5. பிரம்ம முகூர்த்த நேரம் தியானம் செய்ய ஏற்ற நேரம். நீங்கள் சொல்வது போல் எந்த குறுக்கீடும் இருக்காது. தியானபயிற்சி என்றுதான் சொல்கிறோம்.நம் மூச்சை கவனித்தலே ஆரம்ப பயிற்சி.நாடிசுத்தி, தண்டுவட பயிற்சி. இதை முறையாக செய்தாலே தியானம் வந்து விடும்.

    //செய்தி அறிக்கைகள், "நிஜம்" நிகழ்ச்சிகள், கந்தல் காமெடிகள் குறுக்கிடாத எல்லாக் காலையும் நல்ல தொடக்கமே .//

    நீங்கள் சொல்வது போல் குறுக்கிடூ இல்லா எல்லா காலையும் நல்ல காலைதான்.

    பதிலளிநீக்கு
  6. என்னாயிற்று நேற்று இதற்கு இட்ட கருத்து...காக்கா உஷ்??!!
    இதற்கு முந்தைய பதிவுகள் எல்லாவற்றிற்கும் இட்டோம்...எல்லாமே கமென்ட் மாடரேஷன் என்று வந்தது....இதைக் காக்கா தூக்கிக் கொண்டு போய்விட்டது....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!