வியாழன், 19 பிப்ரவரி, 2015

குறை கொண்ட என் மனம்


சதா குறைப்பட்டுக்கொண்டு குறை இல்லை என்று பாடினால் எப்படி ? என் மன நுலையை உள்ள படிக்கு கண்ணனிடம் சொல்ல முடிவு செய்தேன்:
(ராஜாஜி & எம்.எஸ் மன்னிக்கட்டும்)  

குறையென்றும் உண்டு மறைமூர்த்தி கண்ணா
குறையென்றும் உண்டு கண்ணா...  

1   

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்பதால் எனக்கு
குறை யென்று உண்டு மறை மூர்த்தி கண்ணா.  

2   

வேண்டியதைத்தந்திட வேங்கடேசன் நீயிருந்தும்
வேண்டுவது மிகவுண்டு ..மறை மூர்த்தி கண்ணா..   


3   

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை 
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
எனவேதான் குறைரொம்ப எனக்குண்டு...

4     

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா.
குறைபலவுமுண்டு மறை மூர்த்தி கண்ணா   


5   

கலி நாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி 
சிலையாகக் கோவிலில் காணாது நிற்கின்றாய் 
எனவேதான் குறையுண்டு எனக்கு மறை மூர்த்தி கண்ணா    


6   

யாரும் மறுக்காத மலையப்பா 
உன்மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
எனக்குப் பராமுகமாய் இருப்பதென்றன் குறையே
என்று இது நீங்கும் மறைமூர்த்தி கண்ணா..


     

16 கருத்துகள்:

  1. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.

    குறைகள் தான் எப்பவுமே உண்டே...:)

    பதிலளிநீக்கு
  2. // கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா //

    If not visible, how do you say he 'stands'. He could as well be 'sitting' or 'laying'..

    # Boss, I am not robot, believe me !

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய friend மைதிலி மாதவன் என்று ஒருத்தி, இந்த பாட்டை பாடவே மாட்டாள். என்னென்று கேட்டால்--குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா என்று வருகிறதில்லையா பெருமாள் என்ன கல்லா? இப்படி எழுதியிருக்கிறாரே என்று கோபித்துக் கொள்ளுவாள்.

    நாம் ஏதும் குறை பட்டுக்கொள்ளவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  4. குறையொன்றும் இல்லை என்று சொல்வதே TRYING TO PUT ON A BRAVE FACE....! குறை என்ன வென்று தெரிந்து கொண்டு நீக்க் முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே நம்புங்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    ஒரு பாடல் போல் உள்ளது நன்று. த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. ஞானிகள் கூட்டம் தாங்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.. இதுவும் நல்லாத்தானிருக்கு.

    பதிலளிநீக்கு
  8. இது எப்போப் போட்டீங்க? தெரியலை! தற்செயலா வந்தால் பதிவும் போட்டுக் கருத்துகளும் வந்திருக்கே! தெரியாமல் போச்சே, எனக்கு இது குறை தான்! :))))))

    பதிலளிநீக்கு
  9. ராஜாஜி எழுதி இருப்பது போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து எனக் குறிப்பதற்காக. கடவுளிடம் விண்ணப்பங்களோ, தேவைகளோ நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணங்கள் இல்லாமல் கடவுளை மட்டும் நினைக்க வேண்டும் என்பதற்காக.

    எனக்குக் குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா! கண்ணுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ எங்கேயும் நீ இருக்கிறாய் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கையில் என்ன குறை வந்துடும்? :)))))))

    பதிலளிநீக்கு
  10. குறையில்லாத மனம் இங்கு குறைவே! எனவே இந்த கவிதையில் தவறேதும் இருப்பதாக தோணவில்லை! அருமை!

    பதிலளிநீக்கு
  11. பாசிட்டிவ் விஷயங்களைப் பார்க்கும் தளத்தில் குறைகள் இருப்பதைப் பார்த்திருப்பது வியக்க வைக்கிறது! :)

    பதிலளிநீக்கு
  12. பாடலுக்கு படங்கள் குறை சொல்லமுடியாத அழகு.

    பதிலளிநீக்கு
  13. குறைகளா....உங்களுக்கா....ஏனிந்த சோகம் திடீரென்று....??!!இது....காமெடி கீமெடி இல்லியே..ஹஹ்ஹ

    ம்ம்ம் சரிதான் என்ன குறையோ....

    என்ன குறையோ....அதனைக் கேட்க ஆள் இல்லையா...என்ன குறையோ....

    இன்று உங்கள் வீட்டு சமையல் ருசிக்க வில்லையா...

    ஹஹஹ சும்மாதான்.....இதுவும்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!