1)
மருதமுத்து மாரியம்மன் கோவில் பூசாரி. அது பார்ட் டைம் ஜாப் மாதிரி!
மிச்ச நேரம் அவருக்கிருக்கும் வேலைகள் குறி சொல்லுதல், நாடகங்களில்
நடித்தல், கெடா மீசையை அவ்வப்போது ஒழுங்கு படுத்துதல்....
கோவிலில்
தீமிதி உற்சவம் அமர்க்களப்படும். மெயின் பார்ட் மருதமுத்துவுக்குத்தான்.
மஞ்சள் வேஷ்டி கட்டி, சாமி வந்து அவர் குதிப்பது, பார்த்து ரசிக்க
வேண்டிய ஒரு காட்சி. அப்போது மக்கள் அவர் குதிப்பதைப் பற்றிப் பேசிக் கொள்வதை இங்கே பகிர முடியாது!
ஆட்டுக்கிடா, சேவல் போன்றவற்றைத் துடிக்கத் துடிக்க பலியிடுவது அவருக்கு மிகவும் பழகிப்போன, மற்றும் அனுபவமுள்ள வேலை. கைவந்த கலை!
சாமி
வந்து ஆடும்போது சுற்றி நிற்கும் பக்தகோடிகள் கைகட்டி, வாய் புதைத்து
நிற்பர். ஊரில் பெரிய பணக்காரராய்ப் பார்த்து அவரை முதலில் அழைத்து சாமி
"துண்ணூறு" கொடுக்கும். எந்தக் கோவிலிலும் இந்த பணக்கார செலெக்ஷன்
நிச்சயம் உண்டுதானே...
சாமி வருவது, குறி சொல்வது பற்றிச் சொல்லும்போது இன்னொரு நபரும் நினைவுக்கு வருகிறார்.
நண்பன் வேதகிரியின் அம்மா திருணம்மாள் மீது அடிக்கடி சாமி வந்து விடும். வெள்ளிக் கிழமைகளில் அம்மன், சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதி.
சாமியாடி என்று ஊரில் அவருக்குப் பெயர். வரம் கேட்கக் கூட்டம் நிறைய வரும், காணிக்கைகளுடன்.
உட்கார்ந்த
வாக்கில், கண்களை மூடிக் கொண்டு உடலை முன்னும் பின்னும் அசைத்து ஆட்டம்
காட்டுவார். சமயங்களில் பக்கவாட்டில் சரிந்து எழுவதும் உண்டு. ஒவ்வொரு
தரமும் கற்பூர வில்லைகளைக் கொளுத்தி வாயில் போட்டுக் கொள்வார்.
வந்திருக்கும் அத்தனை பேருக்கும் 'அருள்வாக்கு' வழங்குவது 'கிளைமேக்ஸ்'
ஒருதடவை நான், பஞ்சாமி, சூசை, ஹனீபா மற்றும் தங்கவேலு அங்கு வேடிக்கைப் பார்க்கப் போயிருந்தோம்.
"போஸ்ட் மாஸ்டர் வீட்டுத் தம்பி பாஸ் பண்ணிப்பிடும். அதான கேக்க நினச்சே?"
நான் அதை எங்கே கேட்க நினைத்தேன்? கேட்க நினைத்ததைக் கேட்டேன். "நேதாஜி உயிரோடு இருக்காரா? எங்கே இருக்கார்?"
சாமி
கண்களைத் திறக்கவே இல்லை. உரக்க ராகமிட்டு, "வெங்கடாஜலபதி... திருப்பதி
பெருமாளே... இந்தப் புள்ளைக்கி நல்ல புத்தி கொடுங்க... போஸ்ட் மாஸ்டர்
வீட்டம்மா கவலைப்படறாங்க... படிப்பை விட்டுட்டு எதெதையோ பத்திக்
கவலைப்படறானே.... இவன் நல்லாப் படிக்க வரம் கொடுங்க..,"
இரண்டு நாட்களுக்குப்பின் - குளக்கரை மதகு. வேதகிரியிடம் "நான் கேட்டதுக்கு ஒங்கம்மா பதில் சொல்லல்லியேடா..?" என்றேன்.
அவன் சொன்ன பதில் முக்கியமானது - "நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"
இதுதான் சரியான பதில்!
நாளச்சேரிப் பாட்டி பற்றிப் பிறகு சொல்கிறேன்...
- பாஹே -
பதிலளிநீக்கு//பக்தகோடிகள் கைகட்டி, வாய் புதைத்து நிற்பர்//
வாய் பொத்தி நிற்பதை பார்த்து இருக்கேன் இதென்ன நண்பரே புதுசா இருக்கு. அப்படினாக்கா நேதாஜி உயிரோடு இருக்காரா ?
இன்றைக்கும் கேரள கோவில்களில் வெளிச்சப்பாடுஎன்பவர் தீப ஆராதனை முடிந்தபின் அருள்வாக்குக் கூறுவார். நிர்மால்யம் என்னும் மலையாளத் திடைப் படத்தில் இம்மாதிரியான ஒரு வெளிச்சப்பாடின் கதை கூறப்பட்டிருக்கும்மிகவும் பிரபலமான திரைப்படம் பதிவு படித்தவுடன் தோன்றிய கருத்து இது,
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
தாங்கள் சொல்லிய நினைவுகள் அருமை ஐயா.. படங்களில் வரும் காட்சி போல உள்ளது நினைவுகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசிக்க வைக்கும் நினைவுகள்...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு அண்ணா.
ரொம்ப வருஷம் (?) கழிச்சு பாஹேயின் நினைவுகள்!
பதிலளிநீக்குஇந்த உம்மாச்சி விஷயத்தில் எல்லாம் என் மாமியாரை யாராலும் மிஞ்ச முடியுமானு தெரியலை!:))) இப்படியான ஆட்களிடம் ரொம்பவே பயபக்தியோடு இருப்பார். அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே செய்வார். அருள்வாக்குக் கேட்கணுமோ, வேண்டாமோ, ஆனால் தினம் தினம் அவங்க முன்னிலையில் ஆஜர் ஆகிடுவார். எல்லோருக்கும் சொல்லி முடித்துக் கூட்டம் எல்லாம் போனப்புறமா சாவகாசமா அவங்க கிட்டே மறுபடி நமஸ்காரம் எல்லாம் பண்ணி ஆசிகளைப் புதிதாக வாங்கிக் கொண்டு ஏதோ பரிசு கிடைச்சுட்ட நினைப்பில் வீட்டுக்கு வருவார்.
நேதாஜி பற்றி பூசாரிக்குத் தெரிந்திருந்தால், அம்மாவுக்கும் தெரிந்திருக்கும்
பதிலளிநீக்குஅருமையான நினைவலைகள் நண்பரே
அட....! சரியான பதில்....!
பதிலளிநீக்கு'உண்மை' நண்பன்!!!
பதிலளிநீக்கு1946-ம் வருடத்திய நினைவா. /இப்படி எழுதி அடிக்கடி திகைக்க வைக்கிறீர்கள் ஒரு முறை வேலைக்குப் போகும் மகன் பற்றி. இப்போது பழைய நினைவுகள் குறித்து. நீங்கள் என்னைவிட சீனியரா.?
பதிலளிநீக்கு/"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"/
பதிலளிநீக்குஅதானே:)! சுவாரஸ்யம். தொடருங்கள்.
நேதாஜி பற்றிய இந்த கேள்விக்கு யாருக்குத்தான் பாடிக் தெரியும் சொல்லுங்கள். பாவம் அந்த அம்மா.
பதிலளிநீக்குநேதாஜி எங்கே இருக்கார்? செம கேள்வி தான் கேட்டு இருக்கீங்க! :)
பதிலளிநீக்குசாமியாடிகள்..... எனது எதிர் வீட்டில் இப்படி ஒருவர் இருந்தார். அவர் பற்றி எழுதத் தூண்டி விட்டீர்கள்!
//"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"//
பதிலளிநீக்குசூப்பர்..
சுவாரசியமான நினைவுகள்..
நேதாஜி இன்னும் உயிரோட இருக்காரா. :)
பதிலளிநீக்குஹை! சூப்பர் கேள்வி! அதுவும் அந்த அம்மாவிடம்.....ஹஹ நல்ல பதில்....
பதிலளிநீக்குநண்பனின் பதில் அட்டகாசம்!
பதிலளிநீக்குஆஹா... அருமை. அருள்வாக்கு சொன்னாலும் சாமியிறங்கினாலும் பிள்ளைக்குத் தாய்தானே... தாயறியா சூலுண்டோ என்பார்கள். பிள்ளையறியா சூதுண்டோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
பதிலளிநீக்குஹா ஹா! நண்பனின் பதிலும் நேதாஜி யார் என்று தெரியாத நண்பனின் குறிசொல்லும் அம்மா திரு திரு என்று முழிக்காமல் சமாளித்த விதமும் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்கு