தினசரி செய்திகள் படிக்கும்போது அன்றைய முக்கிய நிகழ்வுகளின் மீது
நம் கவனம் இருக்குமே தவிர, சில சுவாரஸ்ய செய்திகளை சிலபேர் கவனிக்காமல்
விட்டு விடுவோம். அந்தச் சில பேருக்காக இந்தப் பகிர்வு.
ஏற்கெனவே படித்திருந்தால் விட்டு விடுங்கள். லிங்க் தந்திருப்பது ஆதாரத்துக்குத்தான். அங்கும் அதே வரிகள்தான் இருக்கும்!
சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கோளாக விளங்குவது வியாழன் கிரகம் ஆகும். இந்த வியாழன் கிரகத்திற்கு மொத்தம் 67 நிலாக்கள் உள்ளன. இதில் மிக பெரிய நிலாவாக கருதப்படுவது கேனிமேட் நிலா ஆகும். நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, வியாழன் கிரகத்தை சுற்றும் கேனிமேட் நிலவில் பெருங்கடல் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளது. இந்த பெருங்கடல் பனிக்கட்டி மேற்பரப்பிற்கு அடியில் உள்ளதாகவும், இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.dinakaran.com/
2) சின்ன மீனைப் பிடிக்காமலேயே பெரிய மீன்!
தாய்லாந்தில் உள்ள மே கிளாங் ஆற்றில் ஸ்டிங்ரே என்ற வினோத மீன் ஒன்று பிடிப்பட்டது. இந்த மீன் சுமார் 14 அடி நீளமும், 363 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இந்த மீனை மீனவர்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி பிடித்துள்ளனர். இந்த மீன் உலகின் மிகப் பெரிய மீனாக கருதப்படுகிறது. இந்நாள் வரை 300 கிலோ எடையுள்ள இராட்சத கெளுத்தி மீன் ஒன்றே உலகின் மிக பெரிய மீன் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.dinakaran.com/
3) ரத்த அருவி!
பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாக விளங்குவது அன்டார்க்டிக்கா . இங்கு எண்ணற்ற பனி பாறைகள் உள்ளன . இவைகளில் ஒன்றான டெயிலர் பனி பாறையில் ஓர் அதிசயம் நிறைந்துள்ளது. இந்த டெயிலர் பனி பாறையில் உள்ள ஓர் நீர் விழ்ச்சியில் ரத்த நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது . இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் சிலர் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் முடிவில் தற்போது அந்த ரத்த நீர் விழ்ச்சியின் மர்மம் அம்பலமாயிற்று. சுமார் 2 மில்லியன் காலமாக பனிகட்டிக்குள் அகப்பட்டு கொண்டிருந்த இரும்பு சத்து மிகுத்திருந்த கடல் நீரே இவ்வாறு சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டுவதற்கு காரணம். - See more at: http://www.dinakaran.com/
4) வேலையைச் செய்ததற்கு அபராதம்! இங்கு உள்ளூரில் இப்படி சாத்தியமாகுமா?!!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக துப்புரவு தொழிலாளர் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வினோத சம்பவம் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் நடந்துள்ளது. கெவின் மெக்கில் என்பவர் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இங்கு காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரைதான் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கெவின் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே சென்று குப்பைகளை அகற்றியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் தூக்கத்தை கெடுப்பதாக அவர் மீது புகார் செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இதுபற்றி நீதிபதி கூறும்போது ‘‘பலமுறை அபதாரம் விதித்தும் இந்த செயல்கள் குறையவில்லை. எனவேதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இந்த சிறை தண்டனையை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனுபவிக்க கெவின் மெக்கிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வார நாட்களில் வேலை செய்து மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பகிர்வுக்கு நன்றி அனைத்துமே இங்குதான் தெரிந்து கொண்டேன் ..
பதிலளிநீக்கு//அமெரிக்காவில் குப்பைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அகற்றியதற்காக // எங்க பகுதி T எண்ட் ,இறுதியில் ஒரு ப்ரைமரி பள்ளி இருக்கு பயன் bin லாரி வரும் அன்று ட்ராபிக் congestion தான் ஆனா வம்பே வேண்டாம்னு பொறுமையா இருப்போம் ..இல்லேனா wheelie பின்ஸ் எடுக்க மாட்டாங்க :)
நான்கு விஷயங்களையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஏஞ்சலின்.
பதிலளிநீக்குவியாழன் நிலவில் கடல் இருப்பது இன்று தான் தெரிந்து கொண்டேன். இனி செவ்வாயை விட்டுவிட்டு இங்குக்குடியேற கவனம் செலுத்துவார்கள். சிகப்பு நிற நீர் புதிரின் விடையும் தெரிந்து கொண்டேன். குறித்த நேரத்துக்கு முன் போய் குப்பை வாருவதற்குச் சிறை தண்டனையா? தூக்கம் கெடுகிறது என்ற பொதுமக்களின் புகாருக்கு அங்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது? எல்லாமே அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் தாம். இன்று வெட்டி அரட்டையல்ல; அர்த்தமுள்ள அரட்டை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஆமாம். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்தான். நன்றி கலையரசி மேடம்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபுரியவில்லையே பகவான்ஜி...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குரத்த அருவியை பார்த்ததும் ,நான்தான் சிறிது குழம்பி போய் கமெண்ட்டை போட்டுட்டேன் ,அதனால் வாபஸ் ஆகிட்டேன் :)
பதிலளிநீக்குஅமெரிக்காவில் இப்படியுமா ஒரு வழக்கு ,தண்டனை ?அதுவும் பணியை முன்'கூட்டியே ' செய்ததற்கா:)
பதிலளிநீக்குநான் முதன் முறையாக கேள்விப்படுகிறேன் தகவலுக்கு நன்றி.
சிறைத் தண்டனை வித்தியாசமாய்...
பதிலளிநீக்குமற்ற அனைத்து விவரங்களையும் அறியத் தந்தீர்கள்...
அருமை அண்ணா...
//இந்த நிலவில் மனிதர்கள் வாழலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.//
பதிலளிநீக்குஎனக்கு ஒரு இடம் போட்டு வையுங்கோ?
எல்லாமே புத்தப் புதுசு! பல நாடுகளிலும் மாலை ஆறு அல்லது ஏழு மணி முதல் மறுநாள் காலை ஏழுமணி வரை சத்தப்படுத்தக் கூடாது என்று சட்டமே உண்டு. அதே போல் மதியம் இரண்டிலிருந்து நாலு வரை சத்தப்படுத்தக் கூடாது. இந்தச் சட்டம் எங்க குடியிருப்பு வளாகத்திலும் உண்டு. :)
பதிலளிநீக்குரத்த ஆறு ரொம்பவே ஆச்சரியம்...!
பதிலளிநீக்குகீதா அம்மா சுத்தத்தை தானே சொல்கிறார்கள்...?
ஹாஹா, டிடி, அது சுத்தம் இல்லை, சத்தம், சப்தம்! ஓசை! :)))))
பதிலளிநீக்குஇந்த எல்லா விஷய்ங்களையும் ஏற்கனவே தெரிஞ்சு போச்சே! ஆனாலும் நீங்கள் தமிழில் தந்து அதை வாசிக்கும் போது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த ரத்த ஆறுக்கான ரீசன் மட்டுமே புதிது. அது தெரியும் வரை நாங்கள் யூகித்தது, பனிப்பாறைகள் என்பதால் நிறைய விலங்குகள் இறந்திருக்க்மோ அடியில் அதன் ரத்தம்? ஆனால் அதுவும் உறைந்து விடுமே என்றெல்லாம் யோசித்திருக்கின்றோம்.....உங்கள் மூலம் விடை தெரிந்து கொண்டோம். ஐயையோ சகோதரி கீதா சொல்லியிருப்பதை ப்பார்த்தால் இங்கேயுமா சத்தம் போடக் கூடாது...நம்ம நாட்டிலுமா...எப்படிச் சமாளிக்கின்றீர்கள் சகோதரி உங்கள் வளாகத்தில்?!!
பதிலளிநீக்கு//ஐயையோ சகோதரி கீதா சொல்லியிருப்பதை ப்பார்த்தால் இங்கேயுமா சத்தம் போடக் கூடாது...நம்ம நாட்டிலுமா...எப்படிச் சமாளிக்கின்றீர்கள் சகோதரி உங்கள் வளாகத்தில்?!!//
பதிலளிநீக்குஅதை ஏன் கேட்கறீங்க? அதிலும் நாங்க பழைய வீட்டிலிருந்து இந்த வீட்டிற்கு மாறும்போது மரவேலை செய்தோம். அப்போத் தான் தினம் தினம் மத்தியானம் இரண்டு மணிக்கப்புறமா நடக்கும் ஓசை கேட்டால் கூட உடனே செக்யூரிடி ஓடி வந்துடுவாங்க. தினம் தினம் எங்க வீட்டில் வேலை செய்ய வரும் தச்சர்களிடம் மத்தியானம் இரண்டில்ரிந்து நாலு வரை சப்தம் வரக் கூடாது. மாலை ஆறு மணிக்கப்புறமா வேலை செய்யக் கூடாதுனு சொல்லித் தான் உள்ளேயே விடுவாங்க! :( நல்ல வேளையாக் குழந்தைகள் அழக்கூடானுனோ, விளையாடக் கூடாதுனோ சொல்லலை! ஒரு இரண்டு மாசம் ரொம்பக் கஷ்டப்பட்டோம். இந்த அழகிலே பனிரண்டிலிருந்து இரண்டு வரை மின் வெட்டு வேறே இருக்கும். ஆக ஆட்கள் வந்தால் பனிரண்டிலிருந்து மாலை நாலு வரை வேலையே செய்ய முடியாது. அவங்க வரதுக்கே பதினோரு மணி ஆயிடும். வேலை மாசக்கணக்கில் இழுத்தடித்தது. அதுக்கு வேறே என்ன இத்தனை நாட்களாச் செய்யறீங்கனு கேட்டாங்க! :)))))
அருமையான தகவல்கள்.
பதிலளிநீக்குகடைசி செய்தி பணியினை முன்கூட்டியே செய்ததற்கு தண்டனை-வினோதம்.
சுவாரஸ்யமான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குபாசிடிவ் செய்திகளுக்கு மாற்றா. இது நன்றாக இருக்கிறது. பல விஷயங்கள் கேள்விப்படாதவை பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடிக்காத செய்திகள் தான்.
பதிலளிநீக்குதொகுத்து தந்தமைக்கு நன்றி.