நடக்கும் நினைவுகள் எழுதி ரொம்ப நாளாச்சு!
அதிகாலைல நடக்கற பழக்கம் இருக்கு பாருங்க, ரொம்ப நல்ல பழக்கம். சுத்தமான காற்று, சந்தடியற்ற அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை..
அதிகாலைல நடக்கற பழக்கம் இருக்கு பாருங்க, ரொம்ப நல்ல பழக்கம். சுத்தமான காற்று, சந்தடியற்ற அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை..
சாலையோரம் இருந்த மரங்கள்
ஒன்றுக்கொன்று சீரான இடைவெளியில் இருளிலேயே ஒரு தனி நிழலைக் கொடுத்துக்
கொண்டிருக்க, மூடியிருந்த கடைகளின் படிகளில், சிறு ஈரம் மினுமினுக்க
வரிசைக் கடைகளின் காலியிடங்கள் தனிக் காட்சியைக் கொடுத்தன.
"பெட்ரோல் இல்லையோ? பங்க் கூட எதுவும் பக்கத்துல இல்லையே'
எதிரே ஒரு
தெருநாய் ஓடிவந்து கொண்டிருந்தது. இவன் பைக்கைத் தள்ளிக் கொண்டு போகும்
வேகத்தைப் பார்த்து, திரும்பி அவன் பின்னாலேயே ஓடி, மோப்பம் பிடித்து
விட்டு, சுவாரஸ்யமின்றி அடுத்திருந்த சந்துக்குள் மறைந்தது!
"எதுக்கு"
"இல்லை, தள்ளிகிட்டே வந்தீங்களே.. பாவம், யாருக்காக வெயிட் பண்றீங்க?"
"என் ஃபிரெண்ட் நைட் டியூட்டி முடிஞ்சி வர்றான். 'பைக்கை எடுத்துட்டு வாடா' ன்னான். அதான் அவனை அழைத்துப் போக வந்தேன். "
நல்ல உடற்பயிற்சி,தங்களின் சேவை அவர்க்கு தேவையில்லை என வருந்தவேண்டாம். நன்றி.
பதிலளிநீக்குஎல்லாம் சரி, நீங்களும் எப்ப இந்த பைக் தள்ளுகிற பயிற்சியை ஆரம்பிக்க போறீங்க.
பதிலளிநீக்குஉண்மையிலேயே ஒரு பக்க கதையை படித்த உணர்வு ஏற்பட்டுச்சு. அருமையாக எழுதியிருக்கீங்க .
நல்லா இருக்கு. நிஜமோ, கற்பனையோ இந்த அனுபவம் தரும் பாடம் அருமை.
பதிலளிநீக்குநல்ல யோசனைதான்.
பதிலளிநீக்குரசித்தேன். எப்படியோ, வடை போச்சு.
பதிலளிநீக்குஅந்த பைக்கன் இந்த வார்த்தையை ரசித்தேன். தமிழ்மண வாக்கு இடமுடியவில்லையே...
பதிலளிநீக்குI liked the big bulb picture on the end.
பதிலளிநீக்குபல்ப் வாங்கியதாக ஏன் நினைக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஉங்கள் உதவும் மனப்பான்மை பாராட்டதக்கது.
எங்கிருந்தோ வண்டியை திருடி கொண்டு போவதால் தள்ளிக்கிட்டு போகிறார் போலும் என்று நினைத்தேன்.
அதிகாலை நடை என்பதே மறந்து போச். நமக்கெல்லாம் ஏழு ஏழரை மணிக்குத்த நடக்க அனுமதி. எங்கள் வீட்டருகே இருக்கும் நடைப் பூங்காவுக்கு பைக்கில் வந்து நடை முடித்து பைக்கில் போகின்றவர்களைப் பார்த்து இருக்கிறேன்
பதிலளிநீக்குஹிஹிஹி சரியான பல்பு!!!! ஆமா....இது நிஜமாவேவா...இல்ல உங்க கற்பனையா....(ஏன்னா நீங்க இந்த மாதிரி எழுதறதுல கில்லாடியாச்சே அதான்...!!)
பதிலளிநீக்குஉதவும் மனப்பாண்மை உங்களுக்குள் இருப்பதை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள் ஸ்ரீராம் சார்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்......
காலை நேர அமைதியையும் நடக்கும்போது அது எத்தனை இதத்தை மனதுக்குத் தருகிறது என்பதையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குநீங்களே சொல்லியிருக்கிற மாதிரி அந்த அமைதி மனதின் நல்லெண்ணங்களை தூண்டி விட்டிருக்கிறது! அது தான் அடுத்தவர் கேட்காமலேயே உதவ முனைந்திருக்கிறீர்கள்!
ஆஹா...
பதிலளிநீக்குஅண்ணா பல்ப் வாங்கினதை அழகாச் சொல்லிட்டீங்க...
இப்பல்லாம் எதையுமே யோசித்துத்தான் முடிவுக்கு வரணும்..
பைக் ஆசாமி மாதிரி நாலு பேர் யோசித்தால் பரவாயில்லை...நாட்டுக்கு கொஞ்சம் பெட்ரோல்....மிச்சம் தானே...?
பதிலளிநீக்குபளீர் பளீர் - பிரகாசம்...!
பதிலளிநீக்குஇதை பல்பாக நினைக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்தும். நல்ல உள்ளத்தோடு கேட்டிருக்கிறீர்கள். ஒருவேளை நிஜமாகவே உதவி தேவைப்படும் சூழலில் இருந்திருந்தால்.. அப்படி இல்லை என்றவரையில் மகிழ்ச்சி என நகர வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஇந்தக் கதை படித்ததும் தொலைக்காட்சியில் வரும் 'புஷ்'பராஜ் ஜோக் நினைவுக்கு வந்தது!
பதிலளிநீக்குபிறர் கேட்காமலேயே உதவ நினைக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க!